ஓராயம் அமையம் இலாபநோக்கற்று இயங்குமோர் அமைப்பு.! நீங்களும் இணைந்து திட்டங்களை முன்னெடுக்கலாம்!

என் நினைவில் நிலைத்து நிற்கும் கவிஞர் மஹாகவியின் கவிதை வரிகள்! - வ.ந.கிரிதரன் -
கவிஞர் மஹாகவியின் நினைவு தினம் ஜூன் 20. அதனையொட்டிய நினைவுக்குறிப்புகளிவை!
யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.
"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!"
கண்ணீர் அஞ்சலி: கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார். - குரு அரவிந்தன் (தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) -
எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
‘வானவில்’ என்ற நிகழ்ச்சிகள் மூலம்தான் இவர் எனக்கு முதலில் அறிமுகமானார். 90 களின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் எமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பேணக்கூடிய வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது. ஒன்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை பழைய மணவர்களின் ‘வானவில்’ கலை நிகழ்ச்சி, மற்றது நான் கல்வி கற்ற மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ‘முத்தமிழ் விழா’ நிகழ்ச்சி. குறிப்பாக நாடக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் பழைய மணவர்களின் நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பல தடவைகள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிகழ்வுகளிலும், ஸ்ரீமதி நிராசந்துரு அவர்களின் நடனக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வுகளிலும் சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன். ஒருமுறை நூல் வெளியீட்டு நிகழ்வின் போதும், என்னை அழைத்துச் சபையோருக்கு அறிமுகம் செய்து, முதற்பிரதி வாங்கவைத்துக் கௌரவித்திருந்தார்.
கவிதை: நானோர் தமிழன்! - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
நானோர் தமிழன் நாடெலாம் அலைந்தும்
வானத் தமிழை மறந்திடா மனிதன்
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
பற்றிப் படர்ந்த பழந்தமிழ்; இலக்கியம்
முற்றும் துறந்த முனிவர் மறையெலாம்
சித்தர் இறையைச் சொன்னதிப் பூமி
காலக் கோட்டில் காவுறும் மலையில்
ஞாலம் தோன்றி நயந்தஇப் பாதை
ஆதி மொழியாய் அட்ட திக்கெலாம்
சேதி உரைத்த செந்தமிழ் வழியாய்
நீதியும் போதனை நெறியும் மிக்கோர்
சாதனை கண்டதோர் சரித்திரம் ஆனதே !
கவிதை: வழித்தடங்கள்! - முனைவர் ம இராமச்சந்திரன் -
வலசைப் போகும் ஒற்றைப் பறவையின்
சுதந்திரப் பெருவெளியில் இலக்கற்றுப்
பெருமரத்தில் இளைப்பாறுகிறேன்
புதுப்பெருக்கில் கால் நனைக்கும் சிறுமியின்
துள்ளல் மிகுந்த உற்சாக மகிழ்ச்சியில்
நழுவிப் போனது தண்ணீர் மட்டுமல்ல
எனது வாழ்க்கையும்
நடந்து செல்லும் எருமையின்
தியான பவனியில் கரைந்துபோக
மறுக்கும் சிறுவனின் பயணம்
நிகழ்வு: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஜூன் 20, 2021 அன்று நடத்தவிருக்கும் இணையவழி காணொளி நினைவரங்கு! - முருகபூபதி -
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏறக்குறைய இருபது வருடகாலமாக இயங்குகிறது. தமிழ் எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள் மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் நடத்திவந்திருக்கும் இச்சங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறு ஓரிடத்தில் அதாவது மண்டபங்களிலோ அல்லது திறந்த அரங்குகளிலோ, அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போய்விட்டது. சமகாலத்தில் சமூக இடைவெளி பேண வேண்டியிருப்பதனால், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் மூலம் கணினியில் இணையவழி காணொளி ஊடாக அரங்குகளை நடத்திவருகின்றோம். அதன் ஊடாக உலகின் எந்தப்பாகத்தைச் சேர்ந்தவர்களுடனும் முகம் பார்த்து நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவிலேயே மறைந்த ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், இந்த நாட்டில் வாழும் இளம் தமிழ் சந்ததிகளிடம், குறிப்பாக இங்கு தமிழையும் ஒரு பாடமாக உயர் வகுப்பிலும் படிக்கின்ற மாணவர்களுக்காகவும், பல்கலைக்கழக பிரவேச பரீட்சைகளில் தோற்றவிருக்கும் தமிழ் மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை இணைய வழி அரங்கின் ஊடாக நடத்தி வருகின்றது. இதனை மெய் நிகர் தொடர்பாடல் எனவும் அழைக்கின்றார்கள். இந்த நாட்டிற்கு வந்து தமிழ் சார்ந்த அனைத்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு மறைந்தவர்களின் வாழ்வையும் பணிகளையும் இத்தகைய அரங்குகள் மூலம் திரும்பிப்பார்க்கின்றோம். அந்த வகையில், இங்கு மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை இன்று 20 ஆம் திகதி ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.
