பதிவுகள் முகப்பு

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி வழங்கல் நிகழ்வு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 -2023 ) ஏற்பாடு செய்திருந்த  மாணவர் ஒன்றுகூடல் மற்றும் தகவல் அமர்வு – நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம்  23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  கல்வி நிதியத்தின்  தொடர்பாளர் அமைப்பான பெருந்தோட்ட  சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில்  நானுஓயா நாவலர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  ஏற்கனவே கல்வி நிதியத்தின் உதவியினால் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி, முதலில் நுவரேலியா மாவட்ட உதவிக் கல்விப்பணிப்பாளராகவும், தற்போது கொழும்பு பரீட்சைத்திணைக்களத்தில் உதவி பரீட்சைகள் ஆணையாளராகவும் பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரை, உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ்ராஜ், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். கணேசன், மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஓம் பிரகாஷ், டெஸ்போர்ட் தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு. சிவபாலசுந்தரம்  ஆகியோருடன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த கல்வி நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியும் மாணவர் தொடர்பாளர் நுவரேலியா குட்ஷெப்பர்ட் மகளிர் கல்லூரி ஆசிரியை செல்வி சாதினி ஜெயசீலனும்   கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க ...

டைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா? - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
25 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் சென்ற வாரம் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக சென்ற ஐவர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்து விட்டார்கள்.

சமீபத்தில் நடந்த ஒன்றுகூடல் ஒன்றின்போது, சிலருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், பல விடயங்களையும் பேசும் போது, இருவர் இந்தக் கருத்தை முன்வைத்து வாதித்தார்கள். தங்கள் உரையாடலுக்குச் சாதகமாக இப்பகுதியில் 1985 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களையும் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். அவர்களில் முதியவர் ஒருவர், இது போன்ற மூடநம்பிக்கைகளால் கனடாவில் இருந்து வடஅத்திலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகமாட்டேன் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு நினைவில் நிற்கிறது.

டைட்டானிக் உல்லாசக் கப்பல் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். சினிமாப் படங்கள்கூட இந்தப் பெயரில் வெளிவந்தன. ஜேம்ஸ் கமரூனும் 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருந்தார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அவர் பலதடவை சிறிய நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் மூழ்கிய அந்த இடத்தை நேரடியாகப் பார்த்திருக்கின்றார். டைட்டானிக் கப்பல் புதிதாகக் கட்டப்பட்டு, விபத்தில் சிக்காது என்று உறுதி அளிக்கப்பட்டதால் பல செல்வந்தர்கள் இந்தக் கப்பலின் முதற்பயணத்தில் பங்கு பற்றினார்கள். ஆனால் கனடாவின் நியூபவுண்லாந்தில் இருந்து சுமார் 435 மைல்கள் தெற்கே வட அத்திலான்டிக் கரையில் பனிப்பாறையில் மோதியதால் கப்பல் 13,000 அடி ஆழத்தில் 1912 ஆம் ஆண்டு மூழ்கிப் போனது. இந்த ஆழத்தில் தண்ணீரின் அழுத்தம்  6இ000 pளi ஆக இருந்தது. கப்பல் ஒருபோதும் மூழ்காது என்று கப்பல் கட்டியவர்கள் உறுதியளித்ததால், உயிர் தப்புவதற்கு வேண்டிய போதிய பாதுகாப்பு சாதனங்களும் கப்பலில் இருக்கவில்லை.

மேலும் படிக்க ...

நோர்வே பயணத்தொடர் (1) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி --

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி --
ஶ்ரீரஞ்சனி
24 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலங்கையை விட்டு எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடும்படி உள்நாட்டுப் போர் எங்களில் பலரைத் துரத்தியது. அதன் விளைவு, நாங்களும் எங்களின் அயலார், உற்றார், உறவினர்களும் இந்தப் பூமிப் பந்தின் பல்வேறு தேசங்களிலும் சிதறிப் போனோம்.

அங்ஙனம் விதி விட்டவழி நாங்கள் சிதறி விழுந்த இடங்களில், மொழித் தேர்ச்சி போதாமல், படிப்புக்கேற்ற வேலை கிடையாமல், புதிய சீதோஷ்ண நிலைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற தயார்நிலை இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். எனினும், முடிவில், தஞ்சம் தேடிய புகலிடங்களில் ஆழமாகவே காலூன்றி வாழ எங்களால் முடிந்திருக்கிறது. நாங்கள் பெற்றுக்கொண்ட புகலிடக் குடியுரிமை தொலைத்திருந்த உறவுகளைத் தேடி, அந்தந்த உறவுகள் வாழும் நாடுகளுக்குச் செல்வதற்கும் வழிசெய்திருக்கிறது.

“இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என அன்று கண்ணதாசன் கூறியதுபோல, சொந்த நாட்டையும் உறவுகளையும் பிரிந்த துன்பம் எங்களுக்குள் உழன்று கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இருந்திருந்தால் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்திருக்கக்கூடிய பல விடயங்களை இப்போது எங்களால் சுலபமாகச் செய்யமுடிகிறது. அவ்வகையில் விரும்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதற்கு எங்களின் குடியுரிமை அனுமதிப்பதும் ஒருவகையில் ஒரு கொடுப்பனவுதான். இல்லையா?

முதுமை என்பது ஒரு எச்சரிக்கையாகவும் இருப்பதால், பயணம்செய்ய முடியாமல் போக முன் அந்தக் கொடுப்பனவை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டுமென்ற என்ற எண்ணம், அடுத்ததாக நோர்வேயையும் பார்த்துவிட வேண்டுமென்ற அவாவை எனக்குள் வளர்த்தது. அங்கு சென்றால் நான்கு தசாப்பதங்களுக்கு மேலாகக் காணாமல் இருக்கும் உறவுகளையும் சந்திக்கலாமென்பது, அந்த எண்ணத்துக்கு மேலும் வலுச்சேர்த்தது.

மேலும் படிக்க ...

ஷோபாசக்தியின் மூன்று நூல்கள் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்; தம்பா -
நிகழ்வுகள்
24 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பயனுள்ள மீள்பிரசுரம்: பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள் – ஶ்ரீதர் நாராயணன் –

விவரங்கள்
– ஶ்ரீதர் நாராயணன் –
இலக்கியம்
24 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.

மேலும் படிக்க ...

'வயல் மாதா' நூல் பற்றிய எழுத்தாளர் மெலிஞ்சி முத்தனின் கேள்விகள் சில பற்றிய கேள்விகள்...

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

" கத்தோலிக்க அடிப்படை வாதத்திற்குள் நின்று இலக்கியம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் எழுத்தாளனுக்கு எதிர் நிலையில் நின்று பேசப்படும் குரல்களாகவே பல குரல்கள் அடிபட்டுப் போவதை முக நூலில் காண்கிறேன். "

இது போன்ற கருத்துகள் உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடமிருந்து வருகையில் எங்களைப் போன்ற நூலை வாசிக்காத எழுத்தாளர்கள் உடனடியாக மதவாதிகளே புத்தக எரிப்புக்குக் காரணமானவர்கள் என்று கருதத் தொடங்குகின்றோம்.

ஆனால் இது பற்றி அன்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்நூலுக்கான எதிர்ப்பை மதத்துடன் பிணைக்க முடியாதுபோல்தான் தெரிகின்றது. ஏனென்றால் அவ்வன்பர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அவரது ஊரவர்கள் பலர் , மதகுரு உட்பட, இந்நூல் வெளிவர உதவியிருக்கின்றார்கள். நூலை வாசிக்காமலேயே உதவியிருக்கின்றார்கள். ஆனால் நூலை வாசித்தபின் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள், ஊரிலுள்ள பெண் ஒருவர் பற்றிய கதை போன்ற விடயங்களே நூலெதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிகின்றது. அவ்வெதிர்ப்பை மதவாதிகளின் எதிர்ப்பாகத் திசை திருப்புவதற்கு மேற்படி உங்கள் கூற்று காரணமாகவிருக்கிறதோ என்று நான் ஐயுறுகின்றேன்.

மேலும் படிக்க ...

பிரான்சில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' சிறுகதைத்தொகுப்பு எரிப்பு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
22 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிரான்சில் டானியல் ஜெயந்தனின்  'வயல் மாதா'சிறுகதைத்தொகுப்பு கத்தோலிக்க மதத்தை நிந்திக்கிறது என்னும் காரணத்தைக்காட்டி  எரிக்கப்பட்டுள்ளது.  தம் கருத்துகளுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு  எதிரான நூல்களை எரிப்பதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதைக் காலத்துக்குக் காலம் கண்டு வருகின்றோம்.  அண்மையில் கூட போலந்தில் மதகுரு ஒருவரால் ஹாரி போட்டர் நாவல் எரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் பாவண்ணனின் இயல் விருது ஏற்புரையும் 'பதிவுக'ளில் வெளியான அவரது நெடுங்கதை 'போர்க்கள'மும்! - பாவண்ணன் -

விவரங்கள்
Administrator
இலக்கியம்
21 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா) சார்பாக டொரோண்டோ நகரில் 04.06.2023 அன்று 2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் முருகபூபதிக்கும் வழங்கப்பட்டன. அவ்விருதைப் பெற்றுக்கொண்டு பாவண்ணன் ஆற்றிய ஏற்புரையின் எழுத்துவடிவம். பாவண்ணனின் வலைப்பூவில் வெளியானது.  அவ்வுரையுடன் பதிவுகள் இணைய இதழில் அன்று அவர் எழுதிய போர்க்களம் நெடுங்கதையும்  இங்கு மீள்பிரசுரமாகின்றன - பதிவுகள்.காம் -)


