'காலமே காலமே
நீ எப்படி இயங்குகின்றாய்?'
'நான் நானகவே
இருக்கின்றேன்.
யாருக்கும் பாரபட்சம்
பார்ப்பதில்லையே…! – அதனால்
எல்லோருக்கும்
என்னைப் பிடிக்கும்.'
'ஏன் எல்லோருக்கும்
உன்னைப் பிடிக்கும்?'
'அனைவருக்கும்
சமமான நேரத்தைதான்
கொடுக்கின்றேன்.
அன்போடு நடத்துகின்றேன்.
எல்லோருடைய வாழ்விலும்
யான் இன்றியமையாத
பங்களிப்பாக இருக்கின்றேன்.
இருக்கும் போது - என்னை
பயன்படுத்திக்கொள்கிறார்கள். – ஆனால்
நான் சென்ற பிறகு
வருத்தப்படுகின்றார்கள்.
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறாக வருவதில்லை
ஒரே மாதிரியாகவே
வருகின்றேன்.
என்பாதை
நேர்க்கோட்டுப்பாதை
அப்பாதை
வழியாகவே செல்கின்றேன்.
பின்நோக்கிய
பாதையே கிடையாது - அதனால்
என்னை பயன்படுத்துவது
உன்டைய சாமர்த்தியமே.'
'மனிதா மனிதா
ஏன் தனிமையில்
இருக்கின்றாய்' – என்று
காலம் கேட்டது.
அதற்கு அந்த மனிதன்
'எல்லாம் என் நேரம்.
என் நேரமே சரியில்லையே.'
'நான் தான் உன் கூடவே
இருக்கின்றேனே…!
அப்புறம் எப்படி – உனக்கு
நேரம் சரியில்லை - என்று
சொல்கிறாய். ஏன் சொல்கிறாய்?'
'காலை நேரத்துல
டி.வி பாரத்துக்கொண்டிருந்தேன்
நேரம் நல்ல நேரம்
நிகழ்ச்சியில்
என் இராசிக்கான நேரம்
சரியில்லை - என்று சொன்னாங்க
அதான் தனியே
புலம்பிக்கொண்டே இருக்கேன்.'
முட்டாள் மனிதனே
இதை எல்லாமா - நம்பி
தனிமையில்
சோகத்தோட இருக்கிறாய்.
அதெல்லாம்
மக்களை நம்ப வைத்து
அவர்களின் மனநிலையில்
மாற்றத்தை உருவாக்கி
அடிமைப்படுத்தும்
செயலாகும் – அதை எல்லாம்
நீங்களே வகுத்தது தானே.
நான் வகுக்கவில்லையே.
நான் எப்பொழுதும்
ஒரே மாதிரிதான் வருகின்றேன்.
நீங்களே
என்னை பாகுபடுத்திக்
கூறுபோடுகின்றீர்களே…!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* ஓவியம் - AI