- முனைவர் ம. மைதிலி , தமிழ் உதவிப்பேராசிரியர் , விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி , தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 -
ஆய்வுச்சுருக்கம்
தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம்; திருத்தலாம்; மேம்படுத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் தாராளமாகக் கருத்துத் தெரிவிக்கலாம். அத்தகு இத்திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த விக்கிமூலத்திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் பக்கங்கள் மொத்தம் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கம் விரல்விட்டு எண்ணி விடும் அளவே உள்ளன. அவற்றுள் ஐங்குறுநூறு தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் 5 மட்டுமே உள்ளன. எது அந்தத் தரவுகளின் மூலம் என்று அறியமுடியவில்லை. இருப்பினும் ஐங்குறுநூறு சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தர இயலும். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக அமையும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள ஐங்குறுநூறு சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.
திறவுச் சொற்கள் (Keywords)
விக்கிமூலம், ஐங்குறுநூறு, தமிழ் இயற்கை மொழி ஆய்வு, பைத்தான் நிரல், Wikisource, Ayngurunooru, Tamil Natural Language Processing, Python Language.
அறிமுகம்
விக்கிமூலத்தில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழார்வலர்களின் முதன்மையான பணியாகும். ஐங்குறுநூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.
ஐங்குறுநூற்றின் சிறப்பு
ஐங்குறுநூறு, சங்க இலக்கியத்தில் இடம்பெறும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூல் கடைச்சங்கக் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) இயற்றப்பட்டது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு பாடல்கள் உள்ளன.
ஐங்குறுநூறு அகப்பொருள் சார்ந்த நூல் என்பதால், அதில் காதல், இன்பம், துன்பம், பிரிவு, மீட்சி போன்ற அக உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் உள்ளன. இந்நூலில் உள்ள பாடல்கள் எளிமையான நடையில், அழகான கற்பனையுடன் இயற்றப்பட்டுள்ளன. அவை தமிழ் இலக்கியத்தில் அகத்திணைப் பாடல்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றன. இத்தகு ஐங்குறுநூற்றின் சிறப்புகள் பின்வருமாறு:-
தமிழ் இலக்கியத்தில் காதல், இன்பம், துன்பம், பிரிவு, மீட்சி போன்ற அக உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களின் தொகுப்பு
எளிமையான நடையில், அழகான கற்பனையுடன் இயற்றப்பட்ட பாடல்கள்
தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியச் சிறப்பையும் எடுத்துக்காட்டும் நூல்
இதன் பாடல்கள், தமிழின் இயல்பான நடையில் அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் அகராதிச் சொற்கள், இன்றும் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் உள்ளன.
இதன் பாடல்களில், தமிழ்ச் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவை சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் பாடல்கள், தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தன.
ஐங்குறுநூற்றின் குறிப்பிடத்தக்க சிறப்புகளில் ஒன்று அதன் அகத்திணைப் பாடல்களின் நயங்கள் ஆகும். இப்பாடல்கள் உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்தவையாகும்.
உள்ளுறை என்பது ஒரு பொருளின் கருத்தை மறைமுகமாகக் கூறுவது ஆகும்.
உவமை என்பது ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும்.
இறைச்சி என்பது ஒரு பொருளின் உண்மையான தன்மையைக் கூறுவது ஆகும்.
ஐங்குறுநூற்றின் பாடல்களில் இந்த மூன்று நயங்களும் சிறப்பாக வெளிப்படுகின்றன.
ஐங்குறுநூற்றின் மற்றொரு சிறப்பு, அக்காலத்துத் தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு பற்றிய தகவல்களைத் தருவதாகும்.
இப்பாடல்களில் காதல், வீரம், தாய்மை, தந்தைமை, நட்பு, பண்பு, அறம், ஈகை முதலிய பல்வேறு பண்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை அக்காலத்துத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஐங்குறுநூறு தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இதன் பாடல்கள் தமிழ் மொழியின் செழுமையையும், தமிழர்களின் பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடல்கள் இன்றும் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இத்தகு ஐங்குறுநூற்றில் உள்ள சில சிறந்த பாடலடிகள் வருமாறு:-
குறிஞ்சித் திணையில் உள்ள "மலர்க் கொடி இனிய நெஞ்சம் மெல்லத் தூங்கும்"
முல்லைத் திணையில் உள்ள "அன்னம் வாழியோர் எம் அன்னம்"
மருதத் திணையில் உள்ள "பூங்கொடிப் பொழில் பூத்தது"
நெய்தல் திணையில் உள்ள "மணல் தார் மணல் தார் மணல் தார்"
பாலை திணையில் உள்ள "நெஞ்சே நீ சினந்து ஏன்" [11].
