பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
 
ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் எழுதியவர் அதை நிறுத்தி விட்டுத் தன் தாய்மொழியில் எழுத ஆரம்பித்தவர். காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதுவதில் காலனித்துவச் சிந்தனைகளும், அடையாளங்களும், மரபுக் கூறுகளும் உள்ளடங்கி இருக்கும் என்று நம்பியவர். காலனித்துவ ஆதிக்கம் காலனித்துவாதிகளின் மொழிகளை முக்கியப்படுத்துவதாகக் கருதினார். அதனால்தான் தாய்மொழிகளில் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அவை வேண்டுமானால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம் என்று கருதியவர்.

மேலும் படிக்க ...

குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
ஆய்வு
30 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

சங்க இலக்கியங்களில் எளிமையான மொழி நடையும், கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் உடைய நூல் குறுந்தொகை. அழகான சொல்லோவியங்களாக அதன் பாடல்கள் இன்றும் படித்து இன்புறத்தக்கன. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பரணர் பாடல்கள்

குறுந்தொகையில் பரணர் 17 பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தையும், தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் அல்ல குறிப்பட்டு தலைவி பெறுவதற்கறியவள் என்று புலம்புவதாகவும் அமைந்துள்ளன. இவரது பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள தன்மையும் அறியமுடிகிறது. குறிப்பாக நன்னன், பாண்டியர்களில் அதிகன், அழிசி மன்னனின் ஆர்க்காடு நகர் பற்றிய குறிப்பு ஆகியவையும் குறிக்கத்தக்கன.

நடை என்பது

நடை என்பதற்குப் பலரும் வரையறை வகுத்துள்ளனர். “எண்ணங்களையும் மனதில் எழும் உணர்ச்சிகளையும் உரிய சொற்களால் வடித்துக் கொடுக்கும் கலைத்திறனையே நடை எனலாம்” என்று இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார்.

நடை என்பது புலவன் தான் சொல்ல வரும் கருத்தைப் புலப்படுத்த பயன்படுத்தும் உத்திகளையும் அதன் மூலம் வெளிப்படும் கவிதையழகுமே நல்ல நடைக்குச் சான்றுகளாகும். அவ்வகையில் பரணர் பாடல்கள் சிறப்புடையன.

மேலும் படிக்க ...

கண்டித் தமிழ் மன்றம் வழங்கும் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
29 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டி தமிழ் மன்றம் வழங்கும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பேராசிரியர் துரை. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டித் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. எஸ். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இரு நூல்கள் வெளியீட்டுரையினை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களும். இந்தியா - இலங்கை ஒப்பந்தம் பற்றிய நூலின் அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களும் மற்றும் ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்களும் நிகழ்த்தினார்கள்

நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் அவர்களும்

மற்றும் ஏற்புரையும் நன்றியுரையினையும் பேராதனைப் பல்கலைக்கழகம். தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், நூல்களின் பதிப்பாசிரியர், கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களும் நிகழ்த்தினார்கள்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் சுதர்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சித் தொகுப்பினை பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சர்வேஸ்வரன் வில்வசரன் அவர்கள் வழங்கினார்.

இதன் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்லைக்கழக மாணவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க ...

புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல்.  ஆழ்ந்த இரங்கல்.

என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.

அப்பொழுதெல்லாம் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் அதனை ஒலிபெருக்கி கட்டப்பட்ட காரொன்றில் அறிவித்தபடி வருவார்கள். விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் அவ்விதம் திரைப்பட 'நோட்டிஸ்'களை விநியோகித்துச் செல்கையில் அனைவரையும் கவரும் குரலில்  அறிவித்தபடி வருபவர் அண்ணாமலை என்பவர்.  அவர்  அப்போது யாழ் மனோஹராவின் உரிமையாளர்களாக இருந்த ஒருவரின் உறவினர் என்று கேள்விப்பட்டதாக  ஞாபகம். உண்மை பொய் தெரியவில்லை. நான் அவரது இரசிகர்களில்  ஒருவன்.  அவரது  அறிவிப்புக் குரலினிமையை இரசிப்பவன்.

