யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...
தேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.
தேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.
முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது? வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா? அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.