படகு அகதிகள் - தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' நாவலை முன்வைத்து ஒரு பார்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
மலர்களின் வாசனை மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.
தாமரைச்செல்வியின் உயிர்வாசமும் அத்தகைய ஒரு படைப்பு என ஐயமின்றிக் கூறலாம். மனிதஜீவன்களின் அவல வலிகளையும், குருதியின் வாசனையையும் தன் எழுத்தெங்கும் தெளித்துக் கொண்டே செல்லும் இந்தப் படைப்பு கற்பனையல்ல. தமிழர் வரலாற்றின் உணர்வு பூர்வமான ஆவணமாகவும் கருதப்படும் தகைமை கொண்டது. நேர்மையான எழுத்தாளர்கள் முக்காலத்தினை பிரதிபலிக்கும் பிரதிநிதிகள். அவர்களின் மூலமே பல வரலாறுகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.
தாமரைச்செல்வி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகின் அனுபவமும் புகழும் மிகு படைப்பாளி ஆவார். தமது 'பச்சைவயல் கனவு' என்ற நாவலுக்காக இலங்கை அரசின் சாகித்தியவிருது உட்பட பல பெருமைகளை தனதாகக் கொண்டவர். தமது இலக்கிய வாழ்வில்பொன் விழாவினை அண்மிக்கும் இவர் ஆறு நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும், இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இலங்கை, இந்திய பாடநூல்களின் இவரது இருகதைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பல்கலை இறுதியாண்டு மாணவர்கள் இவரது எழுத்துகளை ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது மேலதிக பெருமை.
இந்த நாவலில் அவர் பேசவிழைந்தது யுத்தம் தந்த நெருக்கடிகளினால் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், வாழ்வாதாரத்தை இழந்த தமது உறவுகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், ஆபத்துகள் நிறைந்த படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த உண்மையான அகதிகள் பற்றியதாகும். போருக்குப் பின்னரான தமிழ்மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறான இந்த அகதிகளின் அவலங்கள் நியாயமான பார்வையுடன் பார்க்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும், எதிர்கால தலைமுறைக்கு புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் கடத்தப்பட வேண்டும் என்பதும் இவரது எழுத்தில் முதன்மைப் படுத்தப் படுகின்றன.
"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி! - சூரியகுமாரி பஞ்சநாதன் -
எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி. சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது. சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."
சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார்.
தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது "சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் "சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது. சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது.
ஆய்வு: வெறியாடலும்,நடுகல் வழிபாடும்! - முனைவர் க. செந்தில் குமார் -
முன்னுரை
பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் ஒன்றாக அமைந்தது முருக வழிபாடு குறிஞ்சி நில மக்களின் குல தெய்வமாக விளங்கியது. தலைவியானவள் காதலால் இன்புற்று தலைவன் பிரிந்த பிறகு துன்புற்று வாடும் போது வேலனை அழைத்து வெறியாடுட்டு நிகழ்த்தியமையும், பிறகு தலைவிக்கு நோய் தீர்ந்தமையும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வெறியாட்டில் முருகனுக்குப் பொருட்கள் படைத்தும், வெறியாட்டுக்களம், பண்ணமைந்த பாடல்கள் பாடியும், செவ்வரளிப் பூக்கள் சூட்டி வழிபாடு செய்தமையை எடுத்துரைக்கின்றது.
