பதிவுகள் முகப்பு

சிறுகதை : பாடம் - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
02 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.

சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி.

அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து இன்று மனம் மறுகுகின்றார். மூத்தவள் இன்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாகக் கணவருடன் குடும்பம் நடத்துகின்றாள் என எண்ணுகின்றார்.

மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வா அது! அவரின் மனம் அங்கே தாவுகின்றது.

•

பள்ளியால் வந்த மகள் புத்தகப்பொதியைத் தொப்பென்று போட்டுவிட்டு, வீட்டு வளவிற்குள் வேலிக்கரையோரமாக ஓடுகின்றாள். அவளது அவசரத்தை அவதானித்த அப்பா, வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து எட்டிப் பார்க்கின்றார். வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் கிடுகுவேலியுடன் கதை பேசியபடி நிற்கின்றான். துரையைக் கண்டவுடன் வேலிக்குள் எதையோ மறைத்துவிட்டு மாயமாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். வேலிக்குள் சொருகியிருந்த கடிதத்தை எடுத்து வந்தார் துரை. மகளைக் கூப்பிட்டார்.

மேலும் படிக்க ...

அலை மோதும் காதலே..! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
02 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை.  பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.

மனசு தவிப்பதைவிட இந்தக் குளிரிலும் உடம்பு தகிப்பதே பெரிய வேதனையாக இருந்தது. எப்படியும் மனதில் இருப்பதை சுபாவிடம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் அக்காவின் வீடு தேடி வந்திருந்தாள்.

‘ஏன்டி இத்தனை நாளாய் ஊமையாய் இருந்தாய்?’ சுபா தங்கையை அதட்டினாள்.

கட்டிலில் உட்கார்ந்திருந்த சுகி கண்களைத் துடைத்துக் கொண்டு அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்.

‘எப்படி அக்கா இதை வெளியே சொல்லுறது?’

‘இப்பமட்டும் என்னவாம், வெளிக்கிட்டு என்னோட வா, போவம்.’

‘எங்கேயக்கா..?’

‘டாக்டரிட்டைதான்!’

‘வேண்டாமக்கா, நான் எங்கேயும் வரவில்லை.’

‘குடும்ப வைத்தியரிட்டைப் போனியா?’

‘போனேன்..!’

‘என்னவாம்?’

‘எல்லாம் செக் பண்ணிப் பாத்தாச்சு!’ சுகி விம்மினாள்.

‘என்ன சொன்னவர் எண்டு சொல்லிப்போட்டு அழேன்’

அவள் சற்று நேரம் மௌனம் காத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிச் சொல்வது?

‘உன்னிலை ஏதாவது பிழையா?’ என்றாள் சுபா

அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்திருந்தாள்.

‘பலோப்பின் குழாயில ஏதாவது தடையா..?.’

‘இல்லை’ என்று மறுத்தாள்.

‘கருப்பையில் ஏதாவது கோளாறா?’

அதற்கும் மறுத்தாள்.

‘நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாய், அப்போ என்னதான் பிரச்சனை என்று சொல்லித் தொலையேன்’ சுபா பொறுமை இழந்து கத்தினாள்.

மேலும் படிக்க ...

மலையக மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதிய உதவி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 35 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2023 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம் - ராஜா தியேட்டரும் மல்லிகை காரியாலயமும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

            - எழுத்தாளர் டொமினிக் ஜீவா -

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை.  ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா  வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப்  புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள்  மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.

எஸ். ரி. ஆர். பற்றிய உங்கள் பதிவும் நன்று. 1963 இல்  எனது மாணவப் பருவத்தில்  அந்த ராஜா தியேட்டரில் The longest day திரைப்படம் பார்த்தேன். பின்னாளில்,  நீங்கள் குறிப்பிடும் அந்த ஒழுங்கையில் பல நாட்கள் நடந்திருக்கின்றேன். மல்லிகை காரியாலயத்தில் தங்கள் காலடித் தடத்தை பதித்த எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த  முகப்பினை மறந்திருக்மாட்டார்கள்.  அந்த கட்டிடமும் எறிகணை வீச்சினால் சேதமுற்றது. அதன் பிறகு  ஆசிரியர் டொமினிக்ஜீவா கொழும்பிலிருந்து மல்லிகையை வெளியிட்டார்.

