நூல்:- உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் | வெளியீடு: மறைகரம் | நூலாசிரியர் ராஜன் ஹூல் | மொழிபெயர்ப்பாளர் என். எம். அமீன். | இலங்கை விலை 750
“உயிரைப் பறிப்பார்கள். உடமை அழிப்பார்கள்: இவை எல்லாம் யாரிடம் சொல்வது, இறைவனிடம் தான் கைகேந்த வேண்டும்: அநீதிக்கு எதிராய். மனிதனில் நீதி தேவன் இல்லாத பட்சத்தில் இறைதேவன்தான் தண்டனை வழங்க வேண்டும். அம்மக்களைப் பாதுகாக்க வேண்டும்:” என்று இந்த நாட்டிலுள்ள நல்லுள்ளம் படைத்த பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்த வேதனைகள் அவர்களுடைய முகங்களில் காணப்பட்டன. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராய் இந்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றிய சூழ்ச்சிகள், அநீதிகள,; கொடுமைகள் அனைத்தையும் அவர்கள் நேரிலேயே பார்த்துப் பார்த்து உள்ளத்தால் நொந்து வெதும்பிக் கொண்டிருந்தார்கள்.
இறைவன் கருணையுள்ளம் படைத்தவன். அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவன் இறைவனிடம் இரு கைகளையும் ஏந்தி நீதி கேட்கும் பட்சத்தில் அதற்குரிய தண்டனை பொதுவாக உடனே கிடைத்துவிடும். இறைவனுக்கும் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் இடையில் திரை இருக்காது. இறைவன் உடனே உரிய தீர்ப்பை வழங்குவிடுவான். இறை நீதி ஒரு நாளும் தற்கொலை செய்து கொள்வதில்லை. உண்மையை ஒரு நாளும் மூடி மறைக்க முடியாது. என்றைக்கு ஒரு நாளாவது வெளி வரும் என்ற வாசகத்தை வலியுத்தும் வரலாற்று சம்பவம் இவையாகும். இவை பற்றி ராஜன் ராஹ{ல் ஆங்கிலத்தில் எழுதிய நூலை மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் “ உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வழி: ZOOM | Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
நத்தார் தின வாழ்த்துகள் அனைவருக்கும்.
இத்தினத்தில் எங்கும் இன்பம் நிறையட்டும்.
எண்ணிய அனைத்தும் நடக்கட்டும் வாழ்வில்
மண்ணில் எங்கும் மகிழ்ச்சி பெருகட்டும்.
பிரிவுகள் அனைத்தும் புவியில் ஒழியட்டும்.
உரிமைகள் பெற்று மாந்தர் வாழட்டும்.
சரிபிழை அறிந்து செயல்கள் நடக்கட்டும்.
புரிந்து அறிந்து பயணம் தொடரட்டும்.
இன்பம் எங்கும் இன்பமென இந்நாளில்
இன்பம் பெருகி ஓடட்டும் அதுபோல்
துன்பம் நீங்கி மாந்தர் வாழ்வில்
இன்பம் மழையெனப் பெய்யட்டும். பெருகட்டும்.
நண்பர் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.
மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.
நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில் வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன்
அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் 'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
VII“எல்லாவற்றையும் விற்றுவிட்டு மீண்டும் தரைக்கே வர அதிகபட்சம் ஒரு வருடம். பிறகு? ஒரு இருபது ஏக்கர் தோட்டம் மிஞ்சினால் போதும். அதில் விவசாயம் செய்து வாழலாம்… விவசாயம் செய்ய சொன்னார் தாத்தா (பொன்னுமணி பெருவட்டர்)” (பக்கம் 151).
வெறிகொண்டு, நாய் நாயைக் கடித்துக் குதறும், பொருளாதாரப் போட்டியை, இறுதியாக இப்படி முடித்து வைப்பதில் சமாதானம் காண்கின்றார் ஜெயமோகன்.
இதற்கு முன், மேலே குறிப்பிட்டதுப்போல், இம் மூன்று தலைமுறைகள் செய்யும் அட்டூழியங்களும் துரோகங்களும் கேவலங்களும் அழகுற நாவலில் இலக்கிய மயப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஒரு தாழ்ந்த சமூகத்தினருக்கு மாத்திரம் சொந்தமானது எனக் காட்டப்பட்டும், அதேவேளை, பொதுவில், இது மேல்தட்டு வர்க்கத்தையும் ஆட்டிப்படைக்கும் பொதுமையான ஒன்று எனும் உண்மை, வாசகனில் இருந்து மறைக்கப்படுவதே, அல்லது குறைத்து வாசிக்கப்படுவதே, நாவலின் சிறப்பு – நாவலின் அரசியலின் முக்கிய பகுதி எனக் கூறலாம்.
இதேவேளை, கார்க்கி போன்றோர் இதேபோன்று, மூன்று தலைமுறைகள் சம்பந்தமான ஒரு நாவலை படைத்ததும் அதில் ஒரு வர்த்தக் குடும்பத்தின் தோற்றுவாயையும், அதன் மூன்று தலைமுறையினரையும் படம்பிடித்து காட்டுவதும், டால்ஸ்டாய் அத்தகைய ஒரு கருவை மிகுந்து சிலாகித்ததும் உண்டு என்பதும் பதிவு.
ஆனால், கார்க்கி, ஜெயமோகனைப்போல், தன் நாவலை ஒரு சாதீயக் கண்ணோட்டத்தில் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு மேட்டுக்குடி கண்ணோட்டத்தில் படைத்தாரில்லை. பகைவனை வர்ணிக்கும்போது கூட, மேல் குறித்த மனவக்கிரம் கார்க்கி அல்லது டால்ஸ்டாய் போன்ற கலைஞர்களிடம் காணப்படவில்லை என்பது, இவ்விருபாலருக்கும், இடையே தென்படும் நிரந்தர வித்தியாசமாகின்றது.
அறிமுகம்: கவிஞர் தம்பா (விசாகப்பெருமாள் சந்திரகுமார்)இன்று புகலிட இலக்கிய உலகில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவர் தம்பா (நோர்வே). ஈழநாடு மாணவர் மலர் மூலம் எழுத்துலகினில் காலடி எடுத்து வைத்தவர். மாணவர் மலரில் அவரது நகைச்சுவைத்துணுக்குகள், கதைகள், தொடர்கதை 'கொரில்லா அரக்கன்' வெளியாகியுள்ளன. ஓவியரான அவரது கேலிச்சித்திரங்கள், ஈழநாடு வாரமலர்ச் சிறுகதைகளுக்கான ஓவியங்களும் வெளியாகியுள்ளன. யாழ் மத்திய கல்லூரி மாணவரான தம்பாவின் இயற்பெயர் விசாகப்பெருமாள் சந்திரகுமார்.
