முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர். 'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள் Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர்.
இவர் பிரதான நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் அமைப்பு சூழற் பாதுகாப்புக்காகச் செயற்படும் முக்கியமானதோர் அமைப்பு. இவரது சூழலியல் பேணல் மற்றும் காலநிலையைச் சீராக்குதல் பங்களிப்புகளுக்காகச் சர்வதேசப் புகழ்பெற்ற 'டைம்' (Time) சஞ்கை வருடாவருடம் தேர்ந்தெடுக்கும் 100 சிறந்த ஆளுமைகளில் ஒருவராக இவ்வாண்டு (2023) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் ''டைம்' சஞ்சிகையின் பட்டியலில் இடம் பெறும் முதலாவது இலங்கையைர், இலங்கைத் தமிழர் இவரென்று நினைக்கின்றேன்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் மகன் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தை புனைவில் கவனம் செலுத்தினால் தனயன் அபுனைவில் கவனம் செலுத்துகின்றார். வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.