புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் மருத்துவர் சியாமளா நடேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டியில் அங்குரார்ப்பணம்! - முருகபூபதி -
இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ நிபுணர் இந்தர்ஜித் சமரசிங்க தொடக்கி வைத்தார். பேராதனை மருத்துவ, பல் மருத்துவ, மற்றும் மிருக மருத்துவ பீட முதல்வர்களுடன் பல புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் சமுகமளித்திருந்திருந்தனர்.