சிரித்திரன் சஞ்சிகை அவ்வப்போது சிறுவர் இலக்கியத்துக்கும் பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. 'அரும்பு' என்னும் பெயரில் சிறுவர் பகுதி வெளியானது. இப்பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் 'பாலர் மலர்' என்னும் பெயரில் சிறுவர்களுக்கான பக்கம் வெளியானது. பின்னர் சிறிது காலம் சிறுவர் சஞ்சிகையான 'கண்மணி'யை (!975 காலப்பகுதியில்) சிரித்திரன் வெளியிட்டது. கண்மணி ஓரிரு இதழ்களே வெளியானது. அதன் பின்னர் எழுபதுகளின் இறுதியில் சிரித்திரனில் சிறுவர் பகுதியான 'கண்மணி' வெளியானது. அதுவும் ஓரிரு இதழ்களுடன் நின்று விட்டதுபோல் தெரிகிறது. ஆனால் இக்'கண்மணி' பக்கத்தை நடத்தியவர் வி.சந்திரகுமார் (தம்பா).
கவிஞர் தம்பா என் தம்பி பாலமுரளியின் வயதுக்காரர். அவரது நண்பர்களில் ஒருவர்.
சிரித்திரனின் ஆரம்பக்கட்டத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நவீனம் வெளிவந்தது. இதுவே சிரித்திரனில் வெளியான முதலாவது தொடர்கதை. இது சிறுவர் நவீனம் என்பதால் சிரித்திரனின் ஆரம்பத்திலும் சிறுவருக்கான பக்கங்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய முடிகின்றது.
கவிஞர் தம்பாவின் கவிதைகள் புகலிடச் சஞ்சிகைகள், தாயகம் (இலங்கை) போன்றவற்றில் வெளியாகியுள்ளன. அவரது கவிதைகள் பல 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
தம்பா கவிதைகள்! October 21, 2016
1. தீக்குச்சிகளின் நடனம்.
மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.
போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.
இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.
கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.
பட்ட மரக்காட்டின் நடுவே
எட்டு திக்கும் தீ முட்டி,
கையிருப்பில்
ஒரு வாளி தண்ணியுடன்
காக்கும் கடவுளை துணைக்கு அழைக்கும்
சாணக்கியன் நீ.
உன் ஆயுள் பலத்தை திரட்டி
சூரியனைப் பிளந்து
உள்ளிருளைத் தேடு.
2. வட புலத்தில் வேனில் காலம்.
இறவாத பகலும்
பிறவாத இரவும்
புணரும் தருணங்கள்.
பனித்தேசத்து துச்சாதனனிடம்
பல மாதங்கள் போராடி
சுதந்திரமாக
ஆடை தரிக்கும் பச்சை மரங்கள்.
நடு இரவாகி
அவனும் அவளும்
காதலோடு அணையும் நேரம்
அனுமதி இன்றி
படுக்கையை ஆக்கிரமிக்கும்
சூரியன்.
தூங்கியும் தூங்காமலும்
விழிகளில் தேங்கும் தவம்.
கல்லாய் தேங்கிய நீர்
மலையைப் புரட்டி
வெள்ளமாய் சினத்த கணங்கள்.
திறந்தது திறந்த படி போட்டு
முற்றத்தில் முடங்கிப் படுக்க;
இருபத்து நான்கு மணி நேரமும்
வானில் காவல் காக்கும்
சூரியத்தேவன்.
நீண்ட கால கருத்தரிப்பில்
ஜனனித்து
சொற்ப ஆயுளுக்குள்
முடிந்து போகும்
மழைக் காலத்து
கானல் நீர். இது.
ஆயினும்
வற்றாத சுகம் தருகிறது.
3. அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள். 09 டிசம்பர் 2018
முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம்
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.
தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான ஆயுதம் அதுமட்டுமே.
ஏறியமர்ந்த முதுகுத்தண்டை பிளந்து
ஊன்றுகோலை வடிவமைத்துக்கொள்,
தடுமாற்றமின்றி முதுகிற்கு முதுகு
தாவிக்கொள்வதற்கு உதவிடலாம்.
எல்லைகளை தொட்ட கணம்
தாங்குபவனையும் சுமப்பவனையும்
தாழ்ந்தவன் என பிரகடனப்படுத்த தயங்கிடாதே.
சூழ்ச்சியின் வெற்றியே
'மனுதர்மம்´ என இறுமாப்பும் கொள்.
மதியின் விதி
மதித்தவர்களை மறந்ததில்லை,
மறந்தவர்களை மதித்ததில்லை.
வறண்ட வளியிலும்
குளிர்ந்த குளத்திலும்
வாழ்வை குலைத்து கொள்ளாது
வந்து போனாலும் பறவைகள்
வேடந்தாங்களை மறந்ததில்லை.
தாய் இன்றி பேறில்லை
வேர்களின்றி மரங்களில்லை.
4. விடுதலைக்குள் விடுகதை! 14 மார்ச் 2023
ஆக்கிரமிப்பின் அங்கீகாரமும்
அழிவின் மூர்க்கமும்
முடிசூடிக் கொண்ட யுத்த நுகத்தடியில்,
உறவின் இழப்பும்
இழப்பின் நினைவுகளை அழித்த
இனத்தின் மேலாதிக்கம்
இறுமாப்புக் கொள்ள,
நினைவுகளின் மீதான வன்முறை
உலக நுண்ணுயிருக்குமான
உரிமையை இழந்து விட்ட வேட்கை
உலகின் தெருக்களெங்கும்
கட்டுடைத்த கவனயீர்ப்பு
சுயமானத்தை பிரகடனபடுத்தி கொள்கிறது.
இனப்போருக்கு முன்னும் பின்னும்
இனப்பகைவர்களற்ற தெருக்களில்
மரித்த எம்மினத்தவனுக்கு
தாழ்த்தப்பட்டவனென பகைசூடி
பிணம் செல்ல வீதித் தடையும்
தீண்டத் தகாதோனுக்கு தகன தடை கோரி நிற்கின்ற
விடுதலை மறவர் நாம்.
மாற்றான் அடக்கு முறை
மகா பாவம் என முழங்கி
இனத்துக்குள் அடக்குமுறையை
பண்பாட்டு பாதுகாப்பு என
புறங்கையால் தள்ளிவிட்டு.
`புனித போர்´ எனக் கொக்கரித்து செரித்தனர்.
தாழ்வாரத்தின் கீழ் தேசியம் சேடமிழுக்க
யமனில்லாது செத்து மடிந்த சுடலையை
உயிர்த்தெழ வைத்துவிட
சாதியெனும் கும்பகர்ணப் பெரும்பேயை
உதிர் முடிகட்டி
தெருவெங்கும் இழுத்து வரும்
பாழ்பாடியின் பெருங்குடிகள்.
5. வைத்தியம்!
மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்.
தூறல் நின்று வானவில் மறைவதற்குள்
மடியில் மறைத்துவைத்த
ஒருபிடி அரிசியும் களவாடப் பட்டிருந்தது.
