- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும்  மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.

திராவிட மொழியும் தமிழும்

 திராவிட மொழி பல்வேறு குழுக்களாக அமைந்த அமைப்பாகும். அதில் பல்வேறு மொழிகள் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறமைந்த மொழிகளை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாகப் பகுத்துக் கூறுவர். இவற்றில் தென்திராவிட மொழியின் வரிசையில் முதன்மையாகவும், முக்கிய இடம் உள்ளதாகவும் குறிப்பிடுவது தமிழ்மொழியே ஆகும்.

திராவிட மொழிகள்

தென் திராவிட மொழிகள் 

1. தமிழ்    2. மலையாளம்  3. கன்னடம் 4. குடகு  5. துளு    6. தோடா   7. கோத்தா 

நடுத்திராவிட    மொழிகள்   

1. தெலுங்கு   2. கோண்டி     3. கூயி    4. கூவி 5. கோலாகு  6. பர்ஜி

வடத்திராவிட    மொழிகள்

1. குருக் 2. மால்தோ பிராகூய்


இங்கே தமிழைக் குறிப்பதற்காக இவ்அட்டவணை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓரெழுத்துதொருமொழி

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு காரணமாக ஓரெழுத்தொருமொழியை கூற முடியும். காரணம், ஓரெழுத்தொருமொழி தனித்து நின்று செயல்படும்  ஆற்றல் உடையது. அவ்வாறாக தொல்காப்பியர் மொழியை எழுத்து அடிப்படையில் பிரிந்துக் காட்டும் போது, ஓரெழுத்தொரு மொழியை கூறும் போது,

 “நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி”  (நூற் - 43)

என்று குறிப்பிடுகின்றனர். இவை முறையே 43,44,45 நூற்பாவை தொடர்ந்து கூறியுள்ளார். இவற்றில் ஓரெழுத்தொருமொழியாக எத்தனை சொற்கள் வரும் என்று கூறாமல் எத்தனை எழுத்துக்கள் வருமென்றே கூறியுள்ளார்.

நன்னூலார் குறிப்பிடும் போது உயிர், உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய 42 எழுத்துக்கள் ஓரெழுத்தொரு மொழி என்று கூறுகிறார். இவ்வோரெழுத்தொரு மொழியை சிற்ப்புடைய மற்றும் சிற்ப்பில்லாத ஓரெழுத்தொரு மொழியென பிரித்துக் காட்டி குறிப்பிடுகிறார்.

சிறப்புடைய ஓரெழுத்தொருமொழி 42 என்றும், சிறப்பில்லாத ஓரெழுத்தொருமொழி 3 எனவும் குறிப்பிடுகின்றார்.

இலக்கியத்தில் ஓரெழுத்தொருமொழி

உயிர் மற்றும் உயிர்மெய் இவற்றினுள் தோன்றும் 42 எழுத்துக்களுள் பல்வேறு எழுத்துக்களை இலக்கியத்தில் பயன்படுத்தப்படவில்லை. பெரும்பாலான எழுத்துக்கள் சங்க இலக்கியத்தில் செய்யுள் வழக்கொடு நின்று விடுகின்றன. சில எழுத்துக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன.

சீ, தூ, நீ, பூ, கை, வை முதலான ஓரெழுத்தொரு மொழிகள் செய்யுளில் பயன்படுத்தியதை விட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியத்தில் ஓரெழுத்தொருமொழி வளர்ச்சி இருந்ததற்கான அடிப்படையாக, எட்டுத்தொகை அகப்பாடலொன்றில்,

“மை எழில் உண்கண் கலுழி
 ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே”   (ஐங்.81)

இப்பாடலில் ‘மை’ ‘ஐ’ என்னும் ஓரெழுத்தொருமொழியானது அஞ்சனம், தலைவன் என்ற பொருளில் வந்துள்ளது.

புறப்பாடலிலும் இதே போல,

“பிறை நுதலான் செறல் நோக்கின
 பா அடியான் பனை எடுத்தின”
   (புறநானூறு. 22)

இப்பாடலில் ‘பா’ எனும் ஓரெழுத்தொரு மொழி ‘பரந்த’ என்னும் பொருளில் வந்துள்ளது.

இவ்வாறாக சங்க இலக்கியத்தில் காட்டப்படும் அகம் மற்றும் புறப்பாடல்களில் ஓரெழுத்தொரு மொழியின் வளர்;ச்சி அதிகமாக இருந்ததற்கான சான்றாக அமைகிறது.

மொழி வளர்ச்சியின் ஓரெழுத்தொரு மொழி பயன்

மொழி வளர்ச்சிக்கு ஓரெழுத்தொரு மொழி முக்கிய பங்கு உண்டு. காரணம், செம்மொழிக்கு பல அடிப்படைகள் உண்டு. அவற்றில் ஒன்று, தனித்து நின்று பொருள் தருவதும் சொல்வளம் அவ்வகையில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

தற்கால சூழலில் ஓரெழுத்தொரு மொழி மாற்றம் பெற்று வளர்ச்சி பெற்று நிற்கிறது. அதற்கான காரணம், பிறமொழிக் கலப்பு, காலச்சூழல், உச்சரிப்பு முறையே ஆகும்.

 தமிழ்மொழியில் ஆறாம் எழுத்தான உயிர், ‘ஊ’ என்பது ‘இறைச்சி’ எனும் பொருளில் வரும். இக்காலத்தில் இசையின் ஒலக்குறிப்பாக பயன்படுகிறது. அதேபோல ‘ஏ’ எனும் எட்டாம் உயிர் ‘அம்பு’ என்னும் பொருளில் வரும் ஆனால் தற்காலத்தில் ஏவல் பொருளிலும், அதட்டல் பொருளில் பயன்படுகிறது.

(எ.கா) ஏ! இங்கே வா

ஓரெழுத்தொரு மொழி தற்கால வளர்ச்சி

காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதில் தமிழ்மொழி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. காரணம், பிறமொழி சொற்களுக்கேற்ப தமிழ் மொழியும் மாற்றம் பெறுகிறது. தமிழில் பெரும்பாலும் தெலுங்கு, ஆங்கிலம் போன்றவை காணப்படுகிறது.

சங்க காலத்தில் பயன்படுத்திய எல்லா சொற்களும், தற்போது பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் ஓரெழுத்தொரு மொழி காலத்திற்கு தகுந்தவாறு மாற்றம் பெற்று வருகிறது.

‘ஆ’ என்னும் ஓரெழுத்தொரு மொழி ‘பசு’ என்னும் பொருளில் வந்துள்ளது. ஆனால் தற்கால வளர்ச்சியில் ‘ஆ’ என்னும் எழுத்து வியப்பு, அச்சம், உணர்ச்சி போன்ற பொருளில் விடுவது மொழி வளர்ச்சி நிலையை காட்டுகிறது.

முடிவுரை

மொழியானது பல்வேறு காலக்கட்டத்திற்கேற்ப மாறி வருகிறது. இம்மாற்றமே மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது. எனவே ஓரெழுத்தொரு மொழி திராவிட மொழிகளில் முதன்மையான தமிழுக்கு சிறந்த ஆதாரமாக அமைகின்றது. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் கூறப்பட்;டதைப் போலவே தற்காலத்தில் பல்வேறு தளங்களில் பல்வேறு பொருள் அமையப் போடு ஓரெழுத்தொரு மொழி தமிழ் மொழியை மேலும் சரியான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R