தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், ,திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.இரா. சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல் நலக் குறைவால் மறைந்தார். நீண்ட வாழ்க்கை. தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளூமன்ற உறுப்பினராக 1977இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ,1989 தவிர இறுதிவரை திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் அரசியல்ரீதியாகத் தீவிரமடைந்தபோது அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழரசுகட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து தன் அரசியலைத் தொடர்ந்த தலைவர்களில் ஒருவர். சட்டத்தரணியான இவர் தன் இளமைக்காலத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அரசியலில் ஈடுபட்டவர். அவ்வப்போது தன்னால் முடிந்த அளவுக்குத் தமிழர் சம்பந்தமான விடயங்களுக்காகக்குரல் கொடுத்தவர். இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித்தலைவராகவும் இருந்திருக்கின்றார்.
 
இவரது தீவிர அரசியல் காலகட்டத்தில் இலங்கையின் அரசியலானது போர்க்கால அரசியலாக மாறி விட்டது. கட்டுப்பாடு ஆயுத அமைப்புகளின் கைகளுக்கு இடம் மாறிவிட்டது. முன்பு , 1983 வரை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தனித்துவமாகச் செயற்பட்ட அரசியற் சூழல் இவருக்கு வாய்க்கவில்லை. 2009இல் போர் முடிந்தபின்னரும், 2015 வரை நிலவிய, முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் காலகட்டமும் மனித உரிமைகள் மீறப்பட்ட இருண்ட காலகட்டம். யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை என்ன நடந்தது என்பது தெரியாத நிலை. மக்கள் இன்னும் போராடிக்கொண்டேயிருக்கின்றார்கள்.
 
2015 தொடக்கம் இன்றுவரையிலான காலகட்டம் இவரது தலைமையில் அமைதியாகக் கழிந்தது. இக்காலகட்டத்தில் இவருக்குத் தனித்துவமாக, தீவிரமாக அரசியலை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அதனை இவர் முறையாகக் கையாளவில்லையென்பது இவரது அரசியலை விமர்சிப்பவர்கள் முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. அதற்கு இவர் மட்டும் முக்கிய காரணமென்று நான் நினைக்கவில்லை.
 உபகண்ட அரசியலும் குறிப்பாக இந்தியாவின் இலங்கை மீதான நகர்வுகளும் முக்கிய காரணங்களில் ஒன்று.
 
இன்று இலங்கையின் அரசியலானது அரசியல்வாதிகள் (இன, மத, மொழி பேதமின்றி) அனைவரும் தம் நலன்களுக்காகக் கட்சிகளுக்கிடையிலான கூட்டணிகள், பரஸ்பர ஆதரவு நிலைப்பாடுகள் எடுத்தல் என்னும் நிலைக்கு மாறி விட்டது. அத்துடன் வருமானம் ஈட்டித்தருமொரு துறையாக மாறிவிட்டது. இச்சூழல் எழுபதுகளில் , எண்பதுகளில் இருந்த அடக்குமுறைகள் மலிந்த சூழல் அல்ல. முன்பு படையினரின் அடக்குமுறைகள் மலிந்திருந்தன. இன்று தவறு செய்யும் படையினரை மக்கள் பிடித்துக் காவல் துறையிடம் கையளிக்கின்றார்கள். இம்மாறி விட்ட சூழலில் ஏன் முரண்பாடுகளைப்பெரிதாக்க வேண்டுமென்று சம்பந்தன் எண்ணியிருக்கலாம்.
 
யுத்தத்திற்கு பின்பட்ட சூழலில் போர்க்குற்றங்களுக்கான நீதி , காணாமல் போனவர்களுக்கான நீதி , முன்னாள் போராளிகளுக்கான மறு வாழ்வு, போரினால் பாதிக்கப்பவர்களுக்கான மறுவாழ்வு ஆகியவை முக்கிய பிரச்சினைகள். இவற்றுடன் இன்னும் தீர்க்கப்படாமலிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான பிரச்சினை, தமிழர் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவும் தீண்டாமைப் பிரச்சினை இவற்றை மையமாக வைத்துச் சிறிது அமைதிவழியில் சிறிது தீவிரமாக இயங்கியிருக்கலாம். அதில் சம்பந்தன் அவர்கள் வாய்ப்பைத் தவற விட்டதாகவே கருத வேண்டும்.
 
அதே சமயம் இளைஞராக அரசியலில் குதித்த காலத்திலிருந்து இன்று வரை அவர் தொடர்ச்சியாகத் தமிழர் அரசியலில் செயற்பட்டு வந்திருக்கின்றார். ஆரம்ப காலத்தில் இவரும் சிறைவாசம் அனுபவித்ததாக நினைவு. அவரது அரசியற் பங்களிப்பு குறைநிறைகளுடன் மதிப்பிடப்பட வேண்டியது. ஆனால் தவிர்க்கப்படக் கூடியதல்ல. ஆழ்ந்த இரங்கல்.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R