கனேடிய இலங்கை மன்றம்: 'இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜூலைக் கலவரமும் , வெலிக்கடைச் சிறைப் படுகொலையும்' (நந்தன வீரரத்னவின் புலனாய்வு நூலைத் தழுவிய அரசியல்)! - தகவல்: கோணேஸ் -


ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன.
கந்தர்மடம் அ. அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை' கவிதைத் தொகுப்பில் அவ்வாறான அதீத நயம் கொண்ட கவிதைகள் பலவுள்ளன. ஒவ்வொரு கவிதைத் தலைப்புமே சில கதைகளையும் களங்களையும் தன்னுள்ளே கொண்டு உயிரோட்டமாக நகர்கிறது.
புறப்பொருளும் அகப்பொருளுமாக இவர் தொட்டுச் செல்லும் கவிவரிகள் எல்லைகளால் விரிந்தவை . சொல்லழகால் மட்டுமல்ல பொருள் அழகாலும் மனதினில் நிறைந்தவை.
கருகிய கனவுகளின் பின்னே, துளிர்விடும் எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்வினை நோக்கிக், கனவு காணும் கவிஞனின் சோகநெஞ்சினை நிதர்சனமாகக் கவிதைகளில் கொண்டு வருகிறார். பொழிவதற்குத் தயாரான நிறை மழைமேகத்தினை ஒத்ததோர் கனதி கவிதைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது.
அவசியமான இடங்களில் கிண்டலும் கேலியும் மறைபொருளும் மிகுந்த கவிநடை பெரும் உவப்பிற்குரியது. பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் தனிமனித உரிமைகள் எல்லாம் கேள்விக் குறியானதொரு நாட்டில், 'சொன்னாலும் குற்றமடா சொல்லவிட்டால் துக்கமடா...' என இயன்றளவில் உண்மைகளை வெளிப்படுத்திய எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. எனினும் குறிப்பாலுணர்த்திய சில கவிதைகளின் ஆக்ரோஷமே மனதில் நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.
சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண் (ரொட்டி) சாப்பிடுவது இழிவாகக் கருதப்பட்டது. அரிசி வாங்கப் பணமில்லாதவர்கள்தான் பாண் சாப்பிடுவார்கள் என்ற கருத்து எங்கள் தீவுப் பகுதி மக்களிடையே பரவியிருந்தது. அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு தவறு என்று இன்று விவாதிக்க முடியாது.
இதை இக்காலத் தமிழ் அரசியலுடன் ஒப்பிடலாம். சிலர் எமது அரசியலை “யாழ்ப்பாண மையவாதம்” என்று சொல்வதைப் போல, இதனை “தீவுப் பகுதி மையவாதம்” எனக் கொள்ளலாம்.
இந்த அரிசியியலில் பழகிப்போன எனக்கு அரிசிச் சோற்றை விட முடியாமல் போனது வியப்பில்லை. இரவில் ஒரு கோப்பை நிரம்பச் சோறு உண்ணுவதைப் பார்த்து, பலமுறை எனது மகள்,
“Dad, this is too much!” என்று எச்சரிப்பாள்.
எனக்கு அரிசிச் சோற்றை இன்னும் இலகுவாகச் சாப்பிடுவதற்கு ஒரு Single Malt Whisky கூட துணைபுரியும்.
பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார்.


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச் சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது.
இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - 'சினிமாவுக்குப் போன நாடகக்காரர்கள்: தமிழ் சினிமாவின் தொடக்கமும் நாடகமும்'
உரை நிகழ்த்துபவர் : முனைவர் கி.பார்த்திபராஜா
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

உடலுக்குள்
ஒரு நூலகம் இருக்கிறது.
அதை
யாரும் திறக்கவில்லை.
ஆனால்
அது எப்போதும் திறந்திருக்கிறது.
அதன் புத்தகங்கள்
காகிதத்தால் ஆனவை அல்ல.
எலும்புகளால் ஆனவை.
ஒவ்வொரு எலும்பும்
ஒரு காலத்தைச் சுமக்கிறது.
ஒரு காயம்.
ஒரு சிரிப்பு.
ஒரு பெயர்.
ஒரு மறதி.
நான்
என் கைகளைப் பார்க்கிறேன்.
அவை
பக்கங்களைப் போலத் தோன்றுகின்றன.
படிக்க முடியாத எழுத்துகளுடன்.
ஆனால்
உணரக்கூடிய அர்த்தத்துடன்.