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

இயல் விருது பெறுகிறவனாக உங்கள் முன்னால் நின்றிருக்கும் இத்தருணத்தில் உங்களோடு ஒருசில சொற்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1982இல் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன். துன்பத்தை ஒரு பாரமாக நினைத்து நினைத்து நெஞ்சில் சுமந்தபடி செல்வதைவிட, அந்த பாரத்தை எழுதி எழுதி கரைத்துவிட்டுச் செல்வது நல்லது என்னும் மக்சீம் கோர்க்கியின் சொல் எனக்கு மிகப்பெரிய ஆதர்சமாக இருந்த காலகட்டம் அது. ஒவ்வொரு நாளும் எதையாவது  எழுதிக்கொண்டே இருந்தேன். வாகனத்துக்கு எரிபொருளை நிரப்புவதுபோல, எழுத்து எனக்குள் எனக்குத் தேவையான உற்சாகத்தை நிரப்பியது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல் – நேர்காணல் கண்டவர்: வ.ந.கிரிதரன்

விவரங்கள்
– நேர்காணல் கண்டவர்: வ.ந.கிரிதரன்
நேர்காணல்
21 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம் முருகபூபதி, முதலில்  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  உங்களுக்கு வழங்கிய இயல்விருது 2022 இற்காக எம் வாழ்த்துகள்.  பல தசாப்தங்களாக எழுத்துத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். சிறுகதை, நாவல், கட்டுரை என உங்கள் இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. உங்களுக்கு எழுத்துத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குடும்பச்சூழலா அல்லது நூலகங்களா அல்லது ஆசிரியர்களா அல்லது வேறு ஆளுமைகளா?

முருகபூபதி :  பாடசாலையில் கற்கும் கலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடமாக அமைந்தது சரித்திரம்தான்.  இந்தப்பாடத்தில் நூற்றுக்கு நூறு புள்ளிகளும் பெற்றுள்ளேன். இலங்கை  - இந்திய மற்றும் உலக சரித்திரம் என்பன கதைபோன்றது.  சிறுவயது முதலே வாழ்வில் பெற்ற தரிசனங்களை கதைபோன்று சொல்லும் இயல்பையும் கொண்டிருந்தேன். அதற்கு எனது பாட்டியும் ( அம்மாவின் அம்மா ) முக்கிய காரணம்.  இரவில் உறங்கும்வேளையில்  பாட்டி தையலம்மா எனக்கு பல கதைகளை சொல்லித்தந்தவர். பாடசாலையில்  க. பொ. த. சாதாரண தரம் படிக்கும்போது எமது தமிழ்ப்பாட ஆசிரியர் சுபியான் அவர்கள் எம்மிடம்  வாசிக்கும் ஆற்றலை  வளர்த்தார். ஊக்குவித்தார். அதில் தேறிவந்தவர்களில்  நானும் ஒருவன்.

மேலும் படிக்க ...

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிகள் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 -2023 ) ஏற்பாடு செய்துள்ள மாணவர் ஒன்றுகூடல் மற்றும் தகவல் அமர்வு – நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ( 23-06-2023 ) மலையகம் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கம்பகா, அம்பாறை மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை , மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  கல்வி நிதியத்தின்  தொடர்பாளர் அமைப்பான தோட்டப்புற சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில்  நானுஓயா நாவலர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ள மாணவர் சந்திப்பில், ஏற்கனவே கல்வி நிதியத்தின் உதவியினால் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி, முதலில் நுவரேலியா மாவட்ட பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும், தற்போது கொழும்பு பரீட்சைத்திணைக்களத்தில் உதவி ஆணையாளராகவும் பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரை, நுவரேலியா கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர்  திரு. டி.எம். பி. வசந்த அபயரத்தின, உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ்ராஜ், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். கணேசன் ஆகியோர் கலந்துகொள்வர்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'அனுலா' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அறுபதுகளில் எழுதிய கதைகள் 'அக்கா' என்னும் தொகுப்பாகக் கலாநிதி க.கைலாசபதியின்  அணிந்துரையுடன் வெளியானதைப் பலரும் அறிந்திருப்பார்கள். அதன் பின்னட்டையில் அவரைப்பற்றிய குறிப்பில் அவரது சிறுகதை கல்கியின் ஈழத்துச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றதென்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலுக்கான தனதுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் 'அனுலா' கல்கியில் வெளியான சிறுகதையென்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் கல்கியில் பரிசு பெற்ற கதையாகவிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.  அண்மையில் இணையக் காப்பகத்திலிருந்த பழைய கல்கி இதழ்களில் இதற்கான விடை கிடைத்தது.

மேலும் படிக்க ...

ஒரு துளி உயிர்தரும் - யாழ் அராலி இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் குருதிக் கொடை!