'பாரா வலலு'  பற்றிய அறிவிப்பில் அவர் காமினி கொன்செகரா, மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு என்று அறிவித்திருந்தார். பொன்செகாவை அவர் கொன்செகராவாக மாற்றியதை அப்போது பெரிதும் இரசித்தோம்.  அவர் உண்மையில் அவ்விதம் அறிவித்தது அவரது அறியாமையினாலா அல்லது அவ்விதம் உச்சரிப்பது 'ஸ்டைலா'க இருக்குமென்று எண்ணியதாலா என்பதில் இதுவரை தெளிவில்லை. ஆனால் அவ்விதமான அவரது அறிவிப்பில் ஈர்க்கப்பட்டவன்  நான் என்பதால் , என் நெஞ்சில் அச்சம்பவம் நிலையாக் நின்று விட்டது.

மேலும் படிக்க ...

இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்காவின் இனவாதத்துக்கெதிரான ஆரோக்கியமான அரசியல்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    - இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா -

முகநூலில் எம்.எல்.எம். மன்சூர்   ( MLM Mansoor)  என்பவரின் இப்பதிவு என் கண்களில் பட்டது.  இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை.  இவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வேண்டுபவை. அதனால் பகிர்ந்து கொள்கின்றேன்.

தற்போது ஆட்சியிலிருக்கும் அநுரா குமார திசாநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ளன. இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கைகளிலிருந்த ஆட்சி முதன் முறையாக அடித்தட்டு  வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் கையில் சென்றிருக்கின்றது. மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றம். இதனை இதுவரை அதிகாரத்தைத் தம் கைகளில் வைத்திருந்த தமிழ், சிங்கள அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் பதிவு.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இனவாதத்தை அநுரா அரசால் பதிலுக்குப் பதில் தோலுரித்து காட்ட முடியும். மேலும் அநுராவின் பலம் அவரது வர்க்கத்துப் பின்னணி. இதனால் தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செயயும் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதையே அம்மக்களும் விரும்புவார்கள். எனவே அவ்வளவு இலகுவாக அநுரா அரசைப் பதவியிலிருந்து கலைக்க முடியாது. அவர்களுக்குப் பின்னால் ஒழுங்காக,அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமொனறு அணி திரண்டு நிற்கிறது.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 4 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

நான்கு நாட்களாய் மிகத் தீவிரமாக இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாய் இன்று முளைத்துள்ள பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே தொடர்வதாய் உள்ளன. அது “சிந்து நதி” சார்ந்த பிரச்சினைகளாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா ரத்து செய்யப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால், இவற்றை ஆழ நோக்கும்பொழுது, பிரச்சினைகள், இன்னும் பிரச்சினைகளாக உள்ளமை தெளிவாகின்றன.

சென்ற கட்டுரைத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக ட்ரம்பின் மதிநுட்ப கூற்றுக்களும், எப்படி அது, ஜெயசங்கராலும் மோடியாலும் நிராகரிக்கப்பட்டன என்பதனையும் விவரித்திருந்தோம்.

உதாரணமாக, “அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிந்து நாங்கள், ஜெர்மனி போன்ற பிறிதொரு நாட்டை, மத்தியஸ்தத்திற்கு அழைப்பதற்கு நாம் கனவில் கூட இடம் தருவதற்கில்லை”. ஜெயசங்கர் இவ்வாறு கூறுவது முக்கியமானது-மேல் வரும் நிலைப்பாட்டை நிரூபிக்கின்றது எனலாம் (25.05.2025). இதுபோலவே, மேலே கூறப்பட்ட, “சிந்து நதி” சார்ந்த இன்றைய பிரச்சினைகளுக்கு, இன்னமும் தீர்வொன்றைக் கண்டுப்பிடித்ததாக இல்லை.

பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் என்று தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளுமோ அன்றே “சிந்து நதியின்” பிரச்சினையும் தீர்க்கப்பட்டதாக இருக்கும். காஷ்மீர் என்பது, எம்மைப் பொறுத்தவரையில், தீர்மானிக்கப்பட ஒன்றுமே கொண்டதாக இல்லை. அது முற்றுமுழுதாய்த் தீர்வைக் கண்டுவிட்டது. அது, இந்தியாவினுடையது. இந்தியாவுக்கு உரித்தானது. இது குறித்து அளவளாவுதல் என்றால் அது, பாகிஸ்தான், காஷ்மீரை விட்டு, என்று-எப்போது, வெளியேற எண்ணியுள்ளது என்பதைப் பொறுத்தது மட்டுமே ஆகும் என ஜெயசங்கர் மேலும் குறிக்கின்றார். இக்கூற்றுடன், லெப்ரோவின் கூற்றும் தொடர்புபடக் கூடியதுதான். லெப்ரோவின், கூற்று: “இந்தியாவைத் துண்டு போட இடமளிப்பதா?” (24.05.2025).