கடவுளை கூவி அழைத்தனர்
காக்கவில்லை,
மதத்தை தொழுதனர்
பலனில்லை,
இனத்தை வேண்டினர்
எழுந்திருக்கவில்லை,
தலைவனை இறைஞ்சினர்
காணவில்லை.
காக்க இன்னொருவன் வருவானென்று
கடவுள் துகில் கொள்ள சென்றார்
6. கவிதைகள் இரண்டு! 14 மே 2018
6a. இருப்பில் இல்லாத கடன்.
இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும்
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.
நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..
நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.
நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.
எனக்கு நானே கடனாளியாகும்
காலக் கணிதம் இது.
வெளியே சொல்லி சிரிக்கமுடியாத
சோகமானாலும் வசதியாக போகிறது
இந்தக் கடன் மட்டுமே
யாருக்கும் தெரியவராததால்
மானத்தை காத்தும் வைக்கிறது.
வரவையும் செலவையும்
எந்த கம்ப்யூட்டரினாலும்
விடுவிக்க முடியாதது புதிர்
நேரக்கணக்கு மட்டும் தான்.
அனுமார் வால் போல்
நீண்டு வளர்கிறது நேரக்கடன்.
ஆயினும்
மூன்றாம் உலக நாடுகளை போல்
இதுவும் திரும்பிச் செலுத்தபடாத
அதிசய கடனாகிறது.
நேரக் கடனை வசூலிக்க
எந்தக் கடன் காரர்களும்
என் வீட்டு கதவை தட்டியதில்லை,
எமதர்மராசாவை தவிர..
6b. ஓரடி முன்னே, ஈரடி பின்னே.
முக்காலமும்´ டிஜிற்றல் ` பூச்சில்
சுகந்தம் என
உடல் மகிழ்ந்து
சுமைகளோடு மெல்ல மெல்ல
முன்னேறி தவழ்கிறது.
நெருப்பையும், சில்லையும் கண்டறிய
கற்காலத்திற்கு பறக்கின்ற
தலையின் தீவிர கழிவிரக்கம் இது.
குருகுலம் தொடங்கி
ஆண்டான் அடிமை
சமூகத்தை மீட்டெடுக்கும்
ஆசையில் விக்கி தவிக்கிறது.
குருடர்களுக்கு எல்லாம்
ஒற்றைக் கண்ணன் மட்டுமே
இராஜாவாக முடியும்.
இது விதியன்று
சதியின் மதியுமன்றோ?
7. ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு. 12 மார்ச் 2018
7a. ஏட்டிக்குப் போட்டி.
பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.
எதிர்த்தவன் வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.
பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.
அநியாயத்தை மற்றோரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருடர்களும் நாம் தான்.
7b. சிறை ஒன்று அடிமைகள் வேறு.
பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.
எதிர்த்தவன் வீட்டு முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறவன்
தன் வீட்டு அத்திவாரம்
தகர்வதை மறந்து போகிறான்.
பற்ற வைத்ததவன்
தொற்ற வைத்து பதற வைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.
பகலென்று இரவையும்
இரவென்று பகலையும்
கண் திறவாமல் கதை சொல்லும்
கல்லாத காவலர்களின் களமிது.
பற்றி எரியும் நகரங்களை
பெற்றோல் ஊற்றி
அணைக்க வரும் தர்மவான்கள்.
தீயில் பொசுங்கும் குழந்தைகளிடம்
ஓடோடி வந்து மலர் தூவி
ஆசிர்வாதம் செய்கிறார்கள்
அடுத்த பிறப்பில்
தம் இனத்தில் பிறக்க வேண்டி.
அநியாயத்தை இன்னொரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருட்டு விற்பன்னர்களும் நாம் தான்.
பிறக்கும் போது திறவாத கண்கள்
இறக்கும் போது மூடுவதில்லை.
8. கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!
8a.. மறந்த கதை
தலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.
ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.
மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்
நாசியத்தை மனச்சட்டியில் வைத்து
எரிக்கும் அயலவன்
முறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து
சேனை படைக்கு
கவசம் தயாரிக்க தவமிருக்கின்றான்..
மத்திய கிழக்கில்
தொடங்கிய போர்கள்
மூன்றாம் உலக மாகாயுத்தத்திற்கான
அறிகுறியாக இருக்கலாமோ என
யூகிக்க சிரமப்பட்ட போதெல்லாம்
இல்லவே இல்லை
இவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்
நீட்சி தான் என
அறைந்து சொல்கின்றன
இரசாயன குண்டுகள்.
´அவுஸ்விட்ச்´ நாசி வதைமுகாம்
வரலாற்றின் முடிவல்ல,
அது சிரியாவில்
நடமாடும் முகாம்களாக மீளமைக்கப்படுகிறது.
8b. ஐ போனில்´சுட்ட வடை
காற்றை கிழித்து
கிழிந்த சட்டை போட்ட
நெளிந்த சைக்கிள்
சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.
சைக்கிள் பாருக்குள்ளால்
அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக
மூச்சிரைக்கும் தலையும் உடலும்.
வறண்ட வாய்க்கால் மதகில்
படுத்தபடி
உச்சி வெய்யிலுக்கு புகை போடும்
உயர் தர மாணவனைக் கண்டு
வெறுங்காலை டயரில் தேய்த்து
எட்ட நின்று நிதானித்து சைக்கிள்
உருண்டு வந்து கேட்டது
" பொட்டலமா? போத்திலா?" .
எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து
`குடு´ பொட்டலம் வெளிவந்து
பணப்பொட்டலம் உள்ளேறிக் குந்தியது.
கொடுத்தும் வேண்டியும்
உயிர் பரிமாறும் காலம் இது.
கிழிந்த சட்டைக்கோ
ஐ போன் வேண்டக் கனவு,
தெளிந்த சட்டைக்கோ
ஐ போன் விட்டு
வெளி நாடு போகக்கனவு.
வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த
பெரிய வாத்தியார்
கண் காது மூச்சு எல்லாவற்றையும்
உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி
கரையால் ஒதுங்கிப் போனார்.
சந்தியில் பட்ட நால்வரிடம்
`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல
`ஊரோட மனச்சாட்சி´ என
சரணம் சொன்னது சாராய நாற்றம்.
ஓயாத தேசியம்
ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.
வறுமையின் இயலாமை
வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,
"கறையான் அரித்த தண்டவாளமும்
காண்பாயோ ?,
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?"
9. வீதியின் நீதி
ஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.
போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.
சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.
நம்பி நிறைந்தன வீதிகள்.
தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.
தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.
எத்தெரு ஆனாலும்
எத்திசை போனாலும்
அவை ஒரு வழிப்பாதையாகிவிடும்
உலக அதிசயம் இங்கு நிகழ்கிறது.