விவரங்கள்
தகவல்: குகதாசன் குகநேசன் -
நிகழ்வுகள்
20 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குறுந்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல் - முனைவர் ச. ஆதிநாராயணசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -

விவரங்கள்
- முனைவர் ச. ஆதிநாராயணசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -
ஆய்வு
20 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பண்டைத் தமிழரின் வாழ்வியலானது பண்பாட்டுக் கூறுகள் மிகுந்ததாகும். தமிழர் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மேலான வாழ்வியலுக்குச் சான்றாக அமைவன சங்க இலக்கியங்களாகும். அவை மனித வாழ்வியலை அகம் புறம் என இருதிறத்ததாய்ப் பகுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் அகவாழ்வையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துக்கூறும் நூலாகக்  குறுந்தொகை அமைகிறது. குறுந்தொகையில் அமைந்துள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

 குறுந்தொகை
      சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றாக அமைவது குறுந்தொகையாகும். இந்நூல் குறுகிய அடிகளில் ஆழமான கருத்துகளைக் கூறும் நூலாக அமைகிறது. இக்குறுந்தொகை நானூறு பாடல்களைக் கொண்டதாதலின் குறுந்தொகை நானூறு எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.  தொகை நூற்களுள் குறுந்தொகைக்கெனத் தனித்த இடமுண்டு. இதனை “நல்ல குறுந்தொகை” என்ற பழம்பாடல் பதத்தால் அறியலாம். தொகை நூற்களுள் சான்றோரால் மிகுதியும் எடுத்தாளப்பட்ட பெறுமை குறுந்தொகைக்கு உண்டு. இது மனித வாழ்வின் பல நுட்பமான கூறுகளை இனிமையுற எடுத்துக்காட்டியுள்ளது.

இல்லறத்தில் புரிதல்
தமிழர் சுட்டும் அகம் புறம் ஆகிய இருநிலைகளுள் மனத்தை அடிப்படையாகக் கொண்ட அகமே புறத்திற்கும் அடிப்படை என்பதை “அகத்தை யொத்தே புறம்‌ (வாழ்வு) அமைகின்றது”1 எனும் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் கருத்தால் உணரலாம். அகமானது இல்லற வாழ்வியலைக் கூறுவது. தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது இல்லறமாகும். துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப்  போற்றப்படுகிறது. திருக்குறள் இல்லறம் துறவறம் ஆகிய இரு வாழ்வியல் நெறிகளுள் இல்லறத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. இதனை “திருக்குறள்‌, வாழ்வியலை வகையுற விளக்கப்‌ போந்து, இல்லறத்திற்கே முதன்மை கொடுக்‌கின்றது”2 எனும் சி. இலக்குவனார் கூற்றால் அறியலாம். இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தம்முள்கொண்ட புரிதலாகும். இப்புரிதலைக் குறித்து குறுந்தொகையில் ஓரம்போகியார் கூறும் பொழுது,

  “காஞ்சியூரன் கொடுமை
     கரந்தன ளாகலி னாணிய வருமே” 3

எனப் பாடுகின்றார். இப்பாடலில் தலைவன் தலைவியினிடத்து ஊடல் கொண்டு தலைவியைக் கடிந்துரைக்கின்றான். புறத்தே சென்ற தலைவன் மீண்டும் இல்லத்திற்குத் திரும்பும்போது தாம் காலையில் கொண்ட ஊடலின் காரணமாகத் தலைவி வருத்தம் கொண்டிருப்பாள். தன்னிடத்து உரையாடமாட்டாள் என்று நினைத்தவாறு இல்லத்திற்குள் புகுகின்றான். அச்சமயம் தலைவியானவள் காலையில் நிகழ்ந்த ஊடலைச் சிறிதும் நினையாதவள் போல் இயல்பாய் நடந்து கொள்கிறாள். இச் செயலைக் கண்ட தலைவன் தான் செய்த தவறை நினைந்து நாணுகிறான். இவ்விடத்து   இல்லறத்தார் பேணுகின்ற உயர்நெறியாகிய அன்பும் புரிதலும் எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்க ...

ஜீவநதி வெளியீடாக 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
எனது 14 கட்டுரைகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுதி 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஜீவநதி வெளியீடாக வெளியாகியுள்ளது. இது ஜீவநதி பதிப்பகம் மூலம் வெளியாகும் இரண்டாவது தொகுதி. முதலாவது தொகுதியாகச் சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' ஏற்கனவே வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க ...

வென்மேரி விருதுகள் 2022-2023 ம் ஆண்டிற்கான சாதனையாளர்கள் - அநுரா அருளப்பு -

விவரங்கள்
- அநுரா அருளப்பு -
நிகழ்வுகள்
19 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*படத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு இரு தடவைகள் அதன்மேல் அழுத்தவும்.

எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க ...