இதுபோக, மேற்படி இந்தியா-பாகிஸ்தான் போரில், தொடர் வர்ணணையில் ஈடுபட்டிருந்த மேற்கின் ஊடகங்கள், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதை (சீண்டி விடுவதை), நோக்காக கொண்டு இயங்கின என்பதும், இது, இரு உலக ஒழுங்குகளின் போராட்டத்தையே பிரதிபலிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.

மேலும் படிக்க ...

எழுநா பதிப்பகம் வெளியிட்ட மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948)

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
26 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு'  (1621 - 1948) என்னும்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:

"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். 

தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.  |  +94 77 797 5029 "

வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.

அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர்.  ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு  இவரும் ஒரு காரணம்.

இவர் றோலன்ட்  சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.

மேலும் படிக்க ...

என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று பாரிஸில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -


என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள்.  அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.

ஈழநாடு மாணவர் மலர் காசி அவர்கள் எப்போதும் என் மனத்திலிருப்பார். காரணம் - நான் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் சிறுவர் பக்கங்களை விரும்பி வாசிப்பேன். கண்ணன், அமபுலிமாமா போன்ற சஞ்சிகைகள், பொன்மலர், பால்கன் காமிக்ஸ் சஞ்சிகைகள் இவையெல்லாம் அப்பருவத்தில் என் மனங்கவர்ந்த சஞ்சிகைகள்.  இவற்றுடன் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்றவற்றின் தீபாவளி மலர்களின் சிறுவர் பக்கங்கள், கலகி சஞ்சிகையில் வாரா வாரம் வெளியான 'சிறுவர் விருந்து' பக்கங்கள், ராணி வாராந்தரியில் வெளியான் சிறுவர் பக்கங்கள், இவற்றுட்ன  ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் 'மாணவர் மலர்' பக்கம் ஆகியவற்றை விரும்பி வாசிப்பேன்.   கல்கி சிறுவர் விருந்தில் வெளியாகும் வாண்டுமாமாவின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் ராணியின் சிறுவர் பக்கத்தில் வெளியான தொடர்கதையான 'பேசும் சிலை'  இன்னும் நினைவிலுள்ளது.

மேலும் படிக்க ...

அமுதவிழாவைக்காணும் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் நினைவுகள்! பாரிஸில் அமுதவிழா! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று பாரிஸில் மூத்த ஊடக்வியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே.காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா, ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென்  ஏற்பாட்டில்  நடைபெற்றது. அதற்கான காணொளி -   அதனையொட்டி வெளியான மலருக்காக எழுத்தாளர் முருகபூபதி எழுதிய கட்டுரையிது. -


ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

இவற்றை நடத்தியவர்கள், முன்னர் இலங்கை வடபுலத்தில் வெளியான ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவர்கள். ஈழநாடுவில் தமது எழுத்தூழியத்தை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை.

எனது பூர்வீகம் மேற்கிலங்கையில் நீர்கொழும்பு. 1972 இற்குப்பின்னர், கெழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும், அதேசமயம், படைப்பிலக்கியவாதியாகவும் நான் அறிமுகமானேன்.

அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாத இதழில் எனது சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்தன. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, ஒவ்வொரு மாதமும் மல்லிகை வெளியானதும், அதன் பிரதிகளுடன் யாழ். ஈழநாடு பணிமனைக்குச்சென்று அங்கிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விநியோகிப்பார்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1970 களில் எனது ஆக்கங்களை மல்லிகையில் படித்துவிட்டு, சக பத்திரிகையாளர்களிடம் என்னைப்பற்றி சிலாகித்துச்சொன்ன ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் – மதிப்பிற்குரிய திரு. எஸ்.கே. காசிலிங்கம் அவர்களுக்கு அமுதவிழா நடைபெறுகிறது என்ற நற்செய்தியை லண்டனிலிருந்து எனக்குத் தந்தார், மற்றும் ஒரு நீண்டகால ஊடகவியலாளர் நண்பர் எஸ். கே. ராஜென்.