1925இல் மாக்சிம் கார்க்கியின் The Artamonov Business (மூன்று தலைமுறைகள்) நாவலானது ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை யோட்டத்தை சித்தரிக்கும் படைப்பாக இருந்தாலும், The Artamonov Business என்பது ஒரு சராசரி குடும்ப வரலாற்றுத் தாங்கிநிற்கும் நாவல் என்பதைத் தாண்டி ரஷ்யாவில் 1860களில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து 1917 புரட்சி வரையிலான பின்னனியில் ரஷ்ய சமூகத்தவரின் சமூக, பொருளாதார மற்றும் பழக்க வழக்க மாற்றங்களின் வரலாற்றைப் பிரதிபளிப்பதாக அமைந்துள்ளது. இம்மாற்றங்களின் ஆழமான வரலாற்று, சமூகவியல் ஆய்வு என்றே கூறலாம். குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் நடத்தைகளைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் உருவாக்கம், அதன் உள்ளார்ந்த முரண்பாடுகள், மற்றும் இறுதிச் சிதைவு என்பவற்றை இலக்கிய வடிவில் பிரதிபலிக்கிறார்.
நாவலின் முதல் தலைமுறைத் தலைவர் ஆர்டமோனோவ் குடும்பத்தின் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம் மற்றும் வீழ்ச்சியின் படிமுறைகள் சமூக அமைப்புகளின் சுழற்சியையும், அவை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் கடப்பாடுகளையும் கார்க்கி நுண்ணியமாக வெளிப்படுத்துகிறார். முதல்தலைமுறை ஆர்டமோனோவ் தன் முயற்சியையும் உழைப்பையும் நம்பி தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கின்றார். புதிய உலகின் உருசக்தியாக பொருளாதார உருவாக்கத்தில் அவர் உச்சமுன்னோடியாக விளங்குகிறார். இதனால் Ilya Artamonov விடுதலை வென்ற விவசாயியிலிருந்து தொழிலதிபராக மாறிய “ஆரம்ப முதலாளித்துவ மனிதன்” என்பதன் குறியீடாக நிற்கிறார். அவரது முயற்சி ஆற்றல், உழைப்பு மற்றும் தொழில் முனைவுத் தந்திரோபாயத் திறன் ஒரு புதிய பொருளாதார வர்க்கசக்தியை உருவாக்கினாலும், தொழிற்சாலையின் வளர்ச்சிநிலைகள் வெறும் பொருளாதார உச்சத்தில் மட்டும் தாக்கஞ் செலுத்தவில்லை. அவர் உருவாக்கிய தொழிற்சாலை வர்க்க முரண்பாடுகளையும் சமூகப் பிரிவினைகளையும்; விதைக்கிறது. மனித உணர்வுகளின் உறவுகளையும் வாழ்க்கைச் செல்வாக்கு மதிப்புகளையும் மெதுமெதுவாக மாற்றத் தொடங்கியது. தொழிற்சாலையின் அதி விரிவாக்கம், சொந்த குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து, பின் உறவு;களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளே அவ்வுறவுகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக உருபெற்றது.

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -

தமிழ்நாட்டின் சிறந்த கலைஞன் பாரதிராஜா செத்த அதே நாளில் உலகின் மாபெரும் மானுடநேயவாதியும் அறிஞருமுமான ஜீன் சிக்கலரும் (Prof.Dr. Jean Ziegler) காலமானார் .
பல தசாப்தங்களாக அநீதிக்கு எதிராகப் போராடிய சுவிச்சர்லாந்து நாட்டின் முதுபெரும் சமூகவியலாளரும் , அரசியல்வாதியும் , புனைவல்லாத எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜீன் சீக்லர் ( Jean Ziegler) தனது 92வது வயதில் காலமானார். சிமோன் டி பூவா , ஜீன் போல் சார்த்தார் , சே குவேரா உள்ளிட்ட பலருடன் நட்பாக இருந்த சீக்லர், சுவிட்சர்லாந்தையும் விமர்சித்தார்; உலகையும் விமர்சித்தார் .
ஜீன் சீக்லர், 1934’ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பெர்னுக்கு(Bern) அருகிலுள்ள தூன் (Thun ) என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் ஆரம்பத்தில் சுவிஸ்சர்லாந்தின் தேசிய மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் கூடவே , ஜெனீவா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் இருந்தார். அவர் பெர்ன்(Bern) கிரெனோபிலும் பாரிஸ் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தார்.சிறந்த சிந்தனையாளர் !
மனித குலத்தின் மனச்சாட்சி மௌனமானது! ஜீன் சீக்லருக்கு வீரவணக்கம் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். உலகின் பசியால் வாடும் மக்களின் குரலாகவும், சுரண்டலுக்கு எதிரான மனித மனச்சாட்சியாகவும் விளங்கிய ஜீன் சீக்லர் தனது 92’ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுடன் உலகம் ஒரு தலைசிறந்த சிந்தனையாளரையும், முதலாளித்துவத்தின் கொடுமைகளை அஞ்சாமல் அம்பலப்படுத்திய போராளியையும் இழந்துள்ளது.

கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.
சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங்களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

* கட்டுரையாளர் - -முனைவர் செல்லத்துரை சுதர்சன், (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) -
இந்திய மெய்யியலின் ஆன்மிக மனத்தை, தமிழுக்கேயான உலகநிலைப்பட்ட நவீன சிந்தனை மரபொன்றைக் கட்டமைப்பதற்குத் தளமாக்கி, சிந்தித்தும் எழுதியும் செயலாற்றியும் வினை புரிந்தவன், பாரதி. பண்டைய வேத, உபநிஷத ஞான மரபினூடும் வேதாந்த மரபினூடும், பல்வகை மதநெறிகளின் உட்கிடையான முழுமுதல் பற்றிய அறிவினூடும், தமிழ் நிலத்தின் சித்தர் தத்துவத்தினூடும் அவன் பெற்றிருந்ததும், காலத்தேவையுணர்ந்து புதுமை செய்ததும், அதனைத் தனது பாணியில் முன்வைத்ததுமான கருத்துநிலையை, 'பாரதீயம்' என இக்கட்டுரை கருதுகிறது. தமிழ் நவீனம் என்பதைத் தனியே மொழி, இலக்கிய நவீனமாக அணுகாது, தனது காலத்திருந்த, ஒட்டுமொத்த இந்திய மெய்யியல் சாரத்தினூடு அணுகிய, பாரதியின் தனித்த சிந்தனையின் தேட்டமே, 'பாரதீயம்'. இது, பாரதி நவீன காலத்தில், தமிழுக்கு வழங்கிய தத்துவார்த்தக் கொடை. பாரதீயத்தில் வேத, உபநிஷத் வழிவந்த வேதாந்தமாகிய பகவத்கீதை குறித்த உரையாடல்களே முதன்மையானவை. அவ்வகையில், 'பாரதி பார்வையில் பகவத்கீதை' எனும் பொருளிலான இந்த அறிமுகக் கட்டுரை, கீதையின் தோற்றம், பிரதான அடிப்படைகள் எவ்வாறமைந்தன, சத்திரியர்களின் மேலெழுகையை எதிர்கொண்டு தாக்கியதில் கீதையின் வகிபாகம் எவ்வாறமைந்தது, இந்திய விடுதலை இயக்க காலத்தில் அதன் வரலாற்றுப் பாத்திரம் எவ்வகையில் முதன்மை மிக்கது, தத்துவத்தின் வரலாற்றோட்டத்தில் கீதை மீதான எதிர்க் கருத்தியலை பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், கீதை பற்றிய பாரதியின் நோக்குநிலை எவ்வாறமைந்தது, கீதையூடு அவன் அவாவிய புரட்சி எத்தகையது போன்ற வினாக்களை இக்கட்டுரை அலச முன்னிறுத்துகிறது.
இந்தியத் தத்துவ மரபின் சிகரமான பகவத்கீதை, பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகவும், அகத்தூய்மை, செயலூக்கம், பொதுநலன் ஆகியவற்றைப் பேசுவதாகவும், வேதமரபு சார்ந்த சமூகக் கட்டமைப்புத் தளத்தில் உருவான சிந்தனையாகவும் கருதப்படுவது. 'கீதையை உள்ளடக்கியமைந்த மஹாபாரத இதிகாசம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.4ஆம் நூற்றாண்டு வரையான பல நூறாண்டுகளில் உருவாகியது' என்பார், நா.சுப்பிரமணியன். ஆகையால், இக்காலப் பகுதியிலேயே கீதை உருப்பெற்றதாகக் கருதமுடிகிறது. உபநிஷத்தாகவும், பிரம்ம வித்தையாகவும், யோக சாஸ்திரமாகவும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜூன சம்பாஷணையாவும் கீதை திகழ்வதை அதன் ஒவ்வொரு அத்தியாய நிறைவும் அறிவிக்கிறது. 'உபநிஷத்துக்கள் யாவும் பசுக்கள்' எனவும் 'பால் கறப்பவன் கோபால நந்தனன்' எனவும் 'அருச்சுனன் பசுக்கன்று' எனவும் 'அருந்துவோர் பேரறிவாளர்' எனவும் 'அருந்தப்பெறும் கீதையாகிய அமிழ்தம் மேன்மைமிக்க பால்' எனவும் கீதையின் தியான சுலோகம் கூறுவதால் 'உபநிஷதப் பசுக்களின் பாலே கீதை' என்பது புலனாகிறது.