வழிபாடு
வழிபாடு என்னும் சொல் வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. பூசனை என்பது தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயலாகும். வழிபாடு என்பது வணக்கம், பூசை, வழக்கம் எனும் பொருள்படும் இறைவனைத் தேவைக்காக நாடுதலும், நன்றியுணர்வால் அணுகுவதும் உண்டு. மனிதனின் நோய்களைத் தீர்க்கவும் வழிபாடானது நிகழ்த்தப்பட்டது. மனிதன் இன்புற்று வாழவும், நீண்ட ஆயுளுக்காகவும் இறைவனை வழிபட்டுனர். மிகப் பழங்காலத்திலிருந்தே வழிபாடு என்பது இருந்தது என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பண்டைக் காலத்தில் மக்கள் மன்றங்களிலும், மரங்களிலும், கற்களிலும் தெய்வம் உறைந்ததாக நம்பி வழிபட்டனர் என்பதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. முருகன் வழிபாடு சங்க காலத்தில் இருந்தமையை மெய்ப்பிக்கும் பொருட்டு நக்கீரனார்
“அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் முருக“ 1
என்பதன் வாயிலாக இவர் காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு என்பது மரபாகப் போற்றப்படுகிறது. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வேல் போர்க் கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு விளங்கியதைக் காணமுடிகிறது.
ஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும்! - முனைவர் வே. கீதா -
தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் .
நோக்கம்:
ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம், எந்த லட்சியத்திற்காக செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் 'பயன் 'என்று கூறலாம்.
தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் "யாமறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார்.”1 ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் பயன் என்று கூறலாம். தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் மொழிபெயர்ப்பு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இன்றைய மார்க்சிய தத்துவமும் ஜனநாயக கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்தது .
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார். ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம் அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தின அதனை பயன் என்று கூறலாம்.
வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -
இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல். யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன். நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.
வாழ்க்கைக்கடலின் அலைகளால் நம்பிக்கைக்கரைகள் அரிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை இழந்திருக்கின்ற கவிஞரின் வலியினை மொழி கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். ஆனால் அதனை அவர் நேரடியாக யதார்த்தரீதியில் தன்னை , தன் நம்பிக்கையின்மையை , தானடைந்த வலியினை உங்களுக்குக்கூறவில்லை. மாறாக கனவுகளையும், கற்பனைகளையும் பற்றிக்கொண்டு அவற்றினூடு அதனை வெளிப்படுத்துகின்றார். இரக்கத்தை யாசிக்கின்றார். ஆனால் அதே சமயம் அவ்விரக்கத்தை யாசிப்பது யாரிடமிருந்து என்பதில் கவிஞர் குழம்பியிருக்கின்றார்.
இக்கவிதையின் மொழி எத்தகையது? கனவுகளையும் கற்பனைகளையும் பற்றிக்கொண்டு ஆழ்மனபடிவுகளை யதார்த்தத்துக்குக் கொண்டு வருவதால் 'மிகையதார்த்த' மொழியாகவே எனக்குப் படுகின்றது. மிகையதார்த்த மொழி மானுடரின் யதார்த்த இருப்பை, இருப்பின் முரண்களை, அநீதிகளை , இவற்றின் காரணமாகக் கவிஞர் அடைந்த வலியினை உங்களுக்குப் புரிய வைக்கின்றதா என்பதைக் கவிதையை படிக்கும் நீங்கள்தாம் கூறவேண்டும்.
ஆனால் கவிஞரை வேதனை அடைய வைப்பவை எவை? கவிஞரின் வலிக்குக் காரணமானவை எவை? அவர் வாழும் யதார்த்த உலகின் அவர் மீதான தாக்கம், அத்தாக்கத்தின் விளைவாக அவரைடைந்த வேதனை, வலி , இவற்றையே மிகையதார்த்த மொழியில் நெடுங்கவிதையாக்கியிருக்கின்றார் கவிஞர் இந்திரன். உண்மையில் நவீன இந்தியா , மநு தர்மம் இவற்றை இந்நெடுங்கவிதை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது.
அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்
அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்
தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -
இரணைமடுக்குளத்திலிருந்து யாழ் மாவட்டத்துக்கு..! - வ.ந.கிரிதரன் -

அஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அவரது மறைவு பற்றி எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவினைக் கீழே தருகின்றேன். அவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. தனிப்பட்டரீதியில் நானும் பங்குகொள்கின்றேன்.