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, தமிழறிஞர்கள் பலர் இவற்றை அச்சுப் பதிப்பாகப் பதிப்பித்து வெளியிட்டனர்.
ஐங்குறுநூற்றின் முதன்முதல் பதிப்பு 1903ஆம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டது. இதை உ. வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்தார். இவர் பல சுவடிகளைச் சோதித்து, தற்காலத் தமிழரும் பயன்பெறும் வகையில் அப்பதிப்பை வெளியிட்டார்.
இதன் பின்னர், 1927ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஐங்குறுநூற்றைப் பதிப்பித்தார். இவர் உ. வே. சாமிநாதையரின் பதிப்பை மேம்படுத்தி, பல புதிய கருத்துகளை முன்வைத்தார்.
1970ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகம் ஐங்குறுநூற்றைப் பதிப்பித்தது. இதைப் பேராசிரியர் ஔவை துரைசாமி பதிப்பித்தார். இவர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்பை மேம்படுத்தி, மேலும் பல புதிய கருத்துகளை முன்வைத்தார்.
2003ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் ஐங்குறுநூற்றைப் பதிப்பித்தது். இதைப பேராசிரியர் மு. சிவசுப்பிரமணியன் பதிப்பித்தார். இவர் முந்தைய பதிப்புகளை விட மிகவும் விரிவான உரைநடையில் ஐங்குறுநூற்றைப் பதிப்பித்தார்.
இந்த ஐந்து பதிப்புகளும் ஐங்குறுநூற்றின் தொகுப்பு, பாடல்களின் அமைப்பு, பாவகைகள், இலக்கணம், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ் இலக்கிய ஆய்விற்கு மிக முக்கியமான ஆவணங்களாகும்.
ஐங்குறுநூற்றின் பதிப்பு வரலாற்றை சுருக்கமாகக் கூறுவதானால் பின்வருமாறு கூறலாம்.
1903: உ. வே. சாமிநாதையர் பதிப்பு
1927: எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பு
1970: தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகம் பதிப்பு
2003: தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பு
இந்தப் பதிப்புகள் அனைத்தும் ஐங்குறுநூற்றின் முழுமையான உரைகளை வழங்கியுள்ளன. இவை அனைத்தும் தமிழ் இலக்கிய ஆய்விற்கு மிக முக்கியமான ஆவணங்களாகும் [11].
அச்சு வடிவங்களில் ஐங்குறுநூறு
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனும் திணை வைப்பு முறையில் முறையே நூறு நூறு பாடல்கள் கொண்டதாக உ.வே. சாமிநாதையர் ஐங்குறுநூறு பதிப்பை 1903ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். இதன் இரண்டாம் பதிப்பு 1920ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 1944ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனச் சுவடி, கே.எம். வேலுப்பிள்ளை சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளை சுவடி ஆக மூன்று மூலம், கருத்துரை கொண்ட சுவடிகளும், ஆழ்வார் திருநகரி தே. இலட்சுமணக் கவிராயரின் மூலம், கருத்துரையும் பழைய உரை கொண்ட சுவடியும் கொண்டு இப்பதிப்பைப் பதிப்பித்திருக்கின்றார்.
ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் முதல் நூறு பாடல்களுக்கான ஐங்குறுநூறு உரையை 1938ஆம் ஆண்டு கா. கோவிந்தன் வெளியிட்டுள்ளார். அதன்பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக மருதம், நெய்தல் ஒரு தொகுதியாகவும், குறிஞ்சி, பாலை ஒரு தொகுதியாகவும், முல்லை ஒரு தொகுதியாகவும் என மூன்று தொகுதிகளாக ஐங்குறுநூறு பதிப்பை 1957ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். இப்பதிப்பிற்கு உ.வே. சாமிநாதையரின் பதிப்பும், சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியாரின் சுவடியும் துணைபுரிந்திருக்கின்றன. பொ.வே. சோமசுந்தரனாரின் ஐங்குறுநூறு விளக்கவுரையைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1961ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதன் மறுபதிப்பு 1966ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
ஐங்குறுநூறு மூலப்பதிப்பு
ஐங்குறுநூறு (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, 1957
ஐங்குறுநூறு குறிஞ்சி (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, முதற் பதிப்பு 1957
ஐங்குறுநூறு முல்லை (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, முதற் பதிப்பு 1958
ஐங்குறுநூறு மருதம் (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, 1938
ஐங்குறுநூறு (மருதம் ,நெய்தல்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,1957
மூலமும் உரையும் அமைந்த பதிப்புகள்
ஐங்குறுநூறும் பழைய உரையும் - டாக்டர் உ.வே .சாமிநாதையர், 1903
ஐங்குறுநூறு மூலமும் உரையும் - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, 1938
ஐங்குறுநூறு - டாக்டர் உ.வே .சாமிநாதையர்,2012
ஐங்குறுநூறு முல்லை -புலியூர் கேசிகன், 2010
ஐங்குறுநூறு - பதிப்பக வெளியீடு, 1994
ஐங்குறுநூறு - டாக்டர் எஸ் .ஜெகத்ரட்சகன், 2017
உரைப் பதிப்புகள்
ஐங்குறுநூறும் பழைய உரையும் - டாக்டர் உ.வே .சாமிநாதையர், 1903
ஐங்குறுநூறு மூலமும் உரையும் - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, 1938
ஐங்குறுநூறு (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை 1957
ஐங்குறுநூறு குறிஞ்சி (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, 1957
ஐங்குறுநூறு முல்லை (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, முதற் பதிப்பு 1958
ஐங்குறுநூறு மருதம் (மூலம்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,1938
ஐங்குறுநூறு (மருதம் ,நெய்தல்) - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,1957
உ. வே. சாவின் முதற்பதிப்புக்குப் பின்பு, இரண்டாம் பதிப்பு 1920இல் வெளிவந்தது. இவருடைய பதிப்புக்குப்பின் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களுடைய பதிப்பானது மூன்று தொகுதிகளாக 1957இல் வெளிவந்தது. இம்மூன்று தொகுதிகளுக்கு முன் 1938இல் ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் வெளிவந்துள்ளன. இறுதியில் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் எல்லாவற்றையும் ஒருசேரத் தொகுத்து 1958இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட்டுள்ளார். அடுத்து பொ. வே. சோமசுந்தரனாரின் கழக உரை 1961, 1966ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது. மூலப்பதிப்புகளாக (என்.சி.பி.எச் வெளியீடு) 1957, 1981இல் மர்ரே பதிப்பாக வெளிவந்துள்ளது. புலியூர்க் கேசிகன் தெளிவுரையும் சில தொகுதிகளாக வெவ்வேறு ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.
ஐங்குறுநூறு மொழிபெயர்ப்புகள்
Ainkurunuru (Selected Poems of Love) in English - முனைவர் செ. இராஜேஸ்வரி (பிரிவு: சங்கத் தமிழ்ப் பாடல்கள் - ஆங்கில மொழிபெயர்ப்பு வரிசை, பதிப்பகம்: சந்திரோதயம், மதுரை, ஆண்டு: 2022)
AINKURUNURU IN ENGLISH - S.N. KANDASWAMY, TAMIL UNIVERSITY, THANJAVUR
மலையாளம் - மொழிபெயர்ப்பு
ஐங்குறுநூற்றின் செய்யுட்கள் மலையாள மொழியில் மூன்று முறை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. வெட்டம் மாணி என்பவரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட “ரெண்டாயிர வர்சத்தே திரிஞ்ஞெடுத்த மலையாள பத்யங்ஙகள்“ (1977) எனும் நூலில் ஓரம்போகியார், பேயனார், கபிலர் ஆகியோரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. என்.வி.கிருஷ்ணா வாரியர் தொகுத்து மொழிபெயர்ப்புச் செய்துள்ள “அகம் கவிதைகள்” எனும் தொகுப்பில் ஐங்குறுநூற்றின் செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன.