மேலும் படிக்க ...

கிளிநொச்சி இலக்கியச் சந்திப்பில் மூன்று எழுத்தாளர்களுக்கு பரிசும் சான்றிதழும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும், விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இங்கே வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் விலங்குகள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை.-

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை.-
ஆய்வு
28 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
இறைவனின் படைப்பில் இவ்வுலகில் பல விலங்குகள் இன்பமாக வாழ்ந்து வருகின்றன. கம்பர் தம் இராமாயணத்தில் சில விலங்குகள் குறித்தும் அவற்றின் பண்புகள், இயல்புகள் குறித்தும் கூறியுள்ளார். அவற்றுள் ஆடு,ஆட்டுக்குட்டி, செம்மறிஆடு, வெள்ளாடு,ஆட்டுக்கடா, வரையாடு, பசு, எருமை, எருமைக்கடா, எருது, பன்றி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, குரங்கு,நீர்க்குரங்கு, நாய்,நீர்நாய், கழுதை, கோவேறு கழுதை, குதிரை, கவரிமான், நவ்வி மான், புள்ளிமான், சிங்கம், புலி, யானை, நரி,குள்ளநரி, கரடி, ஒட்டகம், எலி, பச்சோந்தி, ஆமை, பூனை, ஆமா, காட்டுப் பசு, ,ஓந்தி, உடும்பு,அணில்கள், யாளி,முயல் ஆகிய விலங்குகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஆராய்வோம்.

1. ஆடு
அனுமனின் வலிமையைக் கண்டு அஞ்சிய அரக்கர் கொல்கின்ற புலியினாலே துரத்தப்பட்ட ஆடுகள், அடைந்த துன்பத்தையே அடைந்தார்கள். பழமையான இலங்கை நகரம் அனுமனால் எரிந்தது.

“சூடுபட்டது தொல் நகர் அடு புலி துரந்த
ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்”
(இலங்கை வேள்விப் படலம் 516)

1.1 ஆட்டுக்குட்டி
முல்லை நிலத்து இடையர்கள் ஆட்டுக்குட்டியுடன் சிற்றிலையுடைய மரத்தடியில் ஒதுங்கியிருந்தனர்.திருடர்களைப்போல மறைந்துத் திரிவனவான பெரும்பேய்களும் ஒடுங்கி முட்கள் போலக் கூர்மையான பற்களை மென்று தின்ற வண்ணம் மிகுந்த பசியுடன் இருந்தன.

“வள்ளி புடை சுற்று உயர் சிற்றிலை மரந்தோறு
எள்ள வருமறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்”
(கார்காலப்படலம் 521)

1.2. செம்மறி ஆடு
மென்மை உடைய பெண் செம்மறி ஆடுகள் பெற்ற அச்சம் அற்ற வரிகள் அமைந்த கொம்புகளை உடைய வலிமையான தலைகளையுடைய ஒன்றுக்கு ஒன்று சமமான கடாக்கள் ஒன்றை ஒன்று மோதின.

மேலும் படிக்க ...

மணிமேகலையில் இராசமாதேவியின் நடத்தை ஆளுமை! - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் ,இராசரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ) -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் ,இராசரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ) -
ஆய்வு
28 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மணிமேகலைக்காப்பியத்தில் இடம்பெறும் இராசமாதேவி மாவண்கிள்ளியின் பட்டத்தரசி ஆவாள். அவள் மாவலி மரபைச் சார்ந்த அரசமரபில் பிறந்தவள். உதயகுமரனின் தாய். இராசமாதேவி மகனின் இழப்பால் கயமை குணம் உடையவளாகவும், மணிமேகலையை அடிமைப்படுத்தும் தன்மையுடையவளாகவும் மாற்றம் பெறுகிறாள். இறுதியில் தன்னுடைய தவறினை உணா்கிறாள். அவளது பண்பு நலன்களுக்கான மாறுபாட்டினை, இராசமாதேவியின் நடத்தை ஆளுமையை உளவியல் காரணங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