உயிர்ப்போடு போகிறவர்கள்
விறைப்பாக எடுத்து வரப்படுகிறார்கள்.
புறாக்களின் ஒட்டுச் சிறகுகள்
வீதியெங்கும் கொட்டி பரவுகின்றன.
வீதிகளின் விதி என்னவோ?
விதிகளின் வீதி என்னவோ?
10. நிலவுக்கு எம்பிக் குதி.
ஜனநாயகம் என்பது
நாணயத்தின் இரு முகங்கள் போன்றது.
தலையாக அவன் வென்றால்
காலடியில் பூவாக நீ நசிவதும்
பூவாக நீ மணம் கமழ்ந்தால்
அவன் சேற்றில் தலை மூழ்கிப் போவதும்
சக்கர சுழற்சியின்
வலிகள் மானிடா.
ஆயினும்
ஆண்டான் அடிமை என்பது
காலப்பெட்டகத்துள் அடைக்கபட்டதால்
உனது அடிமை விலங்கு
காலக்கிரகத்தில்
கழட்டப்பட்டே தீரும் தோழா.
சுண்டி வீசி
அக்கம் பக்கம் தவறாது
குத்தென நாணயம்
நின்றுபோன சகுனம்
`தலை´ கொய்யப்பட்டு
`பூ´ கசக்கப்பட்டு
சர்வ அதிகாரங்களும்
முண்டங்களினால் ஆளப்படும்.
பொன்
வெள்ளி
செப்பு
என விதம் விதமான கைவிலங்குகளை
தெரிவு செய்யும்
ஜனநாயக உரிமையை
நினைந்து நினைந்து
பூரித்து அடைகாத்து கரைவாய்,
பாலைவனத்தில் திசை தெரியாதவன்
காணல் நீரைக் கண்ட
நம்பிக்கை போல.
"ஜனநாயகம் என்பது
மக்களால்
மக்களைக் கொண்டு நடைபெறும்
மக்கள் அரசாங்கம் !".
என்று முழங்கு.
சக்கரத்தின் மையம் மட்டும்
எப்போதும் மாறாத புள்ளியில்
தரித்து நிற்கும்
* தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை இரு தடவைகள் அழுத்தவும்.
உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025
போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.
தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.
15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள்,
இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.
முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.
மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.
நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.
ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.
10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.
குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.
* ஓவியம் - AI -
எங்களூர் பிரான்ஸ்சிற்றி விலாசத்துத் தெருவில் மாலை மங்கலாகப் பரவி, வெடிக்காத வண்ணக் கதிர்கள் வானத்தில் மிதந்தன. என்னைப் போலவே ஆற்றங்கரையிலிருந்து அங்கே வந்திருந்த விளையாட்டு நண்பர்கள், பொழுதைக் கழிக்க காத்திருந்தார்கள். சிலருக்கு புத்தகம் படிக்க வேண்டியது. சிலருக்கு நேரம் வந்ததும் தூங்கச் செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால், நாங்கள் அனைவரும் மாலை விளையாட்டுக்குத் தவறாமல் வந்துவிடுவோம்.
பழைய வீதியில், மண்ணினின்றும் மழலையாகும் வாபாஸ் குரலும் நாங்கள் எதிர்பார்த்த அம்சமாய்த் திகழ்ந்தது. அவர்களது ஓசையைக் கேட்டாலே நாங்கள் உண்மையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என தோன்றும். அப்போதெல்லாம் இரவுப் புத்தகம் படித்தல், கதைகள் கேட்பது—இவை குழந்தைப் பருவத்தின் நிலையான நிகழ்வுகள்.
ஆனால் இப்போது, நேரமோ நேரம் நிழலாகவே மாறிவிட்டது. இரவு மாலை விளையாட்டுகளை மூடிவிட்டது. வெண்ணிறத்தில் கொஞ்சும் அந்த சிறிய கொடிகள் நம் நினைவுகளுக்குள் ஆழமாக மறைந்தன. உம்மா கூறியதால் தூங்கிவிடும் தூக்கம் இப்போது தொலைந்தது. வாபாஸ் சொற்கள் ஆழமாக என்னுள் பதிந்தபோதும், அவை எங்கோ தொலைவிலிருந்து காற்று போலவே நம்மை மீண்டும் நிழலாக்குகின்றன.
வாழ்க்கையின் அரிதான, இறுக்கமான காலத்தை நினைத்தபோது, எங்களுக்கு மீண்டும் குழந்தையாகி விளையாடி சிரிக்க இயலாத நிலை வந்துவிட்டது.
நீராவியடி என்றால் நினைவுக்கு வந்து காட்சி தந்து நினைவுகளை மீட்டெடுத்து கதைசொல்ல வைக்குமிடங்களாய்; நீராவியடி பிள்ளையார் கோயில்.' செங்கை ஆழியான்' வீடு.சந்திக்கடை(ஐயாத்துரை கடை)தாழ்வாரத்தை உயர்த்தி இரண்டு பக்கமும் முட்டு வைத்து நடத்திய வடிவான சின்னக்கடை.பக்கத்தில சினிமா போஸ்ரர் ஒட்டிய பிரகாஸ்லோன்றி.கே.ஆர்.மில்(ஆலை) பிள்ளையார் கோயில் பின்வீதி.அந்த வெளி.அந்தக்குளம். குளத்தைச்சுற்றிப்பாதுகாப்பாக 4 பக்கமுமாய் அணைக்கட்டுகள்.அருகே வாசிகசாலை.
அந்த அரசமரம்.அதற்குள் அமர்ந்த அழகான அந்த சின்ன வைரவர்.அந்த வைரவரை வைத்துப்பராமரித்த நரைத்த நீண்ட தாடி கொண்ட முத்தையா.முத்தையா என இருவர் அயலில் வாழ்ந்தார்கள். இரண்டாம் பேர்வழியான கோவணத்துடன் குளத்துக்குள் இறங்கி குளிக்கும் இவர் கொட்டாக்கு முத்தையா என பேசப்பட்டார். அரசமரத்திற்குப்பின்னால் ஒடுக்கமான ஒரு கால்வாய்.அதற்குள் மழைக்காலத்தைத்தவிர நீர் வழிந்து ஒடுவதென்பது அரிது.அநேகமாக,அதற்குள் நாம் இருபக்கக்கட்டுகளிலும் எதிரும் புதிருமாக இருந்துகொண்டு கால்களை அதற்குள் நீட்டியபடி கதைத்துச்சுகம் காண்பது வழக்கம்.மார்கழியில் மழைநீர் வசந்தா ரெக்ஸ்டைல்ஸ் முன்றலில் தேங்கி நிற்காது இறங்கி கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள்தான் கூடுதலாக வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கும்.அதுகூட ஓர் அழகுதான்.
