"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா 19/3/23 மதியம் 4 மணிமுதல் இரவு 7 மணி வரை மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூர் நடைபெற்றது
16 பேருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது விருது பெற்றோர் :
ஐ.கிருத்திகா,அகிலா கிருஷ்ணமூர்த்தி, செ.இராஜேஸ்வரி, ஜெயந்தி கார்த்திக்,கோ.லீலா,, ப.கற்பகவள்ளி, ஜெய்சக்தி, சி ஆர் .மஞ்சுளா, ஆர். ராஜம்மாள்,அவ்வை நிர்மலா,, விஜி வெங்கட், பூமதி என். கருணாநிதி, சூலூர் ஆனந்தி,, சர்மிளா, தியானி, இறைவி