மேலும் படிக்க ...

கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களின் பதிப்பிலான கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நூல் அறிமுகம்
24 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆவது ஆண்டைக் கடந்து செல்லுகின்றது. அந்த வகையில் மலையக எழுச்சிக்காக பங்காற்றிய பல ஆளுமைகள் உள்ளன. அதில் கோ. நடேசய்யரின் பங்களிப்பு மகத்தானது. இத்தருணத்தில் கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” என்ற நூலை கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் மீளவும் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.

இரத்தத்தையும் வியர்வையையும் தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி இந்நாட்டை வளமாக்கியவர்களின் வரலாறு தோற்றம் பெறுவதற்கு உந்து சக்தியாக அமைந்த கோ. நடேசய்யர் அவர்கள் எழுதிய இந்த “இந்திய இலங்கை ஒப்பந்தம்”; என்னும் நூல் மலையக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பேசுகின்றன.

இம்மக்கள் சமூக, பொருளாதார அரசியல் அரங்கில் கொடுங்கோன்மையுடன் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்நூலே போதுமானதாகும்.

தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்கள் “ இலங்கை இந்தியா ஒப்பந்தம்” என்கின்ற தலைப்பில் முதல் பதிப்பாக 1941 இல் வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பாக கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களைப் பதிப்பாசிரிரியராகக் கொண்டு 2022 இல் மலை வாசகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1820 களின் ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்ட வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே இன்றைய மலையக மக்களின் ஆரம்ப கர்த்தாக்களாகும். 1823 முதல் 1920 வரை இவர்கள் தோட்டங்களில் அடைபட்ட ஒரு தொழிலாளர் கூட்டமாகவே கருதப்பட்டனர். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் காலனித்துவ அடிமைகளாகவும், கங்காணித்துவ அதிகாரத்திற்குட்பட்டவர்களாகவும் வாழ்ந்த தோட்டத் தொழிலார்களை முதன் முதலில் தொழிற்சங்க அடிப்படையில் ஒன்று திரட்டி பல்வேறு களச் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு போராட்டங்களையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்தவர் கோ. நடேசய்யர் அவர்களே.

மேலும் படிக்க ...

கண்டித் தமிழ் மன்றம் வழங்கும் தேசபக்தன் கோ.நடேசையரின் இரு நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: இக்பால் அலி -
நிகழ்வுகள்
24 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

பகைநாட்டின் அழிவுகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -
ஆய்வு
23 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

முன்னுரை

முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கள் இறை என்று கருதியுள்ளனர். தன் மக்களுக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, அதனைப் போக்க மன்னன் தன் உயிரையும் நீத்துள்ளான். அப்படி தன் நாட்டு மக்களைக் காக்க உயிரை நீக்கும் மன்னன், பகைமை காரணமாக பகை நாட்டில் உள்ள மக்களையும், அவர்கள் வாழும் நாட்டினையும் பல்வேறு விதமான அழிவுகளுக்கு உள்ளாக்கியுள்ளான். பகைமை காரணமாக மன்னன் பகைநாட்டிற்கு எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பதனை ‘பகைநாட்டின் அழிவுகள்’ எனும் இவ்ஆய்வுக்கட்டுரையில் காண்போம்.

தோற்ற அரசனது ஆட்சிப் பகுதிகளைப் பாழ்படுத்துதல்

போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்திருக்கிறான். அது மட்டுமல்லாது வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வி அடைந்த மன்னர்களின் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாழ்படுத்தவும் செய்துள்ளனர். இதனை,

பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல்
பாழ்படுத்துதல்
பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல்
பகைவரின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல்
நிலங்களைப் பாழாக்குதல்
பகைவர் நாட்டினை எரியூட்டல்
நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல்
மன்றத்தை அழித்தல்

என்ற அடிப்படையில் ஆராய இயலுகின்றது.

மேலும் படிக்க ...