சேப்பியன்ஸ்: மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -

விவரங்கள்
Administrator
நவஜோதி ஜோகரட்னம்
19 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘கோடானு கோடி உயிரினங்களில் ஒன்றாகவும், அரைகுறை ஆடைகளுடனும்,  பறட்டைத் தலையுடனும்,  காய்கனிகளைப் பொறுக்கிக் கொண்டும்,  எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டும் இருந்த மனித இனம்,  படிப்படியாக மாறி,  இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற ஓர் மனித இனமாக உருவானது இப்படித்தான்’ என்பதுதான் சேப்பியன்ஸ். நம் இனத்தின் கதையை அழகாகவும்,  சுவாரசியமாகவும்ச் விறுவிறுப்பாகவும்,  செறிவாகவும்,  சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நம்மை மலைக்க வைக்கின்றார் முனைவர் யுவால் நோவா ஹராரி. இதனைத் தமிழில் மொழிபெயர்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

     ‘மனிதக் கலாச்சாரங்களின் பரிணாம வளர்ச்சிதான் வரலாறு என்று அழைக்கப்படுகின்றது’ என்று கூறும் ஆசிரியர் ‘அறிவுப்; புரட்சி’,  ‘வேளாண் புரட்சி’,‘அறிவியல் புரட்சி’ போன்ற மூன்று முக்கிய புரட்சிகள் மூலம் மனித வரலாற்றின் பாதையைச் செதுக்கியிருக்கிறார். அதாவது இம்மூன்று புரட்சிகளும் எவ்வாறு மனிதர்களையும் அவர்களுடைய சக உயிரினங்களையும் பாதித்துள்ளன என்பதை நுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

     ஹோமோ சேப்பியன்ஸ் அறிவார்ந்த மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும் ஹோமோ என்பது பேரினத்தின் ஒரு விலங்கு. இந்தச் சாதாரண உண்மை, வரலாற்றில் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்தது. தாங்கள் விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் தங்களைப் பார்ப்பதில் ஹோமோ சேப்பியன்ஸ் நெடுங்காலமாகவே விரும்பி வந்திருந்தனர். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானதாக உள்ளது. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ நாம் எல்லோருமே மனிதக்குரங்குகள் என்ற மிகப்பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிம்பன்சிதான் நமக்கு மிகவும் நெருக்கமானவை. 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,    ஒரே ஒரு பெண் மனிதக்குரங்கு இரண்டு மகள்களைப் பெற்றெடுத்திருக்கிறது.. அவற்றில் ஒன்று அனைத்துச் சிம்பன்சிகளின் மூதாதையாக ஆனது. மற்றொன்று வேறு யாருமல்ல,  நம்முடைய சொந்தப் பாட்டிதான்.

மேலும் படிக்க ...

வித்துவான் வேந்தனாரின் 'புள்ளும் பூவும்' - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
19 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர்களே! நாம் பலருடன் பழகுகின்றோம். சிலரை நம் நண்பர்களாகக் கொள்கின்றோம். பல வழிகளிலும் உண்மை நட்புடன், எம் நண்பர்களின் இடுக்கண் காலங்களில் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்கின்றோம். சில காலங்களின் பின் , எம்மிடமிருந்து பல பயனுள்ள உதவிகளை உரிய காலத்தில் பெற்றுப் பயனடைந்த சிலர், தம் இன்னல்கள் தீர்ந்து சுகமாக வாழும் காலத்தில், தாம் இன்னல் பட்டிருந்த காலத்தில் தமக்குதவிய நண்பர்களின் உதவியின் உயர்வை , அதனால் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்து விடுவார்கள்.

இது என்றாலும் பரவாயில்லை. இவர்களின் இன்னல்களை யார் அகற்றிவைத்தார்களோ , அவர்கள் இன்னலுற்று நெருக்கடியான நிலையில் இருக்கையில் , தமக்குதவிய அவர்களின் இக்கட்டான நிலைமையைத் தெரிந்தும், இவர்கள் அவர்களைக் கண்டும் காணாததும் போல் இருந்து விடுவார்கள். அவர்களுடன் கதைத்தால் , எங்கே அவர்கள் ஏதேனும் உதவி கேட்டு விடுவார்களோ என எண்ணி விலகி விடுவார்கள்.

இது இன்று நேற்று நடப்பதல்ல. காலங் காலமாக இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து வந்துள்ளார்கள் - வாழ்ந்து வருகின்றார்கள்- வாழ்ந்து வருவார்கள். இதை ஒளவையாரின் ஓர் சங்ககாலப் பாடல் மூலம், என் தந்தையார் மிக அழகாக விளக்கியுள்ளார்.

அதனை இன்றிங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.


