பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர் வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளிவான, உறுதியான  கருத்துகளைக் கொண்டிருந்தார்.

இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல்  செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர்  எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப் படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.

அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.

மேலும் படிக்க ...

'ரொக் இசையின் இராணி (Queen of Rock 'n' Roll) மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எண்பதுகளில் தனது நாற்பதுகளில் What's Love Got to Do with It பாடலின் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர் 'டீனா டேர்னர்' (Tina Turner).  அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள பிறவுண்ஸ்வில்லில் பிறந்தவர் இவர். இயற்பெயர் - Anna Mae Bullock.

அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் இசைச் சானல்களில் லயனல் ரிச்சி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பில்லி ஜோயெல், மைக்கல் ஜோன்ஸன், சிந்தி லோப்பர் போன்றவர்களுடன் இவரது பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இளையவர்களுக்கு மத்தியில் சரிக்கும் சமமாக இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார். இவரை எப்போதும் இரசிகர்கள், விமர்சகர்கள் 'ரொக்கின் இராணி' என்றழைப்பார்கள். அது மிகையான கூற்றல்ல.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: தேனாற்றங் கரையினிலே.. ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.

ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா'  என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.

மேலும் படிக்க ...

வண.பிதா. செ. அன்புராசா அடிகளாரின் 'அன்புள்ள ஆரியசிங்க' வாசிப்பு அனுபவம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
24 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வரலாற்றுப் புகழ் வாய்ந்த எத்தனையோ கடிதங்கள் உலகில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன. இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திய காலிமுகத் திடல் 'அறகலய' எனப்படும் அறப்போராட்டம் நடைபெற்ற தீர்க்கமான காலகட்டம் ஒன்றில்,  வணக்கத்துக்குரிய அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகளாரால் எழுதப்பட்ட முப்பது கடிதங்களும் இவ்வாறே முக்கியத்துவம் பெறவேண்டியவை.  2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம்  2022 .07. 16ம் திகதிவரை அவரது முகநூலில் 'அன்புள்ள ஆரியசிங்க...' எனும் தலைப்புடன் தமிழில் எழுதப்பட்ட இக் கடிதங்கள் இன்று சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் நூலுருவாகி உள்ளமை மகிழ்ச்சிகுரியது.

இலங்கை இனப்பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி, இறுதி யுத்தத்தின் பின்னும் இன்றுவரை தொடரும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் வரலாற்று ஆதாரத்துடன் இங்கு கூறப்பட்டுள்ளன. பெரும்பான்மை இன மக்களை நோக்கிய சில நியாயமான கேள்விகளும் முன்வைக்கப் பட்டு உள்ளன.யாரையும் புண்படுத்தாத ஆனால் கண்ணியமும் வலிமையும் துணிவும் மிக்க வார்த்தைப் பிரயோகங்களுடன் இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. தங்குதடையற்ற மொழிஆளுமை அவரது எழுத்துக்கு அணி சேர்க்கிறது.

2022 இன் நாடுதழுவிய பொருளாதார வீழ்ச்சியை மையப்படுத்திய பெரும்பான்மை இன மக்கள் எழுச்சியுடன், தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் அனுபவித்த ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தி, ஒப்பு நோக்கும் விதமாக இந்நூல் அமைந்திருப்பதன் மூலம், பெரும்பான்மை மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நன்நோக்கும் தெளிவாகிறது . அதே சமயம் தெற்கில் வாழும் மக்களின் துயரில் பங்குகொள்ளும் அன்பும் அரவணைப்பும் தெளிவாகவே இந்நூலில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942–2022) - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் (  1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன்.  1973 ஆம் ஆண்டு அவரது 'விடிவை நோக்கி' நாவல், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.  எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில் ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன். தெணியான் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்:  கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம்,  சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.