ஐங்குறுநூறு பதிப்புகள்
டாக்டர் உ. வே. சாமிநாதையர்
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
ஐங்குறுநூறு 1903ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டாலும் உரை வரலாறு என்பது 1938ஆம் ஆண்டு ஔவை சு.துரைசாமிப்பிள்ளையிடமிருந்து தொடங்குகிறது. முதலில் ஐங்குறுநூற்றின் மருதத்திணைக்கும் பின்னர் 18 உரைகள் எழுந்துள்ளன. உ.வே.சாமிநாதையர் தாம் பதிப்பித்த இரண்டு பதிப்புகளிலும் (1903, 1920) பழையவுரை ஒன்றை இணைத்துப் பதிப்பித்துள்ளார். இப்பழையவுரையானது ஆழ்வார் திருநகரி ஸ்ரீ தே.லஷ்மண கவிராயர் கொடுத்த கையெழுத்துப் பிரதியில் இடம்பெற்றுள்ள உரையாக உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகின்றார். பழையவுரை உள்ள பாடல்கள் மொத்தம் 196 ஆகும். இவற்றுள் வேழப்பத்து, வெள்ளாங்குருகுப்பத்து, சிறுவெண்காக்கைப்பத்து, கேழற்பத்து, குரக்குப்பத்து ஆகிய பத்துகளுக்கு விடுபாடின்றிப் பழையவுரை கிடைத்துள்ளது. 13 பத்துகளுக்கு முற்றிலும் உரை கிடைக்கப்பெறவில்லை. இவை தவிர சிற்சில பாடல்களுக்குப் பழையவுரை கிடைத்திருக்கிறது..
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பாகிய இவருடைய பதிப்பில் ஒவ்வொரு திணைக்குரிய ஆசிரியர் வரலாறும், சிறப்பிடம் பெற்ற கருப்பொருள்களைப் பற்றிய உலகியல் விஞ்ஞானம், தத்துவம் முதலியவற்றை சேர்த்துள்ளார். மேலும் அவ்வப் பாடல்களின்கீழ்ப் பழைய உரை, உள்ளுறை உவமம், பாடவேறுபாடு என முறையாக அமைத்துள்ளார். அவர் எடுத்தாண்ட மேற்கோள் செய்யுளின் விவரத்தைப் பற்றி அந்தந்தப் பக்கத்தின்கீழே குறித்துக் காட்டியுள்ளார். உ. வே. சா. அவர்கள் சுட்டிக்காட்டிய பாடவேறுபாட்டினையே சுட்டிக்காட்டியுள்ளார். உ.வே.சா. பதிப்பிற்குப் பின்பு ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பானது செம்பதிப்பாகவும், திருத்திய பதிப்பாகவும் காணப்படுகிறது. உ. வே. சா. அவர்களுடைய பதிப்பில் 490ஆம் பாடலில் விடுபட்ட இரண்டு மூன்று அடிகள் யாவும் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பிலும், கழக வெளியீட்டிலும் முழுமை பெற்றுள்ளன.
ஓலைச்சுவடி பதிப்பு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தன. டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1903 - ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
கீழ்க்காணும் இடங்களில் சுவடிகளைப் பாதுகாத்து வருகின்றனர்:
அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை.
ஆதி பீமாராஜா கோஸ்வாமி மடம், தஞ்சை.
இரமணாஸ்ரமம், திருவண்ணமலை.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சேப்பாக்கம், சென்னை.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், திருவனந்தபுரம்.
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர், சென்னை.
தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர்.
முனைவர் பட்ட ஆய்வேடுகள்
ஐங்குறுநூறு – தொடரடைவு, முனைவர் செ.சிலம்புமணி
ஐங்குறுநூற்றுக் கூற்றும் பழையவுரையும் - சொற்பொருளடைவு முனைவர் பவானி
ஐங்குறுநூறு, கலித்தொகையில் வாழும் மகளிரின் மாண்புகள் ஓர் ஒப்பீடு - திருமதி ஞா.கார்த்திகா
விக்கிமூலத்தில் ஐங்குறுநூறு
ஐங்குறுநூற்றைப் பொறுத்தவரை விக்கிமூலத்தில் இரண்டு நூல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மூலநூலுடன் உள்ளது. மற்றொன்று தட்டச்சு எழுத்தாவண நிலையில் மட்டுமே உள்ளது. அதற்குரிய மூலம் இல்லை [1]. திசம்பர் 30, 2023 நாளில்தான் இரண்டு நூல்கள் இருப்பதைக் கண்டறிந்து ஐங்குறுநூறு எனும் பகுப்பு இடப்பெற்றுள்ளது [6]. இருப்பினும் இன்னும் பதிவேற்றம் தேவைப்படுகின்றது என்பதை மேற்கண்ட குறிப்புகள் வழியே அறிந்துகொண்டிருப்போம். இனி விக்கிமூலத்தில் இடம்பெற்றுள்ள அல்லது உருவாக்க இருக்கும் நூல்களை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஐங்குறுநூறு அட்டவணை மேம்பாடு
ஐங்குறுநூறு சார்ந்து எழுதப்பெற்ற ஆவணங்கள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது. ஆகவே, அந்த நூல் அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம்.
