மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மக்கள் இந்த நாட்டில் குடியேற மூல காரணமாக அமைந்தது.இலங்கையில் முதல் முறையாக 1820 களை ஒட்டிய தசாப்தத்தின் முற்பகுதியில் இலங்கை க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகும். மலைநாட்டின் கம்பளைக்கருகாமை யில் காணப்பட்ட சிங்ஹபிட்டி என்ற இடத்தில் வெறுமனே 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு தசாப்த காலத்திலேயே இலட்சம் ஏக்கர்களாகப் பெருகி அதற்கப்பாலும் வளர்ச்சியடைந்து, பின்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற்றமடைந்தது.

இத்தகைய பாரிய பொருளாதாரரீதியிலான விவசாய பயிர்ச்செய்கையில் ஈடு பட ஆயிரக்கணக்கில் தொழிலாளர் படை தேவைப்பட்ட போது, அதனை இலங்கைக்குள்ளேயே திரட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முடியாமல்போனது. அதற்கு முக்கிய காரணம் சிங்கள மக்கள் தம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்யத் தாம் தயாரில்லை என்ற தன்மானப் பிரச்சினையாகும் என்று சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். அதன் காரணமாக தமக்குத் தேவையான கூலித்தொழிலாளர்களை சீனாவில் இருந்தோ தமிழ் நாட்டில் இருந்தோ அழைத்து வரத் தீர்மானித்தனர். சீனத் தொழிலாளர்களை அழைத்து வருவது செலவு கூடியது என்பதாலேயே அருகிலிருந்த தமிழ்நாட்டிலிருந்து இந்தியத் தொழிலாளரைஅழைத்து வந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு மாத்திரமல்லாமல் மலேசியா, பீஜித்தீவுகள்,மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, மொறிசியஸ், டிரினிடாட் முதலான
நாடுகளுக்கும் சென்றார்கள். அவ்விதம் அவர்கள் இலங்கைக்கு வந்த  வழியிலும்வந்த பின்னரும் கோப்பித் தோட்டங்களில் அவர்கள் அனுபவித்த இன்னல்கள், பட்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை. இந்தநாட்டுக்கு இம்மக்களின் வருகையால் பின்வரும் நன்மைகள் கிடைத்தன என்பதனை இப்போதும் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

1)  1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவால் திறந்த பொருளாதாμம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் வரை,  முன்னர் கோப்பியின் மூலமும் ,பின்னர் தேயிலையின் மூலமும் இந்நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தை உழைத்துத் தருபவர்களாக இந்தியக் கூலித்தொழிலாளர்கள் இருந்தனர்.

2)  இந்நாட்டுக்கு நெடுஞ்சாலைப்போக்குவμத்து மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. இவர்கள் நேரடியாகவே அவற்றை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

3)  இந்நாட்டின் பொதுவேலைத் திணைக்களத்தின் (Public Works Department -- P W D ) ஆணிவேராக இவர்களே இருந்தனர்.

4)  இலங்கையில் சிறு முதலாளித்துவம் ஏற்படக் காரணமாக அமைந்து தேசிய முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு வித்திட்டவர்கள்.

5) அதன் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியாவுக்கு எதிரான தேசிய எதிர்ப்பு இயக்கத்துக்கு காரணமாக அமைந்தவர்கள்.

6)  இலங்கையில் சிறு முதலாளித்துவம் எழுச்சி பெற்றமை கானணமாகவே அவர்களின் அடுத்த சந்ததியினர் கல்வி கற்ற வழித் தோன்றல்களாக உருவாகி உள்நாட்டு அரசியல் தலைவர்கள் உருவாக காரணமாகினர்.

7)  1890 களையடுத்து கோப்பிப் பயிர்ச்செய்கை நோயினால் அழிந்து போனமையின் பின்னர், தேயிலை ஏற்றுமதிப் பொருளாதானம் ஏற்பட்டது. இன்று வரை "சிலோன்' (Ceylon ) என்று அழைக்கப்பட்ட இலங்கையை உலகம் அறிந்து வைத்திருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் உழைப்பால் அபிவிருத்தியடைந்த தேயிலைப்பயிர்ச் செய்கைதான்.

8) கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புபட்டு பல உப கைத்தொழில்கள் வர்த்தக நடவடிக்கைகள் , சேவை வர்த்தகங்கள்
தோன்றின. காடுகளை அழிக்கும் ஒப்பந்தம், தொழிலாளர்களை வழங்கும் ஒப்பந்தம், பெருந்தோட்டத்துறைக்கு உணவுகளை வழங்கும் ஒப்பந்தம், சில்லறை மொத்த விற்பனை வர்த்தகம், கட்டிட நிர்மாண ஒப்பந்தம், கட்டிட நிர்மாணங்களுக்கான மூலப் பொருள் விநியோகம், மரங்கள் தளபாட விநியோகம், சாராயம், கள் விற்பனை ஒப்பந்தம் போன்றவற்றின் ஊடாக, மத்தியதர வர்க்க பிரபுக்கள் என அழைத்துக் கொண்ட மேட்டுக் குடியினர் உருவாயினர். மரப் பீப்பாய்த் தொழில் மற்றும் மரத்தளபாடத்தொழில், புகையிரத பாதைகளுக்கான சிலிப்பர் கட்டைகள் உற்பத்தித் தொழில், தந்திக் கம்பங்கள் உற்பத்தித் தொழில், தந்திக் கம்பங்கள் தயாரிப்பு ஆகியன அதிகரிப்பு காரணமாக மர வியாபாரம், மரப்பொருள் உற்பத்தி ஆலைகள் முத
லாளிகள் தோன்றினர்.