புள்ளும் பூவும்  (மாணவர் தமிழ் விருந்து - பக்கம் 157-160)

புலமை, புலவனின் உள்ளப் பெருக்கு. புலமை பெருகி வாழ்கின்ற உள்ளத்திலேயே, தெளிவும் இனிமையும் சேர்ந்து வாழ்கின்றன. அறமும், அன்பும், புலமை உள்ளத்தின் ஊற்றுக் கண்கள். ஒளவையாரின் புலமை உள்ளம் அமுத சுரபி போன்றது. மக்களின்வாழ்வை வழி வழியாக மலர்த்தி வளம் படுத்துகின்ற சிறப்பு, ஒளவையாரின் புலமைக்கே உரியதாகும். மக்களுடன் உயிர்க்குயிராய் கலந்து நிலவுகின்ற பண்புகளில், நட்பே மேலானது. உலகின் நன்மைக்குக் காரணமாய் நின்றுலவுவது, உண்மை நண்பர்களின் வாழ்வேயாகும்.

இன்பத்தில் மட்டும் அன்றித் துன்பத்திலும் பங்கு பற்றி வாழ்கின்ற பண்புதான் உண்மை நட்பாகும். பலர், இன்ப காலத்தில் மட்டும் ஒருவரோடு ஒருவர் உறவு கொண்டு, துன்ப காலத்தில் பிரிந்து விடுகின்றார்கள். தன்னலங்கருதி வாழ்கின்ற மக்களினம், பெருகாமல் தடுக்கும் படைக்கலமாக உண்மை நட்பு விளங்குகின்றது. செல்வம் பெருகிய காலத்தில் ஒருவருடன் நட்புப் பூண்டவர்கள் , செல்வம் சுருங்கி வறுமை வந்தவுடன், அவரை விட்டு நீங்குகின்ற செயலை , ஒளவையாரால் பொறுக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

கலை பற்றிய கதையாடல் - அங்கம் 2 - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கதிரை வாங்கப் போனோமல்லவா, கலைத்துவக் கதிரையை எங்கே வாங்கலாம் என்பதுதான் இப்போ பிரச்சினை.

1. கலையெனப் பொதுப் பொருளில் சுட்ட முடியுமா?

2. அ. முடியுமெனின் அதன் உட்கூறு என்ன?

   ஆ. விதிக்கப்பட்ட வரைவிலக்கணங்களுக்கூடாக எங்ஙனம் புரிவது.

மேலும் படிக்க ...

நினைவுகள் அழிவதில்லை! நெஞ்சினில் நிலைத்திருக்கும்! தமிழின் நினைவுகளும் என் மனதில் அழியாதென்றும் நிலைத்திருக்கும்! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனதருமை சிறிய தமக்கையார்(தமிழ்) அமரர் செல்வி தமிழரசி வேந்தனார் அவர்களின் 70 ஆவது பிறந்ததினமின்று. தனது 26 வயதில் , 29.06.1979 இல் இயற்கையெய்திய எனதருமை சின்னக்கா "தமிழ்"( தமிழரசி) உடனான என் நினைவலைகள் சிலதை, இங்கு அவரைத் தெரிந்த உங்களில் சிலருடனும் , எனது குடும்பத்தை அறிந்த சிலருடனும் பகிர்ந்து கொள்கின்றேன். தமிழ் தமிழ் என நாள்தோறும் நானழைத்த என் சிறியதமக்கை. எல்லோரையும்,அனுசரித்து பொறுமையாய் நடந்திடும் என்னருமைத் "தமிழ்".

மூத்த மகள் என, என் மூத்த தமக்கையாரிடம் எம் பெற்றோர் காட்டிய அதீத அன்பு..  மூத்த மகன் என ,என் தாயார் ,என் அண்ணனிடம் காட்டிய பாசம்.. இளையவன் - சின்ன மகன் - தன்னைப்போன்ற உருவமும் குணமும் கொண்டவன் என, என் தந்தை என்னிடம் கொண்ட அளவிலாத பாசம், தாயாரிற்கோ தன் கணவரைப் போன்றவன் என்று என்னில் ஒரு பற்று..

இந்தப் பின்னணியில், அண்ணா பிறந்து ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் பிறந்த என் சிறிய தமக்கை தமிழ், தனக்கு உரிய பாசம் , அக்கறை,தன் பெற்றோர்களிடம் இருந்தும், தன் உடன் பிறப்புகளிடமிருந்தும் கிடைக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கத்தை தன்மனதில் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி மூன்று) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பகுதி-i

சென்ற இதழில், தொடப்பட்ட, மூன்று விடயங்கள்:

1. ஒன்று, பக்மூத், எவ்வாறு ஓர் 150,000 உக்ரைனிய போர் வீரர்களுக்கு, ஓர் மரண பொறியாக செயற்பட்டது. (பக்மூத் வீழ்ச்சியின் போது 50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும் 85,000 பேர் காயமுற்றதாகவும் ஒரு பதிவு கூறுகின்றது).
 