திருக்குறள் கூறும் மறுபிறப்புச் சிந்தனைகள் - முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105 -

விவரங்கள்
- முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105 -
ஆய்வு
23 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாயச் சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் போன்று வாழவேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்படைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். உலகம் பல சமுதாயங்களால் ஆனது என்றாலும் ஒவ்வொரு சமுதாயம் அச்சமுதாயத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் சமுதாயத்தின் நன்மைக்கு என அமைந்த அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்குமானால் உலகில் உள்ள எல்லா சமயங்களும் பிணக்கு இன்றி, பகையின்றி அன்போடும், நட்போடும் விளங்கும் எனவும் ஒரு குலம் போல் வாழும் எனவும் உணர்ந்தார். ஆகவே, ஒவ்வொரு நாடும் அதனைச் சார்ந்த குடும்பங்களும், சமுதாயமும், அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலத்தார் போல் வாழ்வதற்கு திட்டமிட்டார். அத்திட்டமே திருக்குறளாக விளங்குகிறது. மறுபிறப்புச் சிந்தனைகள்  குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழும் மக்கள் சிறந்ததாகக் கருதிப் போற்றும் மனித நடத்தையையும் வழக்கங்களுமே ஒழுக்கமாகும். இவ்வொழுக்கம் முதலில் சான்றோர்களை நிலைக்களமாகக் கொண்டு புலப்பட்டு நிற்கும். அச்சான்றோர்கள் சிலவற்றை இவை செய்ய தகாதானா,தகாதனை என்றும் விதிக்கவும் விலக்கவும் செய்வார். உலகத்தின் இயக்கத்தைக் கூர்ந்து நோக்கும் இடத்து ஓர் உண்மை புலனாகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒர் ஒழுங்குக்கு உட்பட்ட நிலையிலே இயங்கி வருகின்ற என்பதுதான் அது. அவ்ஒழுங்குக்கு உட்பட்ட நிலைதான் அறம் என்பது.

மேலும் படிக்க ...

அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -

விவரங்கள்
- மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -
ஆய்வு
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைத் தமிழர்களின் வாழ்வில் காதலும் கொடையும் நீதியும் பின்னிப் பிணைந்திருந்தன. பண்டைத் தமிழ்ப்புலவர்களும் காதலையும் வீரத்தினையும் இயற்கையுடன் இணைந்தே காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வினை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். சுற்றுச்சூழல் பண்டையத் தமிழர்களால் பொலிவு பெற்றது. சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடி, பொழுது முதலியவற்றைப் பாகுபடுத்தி அவற்றின் வழியே வாழத்தலைப்பட்டனர். இயற்கை நெறிக்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. அகநானூற்றில் காணப்படும் சூழல் சார்ந்த சிந்தனைகளை ஆய்வதாகக் கட்டுரை அமைகின்றது.

அகநானூற்றில் சூழலியல்

இன்று மானுடம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளுள் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிந்தனைகளுக்கு அடித்தளமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. அகநானூற்றில் குறிஞ்சி, பாலை நிலச்சூழலியல் பற்றியச் செய்திகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த செய்திகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

உங்கள் இணையத்தளங்களையும் இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்துங்கள்! - வ.ந,கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இணையத்தளங்கள் பல காலத்துக்குக் காலம் காணாமல் போவதைப் பார்க்கின்றோம். அவை காணாமல் போவதுடன் அவற்றிலுள்ள படைப்புகளும் காணாமல் போய்விடுகின்றன.  இணையத்தளங்களை நடத்துபவர்கள் அவற்றை ஆவணப்படுத்துவதற்கும் வசதியுண்டு. இணையக் காப்பகத்தில் (archive.org) இதற்கான வசதியுண்டு. நீங்கள் உங்கள் இணையத்தளத்தின் பிரிவுகளை, அல்லது பக்கங்களை, அலலது முழு இணையத்தளத்தையும் ஆவணப்படுத்தி வைக்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது?  இதில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் நூல்களை, காணொளிகளை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை, இணையத்தளங்களை எல்லாம் சேகரித்துக்கொள்ளலாம்.

இணைய்த்தளத்தைச் சேமித்து வைக்க, My web acrchives என்னும் பிரிவில் சேகரித்து வைக்கலாம். பதிவுகள் இணைய இதழை நான் இவ்விதம் ஆவணப்படுத்தி வருகின்றேன்.  உதாரணத்துக்குச் சில :

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் பாவிக அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.

பாவிக அணி

பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர் நிலைச் செய்யுள் திறந்துக் கவியால் கருதி செய்யப்படுவதொரு பாங்கு ஆகும்..அது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு செய்யுளால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது ஆகும்.

"பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
. பொறையில் சிறந்த கவசம் இல்லை
வாய்மையிற் கடியதோர் வாளி இல்லை"
(தண்டியலங்காரம் 64)

பிறர் மனைவியை விழைந்தவர் கிளையொடும் கெடுவர் என்று கம்பராமாயணத்திலிருந்து அறியலாம்.

திருக்குறளில் பிறன் இல் விழையாமை

பிறன் இல் விழைவினால் வரும் தீமைகளைச் சொல்லி அப்படிப்பட்ட தீமைகளைச் செய்யாதே என்று வள்ளுவர் பிறனில் விழையாமை என்று தனி அதிகாரமே வகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதளவு கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறர் மனைவியை விரும்புதல், பிறர் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயல்களைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவித பயனும் இல்லை. பிற எல்லா பெருமைகளும் பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 50 - "ராஜம் கிருஷ்ணனின் பன்முக ஆளுமை" - அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
20 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வழி:  ZOOM Join Zoom Meeting:| Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

நாள்:         சனிக்கிழமை 31-05-2025       
நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 9.30      
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

வழி:  ZOOM Join Zoom Meeting:| Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

கிடைக்கப்பெற்றோம்: எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் 'பாவை என்று சொல்லாதே என்னை' கவிதைத்தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
19 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின்   கவிதைத்தொகுப்பு "பாவை என்று சொல்லாதே என்னை" - மனஓசை வெளியீடு.  72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  புகலிடத்  தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன்.  எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின்  (செல்வி  சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி.  இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள்  இயக்கத்திலிணைந்துப் போராடி  மறைந்தவர்கள்.  தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.

ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்)< பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள்,  யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்  பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* புகைப்படம் - India Sublime Arts

நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார்.  வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும்  அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள்.  இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி.  இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்

மேலும் படிக்க ...

கணேஷின் கவிச்சரம்!

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம் கீறும் கோலம்

இங்கு எல்லாமே காலம் போடும்
கோலம் தான்.

உலகத்தை நீ இயக்குவதாய்
உணர்ந்தால் அது இளமை துள்ளும்
காலம்.
எல்லாத் திசைகளிலும் சுத்தி
வருவாய் .

உலகம் இயங்கிறது நீயும்
இயங்குவதாய் உணர்ந்தால் -அது
நடுநிலைக் காலம் ,
திசையை தேர்வு
செய்து போய் வருவாய் .

உலகம் உன்னை விட்டு
இயங்குவதாய்
உணார்ந்தால் முதுமை முடக்கும்
காலம்
அறைகளுக்கு
அடைப்பட்டுக் கிடப்பாய்
அவஸ்தைகளும்
ஆனந்தங்களையும்
அசை போட்டபடியே !

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்:

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

இடைவெளி தரிசனம்.

எனக்குள்
நிறைந்து கிடந்த
சொற்களை
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அடுக்கினேன்.
குவிக்கப்பட்ட
கூலாங்கற்கலாகச்
சிலரை
முகம் திரும்ப வைத்தது.
பிறகொரு நாள்
பெய்த மழையில்
காணாமல்
போனதைக் கண்டெடுத்து
நிதானமாக
செதுக்கிச் செதுக்கிச்
செருகினேன்
சொற்களாலான
கூடாரத்தை.
யாவரும்
சூழ்ந்து
வியந்த வேலையில்
நான்
செதுக்கியதெல்லாம்
சொற்களின்
இடைவெளிக்காகத்தானென்று
எச்சொல்லை
வைத்து
சொல்வது
இப்பொழுது.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 3 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).

பிரதம மந்திரிகளை, தான் நினைத்தாற்போல் தனது பிரமாண்ட விமானம்தாங்கிக் கப்பல்களுக்குள் தள்ளி, அவர்களை அப்படியே முக்கி எடுத்து, பயமுறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் வரலாற்றில், இப்படி ஒரு அவமானமா என விமர்சகர்கள் போர்க்கொடி உயர்த்தி நின்றனர். ஆனால், லெப்ரோவும் இதனுடன் நிறுத்தினார் இல்லை: “அணுவாயுத பிரயோகிப்புக்கான, சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டிய தருணத்தில் நாம் யாருடனும் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியது ஒருபுறம் முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும், மறுபுறம், உக்ரைன் போரின் அல்லது உலக முகத்தின் மாறுதல்களை இது எமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. (21.09.2024).

