காலமும் கணங்களும்: மூத்த இலக்கியவாதி கே. கணேஷ் (1920 - 2004) நினைவுகள்! - முருகபூபதி -

மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு
இலங்கையின் மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும், பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ் ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர் சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார். ( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும் ஆக்கங்கள் கோரப்படுகின்றன. அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம். நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் அனுப்பவிரும்பும் அன்பர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னஞ்சல் யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் அரிதாகிவிட்டது. தொலைபேசி, கைப்பேசி, ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்அப் , முகநூல், மெய்நிகர் முதலான சாதனங்கள் விஞ்ஞானம் எமக்களித்த வரப்பிரசாதமாகியிருந்தபோதிலும் , அந்நாட்களில் பேனையால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்பாடலை ஆரோக்கியமாக வளர்த்து, மனித நெஞ்சங்களிடையே உணர்வுபூர்வமான நெருக்கத்தை வழங்கின. உலகம் கிராமமாகச் சுருங்கிவரும் அதே சமயம், மனித மனங்களும் இந்த அவசர யுகத்தில் சுருங்கி வருகின்றன. இலக்கியங்கள் மனிதர்களை செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன. அவ்வாறே கடித இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே அறிவுபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நெருக்கத்தையும் தேடலையும் வளர்த்து வந்துள்ளன.
இலங்கையில் மலையகம் தலாத்துஓயாவில் வாழ்ந்து மறைந்த எமது இனிய இலக்கிய நண்பர் கே.கணேஷ் அவர்கள் சுவாமி விபுலானந்தர், சிங்கள இலக்கிய மேதை மார்டின் விக்கிரமசிங்கா ஆகியோருடன் இணைந்து ஒருகாலத்தில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர். பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1950 களில் உருவாக்கியவர். அப்பொழுது நான் இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.


அவள் மேடைக்கு வந்த போது அழகு மயில் ஒன்று உலா வருவது போலவே இருந்தது. அவள் ஒலி வாங்கியை வலது கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல அசைந்தாடியபடி அந்தப் பிரபலமான பாடலைப் பாடத்தொடங்கினாள். வெள்ளை நிறப்பட்டுத்துணியில் ஆடை அணிந்திருந்ததால், ‘ஆகா, வெண்மயில் ஒன்று மேடையில் மெல்ல அசைந்தாடுகின்றதே..!’ என்று இவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.


‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஒரு ஈழத்தமிழனுக்கு உலகம் என்பது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே ஆகும். இவர்களில் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களை பெற்றவர்கள், அதனை முறையாக பதிவுசெய்தவர்கள் ஈழத்தில் மிகக்குறைவு. இருந்தாலும் இன்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் கிழக்கு ஐரோப்பா, அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியின் பங்களிப்பு மிக அதிகம். எனது சிறு பிராயத்தில் எனதூரில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எப்போதும் ஜெர்மனிக்கே செல்வது வழக்கம். அந்த மர்மத்தை சரியாக உணர்ந்துகொள்ள எனக்கு இரண்டு சகாப்தங்கள் தேவைப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் அனுபவங்களை பனிப்போர் சூழலின் பின்னணியில் விவரிக்கும் நாவல், அகதியின் பேர்ளின் வாசல்.


சில்லையூர் செல்வராசனின் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி (1967), க. கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் (1968), நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) போன்ற தமிழ்நாவல் வரலாற்று நூல்வரிசையிலே 1895 முதல் 2020 வரையிலான காலத்தில் எழுந்த நாவல்களை அவை எழுந்த காலப் பின்னணியில் வைத்து நோக்குவதும், கூரிய விமர்சனப் பார்வையை முன்வைப்பதுமான தேவகாந்தனின் இலங்கைத் தமிழ் நாவல்இலக்கியம் - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம், 2021) தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது.


வாசிங்டன் சதுக்கத்தின் மேற்கே நகரின் ஒரு சிறிய பகுதியில் தெருக்கள் காட்டுத்தனமாகப் போயுள்ளன. அவை வெவ்வேறு திசைகளில் திரும்புகின்றன. அவை "இடங்கள்" என்று அழைக்கப்படும் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. ஒரு தெரு ஒன்று அல்லது இரண்டு முறை குறுக்கறுத்துச் செல்கிறது. ஓர் ஓவியர் இந்த தெருவில் சாத்தியமான மற்றும் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டுபிடித்தார். ஓர் ஓவியரிடம் அவர் பணம் செலுத்தாத சில ஓவியப் பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் பணம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் பணம் எடுக்க வந்தான் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதன் அந்தத் தெருவில் நடந்து, ஒரு சதமும் பெறாமல் திடீரென்று திரும்பி வருவதைச் சந்திக்கலாம்! நகரின் இந்தப் பகுதி கிரீன்விச் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. பழைய கிரீன்விச் கிராமத்திற்கு ஓவியர்கள் விரைவில் வந்தனர். இங்கு அவர்கள் விரும்பும் அறைகள், நல்ல வெளிச்சம் மற்றும் குறைந்த செலவில் கிடைத்தன. சூ மற்றும் ஜான்சி மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் உச்சியில் வசித்து வந்தனர். இந்த இளம் பெண்களில் ஒருவர் மைனேவிலிருந்து வந்தவர், மற்றவர் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர். அவர்கள் எட்டாவது தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தித்தனர். அவர்கள் ஒரே மாதிரியான கலை, ஒரே மாதிரியான உணவு மற்றும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் அங்கு கண்டுபிடித்தனர். எனவே ஒன்றாக வாழவும் வேலை செய்யவும் முடிவு செய்தனர்.




சாரங்கா என்ற குணாளினியை எனக்கு நீண்ட காலமாகவே எழுத்து மூலமாகவே எனக்குத் தெரியும்! திரு. ஞானசேகரன் அவர்களுடைய ’ஞானம்’ சஞ்சிகையில் இவரும் கவிதை சிறுகதை எழுதுவார்;;. நானும் எழுதுவேன். ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார் (2004). அதன் பின்னர் லண்டனில் சாவகச்சேரி ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு நான் மேடை அறிவிப்பாளராக சென்ற வேளைதான் 2005 – 2006 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அவரைக் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்வான அனுபவம் ஆனால் அன்றுகூட நேரடியாகப் பேசமுடியவில்லை. அதன் பின்னர் அவரை எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் நேர்காணலை மேற்கொண்டபோது மிக அனுபவச்செறிவோடு செய்திருந்தார்.



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