உளவலி

உள்ளத்தில் துன்பம் மிகும் போது மனம்மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது; இதனையே உளவியலாா் உளவலி என்பர். இந்த உளவலி உளஇயக்கங்களையே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கிறது எனலாம். “உடல்வலி போல மனவலி சாதாரணமானதல்ல. உடல்வலி உடலியக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது போல உளவலி உளஇயக்கங்களையே பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. உளஇயக்கங்கள் பாதிப்பிற்குள்ளானால் உடல் வழிச் செயல்கள் அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே உள்ளத்தில் ஏற்படுகின்ற வலி வலிமைமிக்கதாக விளங்குகிறது.”1 என்பர். இராசமாதேவி தன் மகன் இறந்தான் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுடையவளாகவும், தன் ஒரே மகன் இறந்தான் என்ற நிலையில் ஆழ்ந்த உளவலி மிக்கவளாவும் மாற்றம் பெறுகின்றாள்.

மேலும் படிக்க ...

'கியூறியஸ் ஜி' ஜோர்ஜ் இ.குருஷேவ்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் இவரைப் பலரும் அறிந்திருப்பர். முக்கிய பங்கினை ஆற்றியிருப்பவர்; ஆற்றி வருபவர்.  தாயகம்' (கனடா) ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவைத்தான் குறிப்பிடுகின்றேன்.  இவரிடம் எனக்குப் பிடித்த விடயங்கள்:

1. தனித்து, சுயமாக ஒரு விடயத்தைப்பற்றி நேரமொதுக்கி , ஆராய்ந்து , அறிந்து கொள்பவர்.

2. சிறந்த சிறுகதையாசிரியர். இவரது எழுத்து நடை சிறப்பானது.   தொண்ணூறுகளில் வெளியான இவரது 'ஒரு துரோகியின் இறுதிக்கணம்' (தேடல்), 'கொலைபேசி' (தாயகம்) ஆகிய சிறுகதைகளை வாசித்தவர்கள் நிச்சயம் இன்றும் நினைவு வைத்திருப்பர்.

3. தாயகம் பத்திரிகையாக, சஞ்சிகையாக வெளியானபோது தீவிர வாசிப்பாளர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தது. கவிஞர் கந்தவனம், பேராசிரியர் சிவசேகரம், மாத்தளை சோமு, கலாமோகன் (ஜெயந்தீசன் , நேசன் போன்ற பல புனைபெயர்களில்), தராக்கி சிவராம், 'காலம்' செல்வம், 'அசை' சிவதாசன், சுகன்,  அளவெட்டி சிறீஸ்கந்தராசா , மொனிக்கா, பவான், மூர்த்தி (முனி, கனடா மூர்த்தி) , சிதம்பரம் ஞானவடிவேலனார், டொன்மில்ஸ் சிவப்பிரகாசம், கடல் புத்திரன், ஆனந்த பிரசாத் , லோகநாதன், சுமதி ரூபன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,  நிவேதிகா, பா.அ.ஜயகரன், ரதன் , கெளரி, அ.கந்தசாமி, உமாகாந்தன்,  மலையன்பன் (கனடா 'உதயன்' ஆசிரியர் லோகேந்திரலிங்கம். இவர் 'தாயகம்' சஞ்சிகையில் பல்வேறு புனைபெயர்களில் எழுதினார்), ,நிலா குகதாசன், அருண், சி.கிருஷ்ணராஜா, சின்னத்தம்பி வேலாயுதம்  என்று பலர் எழுதினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை அறிக்கை தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருந்தது. எனது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் பல 'தாயக'த்தில் வெளிவந்துள்ளன. பல்வேறு அரசியல் கருத்துகள கொண்டவர்களுக்கும் தாயகம் இடம் கொடுத்தது. இவ்விதம் எழுத்தாளர்கள் பலரையும் அரவணைத்து வெளியிட்ட இவரது ஆளுமை ஆரோக்கியமானது. எனக்குப் பிடித்ததொன்று.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்! - நவரத்தினம் கிரிதரன் -

விவரங்கள்
- நவரத்தினம் கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

2021இல் யாழ் ராஜா திரையரங்கு உரிமையாளர் எஸ்.தியாகராஜா மறைந்தபோது நான் முகநூலில் 'நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.ரி.ஆர் . என்றொரு பதிவிட்டிருந்தேன். எம் பதின்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமை எஸ்.ரி.ஆர்.  ஏனைய திரையரங்கு உரிமையாளர்களின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்காத எம் நினைவில் நிற்பவர் எஸ்.ரி.ஆர்.  எஸ்.ரி.ஆர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராஜா திரையரங்கும், அதன் காவல்காரன் 'கட் அவுட்'டும்தாம்.  

