சிறுகதை : எலிப்பொறி - சுப்ரபாரதிமணியன் -
எலி பொறியை மழையில் கிடத்திவிட்டது சட்டென ஞாபகத்திற்கு வந்தது கிருஷ்ணனுக்கு .மழை சோ என்ற சப்தத்துடன் நீ கோடுகளாய் கீழே இறங்கிக் கொண்டிருந்தது .நெடு நேரமாய் மழை பெய்து கொண்டிருப்பதாக தோன்றியது இவ்வளவு நேரம் மழை பெய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று ஞாபகம் வந்தது .
எலி பொறியில் ஏதோ கிடப்பதே அவன் சலனத்தின் மூலம் அவன் அறிந்து கொண்டான்.கருவாடு ஒன்றை குத்தி வைத்தது சரியாகத்தான் பயன்பட்டது என்று நினைத்தான். வாழைப்பழம் இருக்கும் வரைக்கும் மசியாத எலி கருவாட்டுக்கு சரண் அடைந்து விட்டது. அதை எப்படி அடித்துக் கொல்வது என்பது அவனுடைய ஞாபகத்தில் வரவில்லை .
அம்மா சாக்குல போட்டு நாலு சாத்து சாத்து என்றாள்.. அது சும்மாவா இருக்கு டப்பா லிருந்து எல்லா பாத்திரத்தையும் ஓட்டை போடுது. பிளாஸ்டிக் டப்பாவேச் சொல்லவே வேண்டாம் . துணி ஒன்னும் வெளியே கிடக்கக்கூடாது. அதை குறிவைக்கிறது.கடுச்சு சேதம் பண்ணுது. இது மாதிரி எத்தனை இருக்கும்
அப்படியே கொண்டு போய் வாசல் முற்றத்தில் வைத்தபோது மேகம் கருத்துத் தெரிந்தது. மழை வருமா என்பது சந்தேகமாக இருந்தது .
ஆனால் பத்து நிமிடங்களில் மேகங்கள் திரண்டு கொண்டது போல மழை பொழிய ஆரம்பித்தது. தொடர்ந்த மழை அவனை உடம்பை ஏதாவது ஸ்சொட்டர் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஞாபகம் ஊட்டியது. அவன் உடம்பின் கருப்பு நிறத்திற்கு எந்த ஸ்சொட்டர் போட்டாலும் அது ஒத்து வராது .கொஞ்சம் லைட்டான கலரிலும் இருக்க ஆசைப்பட்டிருக்கிறான். அப்படித்தான் அவனின் கருத்த உடம்புக்கு ஏதாவது இறுக்கத்தை சேர்க்கிற மாதிரி இருந்தது. இந்த மழையில் தவிர்த்து விட முடியவில்லை பச்சை நிறத்தில் இருந்த்தை எடுத்து மாட்டிக்கொண்டான். அது இதயத்திற்கு அருகில் ஒரு ரோஜா பூவை சிவப்பு நிறத்தில் கொண்டு வந்திருந்தது. அந்த எம்பிராய்டரி அவனுக்கு பிடித்திருந்தது .பக்கத்தில்கூட எம்பிராய்டரி சார்ந்து இயந்திரங்கள் இருப்பதை அவன் பார்த்திருக்கிறான் .ஆனால் அவை எல்லாம் ஒரே நொடியில் ஆயிரக்கணக்கான பூக்களை பூக்க வைத்து விடுகின்றன. நூற்றுக்கணக்கான மலர்களைத் துளிர்க்கச் செய்துவிடுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறது அவற்றிலிருந்து சாயப்பட்டறை வாசம் கிளம்புவதாக தான் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் அந்த பூக்கள் உடைய வாசனையை அவனால் மறுக்க முடியவில்லை .அதேபோலத்தான் வாசனை சார்ந்த ஷர்மிலி எண்ணங்களும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. வெளியில் போகிறபோது எங்காவது அவள் தட்டுப்பட்டு விடுகிறாள்.