2. இத்தோல்வியை தொடர்ந்து எவ்வாறு ஸெலன்ஸ்கி  G-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு ஓர் 375 மில்லியன் டாலர் பணமுடிச்சும்,  F-16 விமானங்களின் வழங்குகைக்கும் உறுதி செய்யப்பட்டார் என்பது குறித்தும்.

3. இப்பணமுடிப்பு பரிசளிப்புகள், “பக்மூத் வீழ்ந்து விட்டது - இருந்தும் அது இப்போது, எம் இதயத்தில் ஆழ வாழ்ந்திருக்கின்றது” என்ற அவரது ஆரம்ப அறிவிப்பை எப்படி அவர் அவசர, அவசரமாக மாற்றி – “இல்லை பக்மூத்தை இப்போதே சுற்றி வளைத்துள்ளோம் - இனி மீட்டெடுப்பதே எமது பிராயசித்தம் என புரண்டு பேச வைத்ததையும் பார்த்திருந்தோம்.

இச்சூழலில் F-16 விமானங்கள், போர்களத்தின் சாரம்சத்தை மாற்றக்கூடியதே என்றும், F-16 விமானங்களின் சிக்கல் நிறைந்த தொழிநுட்ப நடைமுறைமையானது, அமெரிக்காவின் ஓய்வு பெற்ற விமானிகள் அல்லது அந்நாட்டின் ஒப்பந்த அடிப்படையிலான விமானிகளை, F-16 விமானங்களை ஓட்ட வைக்கும் என்றும், இது ரஷியாவை அமெரிக்காவுடன் அல்லது நேட்டோவுடனான நேரடி மோதல்களுக்கு இழுத்துவிடும்  என்றும் ஆயஉபசழபயச கூறியிருந்தார்.

மேலும் படிக்க ...

கவிதை: தந்தையரை என்றுமே போற்றிடுவீர்! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தந்தையர்தினக் கவிதை!


தந்தையர் தினமதினில் நாமெம்
தந்தையர்நினைவுகளைமீட்டிடுவோம்
சிந்தையில் அவரெமக்காய் பட்டிட்ட
சிரமங்களெண்ணிவணங்கிடுவோம்

தோளில்தூக்கி உயர்வினை நாட்டியும்
துன்பங்கள் நீக்கிநல்வழி காட்டியும்
பாரிலெம்மைச் பலசிறப்புகள் கண்டிட
பாதைபோட்ட தந்தையரை மறவோம்

அப்பாவினன்பதுவெளித்தெரியாது
ஆழ்மனதில் புதைந்து கிடப்பது
எப்போதுமெம் உயர்வை விரும்புவது
என்றுமெம் மனதில் அழியாதிருப்பது

கந்தைசுற்றி வாழ்ந்திட நேரினும்
கல்வியைதம்பிள்ளைகட்குவழங்குவர்
விந்தைமனிதரிந்த அப்பாக்களை
வாழ்வில் என்றுமே போற்றிடுவீர்

தந்தையர்தினமதில்தந்தையைநினை
தந்தையினுழைப்பின்உயர்வையுணர்
முந்தையதலைமுறையிதையறியும்
மனதிலிதைநம்பிள்ளைகள்கொள்வீர்

மேலும் படிக்க ...

அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும் போற்றுகிறேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
கவிதை
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தந்தையர்தினக் கவிதை!

    ஈன்றெடுத்தாள் அம்மா  எனைச் சுமந்தார் அப்பா
     சான்றோனாய் என்னை சபை வைத்தார் அப்பா
     நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
     வானளவு  உயர வாழ் வளித்தார் அப்பா

    ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
    உயரோங்கி நிற்க உழைப் பீந்தார் அப்பா
    தனக் கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
    எனக் கெனவே தேடி குவித்திட்டார் வாழ்வில்

    விருப் பென்று எதையும் வெளியிடார்  அப்பா
    பொறுப் புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
    என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
    கண் மணியாய் கருத்தில் இருத்தினார் அப்பா

   தோழேற்றி என்னைச் சுகங் காண்பார் அப்பா
   தோழனாய் இப்போ ஆகி விட்டார் எனக்கு
   வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
   வணங்கு கின்ற தெய்வமாய் தெரிகிறார் அப்பா

மேலும் படிக்க ...

ஜெயலலிதா என்னும் நர்த்தகி... - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நர்த்தகி. அவரது நடனத்திறமையின் காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் நடித்திருக்கும் பாடற் காட்சிகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அப்பாடற் காட்சிகளிலெல்லாம் அவரது நடனத்திறமையின் கூறுகள் சிலவற்றைத்தான் காண முடியும்.

ஜெயலலிதாவின் நடனத்திறமையினை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படங்கள் வெகு சிலதாம். அவற்றிலொன்று ஆதி பராசக்தி. அப்படத்தில் வரும் இப்பாடற் காட்சியினைப் பாருங்கள் அவரது நடனத்திறமையினை புரிந்துகொள்வீர்கள்.