தற்போது எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்' என்னும் தலைப்பில் அவரது வாழ்க்கையை , சாதனைகளை நினைவு கூரும் நூல் வெளியாகியுள்ளது. மேற்படி நூல் எனது மேற்படி கட்டுரையினையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி.

நூல் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய என் கருத்துகளைப் பதிவு செய்வேன். நூல் சிறப்பான வடிவமைப்புடன் வெளியாகியிருப்பதைக் காண முடிகின்றது.  இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நூல் அவரை நினைவு கூரும் முக்கியமானதோர் ஆவணம்.  நூலை வெளியிட்ட அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

இவர் அரசியலில் பதவி நாட்டமில்லாதவரென்று நினைக்கின்றேன். இருந்திருந்தால் மிகவும் இலகுவாக பாராளுமன்ற உறுப்பினராக இவர் வந்திருக்க முடியும். முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்திருக்க முடியும். அரசியலில் ஒளிர்வதற்கு இவரது வசீகர முகவாகும், ஆளுமையும் உதவியிருக்கும்.

மேலும் படிக்க ...

மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்ள உதவி விரிவுரையாளர் ஆர். பென் டில்கரன்' (R.Ben Dilharan) இங்கிலாந்து பயணம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
27 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைகளில் நடைபெறவுள்ள இரு வாரப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்வற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் 'ஆர். பென் டில்கரன்'  (R.Ben Dilharan) ஐக்கிய  இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' (University of Exeter) சென்றுள்ளார்.  இவர் யாழ் அராலி வடக்கைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிப்பட்டறை & ஆய்வானது கடந்த வருடம் மேற்படி பல்கலைக்கழகத்தினரின்  போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தின் அடையாளம், இடம், சமூகம் மற்றும் மானுடவியல் சம்பந்தமான  விஜயத்தின் தொடர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வு மற்றும் பயிற்சிப்பட்டறையானது பென் டில்கரன்  இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  முனைவர்  ஜில் ஜூலிஎஃப் (Gill Julieff) , முனைவர் டெபொரா மக்ஃபார்லேன் ( Deborah Macfarlane) ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினைத் தருகின்றது.

மேலும் படிக்க ...

'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடிகை ஶ்ரீதேவி எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர். அவர் எங்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக, இளம் பெண்ணாக எங்கள் கண் முன்னால் வளர்ந்து இந்தியத் திரையுலகின் உச்சத்தைத் தொட்டவர். அவரது நினைவு தினம் பெப்ருவரி 24.

கந்தன் கருணையில் அறிமுகமாகி, எம்ஜிஆர் (நம்நாடு)< சிவாஜி (பாபு) எனத் தொடர்ந்து 'மூன்று முடிச்சு', 'குரு', 'வாழ்வே மாயம்', 'பதினாறு வயதினிலே' , 'சிகப்பு ரோஜாக்கள்' , 'மூன்றாம்  பிறை'  , 'மீண்டும் கோகிலா'  என எழுபதுகளில், எண்பதுகளில்  வெளியான அவரது திரைப்படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

மேலும் படிக்க ...