2

இதேதினங்களில்தான், ரஷ்ய ராணுவமானது, உக்ரைனிய போர்முனையில் பெருமளவு வெற்றி பெற்று முன்னேறியும் இருந்தது. இந்நாளிலிருந்து, கிட்டத்தட்ட, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, (மூன்று வருட காலப் போரில்) 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்க்ஸ் பகுதியில் வைத்து, கொன்றொழித்து இருக்கின்றோம் என புட்டினும் அறிவிக்க நேர்ந்தது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிராக, பொருளாதார தடையானது, மேற்படி தினங்களில் (Sanctions) முற்றாகச் செயலிழந்த நிலையும் தோன்ற தொடங்கியிருந்தது. அதாவது, ஒருபக்கம் பொருளாதார தடையின் எடுபடாமை. மறுபக்கம் போர்முனையில் உக்ரைனும் நேட்டோவும், அடைந்த படுதோல்வி.

மேலும் படிக்க ...

வாழ்த்துகிறோம்: எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரின் புதிய நூல் '23ம் வயதில் பாரதி'

விவரங்கள்
- பதிவுகள் -
நிகழ்வுகள்
14 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரின்  கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளிவருவது தெரிந்ததே. அக்கட்டுரைகளைத்  தாங்கிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில் வெளிவரவுள்ள தொகுப்பு  '23ம் வயதில் பாரதி'.  ஆய்வுச்சிறப்புள்ள,  பாரதியாரை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மகிழ்ச்சி.  பதிவுகள் அவரை வாழ்த்துகிறது.- பதிவுகள் -

இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சிந்தனைகளும், அதனை நிரூபிப்பதில் உள்ள சவால்களும் பற்றி.... - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
14 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் பிராம்டன் மேயர் பற்றிக் பிரவுண் முள்ளிவாய்க்கால்  நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தபோது இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை  பற்றி சில வார்த்தைகளை உதிர்த்தார். யாராவது அதனை மறுத்தால் இலங்கைக்குச் செல்லலாம் என்னும் கருத்துப்பட அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தார்.  முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவு என்ப்து மிகப்பெரிய சோகம் துயரம். மானுட அழிவு. தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஓர் இனப்படுகொலையாகவே கருதுகின்றார்கள். பற்றிக் பிறவுண் போன்ற் அரசியல்வாதிகள் தம் அரசியல்  நலன்களுக்காக அதனைப் பாவிக்கின்றார்கள்.  ஆனால் ஏன் சர்வதேச அரங்கில் இதனை ஓர் இனப்படுகொலையாக இதுவரையில் ஏற்கச்செய்ய முடியவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. ஏன்?  ஏன் ஐக்கிய நாடுகள் சபையில் முள்ளிவாய்க்கால் அழிவை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் இருக்கிறது?

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. முக்கிய வரலாற்றுக் குறிப்பு: யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! - வ.ந.கிரிதரன் -
  2. நூல் வெளியீடு! 'முயன்று பார்ப்போம் மொழிபெயர்ப்பை' (மொழிபெயர்ப்பாளர்கள் - லதா ராமகிருஷ்ணன் & S.R..தேவிகா) - தகவல்: அநாமிகா -
  3. சிறுகதை : முருகா ! - கடல்புத்திரன் -
  4. தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -
  5. அஞ்சலி: திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு மறைந்தார்! - சுப்ரபாரதிமணியன் -
  6. கனடாவில் பெனடிக்ற் பாலன் படைப்புகள் நூல் வெளியீடு! தேடல் பதிப்பக வெளியீடு! - வ.ந.கி -
  7. வேகமான எழுத்துக்கும் சிந்தனைக்கும் உரித்தான மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம்..! - வி. ரி. இளங்கோவன் -
  8. மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 2 - ஜோதிகுமார் -
  9. கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு ! - முருகபூபதி -
  10. எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு - சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.
  11. பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி! - வ.ந.கிரிதரன் -
  12. வானம் சிவக்கப் பாடிய கவிஞன் புதுவை இரத்தினதுரை நினைவலைகள்! - வி. ரி. இளங்கோவன் -
  13. இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 - “நூல்களைப் பேசுவோம்”
  14. கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 3 / 107
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி