பதிவுகள் முகப்பு

லண்டனில் ‘சுவடுகள்’இ ‘பூப்பும் பறிப்பும்’ வெளியீடு! - மீனாள் நித்தியானந்தன், லண்டன் -

விவரங்கள்
- மீனாள் நித்தியானந்தன், லண்டன் -
நிகழ்வுகள்
19 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

லண்டனில் எஸ். அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலும் அவரின்  புதல்வி நவஜோதி ஜோகரட்னத்தின் ‘பூப்பும் பறிப்பும்’ சிறுகதைத் தொகுப்பும்; கடந்த வாரம் (8.6.2024) ஹரோ ஐயப்பன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

    அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலுக்கு தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் ந. சுசீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில்: ’எஸ். அகஸ்தியர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஜேர்மனியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் அகஸ்தியர் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்தியதில் நான் பெருமைப்படுகின்றேன். அவரது நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுகள் என்பன ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அரசன்பே சரித்திரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு நூல் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எளிமையாகப் பழகவல்ல அகஸ்தியர் அவர்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்கள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த இலக்கியப் பெருமகன் ஆவார். அவர் மறைந்த இருபத்தியொன்பது ஆண்டுகள் கழித்து இந்நூல் அவரது புதல்வி நவஜோதி ஜோகரட்னம் வெளியிடுவது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க ...

ஜூன் 21 கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த திகதி சட்டரீதியான விடுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் 2001 ஆம் ஆண்டு முதல் வடமேற்குப் பிரதேசங்களில் ஒரு சட்டப்பூர்வ பிராந்திய விடுமுறையாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் யூகோன் பகுதியில் இருந்தும் கொண்டாடப்படுகிறது. கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வை தேசிய பழங்குடி மக்கள் தினம் என்று மறுபெயரிடுவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஏனைய பகுதிகளுக்குச் சட்டரீதியான விடுமுறை கொடுக்கப்படவில்லை.

இந்த நாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. இலங்கையில் சிறுபாண்மை இனத்தவரான ஈழத்தமிழர்கள் யுத்தம் என்ற போர்வையில் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது, அவர்கள் அனாதைகளாக போவதற்கு இடமின்றித் தவித்த போது, கனடியப் பழங்குடி மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டித் தங்கள் நிலத்தில் எங்களைக் குடியிருக்க வைத்தார்கள். இன்று கனடியத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரத் துறைகளில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அன்று அவர்கள் பெருந்தன்மையோடு எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்றதேயாகும்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் தோழர் சி.மகேந்திரன் ! இளம் அரசியல் தலைவராக ‘ இந்தியா டுடே ‘ இதழ் தேர்வுசெய்த சமூகப்போராளி ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும் இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில் நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ? காரணம் இன்றி காரியம் இல்லை. இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன. 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். அவ்வேளையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.

இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு, ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம். அதனால், 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது. எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவிலக்கியம் படைக்கும் தேவகி கருணாகரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீர்கொழும்பில் முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார் சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..? அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து , விவேகானந்தா வித்தியாலயம் அன்று தொடங்கியது. அவரது தம்பி எஸ். கே. சண்முகமும் புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபையில் அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். 32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில் இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.

மேலும் படிக்க ...

பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் சக்தி விருது - தகவல்: சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
18 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் சக்தி விருது  தங்களின் இலக்கியப் பணிக்காக வழங்கும் விழா பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். சக்தி விருது 2024 ( 20ம் ஆண்டு )

மேலும் படிக்க ...

தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
கலை
17 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்).  தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.

பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம்  (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.

மேலும் படிக்க ...

அப்பா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து  குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன்  கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில்  அவரைப் பலர் 'Tall Nava' என்று  அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ்,  டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில் இருந்தன.

கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.

ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள் அடங்கிய முழுத்தொகுப்பு, புலியூர்க்கேசிகனின் சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்கள் இவை எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என்று வாங்கி வைத்தார். ஆரம்பத்திலேயே இவற்றுடனான தொடர்பு ஏற்படக் காரணம் அப்பாவின் இப்போக்குத்தான்.  அப்பாவுக்கு இராமாயணம், மகாபாரதத்தின் மீதிருந்த ஈடுபாடு எதுவரை இருந்ததென்றால் எங்கள் அனைவருக்கும் பெயர்கள் வைக்கும் அளவுக்கு இருந்தது. கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி இவை அனைத்தும் அந்த ஈடுபாட்டின் விளைவுதான்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா 2024! - தகவல்: வென்சிலாஸ் அனுரா -

விவரங்கள்
- தகவல்: வென்சிலாஸ் அனுரா, நிறுவனர் வென்மேரி அறக்கட்டளை -
நிகழ்வுகள்
15 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

வென்மேரி அறக்கட்டளையின் ஆற்றல்மிகு ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா 2024 கனடா.   - தகவல்: வென்சிலாஸ் அனுரா, நிறுவனர் வென்மேரி அறக்கட்டளை -

வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா கனடாவில் Audley Recreation center 1955 Audley Rd, Ajax, ON L1Z 1V6 என்னும் இடத்தில் 11/08/2024 அன்று பி.ப. 2 மணிக்கு நடைபெற உள்ளது. தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே வென்மேரி அறக்கட்டளை. மேற்படி அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா பிரான்ஸில் நாட்டில் நடைபெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம் : தாமரைச்செல்வியின் சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு கதைத் தொகுப்பு! - தாருணி பாலேசன், பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- தாருணி பாலேசன், பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா -
நூல் அறிமுகம்
15 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்துலகில் சிகரம் தொட்டு பொன்விழாவைக் கொண்டாடிய திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு: ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’.