காற்று வீசும்.வீசும் காற்றும் சும்மா வராது.இலங்கை வானொலியிலிருந்து சுகமான இதமான பாட்டொன்றைத்தந்து மனசை இலேசாய் உரசிவிட்டுப்போகும். அரசமர இலைகள் சரசரக்கும். மார்கழியில் குளம் நிரம்பி வழியும்.சிலர் அதில் நின்றபடி சருவச்சட்டியால் அள்ளி உடம்பில் ஊத்திக் குளிப்பார்கள்.ஒருத்தர் மட்டும் பயமில்லாமல் நீந்துவார்.அவர்தான்'ராதா'.
IV“பொன்னுமணிதானே உன் பெயர்…”
“அடியன் ஓம்… ஏமானே…”
‘உன் அப்பன் பெரிய ரகளைக்காரனாமே…”
“நாங்க இஞ்ச வாலாட்டுத நாய்க… நண்ணி மறக்க மாட்டம்” (பக்கம் 77).
“உற்சாகமாக ஒரு நம்பூதிரியும் வந்தார். நம்பூதிரி சதுரங்கப் பலகையை முன்வைத்தார்…”
“பண்ணிமலை விஷயமாய்…”
“அது இப்போது…”
“பண்ணிமலைக்காட்டை இவனுக்கு…”
“கொடு… கொடு…”
“அடியன், நாங்க இந்த உப்ப தின்னுத சாதி, தின்ன நண்ணி ஒருக்காலும் மறக்கமாட்டோம்” என்றான் பொன்னுமணி. (பக்கம் 77-79).
V
இனி இப்படி பெறப்பட்ட, பண்ணிமலை காட்டுக்கு யாது நடக்கின்றது என்பது நாவலில், அத்தியாயம் 11ல் விபரிக்கப்படுகின்றது.
“அவர்கள் அங்கேயே தங்கினார்கள். வாழைக்காய்களையும் கிழங்குகளையும் காட்டிலிருந்து சேகரித்துச் சுட்டுத் தின்றபடியும், அவ்வப்போது முயல்களையும் பறவைகளையும் வேட்டையாடிச்சுட்டுத் தின்றபடியும் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே காட்டுக்குப் பழகிப் போனவர்கள். காலை முதல் இரவு விழும் நேரம் வரை உழைத்தார்கள். உழைப்பின் பலனைவிட, இயற்கையின் சவால் எழுப்பும் உற்சாகமே அவர்களை இயக்கியது” (பக்கம் 93).
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மைஅணி அணியாகும். தண்டியலங்காரத்தின் தன்மை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
தன்மைஅணி
எப்பொருளையும் அதன் இயல்பும் தன்மையும் மாறாமல் இயற்கையாகவும் உண்மைத் தன்மையுடன் விளக்குவது தன்மையாகும்.
“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை ஆகும்”
(தண்டியலங்காரம் 2)
இதற்கு தன்மை நவிற்சி அணி என்ற பெயரும் உண்டு.
தன்மை அணியின் வகை
தன்மையணி பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி என்று நான்கு வகைப்படும்.
அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 21 ஆம் திகதி ( 21-12-2024 ) சனிக்கிழமை மெய்நிகரில் (Zoom) நடைபெறும்.
1. வண்ணாத்திக்குளம் (நாவல்) - ஜே.பி. ஜொசப்பின் (தமிழ்நாடு)
2. உனையே மயல் கொண்டு (நாவல்) - டாக்டர் பஞ்சகல்யாணி (இலங்கை)
3. சோகனின் வைத்தியசாலை (நாவல்) - கவிஞர் சல்மா (தமிழ்நாடு)
4. கானல்தேசம் (நாவல்) - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து)
5. பண்ணையில் ஒரு மிருகம் (நாவல்) - சந்திரிக்கா அரசரட்ணம் (பிரான்ஸ்)
6. தாத்தாவின் வீடு (நாவல்) - கலா. ஶ்ரீரஞ்சன் (இங்கிலாந்து)
7 வாழும் சுவடுகள் (புனைவு சாரா பத்தி) - அசோக் (அவுஸ்திரேலியா)
8. நாலு கால் சுவடுகள் - புதிய வரவு – டாக்டர் கிருபானந்த குமரன் ( இலங்கை )
9. எக்ஸைல் – (கட்டுரைகள்) - நடராஜா சுசீந்திரன் (ஜெர்மனி)
எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.
மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting
Meeting ID: 842 7782 0317 | Passcode: 659335
அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 1-30 மணி
இங்கிலாந்து நேரம்: காலை 8-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் : காலை 9 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை 3-00 மணி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஓவியப் போட்டி: 'நாளை விடியும்' இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..
ஓவிய உள்ளடக்கம்:
பெரியார், அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமே, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரைந்தவரின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address) அலைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.01.2025 க்குள் அனுப்புங்கள்.
1தமிழ் இலக்கிய வரலாற்றில் வெங்கட்சுவாமிநாதன், கா.நா.சு., அசோகமித்திரன், பாலகுமாரன் போன்ற நீண்ட ஓர் பட்டியல் இருந்திருந்தாலும், தமது அரசியல் பாத்திரத்தை நன்கு பிரக்ஞையுடன் தெளிவுற வகுத்துக்கொண்டவராக ஜெயமோகனைக் குறிப்பிடலாம். முக்கியமாக ஒரு சாதீய இந்தியச் சமூகத்தின் பின்னணியில்.
தனது முதல் நாவலான ரப்பரின் முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார் : “என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன்”
ஆனால், இவரது இருப்புதான் யாது – அது சொல்லவரும் சேதியின் அரசியல் என்ன என்பது ரப்பர் நாவலை நிதானித்துப் படிக்கும்போது விடுவிக்கப்படுகின்றது.
இவரே ஓரிடத்தில் கூறுமாப்போல், “பிற்பாடு இது வளர்ந்து பல முகங்களைப்பெற்று” இருந்தாலும் இம்முதல் நாவலில் காணக்கிட்டும் இவரது அரசியல், அர்த்தப்பூர்வமானது என்றாகின்றது. பிற்காலத்தில், இவர் தனது இந்தியச் சாதீயச் சமூகத்தையும், உழைப்பாளிகள் சார்பான வேறு இலக்கியங்களையும், கூர்மையாக அவதானித்த பின், அவற்றை ஒன்றில் இருந்து வேறாக, வேறுபடுத்தி, தனித்தனியே பிரித்து வைப்பதில் உள்ள முக்கியத்துத்தை, அதாவது தணிந்த சாதிய வகுப்பினரை மேலும் பிளவுப்படுத்திக் கொள்வதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை அல்லது இன்னும் வேறுவகையில், ராணுவத்தினரை அல்லது படையினரை, உழைப்பாளி மக்களுடன் கைகோர்க்க விடாது, அவர்களையும் வேறுபடுத்தி, அந்நியப்படுத்தி விடுவதிலுள்ள ஆழமான நலன்களை அல்லது ஜெயகாந்தன் முதலானோர் முன்வைத்த சாதிய ஒற்றுமைகளை அல்லது முற்போக்குப் பிராமணர்கள் உள்ளிட்ட சக்திகளின் உள்ளீர்ப்பை உழைக்கும் மக்களின் ஒன்றிணைப்பிலிருந்து கத்தரித்து விடுவதிலுள்ள நன்மைகளைத் தெளிவுறப்பார்க்கும் ஆற்றல் கொண்டவராய், இவர் பிற்காலத்தில் பரிணமித்திருக்கக்கூடும்.