வதிரியைச் சேர்ந்த அன்பர் சதாசிவம், எங்கள் ஊரில் பூட் எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்திவந்தார். வடமராட்சியிலிருந்து வந்த மூவரும் சதாசிவம் வீட்டில் தங்கியிருந்தனர். 'விடிவை நோக்கி' அறிமுகவிழா, எங்கள் ஊரில்,  1966 இல் அண்ணி என்ற இலக்கிய இதழை நடத்திய,  உறவு முறையில் எமது மாமாவான அ. மயில்வாகனன்  தலைமையில் நடந்தது. கொழும்பிலிருந்து இலக்கிய ஆர்வலர் எம். கிஸார், தனது காரில் மல்லிகை ஜீவா, மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரை அழைத்து வந்தார். அந்த விழா வெகுசுவாரசியமாக நடந்தது. அதனைப்பற்றி அடுத்த வாரம் வெளிவந்த தேசாபிமானியில்        ( கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு )  மு. கனகராஜன் எழுதியிருந்தார்.  இவ்வாறு தெணியானுடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கிய நட்புறவு , சகோதர வாஞ்சையாக வளர்ந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அவர் மறைந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்ததினம் வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முடிந்தவரையில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதும் எனது கடமையாக இருந்தது.

மேலும் படிக்க ...

'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை...' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) .  கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில்  பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர்.  முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது  'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)'  என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன்.  அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai)  விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.
அம்மலரை கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன். அதற்கான இணைப்பு

இம்மலரில் முகநூலில் விஜயன் அவர்கள் பற்றிய என் பதிவினையும் 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய  , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை. அக்கோலங்களில் ஒன்றாக நிற்பவை..' என்னும் தலைப்பில் உள்ளடக்கியுள்ளார்கள்.  அதற்காக விஜயன் குடும்பத்தினருக்கு நன்றி. அக்கட்டுரையில் எனக்குத் தெரிந்த அக்கால விஜயனின் தோற்றத்திலிருக்கும் புகைப்பட,மொன்றினையும் உள்ளடக்கியுள்ளார்கள்.அத்துடன்  அப்பதிவுக்குரிய மேலும் சில புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்ததும் மீண்டும் நினைவுகள் யாழ் நகரில் அலைந்து திரிந்த எழுபதுகளுக்கே சென்று விட்டது.

விஜயன் பற்றிய என் முகநூற் பதிவினை மீண்டுமொரு தடவை பகிர்ந்துகொள்கின்றேன்.

(முகநூற் பதிவு) அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை)

ஒவ்வொருவருவருக்கு அவரவர் பால்ய, பதின்ம வயதுப்  பருவங்களில்  வந்து போன மறக்க முடியாத ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். சந்தித்திருப்பார்கள். அவ்வாளுமைகள் அவர்கள் வாழ்வில் வந்து போயிருப்பார்கள். ஆனால்  பல்வேறு காரணங்களினால் அவர்கள் மறக்க முடியாதவர்களாக தடம் பதித்துச் சென்றிருப்பார்கள். என் வாழ்விலும் அவ்விதமான ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் இவர்.

மேலும் படிக்க ...

பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' புத்தக வெளியீடும் ஆனந்தராணியுடனான அறிமுகமும்! - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -

விவரங்கள்
- சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -
முகநூல் குறிப்புகள்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -

-  சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) என் பதின்மப் பருவத்திலிருந்து அறிமுகமான நண்பர்களில் ஒருவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர் அண்மையில் 'டொரோண்டோ'வில் நிகழ்ந்த நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றியெழுதிய சிறப்பான முகநூற் பதிவிது. - வ.ந.கி -


பாலேந்திராவின் நாடக பயணத்தின் 50 வருட காலத்திற்கு மேலான பயணத்தின் அனுபவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக அவரால், அவரின் இணையர் ஆனந்தராணியுடன் இணைந்து உருவாக்கி புத்தக வெளியீடும் விமர்சன அரங்கும் கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வாரம் நிகழ்ந்தது. தற்போது எல்லாம் இவ்வாறான பொது நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்பவர்கள் மிக அரிதாகிப் போன சூழலில்... இந்நிகழ்வில் பல கருத்து வேறுபாடு உள்ளவர், அமைப்புகள்களைச் சேர்ந்தவர்கள் தனி நபர்கள் என்று வழமையை விட ஐந்து மடங்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டது பாலேந்திராவின் நாடக உலகப் பயணதிற்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாராமாக பார்க்க முடிகின்றது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தை தனது கட்டப்பெத்தை பல்கலைக் கழக மாணவர் வாழ்வில் அத்திவாரம் போட்டவர்.

