உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை: "நாம் தமிழர்களுடன் தான்... இலங்கையின் நிலைமை எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது..." சோனியா காந்தி
பொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.