ஓலைச்சுவடிகளில் ஐங்குறுநூறு
மூல நூற்சுவடிகள்
உரை நூற்சுவடிகள்
அச்சு நூல்களில் ஐங்குறுநூறு
மூலநூல்
உரைநூல்
பழைய உரைகள்
உரைவளம்
தற்கால உரைகள்
ஆய்வுநூல்
இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
தமிழ் இலக்கிய, இலக்கியங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு
மொழியாக்கம்
உலக மொழிகளில்
இந்திய மொழிகளில்
இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும். இதன்படி சிறு முயற்சியைப் பின்வருமாறு பகுத்துப் பார்க்கலாம்.
ஐங்குறுநூறு நூல் மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்
விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் [5] [6] [7] [8] நிகழ்வதற்குப் பெருந்துணை நல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,
ஐங்குறுநூறு ஆய்வுகள் தொடர்ந்து பலமுறைகளில் நிகழ
இந்திய மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
உலக மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட
விக்சனரி திட்டங்களில் ஐங்குறுநூறு சொற்களை ஏற்படுத்த
விக்கித்தரவில் சேர்க்க
விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க
ஐங்குறுநூறு தகவல் பெறுவி கருவியை உருவாக்க
ஐங்குறுநூறு குறித்த மென்பொருள் உருவாக்க
ஐங்குறுநூறு கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க
என அறியலாம்.
நிறைவாக…
இதுவரை விளக்கப்பெற்றதின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆங்காங்கு நடைபெறும் ஐங்குறுநூறு ஆய்வுகளையும், அதுசார்ந்த கட்டற்ற உரிமத்தில் உள்ள நூல்களை ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஒரு கருவூல நூலகமாகத் தமிழ் விக்கிமூலம் அமையும் என்பதை உணர முடிகின்றது. அதுமட்டுமின்றி இது நடக்கும்பொழுது 72 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாகத் தமிழ் விக்கிமூலத்திட்டம் அமையும் என்பதையும் தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில் விக்கிமூலம் திட்டம் மேம்படும் என்பதையும் முடிபாகக் கொள்கின்றது.
துணைநிற்பவை
ஐங்குறுநூறு, https://ta.wikisource.org/s/6j
ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி. (2016, செப்டம்பர் 24). விக்கிமூலம். Retrieved 00:17, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org
ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை. (2016, செப்டம்பர் 24). விக்கிமூலம். Retrieved 00:18, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org
ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம். (2016, செப்டம்பர் 24). விக்கிமூலம். Retrieved 00:18, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org
ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை. (2016, செப்டம்பர் 24). விக்கிமூலம். Retrieved 00:18, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org
ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல். (2016, செப்டம்பர் 24). விக்கிமூலம். Retrieved 00:18, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org
பகுப்பு ஐங்குறுநூறு - https://ta.wikisource.org/s/41l
முனைவர் த.சத்தியராஜ், தகவலுழவன், 17 அக்டோபர் 2022, விக்கிமூலமும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளும், கோயமுத்தூர்: இனம் பதிப்பகம்.
முனைவர் த.சத்தியராஜ், முனைவர் ரா.நித்யா, தகவலுழவன், 17 அக்டோபர் 2023, விக்கித்திட்டங்களில் பைத்தான் பயன்பாடு, கோயமுத்தூர் : இனம் பதிப்பகம்.
முனைவர் த.சத்தியராஜ், 2022, தமிழ் விக்கிமூலத்தில் குறுந்தொகைத் தரவு மேம்பாடு (E-content development for Kurunthogai resource in ta.Wikisource) Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2021, Thoguthi-2.
Subalalitha Chinnaudayar Navaneethakrishnan, Sathiyaraj Thangasamy, Nithya R, Info-farmer, Neechalkaran, 2022, Exploring the Opportunities and Challenges in Contributing to Tamil Wikimedia International Conference on Speech and Language Technologies for Low-resource Languages.
https://bard.google.com/u/2/chat/a638eac185aa6f28
அட்டவணை:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்
https://ta.wikisource.org
https://ta.wikipedia.org
https://www.tamildigitallibrary.in
https://www.tamilvu.org
http://gacariyalur.ac.in
https://thaenmaduratamil.blogspot.com
https://youtu.be
https://youtu.be
https://youtu.be/uqfJmT_b-E8?si=AUViFQmp719yngKw
https://youtu.be/Ugj8fpgJb9c?si=n39gJvHd44ZhN5eh
http://thf-news.tamilheritage.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.