இலங்கை பரப்பில் தலை நகரிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகத்தை பார்க்க நாம் போயாக வேண்டும் என்பதாக பல ஊர் மக்களையும் அரங்கத்திற்கு அழைத்த பெருமை பாலேந்திராவை சாரும். ஆரம்பத்திலேயே குறிபிட்டும்விடுகின்றேன் இந்த நாடகப் பயணத்தின் வெற்றி ஆனந்தராணி இல்லாவிட்டால் நிச்சயம் முழுமைபெற்றிருக்க முடியாது. இதனை அருகில் இருந்த அல்ல தூரத்தில் இருந்து பார்த்து வந்த பலரில் நானும் ஒருவனாக இருந்தாலும் அன்று புத்தக வெளி யீட்டில் இருவரும் தம்மால் உருவாக்கப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட நாடங்களில் சிலவற்றில் இருந்து ஒவ்வொரு காட்சியை பாடலுடன் நடிப்பை சபையில் முன்வைத்த போது என்னால் இன்னும் அதிக உணரமுடிந்தது.  பாடல்களுக்கான உயிர்ப்பை.... இனிமையை... தாளம் போடும் அளவிற்கு பின்னணி இசையான அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யாழ் கண்ணன் இல்லாமலே எம் முன்னே கொண்டு வந்தனர். அவர்களின் பாடலுடன் இணைந்து நடிப்பை நான் தாளம் போட்டுத்தான் கேட்டேன். வாசுதேவன் என்ற கவிஞரின் கவிகளும் வலுவாக இருந்தன.

நிகழ்விற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அவரின் ஆரம்ப காலத்து பல்கலைக் கழக சகாக்கள், நாடக நடிகர்களாக சிலர் வந்திருந்தது அதுவும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு என்பதாக அது இருந்ததும் இந்த ஐந்து மடங்கு பார்வையாளர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை நிறுவுவதற்கு போதுமான ஆதாரத்தை கொண்டிருந்து.

மேலும் படிக்க ...

நடிகர் சரத்பாபு மறைந்தார்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னை  மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. அவரது அமைதியான யாரையும் கவரும் முக அழகுடன் கூடிய ஆளுமையும், இதயங்களை வருடிச்  செல்லும் குரலும் எப்போதும் என்னை ஆகர்சிப்பவை. அது அவரது உண்மைக் குரலா அல்லது வேறு யாராவது அவருக்குக் குரல் கொடுத்தார்களா என்பது தெரியாது.  ஆனால் அந்தக் குரலும், அவரது நடிப்பும், சிரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரது மறைவுச் செய்தியினை இன்று இணையம் மூலம் அறிந்தேன். அண்மையில் அவர் மறைந்ததாக முகநூலில் வதந்தியொன்று  பரவியது நினைவுக்கு வந்தது. ஆனால் இது வதந்தியல்ல என்பதைத் தமிழக முதல்வரின் இரங்கல் செய்தி புலப்படுத்தியது. இதுவரை காலமும் தன் நடிப்பால் எம்மையெல்லாம் மகிழ்வித்து வந்தார் சரத்பாபு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -

விவரங்கள்
- பதிவுகளுக்கு அனுப்பியவர்: நா.சபேசன் -
நூல் அறிமுகம்
21 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் கிடைக்கக் கூடிய முழுக் கவிதைகளையும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' எனும் தலைப்பில் தொகுத்து இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடுகிறோம். காலச் சுவடும் கூடலும் இணைந்து இந் நூலை வெளியிட்டுள்ளன.  இதற்காக நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரையை நன்றியுடன் இங்கு பகிர்கிறேன். விஜயேந்திரனின் கவித்துவத்தை இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. -  எழுத்தாளர் நா.சபேசன் -


இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்  - எம். ஏ. நுஃமான் -

1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.