பவளவிழாக்காணும் பல்துறை ஆற்றல் மிக்க இலக்கியப் பேராசிரியர் க. பஞ்சாங்கம்! திறனாய்வில் புதிய எல்லைகளை கண்டடைந்தவர் ! புதுச்சேரியில் இம்மாதம் 26 ஆம் திகதி நிகழ்ச்சி ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
24 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்துசென்ற ஐம்பது ஆண்டு காலத்தில் ( 1972 - 2022 ) இலக்கிய உலகில் நான் சந்தித்துப்பேசி உறவாடிய இலக்கியவாதிகள் எண்ணிலடங்காதவர்கள்.  அவர்களில் குறிப்பிடத்தகுந்த பலர் இந்தியாவிலிருந்தவர்கள். இருப்பவர்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. அவர்கள் குறித்தெல்லாம் எனது அனுபவங்களை மனப்பதிவுகளை எழுதிவந்திருக்கின்றேன். அதன்மூலம் இலங்கை – இந்தியா – மற்றும் தமிழர் புகலிட சேத்து இலக்கியவாதிகளிடத்தில் ஆரோக்கியமான உறவுப்பாலமும் எனக்கு அமைந்தது. கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து, அந்தப்பாலம் மெய்நிகர் அரங்குகளின் ஊடாக மேலும் பலமடைந்திருப்பதாகக் கருதுகின்றேன். நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப்பழகியிராத பலரும் மெய்நிகர் அரங்கின் ஊடாக எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்திய இலக்கியப் பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள். சில தினங்களுக்கு முன்னர் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதி பாவண்ணனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பவளவிழாக்காலம் ஆரம்பமாகிறது என்ற தகவலைச் சொன்னதுடன், அவரைக்கொண்டாடுமுகமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை எனக்குத் தெரிவித்தார்.

மேலும் படிக்க ...

கவிதை: முறிந்த பனை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
24 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முறிந்த பனை தந்ததால்
முறிந்து போன மண்ணின் மகள்.
பனை பிறந்த மண்ணின் குறியீடு!
பிறந்த மண்ணின் பிளவுகளால்
பாய்ந்தது இரத்தப் பேராறு.
மானுடர்தம் உரிமைகள் அம்
மண்ணில் சிதைந்தன.
அது கண்டு அவள்
அப்பால் ஓடியொளியவில்லை.
அயலகத்தில் புகலிடம் தேடவில்லை.
ஓடிய உதிர நதி கண்டு அவள்
ஓடி ஒளியவில்லை.

மேலும் படிக்க ...

பாரதியின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
23 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!" - பாரதியார் -

பாரதியின் வரிகள் எல்லாமே இருப்பின் அனுபவத்தெளிவு மிக்கவை, ஆனால் எளிமையானவை. அதனால்தான் கேட்பவர் உள்ளங்களை வெகு இலகுவாகக் கவர்ந்து விடுகின்றன. அவரது 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'ப் பாடல் எனக்குப் பிடித்த அவரது கண்ணம்மாப் பாடல்களிலொன்று: https://www.youtube.com/watch?v=hWIGYq3JfDU

மேலும் படிக்க ...

'என்னுடைய' தில்லையாற்றங்கரை' என்ற நாவலின் கதை திருடப்பட்டு 'அயலி' என்ற பெயரில் 'வெப் சீரி'சாக தமிழ் நாட்டில் அண்மையில் வந்திருக்கிறது. - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
கலை
22 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலாச்சாரம், பண்பாடு,சமயக் கட்டுமானங்கள்,பொருளாதார நிலை,ஆணாதிக்கம் என்ற பல காரணிகளால் ஒடுக்கப் பட்டு வாழும் பெரும்பாலான பெண்களின் நிலையைத் தன் கிராமத்தில்; கண்ட கௌரி அவர்களைப்போல் தானும் வாழாமல், தங்கள் பாடசாலைக்குப் படிப்பிக்க வந்த புனிதமலர் ரீச்சர் மாதிரி, அறிவுடன், துணிவுடன், அன்பான உணர்வுடன் மற்றப் பெண்களின் மேப்பாட்டுக்கு உதவும் கல்வி கொடுக்கும் ஆசிரியையாக வாழச் சபதம் கொள்கிறாள். எப்படியும் தனது கல்வியைத்  துணிவாகச் செயற்பட நினைக்கிறாள். 'தில்லையாற்றங் கரை'நாவலில்  துணிவான இலங்கைத் தமிழ்ப் பெண் கௌரியின் கல்விக்கான 'போர்'அந்த'பெரிய பிள்ளையாகும்' விடயத்திற்தான் ஆரம்பமாகிறது.

