('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -
- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -
கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால் சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கும்.
குழந்தைகளுக்காகக் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் அத்துறையில் சிறந்து விளங்காமலிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று குழந்தைகளுக்கான படைப்புகளை அவர்கள் பெரியவர்களாகிய அவர்களது பார்வையில் படைப்பதுதான். குழந்தைகளாக மாறிப்படைப்புகளைத் தருவதை அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அதனால் குழந்தைகள் பலரையும் அவர்களது படைப்புகள் கவராமல் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.
குழந்தைகளின் உளவியலை நன்கு உள்வாங்கிக் கவிதை படைத்த கவிஞர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் குழந்தை அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வேந்தனார், சோமசுந்தரப்புலவர், சாரணாகையூம். இவர்கள்தம் குழந்தைக் கவிதைகளில் இவர்கள் குழந்தைகளாகவே மாறி விடுவார்கள். குழந்தைகளுக்குத்தேவை எளிமையான சொற்கள், மீண்டும் மனத்தில் பதியும் வகையிலான எளிமையான அதே சமயம் பாடுவதற்குரிய சந்தச்சிறப்பு மிக்க வரிகள். அவற்றை வாசிக்கையில் குழந்தைகளின் உள்ளங்களில் அவை விபரிக்கும் காட்சிகள் படம் விரிக்க வேண்டும். 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே (சோமசுந்தரப்புலவர்) ', 'காலைத்தூக்கிக் கண்ணிலொற்றி கட்டிக்கொள்ளும் அம்மா' (வேந்தனார்) போன்ற கவிதைகளைப் படிக்கையில் குழந்தைகளுக்கு அக்கவிதைகள் விபரிக்கும் காட்சிகள் மனக்கண்ணில் படமாக் விரிந்து மகிழ்வினைத் தருகின்றன. இவை போன்ற குழந்தைக்கவிதைகளை எழுதியவர் கவிஞர் சாரணாகையூம்.


எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.


- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன் மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -


இலங்கையின் தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த மார்ட்டின் விக்கிரமசிங்கா, சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி. அவர் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார். அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.
டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது. நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .
தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப் பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.



தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில் வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள் புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்கால இலங்கைத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான் இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.
சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.
கலைஞர்களே! நீங்கள் எழுத்தாளராகவிருக்கலாம். கலைக்குழுவாக இருக்கலாம். கலை அமைப்பாகவிருக்கலாம். கனடாக் கலைச் சபையில் இணைவதன் மூலம் அச்சபை வழங்கும் பல்வேறு நிதிகளைப்பெற முடியும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