மகாஜனாவில் இருந்து ‘புதுசு’மூலம் வெளி உலகுக்கு அறிமுகமான கவிஞர்களுள், விஜயேந்திரனின் சக பயணிகளான பாலசூரியன், சபேசன், ரவி, ஊர்வசி, ஔவை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1970களின் பிற்பகுதியிலும் 80களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைத் துறைக்குள் வந்தவர்களை, போரின் புதல்வர்கள் என்று நான் சொல்வதுண்டு. இனமுரண்பாடும், விடுதலை இயக்கங்களின் எழுச்சியும், போரும், வன்முறையும் இவர்களைக் கவிதைக்குள் இழுத்துவந்தன. இவர்களுடைய கவிதைகள் பெரும்பாலும் இவற்றுக்கான இலக்கிய எதிர்வினைகளாகவே அமைந்தன. தமிழ்த் தேசியக் கருத்துநிலையும், மார்க்சிய இடதுசாரி இலட்சியங்களும், வெவ்வேறு அளவில் இவர்களது கவிதைகளில் தொனிப்பொருளாகக் கலந்திருக்கக் காணலாம். இவர்கள் யாரும் ஏராளமாகக் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள் அல்ல. ஆனால், கணிசமான எண்ணிக்கையில் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பத்தினாதனின் ‘அந்தரம் நாவல் குறித்த எனது பார்வை. - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
20 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை,  சிறுகதை,  நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.

அந்த வகையில் இலங்கை மன்னார் மாவட்டம் வட்டக் கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொ. பத்தினாதன் அவர்களின் ‘அந்தரம்’ என்ற நாவல் குறித்து எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். 208 பக்கங்களைக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினால் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பான விடயம். நூலின் அட்டைப்படம் அந்தரத்தை அழகாக, சைகையால் வெளிப்படுத்தி நிறகின்றது.

மேலும் படிக்க ...

பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கிய நிகழ்வில் "கதைகளும் நாமும்"

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

மேலும் படிக்க ...

நியூசிலாந்து சிற்சபேசனின் புதிய நூல்; வெளியீடு - மெய்நிகர் அரங்கு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Link https://auckland.zoom.us/j/97354605291
Zoom Meeting ID: 973 5460 5291 (No password)

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால் குடிக்கவில்லை. எனினும், ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன்"

இவ்வாறு   1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் - மார்ச்சில் 'யுகமலர்' என்ற தனது கதைத்தொகுதியை வெளியிட்டபோது கூறிய எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கல்கரி மாநகரில் இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

"எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்" என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால், நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.

மேலும் படிக்க ...

கலை,இலக்கியப் பங்களிப்பு மிக்க 'நுட்பம்' சஞ்சிகை பற்றி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதலாவது நுட்பம் இதழ் 1968இல் வெளியானதை நுட்பம் 1970 இதழில் வெளியான கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரியின்  தமிழ் மன்றத்தலைவர் மாவை. நித்தியானந்தனின்   'தலைவரின் செய்தி'யிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இரண்டாவது நுட்பம் 1969இல் வெளிவரவில்லையென்பதையும், 1970இல் வெளியான நுட்பம் இதழே இரண்டாவது இதழ் என்பதையும் மேற்படி தலைவரின் செய்தி தெரிவிக்கின்றது.  1971 வரை கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியாக இயங்கிக்கொண்டிருந்த இக் கல்வி நிறுவனம் 1972 தொடக்கம் -1977 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்குகின்றது. 1978இலிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகமாகச் சுயாதீனமாக இயங்கத்தொடங்குகின்றது. 1972 வரை தமிழ் மன்றம் என்னும் பெயரில் இயங்கிய தமிழ் மாணவர்களின் சங்கம் 1973இலிருந்து தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது.