'தத்வமஸி' எனும் உபநிஷத மகா வாக்கியத்தின் விரிவு கீதை என்பதும், கீதையின் கருத்துக்கள் உபநிஷத்திலிருந்து வளர்ச்சி பெற்றன என்பதும், கீதையின் முழுமையான அமைப்புசார் வடிவத்துக்கு உபநிஷத்துக்களே காரணம் என்பதும், கீதையை வேதாந்தக் கருவூலம் எனக் கருதவைக்கிறது. பெரும்பாலும், யோகம் பற்றிக் கூறும் ஈசாவாஷ்ய, கடோ, முண்டக, சாந்தோக்கிய, சுவேதாஸ்வரத முதலாய பழைய உபநிஷத்துக்களே கீதையின் அடிப்படைக் கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. கீதையானது போர்த் தேரின் தட்டில் உருவாகியமைகூட, உபநிஷதக் கருத்தேற்றலின் ஓர் உருவகமே. 'உடலைத் தேராகவும் மனத்தைக் கடிவாளமாகவும் புத்தியைச் சாரதியாகவும் ஜீவனைத் தேரில் வீற்றிருப்பவனாகவும் அறி. குதிரைகள் புலன்கள். ஈடுபடும் விடயம் பாதை. எந்த மனிதன், விவேக புத்தியாகிய சாரதியால் அடக்கப்பட்ட மனமாகிய கடிவாளத்துடன் உள்ளானோ, அவன் உலகியல் வாழ்க்கைக் கடுவழியின் எல்லையை அடைவான்' என்ற கடோபநிஷத் சுலோகத்தின் வழியே தேர்த்தட்டில் கீதையின் பிறப்பு, உருவகமாகி நிலைபெற்றமை ஓர் உருவகம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்
நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்
எழுத்தாளர் க.கலாமோகன் (ஜெயந்தீசன், கே.எல்.நேசமித்திரன் புனைபெயர்கள்) புலம்பெயர்த் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமை. புலம்பெயர் தமிழ்ப் படைப்புகளில் அங்கதச் சுவை மிகுந்து வெளிவரும் படைப்புகள் மிகவும் அரிது. இந்நிலையில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் அங்கதச் சுவை மிகுந்த படைப்புகளைத் தருபவர் கலாமோகன். கலாமோகன் பிரெஞ்சு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவரது கவிதைகள் பிரெஞ்சு மொழியில் வெளியாகிக் கவனத்தைப் பெற்றிருப்பவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது 'ஜெயந்தீஸன் கதைகள்' மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'நிஷ்டை' மிகவும் கவனம் பெற்ற சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று. எக்ஸில் வெளியீடாக வெளிவந்துள்ளது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் எழுத்தாளத் தம்பதியினர் கற்சுறா & ஜெபா. தற்போது 'மற்றது' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது 'துவாரம்' சிறுகதைத்தொகுப்பு. 'மற்றது' பதிப்பகம் கற்சுறா & ஜெபா தம்பதியினருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரிய தீவு கியூபா ஆகும். அமெரிக்காவிலிருந்து செல்லும் எந்தக் கப்பலும் நேரடியாக கியூபாவிற்குச் செல்வதில்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிற்கு மிக அருகில் ஒரு சிறிய நாடாக இருப்பதே, கியூபாவுக்கு விடுதலை இல்லாத ஒரு பெரிய சாபமாக அமைந்துள்ளது.
நாங்கள் பனாமா கால்வாயைக் கடந்தவுடன் கப்பலின் முக்கிய தரிப்பிடம் போட்டோ ரிக்கோ. இது ஒரு பெரிய தீவாகவும், தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சுமார் 3.5 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். கப்பலிலிருந்து இறங்கியவுடன் எங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். இது கோட்டைகள் நிறைந்த தீவாகும். பல கோட்டைகள் அழிந்துவிட்டாலும், இன்னும் பல அழியாத கோட்டைகள் இங்கு காணப்படுகின்றன.


எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.
‘’இழப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை. ஆனால் போராடுவதற்கு ஒரு இலட்சியம் இருக்கிறது.’’எனும் சேகுவரா கூற்றுக்கு அமைய வாழ் நாள் முழுவதும் மக்களுக்காகத் தன் சிந்தனையையும் செயலையும் அர்ப்பணித்தவர் வேலு. இலண்டனில் முன்னோடி முற்போக்கு வட்டத்தின் செயற்பாடுகளில் இடப் பெறுகின்ற அரசியல் கருத்துநிலைகள், இலக்கியப் போக்குகள், நூல் குறித்த உரையாடல்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான வெளிப்பாடுகள் என்பவற்றில் வேலுவின் பங்களிப்பு காத்திரமாக இருந்ததென பௌசர் தன் பதிப்புரையில் குறிப்பிடுகின்றார். வேலு இயல்பில் மார்க்சிய லெனினிய கொள்கையாளர்; பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைத் தெளிவாக உள்வாங்கியவர்; மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்பும் இந்திய கம்யூனிஸ்ட் (மக்கள் யுத்தக் குழு) பின்புலமும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவங்களும் சிந்தனை ஆளுமையும் இவருக்கு மேலும் வலுச் சேர்த்தன.
லண்ட ன் – தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்பின் ஆரம்ப ஸ்தாபக உறுப்பினராகிய இவர், அமைப்புத் தொடர்ச்சியாக இயங்குவதற்கு சிறந்த ஆலோசகராக விளங்கி வந்துள்ளார். வடிவேலு என்பது இயற்பெயர் எனினும் தோழர் என்றால் அது வேலு தானென இலண்டன் இலக்கியச் சமூகத்தால் அன்பாக அறியப்பட்டார். ஆனாலும் இந்திய அரச வன்முறையாளர்களின் சித்திரவதைகளினாலும் கொலைகளாலும் கொல்லப்பட்ட தன் தோழர்களான எல் அப்பு, பாலன், சீராளன் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துக்களை சேர்த்துத் தன் பெயரைப் பூபாளன் என மாற்றியிருந்தார். இது அவர், தன் தோழர்களுக்குக் கொடுத்த மதிப்பாகவும் அன்பாகவும் கருதப்படுகின்றது.

இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர்.
நாடகத்தனமான வசனங்களும், 'செட்'டுகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையுலகுக்கு உயிர்த்துடிப்புடன் கூடிய கிராமத்து மண்ணை அறிமுகப்படுத்திவர் 'இயக்குநர் இமயம்' என்று அறியப்பட்ட பாரதிராஜா. அண்மைக்காலமாக அவர் பற்றி வெளியான செய்திகளின் அடிப்படையில் அவர் விரைவில் மறைவார் என்னும் எண்ணம் தோன்றியிருந்த போதும், உண்மையில் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியைத்தான் தந்தது. பேரிழப்புத்தான்.
இவரது திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை: பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மண் வாசனை . இ வை உடனே நினைத்ததும் நினைவுக்கு வந்தவை. இப்படைப்புகள் பாரதிராஜாவின் புகழைக் கலையுலகில் நிறுத்தி வைக்கும். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரையும் நாமும் பகிர்ந்து கொள்கின்றோம்.
* டிஜிட்டல் ஓவியம் - AI

ஞாபகங்களை மீட்பதென்றால்,அதேபோல இன்றும் அத்தகைய சூழ்நிலைகள் அமைதல் அவசியம்.அப்படித்தான் இன்று என் பெயர்த்திகளுடன் கூடியிருந்து,ஒரு A4 கடதாசியை எடுத்து மூத்தவளிடம் காண்பித்து "உனக்கு என்னம்மா இந்தக் கடதாசியில் ஐயா செய்து தரவேணும்?"என்று கேட்டேன்.
"ஐயா எனக்கு ஒரு பட்டம் கட்டித்தாங்கோ.பட்டம் கட்டி அதைப்பறக்க விட ஆசை ஐயா.பட்டத்துக்கு வாலும் எப்படிக்கட்டுவது,கட்டி பட்டத்தை காற்றிலே பறக்கவிடுவது எப்படி ஐயா?".
சின்னவளும் வந்து'ஐயா அக்காவுக்கு கட்டினமாதிரி எனக்கும் பட்டம் வேணும்' என்றாள்.'அப்பப்பா','அப்பம்மா' என்று அழைப்பதை விடவும்;எம்மிடமிருந்து தொலைந்துபோன பாசம் கலந்த உயிருள்ள உணர்வு கலந்த உறவுச்சொற்களான ஆச்சி,ஐயா என்று கூப்பிடுவதே எமக்கு விருப்பம்.அப்படியே குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தோம்.அப்படித்தான் தண்ணிபட்ட பாடாய் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகள் எங்கள் செல்லங்கள் எம்மைக் கூப்பிடும்போது எங்கள் உள்ளம் உருகிவிடும்.இன்றும் அப்படித்தான்,ஐயா ஐயா என்று ஒன்று மாறி ஒன்றாக இருவரும் என்னைக் கூப்பிட,"இப்படியே நீண்டகாலம் நீ வாழ்ந்திடல் வேண்டும்"என்று இந்த உள்ளம் எனக்குச் சொல்லி என்னை அரவணைத்தது.
"குட்டிம்மாக்கு ஒன்று.என்ர பட்டுக்குட்டிக்கும் ஒன்று,சரியா?சரி வாங்கோ எல்லோரும் சேர்ந்து கட்டுவம்"என்றதும் சின்னவள் என் மடிக்குள் வந்து இருந்துகொண்டு,கடதாசியில் ஒவ்வொரு மூலையும் எப்படி மடிக்கப்படுகின்றது என்பதை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.மூத்தவள்,நான் கட்டுவதைப் பார்த்து தானும் தனியாக ஒன்றைக்கட்டிமுடிக்க முயற்சித்தாள். அத்தருணத்தில் அன்றைய ஊர் கூடி,புழுதியில் கலந்து கொண்டாடிய ஞாபகங்கள் என் மனசுக்குள் மழையாய் அடித்துப் பெய்து ஓய்ந்தது.
பாரம்பரிய நடனக் கலை மரபுகளில் ஒன்றான பரதநாட்டியம் உலகில் மரபுக் கலையைப் பிரதிபலிக்கும் அழகிய நடன வடிவமாகும். கைகளின் அபிநயங்களோடு கண்களில் பாவங்கள் மற்றும் முகபாவங்களின் தனிச்சிறப்பினைக் கொண்ட அழகிய கலை. இத்தகைய இந்த பரதநாட்டியக் கலையானது இசையோடும் தாளத்தோடும் இணைந்து ஆனந்த உணர்வினைத் தரும் அற்புதக் கலையாகும்.
இத்துணை சிறப்பு வாய்ந்த கலையை ‘சாஸ்வதம்’ நடன அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயந்தி யோரகராஜா மற்றும் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைவோடு அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏட்டாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் இக்கலையை மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
ஸ்ரீமதி. அம்பிகா தாமோதரம், திருமதி. நித்தியானந்தன், ஸ்ரீமதி பாமினி சித்தரஞ்சன், ஸ்ரீமதி கலா அமரன், ஸ்ரீமதி பவானி பாக்கியராஜா, ஸ்ரீமதி விநோதினி இந்திரகுமார், ஸ்ரீமதி சஸ்கியா கிஷான், ஸ்ரீமதி பவித்திரா சிவயோகம், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து அலங்கரித்தனர். வரவேற்புரையை ஸ்ரீமதி பவித்ரா சிவயோகம் வழங்கிச் சிறப்பித்தார்.

சமூக ஊடகங்களால்
வென்றார்.
சமூக ஊடகங்களால்
தோற்றார்
என்னும் நிலையினைத்
தவிர்க்க
இன்னும் விஜய் செய்ய
வேண்டியது
நடப்புலகில்
நடிப்பதைத் தவிர்ப்பதுவே!

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 37 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நடந்த கலைவிழா நிகழ்ச்சி – 2026 சென்ற சனிக்கிழமை 1355 ஹார்வுட் அவென்யூ வடக்கு, ஏஜாக்ஸ், ஜே. கிளார்க் ரிச்சர்ட்சன் கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சிவதாசன், திருமதி சிவதாசன் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இம்முறை இந்த நிகழ்ச்சியின் போது 1:30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை வர்த்தகக் கண்காட்சியும், போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. சரியாக மாலை 5 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் மன்னறத் தலைவர் ந. பிரதீபன் திருமதி பிரதீபன், சிறப்பு விருந்தினர் திரு. திருமதி சிவதாசன், செயலாளர் ரவி சுப்ரமணியம், எழுத்தாளர் காப்பாளர் குரு அரவிந்தன், காப்பாளர் வி. ரி. மகாலிங்கம், தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி திரு. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழத்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண், கல்லூரிக்கீதம், அகவணக்கம் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வரவேற்புரையும், தலைவர் ந. பிரதீபனின் உரையும் இடம் பெற்றன.

அத்தியாயம் 4: வெல்வெட்டுப் பறவையும் காதல் பித்தும்: குறியீட்டியல் வாசிப்பு (Eroticism, Memory & Romantic Mysticism)
இப்போது நாம் வன்முறை, மரணம், இடப்பெயர்வு ஆகியவற்றால் நிரம்பிய ‘எட்டாவது நரகம்’ தொகுப்பின் ஆகப் பெரும் ஆசுவாசமாகவும், அதேநேரம் குரூர உலகினால் சிதைக்கப்படும் மென்னுணர்வின் சாட்சியாகவும் விளங்கும் அத்தியாயம் 4: வெல்வெட்டுப் பறவையும் காதல் பித்தும்: குறியீட்டியல் வாசிப்பு (Eroticism, Memory & Romantic Mysticism) என்ற பகுதிக்குள் நுழைகிறோம்.
இங்கு சோலைக்கிளியின் 'அந்த வெல்வெட்டுப் பறவை' கவிதையை முன்வைத்து, காதல் பித்தின் உன்னதத்தையும், அது சமூக வன்முறையினால் எதிர்கொள்ளும் சிதைவையும் 'குறியீட்டியல்' (Semiotics) மற்றும் 'உறழ்வுக் கோட்பாடு' (Romantic Mysticism & Madness) ஊடாக விரிவாக ஆராய்வோம்.
1. வன்முறைக்கு நடுவே ஒரு காட்டுப்பூ மனது: மெல்லிதயத்தின் அழகியல்
சோலைக்கிளி வெறும் போர்க்கால வன்முறைகளை மட்டுமே பாடும் ஒரு துப்பாக்கிக் கவிஞன் அல்ல; அவர் இயல்பில் ஒரு மென்னுணர்வுக் கவிஞர். கவிஞர் சு.வில்வரத்தினம் தனது விமர்சனக் குறிப்பில் துல்லியமாக அவதானித்தது போல, சோலைக்கிளிக்கு "காட்டுப்பூ வாசம் வீசும் மனது" இருந்தது. கிராமியத்துக் கழனியின் சேற்றிலும், அழகிலும், அன்பிலும், மனிதப் பிணைப்பிலும் ஆழத் தோய்ந்த ஒரு பூமனது அது. சுற்றிலும் குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் அரும்பும் ஒரு ‘டிஸ்டோபிய’ யுகத்தில், இந்த மெல்லிதயம் அடையும் தத்தளிப்பையும், அதன் நினைவுகளின் ஆழத்தையுமே இத்தொகுப்பின் ஆகச்சிறந்த காதல் கவிதையான ‘அந்த வெல்வெட்டுப் பறவை’ பேசுகிறது.
பிரெஞ்சு குறியீட்டியல் அறிஞர் ரோலன் பார்த் (Roland Barthes) தனது 'ஒரு காதல் உரையாடலின் துண்டுகள்' (A Lover's Discourse: Fragments) என்ற நூலில், காதலில் விழுந்த மனிதனின் மொழியானது உலகத்துத் தர்க்க ஒழுங்குகளை உடைத்து ஒரு தனியான 'அதி-யதார்த்த' (Hyper-real) தளத்தில் இயங்கும் எனக் குறிப்பிடுவார். சோலைக்கிளி இந்த அதி-யதார்த்தக் காதல் மொழியைத் தமிழ்க் கவிதைக்கு மிக அலாதியான படிமங்கள் மூலம் கடத்துகிறார்.

* கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.
முன்னுரை
பத்துப்பாட்டு என்ற பெயரில் இன்று வழங்கப்படும் நூல்களுள் முதலில் இடம்பெற்றுள்ளது திருமுருகாற்றுப்படை. முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்று கூறும் நச்சினார்க்கினியர் உரையுடன் நமக்குக் கிடைத்துள்ளது. இத்திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவர் நெடுநல்வாடை மற்றும் எட்டுத்தொகையிலுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர் என்றும், இவர் பிற்காலத்தவர் என்றும் நிறுவியுள்ளார் பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை1.
எனில் பிற்காலத்தில் பாடப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை எவ்வாறு பத்துப்பாட்டில் ஒன்றாகச் சேர்ந்தது? பத்துப்பாட்டில் இத்திருமுருகாற்றுப்படைக்கு உரிய இடம் என்ன? என்பதனைப் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. மேலும் பத்துப்பாட்டிலுள்ள மற்ற ஆற்றுப்பாடல்களுடன் இது கொண்டுள்ள உறவு என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றிற்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.
திருமுருகாற்றுப்படையும் தொல்காப்பிய விளக்கமும்
“கூத்தர், பொருநர், பாணர், விறலி” ஆகிய நால்வர் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவர்கள் என்கிறது தொல்காப்பியம்2. ஆனால் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க” எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்கிறார். ஆனால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கண நூலாக ஆய்வாளர்களால் கருதப்பெறும் தொல்காப்பியத்தில் ‘அடியவர்’ ஆற்றுப்படுத்த உரியவர் என்ற குறிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*கட்டுரையாளர் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
முன்னுரை
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று முக்காலத்திலும் நடைபெறுவதை அறிவன் நமக்கு கூறுவர். அறிவன் என்பது ஜோதிடரைக் குறிக்கும் சொல்லாகும். சங்க இலக்கியத்தில் கணியன் என்று கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதல் இன்று வரை எல்லா இலக்கியங்களிலும் ஜோதிடக் குறிப்புகளை நாம் காண முடிகிறது. ஜோதிடம் குறித்த சிந்தனை மிகப் பழங்காலம் தொட்டே நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஜோதிடம் என்பது மக்கள் அறிவியல் பயனால் பெற்ற ஒன்று. ஜோதிடம் அன்று முதல் இன்று வரை தமிழக வாழ்வுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களும், மன்னர்களும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். மன்னர்கள் போர் செய்யும் போது, திருமணம் செய்யும்போது, முடிசூட்டும் போது நல்ல நாள் பார்த்து செய்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். கம்பர் தம் இராமாயணத்தில் ஜோதிடம் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
ஜோதிடவியல்
ஜோதிடம் என்பது கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றினால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் கணித்துக் கூறுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்வையும் ஜோதிடத்தின் மூலம் கணித்து கூறுகின்றனர். பழந்தமிழர் ஒரு செயலைச் செய்ய வேண்டுமாயின், நாளும் கோளும் பார்த்து நல்ல நாளினைத் தேர்வு செய்து அச்செயலினைச் செய்துள்ளனர் என்பதனைப் புறத்திணைகளில் உள்ள 36-வது நூற்பா கூறுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் இருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய ஆயுள், இயல்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிப்பது ஜோதிடம் ஆகும்.