- எழுபதுகளில் யாழ் சுப்பிரமணியம் பூங்காவில். வலது கோடியில் இருப்பவர் ரஞ்சித். -
எம்மண்ணின் விடியல் என்பது அத்தனை பேரழகு! விரிந்த மொட்டுக்களின் வாசத்தை அள்ளிவரும் தென்றல்.பல்லவி சரணமாக பவனிவரும் பறவைகளின் சங்கீதம். உயிரை உருக்கும் பெருமாள் கோயில் சுப்ரபாதம்.வானத்தில் துள்ளிக்குதித்து கடலுக்குள் விழுந்து எழுந்து,பனைகளுள் ஒளித்து மறையும் சூரிய உதயம். அடுப்படியில் சுண்டக்காய்ச்சிய ஆட்டுப் பாலின் வாசமும், சாமியறைச் சாம்பிராணி வாசமும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்த என்னை மெல்லத்தட்டி எழுப்பும்.முகங்கழுவி அடுப்படிக்குள் கால்வைத்தால் சுடச்சுட ஆட்டுப்பால் தேநீரை அம்மா தர,அது தொண்டைக்குள்ளால் உள்ளிறங்க இந்த விடியலின் அழகும்,ஆட்டுப்பால் தேநீரின் சுவையும் பரவசப்படுத்தும் மனசுக்குள் புகுந்து புதுக்கவிதை எழுதும்.அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாளின் புதுவரவு. நல்லூரும் கொடியேறிவிட்டால் இந்த நாட்கள் எமக்கு ஆட்டமும்,கொண்டாட்டமும்தான்!
தன்னை அழகாய் உடுத்திவரும் சிவந்த அந்தி. அதற்கு பொருத்தமாய் பட்டுப்பாவாடை சட்டை.கூந்தல் நிறைய கனகாம்பரம் அல்லது மல்லிகை.வெள்ளிக்கொலுசு கட்டி உலாவந்த கன்னியரின் பாதங்கள் இசைக்கும் மெளனராகம்.காத்திருந்த இளங்காளையரின் எண்ணங்கள் பட்டாம் பூச்சியாய்ப் பறக்க, குளிர்ச்சியான கோயில் வீதியின் மணலும், வானத்தில் நட்சத்திரங்களின் அழகும் பொற்கால நினைவாய் இன்றும் இணைந்து நனவுடை தோய்கின்றது.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக, அரசியல், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், அவ்வாறே கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருபவரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளருமான தோழர் லயனல் போப்பகேயின் அன்புத்துணைவியாருமான சகோதரி சித்ரா லயனல் போப்பகேயின் வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும் ஆவணப்படம்தான் Nun other than .
மெல்பன் Darebin Inter cultural centre இல் அண்மையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு எனது இரண்டாவது மகள் பிரியாவுடன் சென்றிருந்தேன். அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரனும் அவரது துணைவியார் திருமதி ஜெஸி ரவீந்திரனும் வந்திருந்தனர். எம்மைத்தவிர ஏனையோர் பிற சமூகத்தினர்தான்.
ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்து அருட்சகோதரியாக மாறி , மதம் சார்ந்த பணிகளுடன் சமூகப்பணிகளும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் சீர்மியத் தொண்டராகவும் இயங்கிய சித்ரா, எவ்வாறு மனித உரிமை ஆர்வலராக மாறினார், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசித்திபெற்ற விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக இணைந்தார், அத்துடன், மனித நேயம் மிக்க புரட்சியாளரான தோழர் லயனல் போப்பகேயின் காதல் மனைவியானார், அதனைத் தொடர்ந்து 1978 – 1983 காலப்பகுதியில் இலங்கையில் தோன்றிய அரசியல் அடக்குமுறை நெருக்கடிகளை அவர் எவ்வாறு எதிர்கெண்டார் முதலான செய்திகளை Nun other than ஆவணப்படம் சித்திரிக்கிறது.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இன்று பிறந்தநாள். கவிஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கவிஞருடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிட்டாதபோதும் சந்தித்த, பழகிய, உரையாடிய தருணங்கள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.
முதன் முதலாக அவரைச் சந்தித்தது எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக்காக யாழ்ப்பாண வைபவமாலை நூலைத் தேடியபோது அவரிடம் இருப்பதையறிந்து அவர் இல்லம் சென்றபோது. அக்காலகட்டத்தில் யாழ்நகரில் ஓரிரு தினங்கள் சைக்கிளில் அலைந்திருக்கின்றோம்.
அதன் பின்னர் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, லங்கா கார்டியனில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஓரிரவு அவரை பொரளையில் சந்தித்தேன். மருதானை வரையில் என்னுடன் உரையாடியபடியே ஆமர் வீதி வரை மட்டக்குளிய பஸ்ஸில் வந்தார். அதனையும் மறக்க முடியாது.
அதன் பின்னர் கனடா வந்திருந்தபோதும் சந்தித்தேன். அவரை அடிக்கடி சந்திக்காதிருந்தாலும் அவருடன் தொடர்ந்து இணையத்தொழில் நுட்பம் மூலம் தொடர்பில் இருந்து வருகின்றேன்.
இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான 'நீலம்' கவிதையைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
எனக்கும்'கிரி'க்குமான நட்பை இன்று நினைத்தாலும்; "இது எப்படி சாத்தியமானது?" என்று இன்றும் நான் வியந்தும்,மகிழ்ந்தும் போகின்றேன்! முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன். முதலாம் வகுப்பு.முதலாம் நாள்.அம்மாகூட்டிப்போகிறா.அழுகை, அழுகையாக வருது.பயமா இருக்கு. இதனால் அம்மாவின்கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக்கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்கவேணும்.அதுதான் அழுகை.யாரோடோ இருக்கவேணும்.அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்"என்று ஒருவன் இடம் தந்தான்.அவன் என் மனதில் இடமானான். அவன்தான் என் உயிர் நண்பன் 'ஜோர்ஜ்'.