இப்படி கோப்பிபெருந்தோட்டத் செய்கை பின்னர் தேயிலை பெருந்தோட்ட பொருளாதாரம் என்பவற்றை மூல காரணமாகக்கொண்டு உருவாகிய இலங் கையின்தேசிய முதலாளிகள் பின்னர் பாரியஅளவில் தேயிலை, இறப்பர்,தென்னைபெருந்தோட்டங்களின் சொந்தக்காரர்களாகி தனவந்தர் ஆனார்கள்.அவர்களின் பின் வந்த பரம்பரையினர் இன்று இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மத்தியதரத்தினராகவும் அரசியல் தலைவர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பதுவரலாற்று உண்மையாகும். இத்தகையஅபிவிருத்தியையும் வளர்ச்சியையும்இலங்கை நாட்டுக்குப் பெற்றுத் தந்தவர்கள் முதலில் கோப்பித் தொழிலாளர்களும் அதன் பின்னர் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களும் தான் என்பதனை இலங்கையில் பலர் வசதியாக மறந்து போய் விட்டனர்.

அந்த வகையில் கோப்பிக்காலத்தின் வரலாற்று உண்மைகளையும் வரலாறாகிப் போன கோப்பிக்கால இந்திய தொழிலாளரின் வாழ்வியலையும் அவர்கள் இந்நாட்டை வளங்கொழிக்கச் செய்த தியாகங்களையும் சிந்திய வியர்வை, இரத்தம், புதையுண்ட சதை என்பவற்றையும் மீண்டும் ஒரு முறை கிளறிப்பார்த்து இச் சமூகம் இனியாவதுவிழிப்படைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும்

மிகச் சரியாகக் கூறுவதாயின் ஹென்றிபர்ட் ( Hendry Bird ) (பிரிட்டிஷ் இராணியின் படைகளின் உயர் கட்டளை அதிகாரி) அவர்களாலும், அப்போதைய ஆள்பதியான எட்வர்ட் பாண்ஸ் ( Edward Barns ) அவர்களாலும் கம்பளைக்கருகில் சிங்ஹபிட்டி என்ற இடத்தில் முதலாவது கோப்பித் தோட்டம் 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1893 ஆம் ஆண்டு வரையான கோப்பி பெருந்தோட்ட வரலாறு அதன் பின்னரான தேயிலை , றப்பர் , தெங்கு ஆகிய பெருந்த்தோட்டங்களின் வரலாறு என்றவுடன் இது ஒரு விவசாய பயிர்ச்செய்கையின் வரலாறு என்று கருதிவிடக்கூடாது. கோப்பித் தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கென தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு கண்டிச்சீமையெனும் கண் காணாத தேசத்தில் அவர்கள் அனுபவித்த அவலமும் வாங்கிய அடியும் உதையும் கண்ணீரும் கம்பலையும் கொண்ட துன்பியல் வரலாறு மீண்டும் ஒரு முறை மீள் வாசிக்கப்பட வேண்டும் என்பது இந்தசந்தர்ப்பத்தில் மிகப்பொருத்தமானதாகும்.

உலகின் மானிடவியல் வரலாற்றில் பல்வேறு அழிந்தொழிந்து போன நாகரிகங்களின் வரலாறு பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளோம். அமெரிக்காவின் இன்கா, மாயா மக்கள் நாகரிகம், பபிலோன், யூப்ரடீஸ் டைகரிஸ், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, சிந்துவெளி நாகரிகங்கள் எனப்பல நாகரிகங்கள் வரலாற்றில்பேசப்படுகின்றன. இவை யெல்லாமே இலட்சக்கணக்கான மக்கள் மடிந்தொழிந்துபோன மண் மேடாகத்தான் பின்னர் காணப்பட்டன. அண்மையில் கூட இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தத்தால் இலட்சக்கணக்கானக்கானோர் மாண்டு மண்ணோடு மண்ணாயினர். இவர்கள் மாண்ட இடமும் இன்று முள்ளிவாய்க்கால் மண் மேடாகி வரலாறாகிப்போனது.