‘தாயொடு செல்வம் போம், தந்தையொடு கல்வி போம்’ என ஒரு பழம் பாடல் சொல்கிறது. என் ஒன்பதாவது வயதில் என் தந்தையை நான் இழந்தபோதும், என் கல்விக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. அதற்காக எந்தளவு சிரமத்தை என் தாய் உத்தரித்திருப்பார் என்று உணர்கிற வயதும் அப்போது எனக்கில்லை. ஆனால் வாழ்க்கைச் சாகரத்தில் நான் அடியெடுத்து வைத்த பிறகு, ஒவ்வொரு சிரமங்களையும் சாதுர்யமாய்க் கடந்திருந்த காலங்களில், கல்வியின் அவசியத்தையும் அதை எனக்களித்த தெய்வம் அதற்காய்ப் பட்ட சிரமங்களையும் எண்ணிப்பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் சமகாலத்தின் எந்தக் கரிசனமும் இல்லாமலேதான் அந்தக் காலம் கழிந்து சென்றதாக இப்போது படுகிறது.
மாணவ நிலையின் அந்தப் பருவம் முக்கியமானது. அது, படிப்பு கைகூடாவிட்டாலும்கூட, விளையாட்டு அல்லது சங்கீதம் அல்லது சித்திரமென ஏதோவொரு துறையில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டு தன்னை உயர்த்தும் சுயசிந்தனையின் உந்துதலின்றியே மேலே பறக்கக் கிளம்பிவிடுகிறது. இந்தத் துறைகளுக்குள் அமைக்க முடியாவிட்டாலும், அது இயன்றவொரு வெளியில் தன்னை நிறுவுவதில் எத்தனம் செய்யத் தவறுவதில்லை. அதிலொன்று கையெழுத்து. அதற்காக சிலர் அளவுக்கதிகமாகவும் கஷ்ரப்படுவார்கள். நான் என் கையெழுத்துக்காகப் பட்ட கஷ்டங்களும் கரிசனங்களும் அளப்பரியவை. அந்த அளவுக்கு பாடங்களில்கூட நான் கவனம் செலுத்தியதில்லை. அதை நினைத்தால் இப்போதும் சிரிக்கமுடியும். ஆனால் அந்த வயதில் நானொரு யுத்தம் நடத்திக்கொண்டிருந்தேன் என்பதுமட்டும் உண்மை.
மாணவர்களின் அழகிய தெளிவான கையெழுத்துக்காகவே புள்ளிகள் அதிகம் கொடுக்கும் ஆசிரியர்கள் அப்போது இருந்திருந்தார்கள். இந்த விஷயத்தை மீறியும்கூட கையெழுத்தானது முக்கியமான அம்சம்தான். அதுவொரு மனநிலைப் பிரதிபலிப்பாகவும் மனோவியல் ரீதியில் கணிக்கப்பட்டிருந்தது. அக் காலத்து எழுத்துபகரணங்களின் படிமுறை வளர்ச்சிகளை இக் காலத்தில் நினைப்பதுகூட சுவாரஸ்யமாகவே இருக்கும். ஒருவரது கையெழுத்து அமைவதற்கும் இந்த எழுது சாதனங்களுக்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அனேகமாக பாலர் வகுப்பெனப்படும் அரிவரியிலிருந்து முதலாம் வகுப்பு முடிகிற வரையில் சிலேற்றும், கற்பென்சிலும்தான் எழுதும் உபகரணங்களாகயிருந்தன.