'அயலி' என்ற பெயர்,அவர்களின் குல தெய்வத்தின் பெயர் என்றும் அந்த அயலித் தெய்வம்,அந்த ஊர்ப் பெண் ஒருத்தி அயலவனைக் காதலித் குற்றத்திற்காகக் கோபமடைந்து அந்த ஊராரை வருத்தியாகதாகவும, அதனால் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் பல இடமலைந்து, இந்த ஊருக்கு வந்ததும் மிகவும் பயபக்தியுடன் அயலியை வணங்குறார்கள என்றும் , பெண்கள் பருவம் வந்ததும் 'அயலி'குலதெய்வக் கோயிலுக்குள் போக முடியாது. உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்படவேண்டும் என்பதுபோன்ற கலாச்சாரத்துடன் வாழ்வதாகவும். அயலி படம் சொல்கிறது.

இந்தக் கதை எனது நாவலில் (ஆங்கில) 139-142 பக்கங்களில் சொல்லப் பட்டிருக்கும் கோளாவில் கிராமத்தில்,பத்தினி அம்மன் கண்ணகி வழிபாடும் ஒழுக்கமும் பற்றிய பாரம்பரிய கதையைத் திருடியதாகும். ஆச்சியின் கதைப்படி, ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன், அதாவது இன்றைக்கு நூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், பத்தினியம்மன் ஒருநாள் கோளாவில் கிராமத்தாரில் உள்ள கோபத்தில் ஊரை விட்டுப் போனாதாம். அதற்குக் காரணம் கண்ணகியம்மன் கோயிலுக்குப் பின் புறமுள்ள திருக்கொன்றை மரத்தடியில் இளம் காதலர்கள் ஒழுக்கக் குறைவாக நடந்ததுதான் என்றும் பூசகர் கனவில்  வந்து  கண்ணகியம்மன் சொன்னதாம். அதைத் தொடர்ந்து இளம் தலைமுறையினர் மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வதாகச் சபதம் செய்து கொண்டாதவும், அதன் நீட்சியாகப் பெண்கள் பெரிய பிள்ளையானதும,; திருமணம் ஆகும் வரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டைப் பலர் கடை பிடிக்கிறார்கள். அத்துடன், காட்டிலுள்ள பட்டிமேடு என்னும் இடத்தில் பத்தினியம்மனுக்குக் கோயில் கட்டி மிகவும் பய பக்தியுடனும் பல நாட்கள் பூசை செய்வதாகவும் சொன்னார்கள்.  இக்கதையையின்  திரிபுதான் அயலி.  இக்கதையில்,பெண்கள் பெரிய பிள்ளையானதும், வீட்டோடு அடைக்கப் படுகிறார்கள். அவருடைய கதாநாயகி, தனக்குப் பருவம் வரவில்லை என்று படு பொய் சொல்லிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற எழுத்தாளர்களுக்கு கிளிநொச்சியில் பரிசு வழங்கும் நிகழ்வு!

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
22 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மனம் செயலாகும்போது உருக்கொள்ளும் எதுவும் ஏதோ ஒரு வகையில் காலத்தில் நிற்கும் - கருணாகரன் -

விவரங்கள்
- கருணாகரன் -
நூல் அறிமுகம்
22 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனுபவங்களையும் அறிந்த தகவல்களையும் வைத்து  எழுதுவது ஒரு வகை. இது எளிதானது. அனுபவங்களை எவ்வளவுதான் சிறப்பாக எழுதினாலும் அவை வெறும் பதிவுகளாகச் சுருங்கி விடக்கூடிய  வாய்ப்புகளே அதிகமுண்டு. அனுபவங்களையும் நுண்ணிய அவதானிப்புகளையும் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. இதற்கொரு கலைப் பயிற்சி வேண்டும்.

அப்படித்தான் தகவல்களைத் திரட்டி அதையே மையப்படுத்தி எழுதினால் அது தகவற் திரட்டாகி விடக் கூடிய நிலையே அதிகம். இந்த மாதிரி எழுத்துகள் தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்து குவிகின்ற வேகத்திலேயே அவை மறந்தும் மறைந்தும் போகின்றன. இவற்றிற்கான  பெறுமதி அநேகமாக ஊடகச் சேதிகள் அல்லது செவி வழித் தகவல்களுக்கு நிகரானவை.

மேலும் படிக்க ...