இப்படித்தான் இம்மக்களின் கோப்பிக் கால வரலாறு என்று சொல்லப்படுகின்ற 1823 முதல் 1893 வரையுள்ள இந்த ஏழு தசாப்த வரலாற்றைஆராய்ந்த வர்கள்சுமார் இரண்டு இலட்சம் பேர் இயற்கை மரணங்களுக்கு அப்பால் கொலரா, பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி, கடுமையான குளிர்போன்றவற்றுக்குப் பலியாகி தாம் நட்டகோப்பி மரங்களுக்கே உரமாகி மண்மேடாகிப் போனார்கள். இவர்கள் இந்த நாட்டுக்கு செய்த தியாகம் எண்ணற்றன. இந்த நாட்டின் ஏற்றுமதிப்பொருளாதாரம், போக்குவரத்து மார்க்கங்களான பெருந்தெருக்கள், புகையிμத வீதிகள், பாலங்கள் முதலானவற்றை அமைத்தவர் இவர்கள் தான் என்றால் யார் நம்புகிறார்கள் . அதனால்தான்  "கண்டிச்சீமையிலே " என்ற எனது வரலாற்றுத் தொடர்  வீரகேசரியின் வெளியீடான ‘சூரியகாந்தி’ பத்திரிகையில் தொடராக வெளிவந்து முடிவுற்ற தறுவாயில் அதன் முடிவுரையாக பின்வரும் கவிதை வரிகளை எழுதினேன்.

"தாஜ் மஹாலைக் கட்டியது
யாரென்று கேட்டேன்

ஷாஜகான் என்றார்கள்

பிரமிட்டுக்களை கட்டியது
யாரென்று கேட்டேன்

பாரோ மன்னன் என்றார்கள்

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது
யாரென்று கேட்டேன்

ராஜராஜ சோழன் என்றார்கள்

மலையகத்தின் தேயிலைத் தோட்டங்களையும்
பெருந்தெருக்களையும் தண்டவாளங்களையும்
பாலங்களையும் கட்டி உருவாக்கியது
யாரென்று கேட்டேன்

பிரிட்டிஷ்காரன் என்றார்கள்."

பொதுவாக மனித வரலாறுகள் மன்னர்களும் சக்கரவர்த்திகளும் பேரரசுகளும் ஏகாதிபத்தியங்களும் பெற்ற வெற்றி வரலாறுகளாக மாத்திμமே உள்ளன. இந்த மாமன்னர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் தியாகிகளாகி மரணித்துப் போய் விட்ட மக்கள் வரலாறுகளும் அவ்விதம் அம் மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி மாண்டொழிந்து போனவர்களின் வரலாறுகளும் எங்குமே உரிய முறையில் எழுதப்படவில்லை. அதனால் மேற்படி தொடரின் முடிவுரையின் இறுதி அங்கமாகமேற்படி கவிதையை எழுதினேன்.தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானின் வரலாறு இன்றுவரை பேசப்படுகின்றது. பிரமிட்டுக்களை கட்டிய பாரோ மன்னர்களின் வரலாறுகள் இன்றுவரை பேசப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜசோழனை இன்றும் நாம் போற்றிப்புகழ்கின்றோம்.இலங்கையில் கோப்பிக் கால வரலாற்றின்முக்கிய அம்சங்களில் ஒன்றான இலங்கையில் ரயில் பாதைகள், பெருந்தெருக்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பாலங்கள், நீண்ட, பெரிய, கரிய சுரங்கப் பாதைகள் ஆகியவற்றை நமக்கு அமைத்துத் தந்தவன் பிரிட்டிஷ்காரன் என்று நன்றியுடனும் பெருமையுடனும் கூறுகிறோம். இவற்றையெல்லாம் அமைக்கப்பாடுபட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், சித்திரம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் இப்படி இவற்றின் உருவாக்கத்துக்கு அர்ப்பணிப்புச் செய்த மக்கள் பற்றி எங்கும் வரலாறுகள்எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் 1823 ஆம் ஆண்டை மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்த ஆண்டாக இனங்கண்டு அவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து 200 ஆண்டை பூர்த்தி செய்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டை கணிப்பீடு செய்யலாம். அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டை நமது 200 வருட கால வரலாற்றுப் பூர்த்தி ஆண்டாக நினைவுகூர்ந்து பிரகடனப்படுத்தி அந்த ஆண்டு முழுவதும் நமது உரிமைகளையும் தேவைகளையும் அவசியங்களையும் வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மலையக தமிழ் மக்களின் சார்பில் எனது வேண்டுகோளாகும் . இதனைப் பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வேறு சிவில் அமைப்புக்களும் இளைஞர் அமைப்புகளும் மறுமலர்ச்சி மன்றங்களும் ஆய்வு நிறுவனங்களும் கூட்டாக முன்னெடுக்கவேண்டும் . அத்தகைய எல்லா நிகழ்வுகளும் சிங்கள மக்களையும் சிங்கள அமைப்புக்களையும் உள்ளடக்கிக்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் இந்த மக்கள் இந்நாட்டுக்குச்செய்த அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் அபிவிருத்திப் பணிகள் முதலியன அந்நிகழ்வுகளில் பிரதிபலிக்கப்பட வேண்டும். இது தொடர்பான செய்திகள் நாடெங்கும், உலகெங்கும் பரப்பப்பட வேண்டும் . இந்தப் பாரிய கைங்கரியத்தில் மனமுவந்து ஒன்றுபட்டு இணைந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரபினருக்கும் இத்தால் அழைப்பு விடுக்கப்படுகிறது .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R