மேலும் படிக்க ...

முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.) - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

புலம்பெயர் படைப்பாளர்களின் பாடுபொருள் - தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்கள் ஒப்பீடு! - முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் படைப்பாளிகளின் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சமுதாயம் தன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகப் படைப்பாளி தன் இலக்கியத்தைப் படைக்கின்றான். சமுதாயத்தின் தாக்கத்தின் தன் பாடுபொருளாகக் கொள்கின்றான் . உலகத்தில் ஓர் இனத்தினரின் ஆக்கிரமிப்பால் புலம்பெயரும் பூர்வ குடிகள் தம்முடைய மனக்குமுறல்களைப் படைப்புக்களில் பதிவுசெய்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த தமிழா்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடிபுகுந்துள்ளனா். வெவ்வேறு நாடுகளில் குடிபெயா்ந்திருந்தாலும் அவா்களின் மனம் அவா்களுடைய சொந்த நாட்டைச் சுற்றியே வருவது இயல்பாகும். அதைப் போலவே பாலஸ்தீனத்தை இழந்த அரேபியர்கள் தம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்களில் இடம்பெறும் பாடுபொருளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இடம் பெயா்தல்

தனது ஊரை விட்டுப் பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குச் சென்று வாழ்தல் இடம்பெயா்தலாகும். இடம் பெயா்தல் ஒரு திட்டமிட்ட வினையாகும். சான்று: பனை ஏறும் தொழிலாளா்கள் குமாி மாவட்டத்தை விடுத்துப் பிற மாவட்டங்களை நாடிச் செல்லுதலும் உாிய பருவத்தில் மீண்டும் தம்மிடம் நோக்கி வருதலும்

குடிப் பெயா்தல்

ஏதேனும் இயற்கைச் சீற்றம் காரணமாகச் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வாழ்தல்குடிபெயா்தலாகும். குடிப்பெயா்தலும் ஓரளவு திட்டமிட்டே செய்யப்படுகிறது. சான்று: இந்தியாவில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்தமை.

புலம் பெயா்தல்

தம் மண்ணில் வாழ முடியாமல் துரத்தப்படும் நிலையில் உயிருக்கு அஞ்சி வேற்றிடம் சென்று வாழ்தல் புலம் பெயா்தல் ஆகும். சான்று: ஈழத் தமிழா்கள் சிங்கள இராணுவத்தின் நெக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி ஓடி உலகின் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்தல்

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க ...

ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க, விற்க

விவரங்கள்
Administrator
பதிவுகள் விளம்பரம்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க, விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன் (Shanthi Chandran)
HomeLife Today Realty Ltd.
647-410-1643  / 416-298-3200
200-11 Progress Avenue, Scarborough,
Ontario, M1P 4S7 Canada

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: 'யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்” (மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள். அந்த விதி, சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி விளையாடியது. 1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை, வீரகேசரி பத்திரிகை நிறுவனம், முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது. இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வனையே சாரும். இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.

முதல் முதலில் 1976 ஆம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி முதல் தலைவராக அமர்ந்த யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்தான் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் தமிழ் நாவலுக்கு நூற்றாண்டு பிறந்திருந்தது. பல தமிழ் நாவலாசிரியர்களை உருவாக்கிய தமிழ்நாடே இந்த நூற்றாண்டை மறந்திருந்தபோது, பேராசிரியர் கைலாசபதி, தனது தலைமையில் அந்த நூற்றாண்டை இரண்டு நாள் ஆய்வரங்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் படிக்க ...

அரசியல் கைதியான எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை! - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசியல் கைதியாக இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை பெற்றுள்ள செய்தியினை ஜீவநதி ஆசிரியரும், எழுத்தாளருமான க.பரணீதரன் தனது  முகநூற் பதிவில் அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி. சிறையில் வாடிய பொழுதிலும் சமுதாயப் பிரக்ஞை மிக்க நாவல்களை எழுதியவர் சிவ ஆரூரன். அவற்றுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருதுகளைப் பல தடவைகள் பெற்றிருப்பவர்.