"குட்டி"என்று செல்லமாய் அழைக்கும் இவனுக்கு'கிரி'சொந்த மச்சான்.குட்டியால் கிரி அறிமுகமானார்.நண்பர்கள் கூட்டமாய் கே.கே.எஸ் வீதியிலுள்ள பன்றிக்கொட்டுப்பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் 'ஆச்சி' வீட்டின் முன்வாசலில் கூடி நிற்போம்.குட்டிக்கு அப்பம்மா.கிரிக்கு அம்மம்மாவான ஆச்சி வீடு. எப்போதுமே ஆரவாரம் நிறைந்த,எம்மைக்கலகலவென காக்கைக்கூட்டங்களாய் ஒன்றுசேர்ந்து மனச்சோர்வின்றி எண்ணக்கிடக்கைகளால் சிறகடித்துப்பறக்க வாழ்வுதந்தது
1.சின்னக்கா , அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது . அக்காவிற்கு அந்த மித்திரனின் மீது அபார நம்பிக்கை . காரணம் அவன் அவருக்குப் பிடித்த லகஷ்மி ஆசிரியையின் புத்திரன் . அந்த கிராமத்தில் , ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது . சரஸ்வதியின் (கல்வி) முகம் . பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டு " சாப்பிட்டாயா? "என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள ...மாணவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு . மாணவரின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வேறு கூறுவார் . அங்கே , வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள் .... இடித்தல் முதலான வேலைகள் ,பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள் . விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில் சிறிதளவு நெல்... கொடுக்கிறதும் இடம் பெறுகிறது . கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள் . காந்தி வழி . அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள் . இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும் கூட ...மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை தகர்த்து விடுமா ?
அவனுடைய இயக்கம் தாமரையில் குருநாதி சேர்ந்த போது அவன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருந்தார் . ‘ஆசிரிய மரியாதையை இயக்கத்திற்கு பயன்படுத்துறேன் என்ற உறுத்தல் அவனுக்கும் இருக்கவே செய்தது . அவன் சேர்ந்த போதிருந்த பொறுப்பாளர் ரஞ்சன் அவர் பகுதியைச் சேர்ந்தவர் . அவருடைய வட்டத் தோழர்கள் பாண்டி , அன்டன் , கேதீஸ்...,,அவன் .அதிலே கேதீஸ் குருநாதிக்கு அண்ணன் முறை . அண்ணனுக்குப் பின்னால் எப்பவும் அவர்களுடனேயே இழுபட்டுக் கொண்டிருந்தான்.இயக்கத்திலிருந்தாலும் அன்றாடம் காய்ச்சிகள் . அவனை விட ரஞ்சன் உட்பட மற்றவர்களும் நகரவேலைக்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் .
- பேராசிரியர் எம். ஏ. நுஃமானுக்கு 2024இல் வயது 80. அதன் நிமித்தம் எழுதப்பட்ட ஈழக்கவியின் சிறப்புக் கட்டுரை -நுஃமான் என்ற பெயர் நான் ஏழாம் எட்டாம் வகுப்புகளில் கற்கின்ற காலத்தில் எனக்குள் பதியமாயிற்று. எழுபதுகளின் நடுப்பகுதியில் என்னிரு சகோதரிகளும் கொழும்பு, யாழ் பல்கலைக்கழ கங்களில் பயின்றுக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக விடுமுறையின் போது அவர்கள் வீட்டுக்கு வந்தால் பல்கலைக்கழக சங்கதிகள் பற்றி கதைப்பார்கள். குறிப்பாக குசினியில் வேலை செய்கின்ற பொழுது இலக்கியம் (கவிதை, நாவல்), சினிமா, அரசியல் என்று இன்னோரன்ன விடங்கள் பற்றி விமர்சனப்பூர்வமாக விவாதிப்பார்கள். நான் “ஒரு கண்விடுக்காத ஒரு பூனைக்குட்டியாய்” (நுஃமான் கவி வரி) ஓர் ஓரமாக நின்று இவற்றினை கேட்டுக்கொண்டிருப்பேன். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருந்த என் இளைய சகோதரி (மும்தாஜ் பேகம்) ‘நுஃமான்’ என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதனை அவதானித்திருக்கிறேன். அவரது தமிழ் கற்பிக்கும் நுட்பம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் அவர் தமிழ்பெயர்த்த பலஸ்தீன கவிதைகள் பற்றியும் சிலாகித்து பேசக்கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நுஃமான் என்ற பெயரையும் அவரது புலமைத்துவத்தையும் அறியமுடிந்தது. அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு தவிர்க்க இயலாமையுடன் நுஃமான் அவர்களது எழுத்துக்களை வாசித்துவருகின்றேன். அவரது பிரதிகளை படிப்பது, அவை பற்றி எழுதுவது, அவற்றினை அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்வது என் விருப்புக்குரியதாயிற்று. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் தமிழ் கற்கின்ற மாணாக்கருக்கு (உயர்தரம், பட்டப் படிப்பு) பேராசிரியர் நுஃமான் அவர்களது “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்ற நூலை வாங்க வைத்திருக்கிறேன். நுஃமான் அவர்களது எழுத்துக்களை தொடர்ச்சியாக படிக்கையில் அவை எனக்குள் ஒரு இசமாக/ இயமாக பரிமாணமடைந்து, நுஃமானிசமாக பரிணமித்துநிற்கின்றது. ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) என்ற நேர்காணல் தொகுப்பில் ‘நுஃமானிசத்தை’ அவரது வாக்குமூலமாக நோக்க முடிகின்றது.
ism என்ற ஆங்கிலப் பதம் இயல் அல்லது வாதம் என தமிழ் பெயர்க்கப்படுகிறது. இசம் படைப்பின் மூன்று அம்சங்களான காலம், வெளி, பாத்திரங்கள் (மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டோடிலின் (Aristotle; 384-322 BC) கவிதையியல் (Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது) என்பன ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசுகின்றது. மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் இசங்கள் வேறுபடுகின்றன. உலகெங்கிலும் படைப்புரீதியாகவும் படைப்பு சார்ந்த சித்தாந்தங்கள் ரீதியாகவும் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. மார்க்சிசம், யதார்த்தம், சோஷலிஸ யதார்த்தம், மிகை யதார்த்தம், மாயாஜால யதார்த்தம், இருத்தலியம், ஃபிராய்டியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்’று பலவித கருத்தாக்கங்கள்/ இசங்கள் இலக்கிய உலகைப் பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாக்கியப்படி இருக்கின்றன. இலக்கிய ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படக்கூடிய எல்லா மொழிகளிலும் இந்த மாற்றங்களை உணர்த்தும் பதிவுகள் இருக்கின்றன. தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ்ப் படைப்புலகம் வெளிக்காற்றை சுவாசிக்கவோ மாற்றங்களுக்கு உள்ளாகவோ இல்லை என்று சொல்லிவிட முடியாது என்கிறார் அரவிந்தன். மேலும் அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது. ஆனால் பாதிப்புகள், மாற்றங்கள் எல்லாமே ஒரு சிறிய வட்டத்திற்குள் அல்லது சில சிறிய வட்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது. இந்த வட்டத்தை (அல்லது வட்டங்களை) சேர்ந்தவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பதும் விவாதிப்பதும் (சில சமயம் இந்த விவாதங்கள் சண்டைகளாக மாறுவதும்) படைப்புகளில் இவை ஏற்படுத்தும் தாக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளைச் சென்று அடையவேயில்லை. பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) கொள்கை கவிதை கூறுவது போலத்தான் இருக்கிறது தமிழ்ச் சூழல்.