பேரவையின் வணக்கம் வட அமெரிக்கா - இயல் 2023!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
22 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமெரிக்கா கனடா வாழ் தமிழ் அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இனிய செய்தியோடு வருகிறோம். பேரவை பெருமையுடன் வழங்கும் "வணக்கம் வட அமெரிக்கா-இயல்" உங்களுக்காக !  கவிதைப்போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரைப்போட்டி,  ஓவியப்போட்டி. போட்டிகள் அனைத்தும் வயதிற்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

காந்தள் (5 முதல் 8 வயது வரை)
முல்லை (9 முதல் 12 வயது வரை )
தாமரை (13 முதல் 7 வயது வரை )
தாழை (18 வயதிற்கு மேற்பட்டோர் )

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரபல ஆளுமைகளுடன் பயிற்சிப் பட்டறையை பேரவை ஏற்பாடு செய்யும். நீங்கள் இந்த செய்தியை உங்கள்  தமிழ்ச்  சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில்  அறிவிப்பு செய்தாலே போதுமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பதிவு செய்து விடுவார்கள். உங்கள் சங்கத்தில் எந்த போட்டிகளையும் நடத்த.. இப்போட்டிகளை மாநில அளவில் (முதல், இரண்டாம்) சுற்றுகளாகவும், இறுதிச் சுற்றை பேரவை விழாவிலும் பேரவையின் "வணக்கம் வடஅமெரிக்கா" குழு மூலம் நடத்தவிருக்கிறோம். விழாவில் வெற்றி பெறுபவருக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும் போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். https://forms.gle/ FEh5vEPCpV4NAqoR7   (பதிவு செய்வதற்கான இறுதி நாள் FEB 28 2023.)

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந் சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள்.   பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன்,  உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.

இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர். இந்தப்பெயர்களை,  அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (21) - பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
20 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இருபத்தியொன்று: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்!

தொலைகாட்சியில் காட்டுயிர்கள் பற்றிய ஆவணக்காணொளியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று தின்று இருப்பில் தப்பிப் பிழைக்கும் கொடூர காட்சிகளை உள்ளடக்கும் காணொளி.

"என்ன கண்ணா, அப்படியென்ன டிவியிலை போய்க்கொண்டிருக்கு நீ ஆர்வமாய்ப் பார்க்கிறதுக்கு" என்று கூறியபடி வந்தாள் மனோரஞ்சிதம். வந்தவள் அருகில் நெருங்கி அணைத்தாள்.

"காட்டுயிர்களைப் பற்றிய காணொளியொன்று கண்ணம்மா. தப்பிப்பிழைத்தலுக்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்பதை விபரிக்கும் காணொளி. பார்ப்பதற்குக்  கொடூரமான காட்சிகளைக்கொண்டது. நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய்விடு கண்ணம்மா" என்றேன்.

"கண்ணா, நான் இது போன்ற பல 'டொக்குமென்ரி'களைப் பார்த்திருக்கின்றேன். என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள  முடியும். கொடூரமானவைதாம். ஆனால் இருப்பு இப்படித்தானே இருக்கிறது கண்ணா"

"கண்ணம்மா,  நீ கூறுவதும் சரிதான். எனக்கு இதனைப் பார்க்கையில் பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."

"என்ன வரிகள் கண்ணா?"

"கண்ணம்மா, அவரின் விநாயகர் நான்மணி மாலை என்னும் கவிதையில் நினைவில் நிற்கும்படியான , ஆழ்ந்த பொருளுடைய பல வரிகளுள்ளன. அவரது புகழ்பெற்ற வரிகளான ' நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்வ் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்.' என்னும் வரிகள் இக்கவிதையில்தான் வருகின்றன.  இக்கவிதையில் வரும் மேலும் சில வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை  கண்ணம்மா."

"என்ன வரிகள் கண்ணா?"

"கண்ணம்மா, அவை இவைதாம்:

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! "

" கண்ணா, நானும்  இவ்வரிகளை வாசித்திருக்கின்றேன். "

மேலும் படிக்க ...

சென்னைப் பல்கலைக்கழகம் திருக்குறள் ஆய்வு மையம்: திருக்குறளும் உலக இலக்கியங்களும்!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
17 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வலையொளி இணைப்பு - https://www.youtube.com/live/s7gPNB6aAbc?feature=share

 

பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன் மறைவு! ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
உண்மையில் இவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளித்தது என்றுதான் கூற வேண்டும். இவ்வளவு விரைவில் பிரிந்து விடுவார் என்று எண்ணியதேயில்லை.

இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் உயர்தர வகுப்பில் படித்த நண்பர்களிலொருவர். பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை. ஒரு பிரிவு நண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள்.

இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.
இவரை இன்னுமொரு காரணத்துக்காகவும் மறக்க முடியாது.
மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “பிரபஞ்ச இரகசியம் (The Secret of the Universe)" -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
16 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு. - குரு அரவிந்தன். -

விவரங்கள்
- குரு அரவிந்தன். -
இலக்கியம்
14 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.

ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த எனது குறுநாவலான ‘நீர்மூழ்கி’ பற்றிக் குறிப்பிட்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். சிற்றுண்டி நேரத்தின் போது இவர் என்னிடம் நேரே வந்து கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நீங்கள் தான் அந்தக் கதையின் ஆசிரியர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். விகடன் பவழவிழா ஆண்டு மலரில் உங்கள் ‘விகடனும் நானும்’ என்ற கட்டுரையை வாசித்திருந்தேன், அதன்பின் தான் ஆர்வம் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கதையை வாசித்தேன் என்றார். கதையின் முக்கியமான இடங்களை அப்படியே எடுத்துச் சொன்னார். 2001 ஆம் ஆண்டு விகடனில் வெளிவந்த கதையை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

மேலும் படிக்க ...

காதல் இல்லா வாழ்க்கை களை இழந்த வாழ்க்கை! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண் … அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண் … அவுஸ்திரேலியா -
கவிதை
14 பிப்ரவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காதலர்தினக் கவிதை!  




காதல் இல்லா வாழ்க்கை
களை இழந்த வாழ்க்கை
காதல் இல்லா வாழ்க்கை
கருத் திழந்த வாழ்க்கை
காதல் என்னும் நினைப்பு
களிப்பு தரும் நாளும்
காதல் என்னும் உணர்வு
களிப் பளிக்கும் மருந்து   !

மனித மனம் இணைய
மருந் தாகும் காதல்
மனித குணம் சிறக்க
வழி வகுக்கும் காதல்
மனித குலம் செழிக்க
வழி சொல்லும் காதல்
வைய வாழ்வு மலர
வழித் துணையே காதல்  !

இளமை வரும் காதல்
முதுமை வரை வளரும்
இல்ல மெலாம் ஒளிர
ஏற்ற துணை காதல்
அன்பு அறன் கருணை
அளிப்ப தென்றும் காதல்
அகில வாழ்வில் என்றும்
அருங் கொடையே காதல்   !

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. பேராசிரியர் பசுபதி அவர்கள் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -
  2. எழுத்தாளர் அ.ந.கந்தசாமி நினைவாக..
  3. சயந்தனின் ஆறாவடு – ஒரு பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  4. துப்பாக்கிக்கு மூளை இல்லை (போருக்கும் வன்முறைக்கும் எதிரான கவிதைகள்! - தங்கம் -
  5. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தினம் ( 17-02-2023 ) மெய்நிகர் அரங்கு! அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூல் வெளியீடு!
  6. ஆய்வு: கம்பராமாயணத்தில் மான்கள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை. -
  7. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 27 - “தமிழில் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள்” - அகில் -
  8. 'மற்றவை நேரில்' - நூல் அறிமுகம்!
  9. எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல் - 'அவுஸ்திரேலியத் தமிழ்ச்செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை!' - சந்திப்பு : - ஜேகே -
  10. இயக்குனர் சீனு ராமசாமியின் 'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' கவிதைத்தொகுப்பு குறித்து.. - லதா ராமகிருஷ்ணன் -
  11. 33 வருடங்களாக அஞ்ஞாத வாசம் செய்த தமிழர்கள்! - குரு அரவிந்தன் -
  12. சிந்தனைக்களம் நிகழ்வு - ‘லலித கம்பீர’ லால்குடி பாணி
  13. வாணி அம்மா வாழ்கிறார் இசையாய்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் … அவுஸ்திரேலியா -
  14. சிங்கப்பூர் இலக்கியம் - சுப்ரபாரதி மணியன் -
பக்கம் 58 / 107
  • முதல்
  • முந்தைய
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • அடுத்த
  • கடைசி