அறுபதுகளில் அவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகமான 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் மிகவும் புகழ்பெற்றது. கல்கியில் அது பற்றியொரு விமர்சனம் வெளிவந்ததாக நினைவு. நீண்ட நாட்களாக அதனை யு டியூப்பில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவதிருந்தால் பகிர்ந்துகொள்ளூங்கள்.

மேலும் படிக்க ...

'சே' என்னும் மானுடத் தோழர்!

விவரங்கள்
- நந்திவர்மன் -
அரசியல்
15 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்

ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம்.   இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட  எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.

பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (4) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
14 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒர் உலகப் புகழ் பெற்ற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாகவும் புனைவுக்குரிய பாங்குடனும் நகர்த்தும் பாங்கு சிறப்பாக அமைந்துள்ளது. “பல்லாயிரக் கணக்கான பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்றொழித்து அவர்களது சொத்து, சுகம் அனைத்தையும் அழித்து தனியொருவனின் அகம்பாவத்தை ஆணவத்தை வெற்றியென்று கொண்டாடியவர்களை வீரர்கள் என்று வரலாற்றில் வரைந்து வைத்தவர்கள் சாதித்தது என்ன? வெறும் ஜாலமாக முடிந்து ஒரு பிடி மண்ணிலும் கலவாமல் மறைந்து போனது அலெக்சாண்டரின் ஆணவம்” கணிசமான நாடகப் பிரதிகள் போர் குறித்தவையாக அமைந்திருப்பதனால் இக்கூற்று பொருந்துவதாகவே அமைந்துள்ளது.

3.5 பிரதிகளின் மொழி

ஒரு பிரதி நாடகமாக நடிக்கப்படும்போதுதான் முழுமையடைகிறது என்று கூறுவார்கள். நடிகனும் அவனின் மொழியும் பாவனைகளும் அரங்கில் காட்சியாக விரிகின்றபோது அது பார்வையாரிடம் விரைவாகச் சென்று சேர்கின்றது. அவர்களை நாடகத்துடன் ஒன்றிணைய வைக்கிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது பிரதியின் மொழியாகும். நாடகம் ஒன்றுக்கான கூட்டுழைப்பை இவ்வாறுதான் மொழி வேண்டி நிற்கிறது.

“நாடகம் என்பது நிச்சயமாக இலக்கியத்தின் கிளைப்பகுதி அல்ல என்பதைத்தான் உலக நாடகவியலாளர்கள் செயற்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு கதையையோ நாடகத்தையோ எழுத்தில் படிக்கும்போது அந்த எழுத்து மொழியை முதலில் புரிந்து கொள்கிறோம். அப்படி புரிந்து கொள்ளத் தொடங்கும் போதிலிருந்துதான் அதை நம் அனுபவ அளவில் நின்று காட்சிப்படுத்த ஆரம்பிக்கின்றோம். நாடக அரங்கில் இந்த செயல்முறை தலைகீழாக மாறிச் செயல்படுகிறது. அத்தகைய நாடகம் என்பதை நிகழ்வாக நாம் பார்ப்பதென்பது நாடகத்தின் மொழிமூலம் சாத்தியப்படுகிறது” (15)

ஏழுமலைப்பிள்ளையின் மேற்குறித்த நாடகப்பிரதிகளின் ஊடாக அவர் மொழியைக் கையாண்டுள்ள வகையினை நோக்குவோம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. விரைவில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள வ.ந.கிரிதரனின் புதிய நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்'
  2. ‘நகுலாத்தை’: யதார்த்தமும் மாயமுமாய் பயணிக்கும் பிரதி - தேவகாந்தன் -
  3. துயர் பகிர்வோம் - நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன் - குரு அரவிந்தன் -
  4. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளியும், புகைப்படத் தொகுப்பும்! - ஊருலாத்தி -
  5. அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார! முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -
  6. வாசிப்பு அனுபவம்: வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனின் “டாக்டரின் தொணதொணப்பு” - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  7. தேடகம், காலம் & பதிவுகள்.காம் ஏற்பாட்டில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - வ.ந.கி -
  8. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (3) - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  9. நூல்கள் கிடைக்கப்பெற்றோம்!
  10. அஞ்சலி: எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்தார்!
  11. இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - தகவல்: ஜயகரன் -
  12. எழுத்தாளர் முருகபூபதியுடனொரு மாலைப்பொழுது!
  13. ஆச்சரியப்பட வைத்த வானொலி அறிவிப்பாளர் தர்சினி உதயராஜா! - ஊருலாத்தி -
  14. கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1. - ஆதவன் கதிரேசர்பிள்ளை -
பக்கம் 57 / 115
  • முதல்
  • முந்தைய
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • அடுத்த
  • கடைசி