மேலும் படிக்க ...

முக்கொம்பன் , பூநகரியில் நூலகம் அமைக்கும் திரு.குகனுஜன்! நூலகத்துக்கு உலகெங்குமிருந்து நூல்களை அனுப்பி உதவிடுவோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
13 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                  -   -

அண்மையில் முக்கொம்பன்,  பூநகரியிலிருந்து என் முகநூல் நண்பர்களில் ஒருவரான குணரட்னம் குகனுஜன் ( Kunaradnam Kukanushan ) அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தான் வசிக்கும் பகுதியில் ஊரிலுள்ள பலரின் உதவியுடன் நூலகமொன்றினை அமைத்துள்ளது பற்றியும், அதற்கு பலரின் உதவியுடன் பாட நூல்கள் பலவற்றைக் கொள்வனவு செய்துள்ள விபரத்தையும் தெரியப்படுத்தியிருந்தார். மாணவர்கள் தம் நன்மைக்காக பலரின் உதவிகளுடன்  நூலகம் அமைக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. சமுதாயப் பயன்மிக்க  செயற்பாடு. அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப்பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் தம் நூல்களை அனுப்பி உதவலாம்.

தம்மிடமுள்ள நூல்களை இவர் உருவாக்கியுள்ள நூலகத்துக்கு அனுப்பி உதவ விரும்பினால் , இவருடன் மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள். இவருடைய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    தொலைபேசி இலக்கம்: +94770662917

இவர் அண்மையில் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

‘ஈழத்து நாதஸ்வர இசைமரபில் பஞ்சாபிகேசன் பரம்பரை’

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

திரு வி.ஜீவகுமாரன், திருமதி கலாநிதி ஜீவகுமாரன் இருவரின் நூல்வெளியீட்டு விழா!

விவரங்கள்
_ தகவல்: ஜீவகுமாரன் -
நிகழ்வுகள்
12 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - தெளிவாகப் பார்ப்பதற்கு படத்தை ஒருமுறை அழுத்தவும். -

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2023

விவரங்கள்
- தகவல்: கோகுல ரூபன் -
நிகழ்வுகள்
12 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. உடையார்குடிக் கல்வெட்டும், விளக்கமும், ஆதித்த கரிகாலன் படுகொலையும், கல்கியும் பற்றி...... - வ.ந.கி -
  2. பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
  3. பதினைந்தாவது குறும்பட விருது விழா - சுப்ரபாரதிமணியன் -
  4. ஒரு கடிதம் - ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) - முருகபூபதி , அவுஸ்திரேலியா -
  5. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு ( மெய்நிகர் நிகழ்ச்சி )
  6. அறிவியற் சிறுகதை: அழைப்பு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -
  7. ஹிதுமதெ ஜீவிதெ என்றழைக்கப்பட்ட படுகாகஹே டொன் சுமதிபாலா! - வ.ந.கி -
  8. சிறுகதை: முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? - வ. ந.கிரிதரன் -
  9. புத்தனுக்குக் கவிதைத் தூது - செ.சுதர்சன் -
  10. பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் , இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்! - வ.ந.கிரிதரன் -
  11. நுட்பம் (1980/1981) - மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு! - வ.ந.கிரிதரன் -
  12. எழுத்தாளர் முனியப்பதாசன் எழுதிய தொடர்கதை - 'காற்றே நீ கேட்டிலையோ? ' - வ.ந.கிரிதரன் -
  13. மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! - முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -
  14. குறிஞ்சிப்பாட்டு சுட்டும் 'பிறங்குமலை மீமிசைக்கடவுள் முருகப்பெருமான்' - - முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
பக்கம் 52 / 107
  • முதல்
  • முந்தைய
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • அடுத்த
  • கடைசி