கீரிமலையிலிருந்து ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒன்றென புறப்பட்டஇ.போ.ச769 லைனில ஒன்று இப்ப யாழ்ப்பாணத்தில தரித்து நிற்குது.அது இனி வெளிக்கிட்டால் சாவகச்சேரி வந்து கொடிகாமம் போகும். பிரிட்டிஷ்காரன் கொடுத்த டபிள் டெக்கர் பஸ். தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் வாழ்ந்து அகிம்சைவழி அரசியல் சூடு பிடித்துப்போய் காற்றின் குளிர்மையில கனவுகள் பூத்த காலமது..
பஸ் வெளிக்கிடுது. மேல்தட்டில இடம் பிடிச்சாச்சு.ஒரு மூலையில யன்னல்பக்கமா இருந்தா வடிவா ஊர் மனைகளையும், மரங்களையும், வடிவான நாச்சார் வீடுகளையும் ரசிச்சுக்கொண்டு போகலாம்.அங்கே இருந்தா அந்த முக்கால் மணித்தியாலத்துக்கு மனச்சிக்கல் எல்லாம் மறந்துபோகும்.ஓடிற பஸ்ஸின்ர வேகத்தில புழுதி கிளம்பி போறவாற சனங்கள் நிண்டு கண்களைப் பிசுக்குவது தெரியுது. மண்ணும் சேர்ந்து கிளம்ப காத்தில பாவாடை பறந்திடுமோ என்ற பயத்தில சட்டென இறுக்கிப்பிடிக்கும் பெண்கள். குடும்பமே கதியென அடுப்பின் வெக்கைக்குள் சிறை கொண்ட தாய்க்குலம் சுதந்திரக் காற்றை அணுகி கொடிகளில தோய்த்த உடுப்பைக் காயப்போட்டுக் கொண்டு அண்ணாந்து பஸ்ஸைத்தான் அவர்களின் கண்கள் ஆவலாய் மேயுது. எனக்கு இவையெல்லாம் வேடிக்கை.இடையில யாராவது இறங்கவேண்டுமென்றால் பெல்லை அடிக்க வேணும். அந்தச்சத்தம் மட்டும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்று என்ர காதுக்குள்ள கத்தும். கண்ணை மூடி அயந்துபோனாலும் அந்த ஊர் தன் பெயரை பலாப்பழ, மாம்பழ வாசத்திலேயே தட்டி எழுப்பிப்போடும் .
அமைச்சர் விஜித ஹேரத்
அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் வடகிழக்கில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மையமாக வைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர் ஆகியோர் மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடினர். அநுரவின் அரசு தமிழர் சார்பான அரசு என்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை எழுப்புவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதற்குக் கடும் முயற்சியெடுத்தனர். இதனை அநுர அரசு முளையிலேயே கிள்ளி எறிந்தது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனேயே இனவாத அரசியல்வாதிகளை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்தார். இவ்விதம் இனவாதத்தைத் தூண்டியவர்களை இனவாதிகள் என்றார். நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறும் நினைவு கூரல்களைச் செய்யும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத் தடுக்க முடியாது. சட்டங்களை மீறுபவர்களைக் காவல்துறை கையாளும் என்று அவர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இனவாத அரசியல்வாதிகளின் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டது.
- எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி வெளியாகும் அவரது சிறுகதை எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் முக்கியமான நாவலாக நாம் கருதுவது 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்' நாவலையே. வீரகேசரி பிரசுர நாவலாக வெளியான நாவல். வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜானகி என்னும் பெண் போராளி பற்றிய நாவல். நாவலை வாசிக்க
உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுக்காப் பெத்துப்போட்டாவாக்கும் அதுதான் ‘வெப்பியா’ரத்தில பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே ‘அஞ்சு பிள்ளையளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’னென்டு இன்னும் மொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில் எப்படியிருக்கும்.
‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
இவள்பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.
‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’
கள்ளி, மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.
‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’
‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’
‘அக்காள், வாய் புளிக்குது, உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’
ஒவியம் AI
கூதல் விறைத்த காலமது.மழை விடாது பெய்துகொண்டிருந்த பகலது .பள்ளிகள், கல்லூரிகளென மெல்ல மெல்ல நிரம்பிய வெள்ளம் ஓடிவந்து வகுப்புகளுக்குள் புகுந்து கால்களால் குளிரேறி உடம்புகளை நடுங்க வைத்துக் கொண்டிருந்த பொழுதது. 'வெய்யோன்' கண்களை மூடியபடி கார்மேகத்துடன் கட்டுண்டு கிடந்த மார்கழித் திங்களது. எம்மண்ணும்,மக்களும் உசாரின்றி போர்வைக்குள் முடங்கிக்கிடந்த மழைக்காலமது. எது எதுவாகினும் குளிர்காற்று வந்து அரசமரத்தையும், ஆலமரத்தையும் ஆரத்தழுவி,கடைசியில் எம்மையும் முத்தமிட்டுச்சென்ற பரவச விடியலது. இந்தப்பரவசத்தில்தான் நாம் பல பிரச்சனைகளையும் கடந்து பள்ளி, கல்லூரியென வெள்ளத்தைக்கிழித்துக்கொண்டே சைக்கிள் ஓடிப்படிக்கச்சென்றோம்.
பஸ்ஸில் வந்தவர்கள் நனைந்து, நடுங்கி விறைத்து வகுப்பிற்குள் நுழைந்ததையும் மறக்க முடியுமா? சில வகுப்பறைகள் நித்தம் நிறையாமல் போனதும் இந்த மார்கழியில் தான். காற்சட்டையும்,சேட்டுமாய் வெறுங்கால்களுடன் மழைவெள்ளக்காடுகளைக்கடந்து கல்லூரிகளில் கால்வைத்தவைத்தவர்களுக்கு அந்த அனுபவம் புரியும். காலையில் தோய்ந்து,தோய்ந்து பால்காரர்கள்கூட தமது உழைப்பை கஷ்டப்பட்டு கண்ணியமாக ஒப்பேற்றிக்கடந்து சென்றதையும் எம்மால் மறக்கமுடியாது.
பாடசாலைகளின் ஓட்டைக் கூரைகளிலிருந்து ஒழுக்குகள் வகுப்புகளுக்குள் விழ மேசைகள் வாங்குகளை அரக்கிவிட்டு பாடங்களைத்தொடங்கியதையும் எம்மால் மறக்கமுடியாது.