முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் சிங்கள மக்களும் இணைவு!
பயனுள்ள மீள்பிரசுரம்: இயக்கவியல் - ஓர் அறிமுகம் (இயக்கவியலும் - இயக்கவியல் வகையினங்களும்) - A.K..ஈஸ்வரன் -
(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்“சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.)
இன்று இயக்கவியலைப் (Dialectic) பார்க்கப் போகிறோம். இயற்கை, சமூகம் ஆகியவை ஒரு விதிக்குள் தான் இயங்குகிறது. அனைத்து நிகழ்வுகளையும், விதி என்று கூறிடமுடியாது. அதாவது நிகழ்வது அனைத்தும் விதியாகாது. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நடைபெறுவதையே விதி என்று கூறப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும், இன்றைய சமூகம், ஒரு மாறுதலுக்கு உட்பட்டு, அடுத்தப் புதிய சமூகத்திற்கு மாறும் என்பதை இயக்கவியல் ஏற்றுக் கொண்டு, விளக்குகிறது. அதனால் தொழிலாளர்களுக்குத் தேவையான அணுகுமுறை இயக்கவியல் ஆகும். இன்றைய சுரண்டும் சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இயக்கவியலை மறுக்கின்றனர். அவர்கள் இயக்கவியலுக்கு மாறான இயக்கமறுப்பியலை ஏற்கின்றனர். இன்று நாம் இயக்கவியலைப் பற்றிப் பார்ப்போம்.
மார்க்சியத் தத்துவமான, பொருள்முதல்வாதம் இயக்கவியல் அணுகுமுறையையே ஏற்கிறது. அதனால் தான் மார்க்சியத் தத்துவத்தை, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம், இயக்கவியலால் அணுகப்பட்டது. மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல், இயக்கவியல் முறையால் எழுதப்பட்டது. அதனால் தான், மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகள் இயக்கவியலை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்! - குரு அரவிந்தன் -
யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சேவையாற்றிபோது, ஸ்னைப்பர் தாக்குதலுக்குப் புகழ் பெற்றவர். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு ஸ்னைப்பர் வீரனால் ஐந்து அல்லது ஆறு பேரைத்தான் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவர் ஒரே நாளில் 40 பேரைச்சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டவர். இப்போது உக்ரைனுக்கு உதவும் நோக்கத்தோடு, ரஸ்ய படையினருக்காகத் தலைநகரான கீவ்வில் தனது .338 ஸ்னைப்பர் ரைபிளுடன் வீதியில் காத்திருக்கின்றார். இவரைப் போலவே, பிரபல டென்னிஸ் வீரரான சேர்ஜி ஸ்ராகேவஸ்கியும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருக்கின்றார்.
உக்ரைன் - ரஸ்யா யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துவிட்டன. சென்ற பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஸ்யாவால் இந்த இந்த யுத்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரஸ்யா நாட்டின் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடக்காத படியால், யுத்தம் உக்ரைன் நாட்டில் நடப்பதால், இந்த யுத்தத்தில் உக்ரைன் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய போலாந்து நாட்டுப்பிரதமர், செக் குடியரசுப் பிரதமர், ஸ்லோவேனியா பிரதமர் ஆகியோர் உக்ரைனுக்கு சென்று, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி உக்ரைன் அதிபரைச் சந்தித்து உரையாடினார்கள். உக்ரைன் தலைநகரான கீவ்வில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. ஒரு வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய யுத்தம், நேசநாடுகள் உக்ரைனுக்கு உதவியதால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதே நேரம் உக்ரைன் நாட்டின் மீது ரஸ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து இருக்கின்றது. தலைநகரான கீவ்வையும், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வையும் கைப்பற்றினால் உக்ரைன் பலமிழந்து விடும் என்ற கணிப்பில் இந்தத் தாக்குதல்கள் ரஸ்யாவால் மேற்கொள்ளப் படுகின்றன.
நேட்டோ தற்போதைய ருஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்குக் காரணமா? - 'கிராவிட்டாஸ் பிளஸ்' செய்திகள் -
நேட்டோ தற்போதைய ருஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்குக் காரணமா? இதனை மையமாக வைத்து 'கிராவிட்டாஸ் செய்திகள்' சானலில் 'பல்கி சர்மா' (Palki Sharma) விபரிக்கும் இக்காணொளி முக்கியமானதென்பதால் பகிர்ந்துகொள்கின்றோம். இக்காணொளியில் பல்கி சர்மா நேட்டோ அமைப்பு பற்றியும், அதன் விஸ்தரிப்பு பற்றியும் , அதனால் ரஷ்யாவுக்கு ஏற்படும் அதன் நலன்களுக்கு எதிரான ஆபத்துகள் பற்றியும் , உக்ரைனின்ம் , நேட்டோவின் பரஸ்பர அரவணைப்பு பற்றியும் இக்காணொளியில் ஆராயப்படுகின்றது.
உக்ரைன் ஏன் மேற்குலகத்தின் தவறு? -
உக்ரைன் , ரஷ்ய மோதல் பற்றிய கருத்துகள் சில! - நந்திவர்மன் -
சோவியத் குடியரசைத் துண்டுகளாக்கியதில் வெற்றி பெற்றன மேற்கு நாடுகள். அதுவும் போதாதென்று அவற்றையெல்லாம் தம் கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, ரஷ்யாவை மேலும் பவீனப்படுத்தி, உலக அரசியலில் ஓரங்கட்ட முயற்சி செய்ததன் விளைவுதான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வரும் முயற்சி. அது இன்னும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும். அதன் தேசிய நலன்களுக்கும் எதிரானது; ஆபத்தானது. உக்ரைன் மட்டும் தான் ஒருபோதும் நேட்டோவுடன் இணையப்போவதில்லையென்று அறிக்கை விட்டிருந்தால் இந்தப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். தான் ருஷ்யாவுக்கு மிக அருகிலிருப்பதால், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுடன் தான் பின்னிப்பிணைந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து தனது பூகோள அரசியலை அது நடத்தியிருந்தால் இப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம் போர்கள் அவை எக்காரணங்களால் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. அது மிகவும் துயரமானது.
மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு!
அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.
திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நூல்வெளியீட்டு அரங்கை, திருமதி பாக்கியம் அம்பிகைபாகர், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களை நினைவுகூர்ந்தவாறு, இலங்கை உட்பட உலகெங்கும் போரினால் மறைந்தவர்களுக்கும் கொவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
எழுத்தாளர் திரு. முருகபூபதி, வழக்கறிஞர் திரு. ஜே பிள்ளை ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து, எழுத்தாளர் சட்டத்தரணி ‘பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா, கலாநிதி ஆனந்த ஜெயசேகரம், திரு. ஜூட் பிரகாஷ், ஆகியோர் நூல் நயப்புரை நிகழ்த்துவர். நூலாசிரியர் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
குரு அரவிந்தனின் காதலர் தினக் கதைகள்!
1. என் காதலி ஒரு கண்ணகி
நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.
மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.
சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?