எழுத்தாளர் யோ புரட்சியின் முகநூற் பதிவு:
"மலேசியா வே.ம.அருச்சுணன் அவர்கள் காலமான துயரச்சேதி. ('1000 கவிஞர்கள் கவிஞர்கள்' படைப்பாளி). நேரே கண்டதில்லை, உள்ளத்தால் தள்ளி இருந்ததில்லை. எமது பெயரைச் சொல்லிச்சொல்லி தினம் வாழ்த்துவார். எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெயரைச்சொல்லியும் வாழ்த்துவார். அவருக்கு இருந்த முக்கியமான ஆவல் '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலினை பார்த்துவிட என்பது. முகநூலில் வெளிப்படையாகவே இது பற்றி அடிக்கடி எழுதியிருந்தார். அவரது தொலைபேசியூடாக தொடர்பு கிட்டிய பின்பு பெருநூலினை மலேசியா அனுப்பி இருந்தோம். அதனைப் பற்றி வலையொளியில்(யூ டியூப்பில்) பதிவு ஒன்றினையும் செய்திருந்தார். இந்த நூல்தான் அவருக்கும், எமக்கும் உறவுப்பாலமாகி நின்றது. குடும்பமாகச் சேர்ந்து அந்நூலினை கொண்டாடி இருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். குடும்பப் புகைப்படங்கள் வெளியே இட வேண்டாம் என்றார். அவரிடம் பெருநூல் சென்று சேர்ந்த திகதியான 23.02.2021இல் அவர் இந்தச் செய்தியை அனுப்பினார். வணக்கமும் வாழ்த்துகளும் யோ புரட்சி! தாங்கள் எனக்கு அன்புடன் அனுப்பி வைத்த '1000 கவிஞர்கள்' நூல் நேற்று 22.2.2021 திங்கள் மதியம் இனிதே கிடைக்கப் பெற்றேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் அயரா முயற்சியில் மலர்ந்த அந்த நூலின் பக்கங்களைப் புரட்டும் போது பரவசமடைந்தேன்! உங்கள் உழைப்பைக் கண்டு அதிசயப்பட்டேன்.வாழ்த்துகள். தங்களது சார்பில் எனது துணைவியார் அந்நூலை எனக்கு அன்புடன் பரிசாக வழங்கி வாழ்த்தினார். அந்நூல் குறித்து எனது எண்ணப்பதிவைத் தங்களுக்குப் பின்னர் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் சொன்னது போல் மனமுவந்து நூலை அன்புடன் எனக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி. அன்புடன், கவிஞர் வே.ம.அருச்சுணன்,மலேசியா. 23.2.2021.
வே.ம.அருச்சுணன் அவர்களே! மாயமாக கரைந்துகொண்டிருக்கும் இந்தப் பூவலக வாழ்வில் வஞ்சகமின்றி எம்மை நேசித்த பண்பாளர்களில் தாங்கள் முக்கியமானவர். உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பும் சேர்ந்திருக்கும். உங்களோடு சில நிமிடங்களாவது பேச்சிலே உரையாடியமை மறக்கவியலா துளிகள். வருடக்கணக்காய் எழுத்தூடே இதயம் இணைந்திருந்தது. வே.ம.அருச்சுணன் அவர்களின் இழப்பினாலே துயருற்றிருக்கும் உறவுகளோடு எமது துயரினை பகிர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்."
லண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -
ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது 'பிக் அப் ட்ரக்'கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அக்குடும்பத்தினர் 14 வருடங்களுக்கு முன்னர் நல்வாழ்வுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இப்படுகொலைச் சம்பவத்தில் மரணமானவர்கள் விபரங்கள் வருமாறு: ஜும்னா அஃப்சால் (Yumna Afzaal, 15), மடிகா சல்மான் (Madiha Salman, 44), தலாட் அஃப்சால் (Talat Afzaal, 74) & சல்மான் அஃப்சால் (Salman Afzaal, 46). படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஃபயெஸ் ( Fayez, 9).
வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்! மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை! - முருகபூபதி -
இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து, அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வாகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். துணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.
சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம்! - முருகபூபதி -
ஜூன் 03 கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்
” கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜி.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார். ஆனால், நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, “ ஏய் கருணாநிதி” என்றுதான் திட்டுகிறார்” இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார இதழ் “சொன்னார்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கருத்துக்களில் படிக்கநேர்ந்தது.
கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை அவர் எழுதிய தூக்குமேடை நாடகத்தின் அரங்காற்றுகையின்போது நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கினார் என்பது தகவல். நடிகவேள் ராதா மாத்திரமின்றி பின்னாளில் அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராதிகா, வாசுவிக்ரம் ஆகியோருக்கும் மாத்திரமின்றி, சிவாஜி, எம்.ஜீ.ஆர், சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, ரி.எஸ். பாலையா, பி. எஸ்.வீரப்பா, எஸ்.வி. சுப்பையா, ரங்கராவ், நாகையா, ஆர். எஸ். மனோகர், என். எம். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசாந்த், நெப்போலியன், விஜயகுமார், சத்திய ராஜ், மற்றும் கண்ணாம்பா, ராஜம்மா, டி.ஆர். ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, மனோரமா, விஜயகுமாரி, ராஜம், ஜெயலலிதா, சரோஜாதேவி, லட்சுமி, ஶ்ரீபிரியா, அம்பிகா உட்பட எண்ணிறந்த நடிகர்கள், கலைஞர் எழுதிய வசனங்களைப்பேசி நடித்தவர்களே!
கலைஞர் கருணாநிதி நினைவாக... - வ.ந.கிரிதரன் -
கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.
அரசியலுக்கு அப்பால் கலைஞரின் முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவது தமிழ் இலக்கியப்பங்களிப்பு மற்றும் அவரது திரையுலகப்பங்களிப்பு. இலக்கியப்பங்களிப்பு என்னும்போது அவரது ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியரீதியிலான திட்டங்களையும் குறிப்பிடலாம்.
கன்னியாகுமரியில் அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை இன்று முக்கியமான நில அடையாளச் சின்னமாக மாறியிருக்கின்றது. அவரை எப்பொழுதும் அச்சிலை நினைவு கூர வைக்கும்.
என் பால்ய பருவத்தில் நான் கலைஞரை அறிந்துகொள்ள வைத்த படைப்புகளிலொன்று 'குமுதம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'ரோமாபுரிப்பாண்டியன்' சரித்திர நாவல். வாசிக்கத்தொடங்கியிருந்த என்னை மிகவும் கவர்ந்த மொழி நடையில் அமைந்திருந்த தொடர்நாவல். ராணிமுத்து பிரசுரமாகவும் அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை' வெளியாகியிருந்தது. சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மலரில் வெளியான அவரது 'பூம்புகார்' நாடகத்தையும் குறிப்பிடலாம். இவைதாம் கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்தின.
சிலப்பதிகாரத்தைத் தனது எழுத்துகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் கலைஞர். 'பூம்புகார்' திரைப்படம் முக்கியமான திரையுலகப்பங்களிப்பு. அவரது 'சங்கத்தமிழ்', 'தொல்காப்பியப்பூங்கா', குறளோவியம்' ஆகியவை முக்கியமான அவரது படைப்புகள். அவர் ஆட்சியில் அவரமைத்த வள்ளுவர் கோட்ட'மும் முக்கியமான பங்களிப்புகளிலொன்று.
கவிதை: பார்போற்றும் பாரதி! - முனைவர் கோ. புஷ்பவள்ளி -
பாரதத்தாய் பெற்றெடுத்த மைந்தன்!
பார்போற்றும் கவி; அவன் தான் எங்கள் பாரதி!
அச்சமில்லை! அச்சமில்லை! என அச்சம் தவித்தவன்!
ஆண்மையின் அடையாளமாகத் திகழ்ந்து!
ஏறுபோல் நடந்து! கொடுமையை எதிர்த்து போராடி!
சரித்திரம் பல படைத்து!
சாவதற்கு அஞ்சாமல் சாத்திரம் கலைந்து!
பல சாக்கடைகளை அகற்றி!
சமூகப் புரட்சி செய்த சாதனையாளன்!
கவிதை: உனக்காய் என்ன செய்தோம்..? - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வண்ண வண்ண நிறங்களிலே
வகை வகையாய்ச் சட்டை தைத்து
எங்களைத் தான் அலங்கரித்து
சித்திரமாய்ப் பார்த்திருந்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
நீராட்டிச் சோறூட்டி
நெற்றியிலே பொட்டிட்டு
சின்ன அடியெடுத்து
சித்திரத் தேர் அசைகையிலே..
உள்ளம் குளிர
உச்சி முகர்ந்தவளே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?
கவிதை: விதியொன்று செய்! - முனைவர் பீ. பெரியசாமி -
கொரோனா கொடும் நோய்த்தொற்று
ஆட்டிப்படைக்கிறது அகிலத்தை.
விட்டு விலகவில்லை நவயுக கர்ணன்கள்
எப்போதும் உதவிக்கரம் நீட்டி காக்கிறார்கள்.
மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்
நவயுக மீட்பர்கள்.