ஆய்வு: சங்க இலக்கியத்தில் கழுதை ஓா் பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
முன்னுரை
கழுதை என்று ஒருவரைக் கோபத்தோடு திட்டும் போது அது வசவு வார்த்தையாகவே பயன்படுகின்றது. என்பது உண்மைதான் நாம் தேவையில்லாமல் கழுதையின் பெயரைக் கெடுக்கிறோம். கழுதை நமக்கு எவ்வாறு பயன்படுகிறது. அது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கிய வரை எவ்வாறு உழைத்து நமக்கு பயனுள்ள விலங்காக உள்ளத்தைப் பற்றியும், கழுதையின் வாழ்விடம், உணவு, விவசாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கிறது.
கழுதை வாழ்விடம்
ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ வீதம் இடம் தேவைப்படும் கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியமாகயிருக்கிறது. கழுதைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ளன. கழுதைகள் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டிருக்கவில்லை. மனிதா்கள் கொண்டு வந்த எந்த இடத்திலும் அவற்றைக் காணலாம்.
கழுதை உணவு
ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும், இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும். இதன் உடல் எடையில் 1.5 சதவிகீதம் அளவில் உலா் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும் . மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு வைக்கோல் மட்டும் தரப்படுகிறது.
நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும், கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும் மேய்ச்சலக்குச் செல்லாத கழுதையின் உணவில் 75சதவிகீதம் பசும்புல்லும், 25சதவீதம் உலா் தீவனம் கொடுக்கப்படுகிறது.