சிறுகதையோ, நாவலோ அல்லது கட்டுரையோ வாசித்து முடித்தபின்பு பல எண்ணங்கள் வாசகரின் மனதில் உருவாகும்.

சில சமயங்களில் மகிழ்ச்சியாய் இருக்கும். சிரிப்பு வரும். முடிவு சில சமயங்களில் துக்கத்தைக் கொணரும். தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதோ பற்பல உணர்வுகள் ஒருசேர எம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

நிறையவே எம்மைச் சிந்திக்கத் தூண்டும். எமது கடந்த கால வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்களை மீட்டிப் பார்க்கச் சொல்லும். எமது வாழ்வின் அர்த்தத்தை தேடச் சொல்லும்.

கிருஸ்ணபகவானை தனது பக்தியால் அருச்சுனன் கட்டிப்போட்டது போல தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வாசகர்களாகிய எம்மைக் கட்டிப்போட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது.

ஒரு பொழுதுபோக்காக வாசித்து முடித்துவிட்டு எம்பாட்டில் கடநது செல்வதற்கு அவரது எழுத்துகள் எம்மை அனுமதிப்பதில்லை. எம் மனதில் பல மாற்றங்களை உருவாக்கும். எம் எண்ணங்களில் உள்ள கறைகளைக் களையச் சொல்லும்.

மேலும் படிக்க ...

கவிதை: புள்ளி - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
கவிதை
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தப் புள்ளியிலிருந்து தான்
நடக்கத்தொடங்கினேன்.
வழியில் யாரோ புள்ளி ஒன்றை எறிந்திருந்தார்கள்.
வானத்திலிருந்து வீழந்ததாகச் சொன்னார்கள்.
கோபத்தில் உமை சிவன் மீதெறிந்திருக்கலாம்,
நண்பனின் கூற்று.
கனவில் வந்தது மாநிறப்புள்ளி.
அது இதுவல்ல.

மேலும் படிக்க ...

கானல் வரி! - வ.ஐ.ச.ஜெயபாலன்-

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்-
கவிதை
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கருகும் முது மாலை.
பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க
நுரைக்கும் திராட்சை மதுவாய்
நெழிகிறது எழுவான் கடல்.
இது படுவான் கரையென்றால்
மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே.
எனினும் காதலில் சிறகுகள் உரச
கூடு ஏகும் பறவைகளின் பாட்டில்
கானல் வரி தொனிக்கிறது.

*

இந்த மதுவார்க்கும் மாலையில்
தனித்த முது கவிஞன்.
நினைவு இடறி நான்கு தசாப்தங்கள்
காலச்சரிவில் உருள்கின்றேன்.
எங்கோ ஒரு ஜப்பானியப் பாடல்
தாபம் வளர்கிறது.

மேலும் படிக்க ...

மணிமேகலையின் பௌத்த துறவின் பின்புல அரசியல் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்

தன்னுடைய காதலன் கோவலன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட மாதவி தான் துறவு மேற்கொண்டதோடு தன்னுடைய மகள் மணிமேகலையையும் துறவியாக மாற்றினாள். வைணவம், சைவம், சமணம் எனப் பல மதங்கள் இருந்த நிலையில் குறிப்பாக கோவலன் சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்த நிலையில் ஏன் அவள் துறவிற்குப் பௌத்தத்தைத் தேர்வு செய்தாள் என்ற வினா இங்கு எழுகிறது. அத்துடன், மாதவி பௌத்த துறவியாக மாறினாள் பௌத்த சமயத்தினுடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பௌத்த துறவியாகவே வாழ்ந்து இறந்து (அல்லது முக்தி அடைந்தாள்) போனாள் என்று இல்லாமல் அவள் பௌத்த துறவியாக மாறிய பின்னணியில் அவளிடம் ஏன் அமுதசுரபி என்ற பாத்திரம் வந்து சேருகிறது? அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏன் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குகிற அறப்பணியை மேற்கொண்டாள்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

மேலும், அமுதசுரபி என்ற பாத்திரம் பார்ப்பனர்களால் ஆபுத்திரனது உணவுப் பாத்திரத்தில் கல் போட்டுத் துரத்தப்பட்ட பின்னர் அவனுக்கு சிந்தாதேவி என்ற பெண் தெய்வத்தால் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிக் கிடைத்த அந்தப் பாத்திரந்தான் மணிமேகலைக்கு மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் கிடைத்தது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கிறபொழுது ஏன் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் எல்லாம் நிகழ்ந்தன என்பதும் அவற்றைக் காப்பிய ஆசிரியர் கூறுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டி உள்ளன. அத்தகைய ஒரு விரிவான தேடலை முன்வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 39 - “குரு அரவிந்தனின் படைப்புக்கள்”

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
14 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இளவாலை விஜயேந்திரனின் கவிதைத்தொகுப்பு அறிமுக நிகழ்வு: 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?"

விவரங்கள்
தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜூன் 06 - ரஷ்ய மொழி தினமும், அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த நாளும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும்  கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)

ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியருக்கு ஒப்பானவராக கருதப்படுவரே ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின். வையகம் புகழ் ரஷ்ய இலக்கிய சிருஷ்டி கர்த்தா அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) ரஷ்ய மொழியில் : Алекса́ндр Серге́евич Пу́шкин பிறந்த தினம் ஜீன் 6 ஆகும். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 1799 இல் பிறந்தவர். இளம் வயதிலேயே தனது நகர நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்த சூழல் இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது.

மேலும் படிக்க ...

கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
13 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்விற்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையின் தலைவர் ஐயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலில் அமரர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெற்றது. குடும்பத்தினர், மற்றும் வருகை தந்தோரின் மலரஞ்சலியைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம் பெற்றது. கனடா பண், தமிழ் வாழ்த்து, இறைவணக்கம் ஆகியன சாச்சவி திலீபன் அவர்களால் பாடப்பெற்றன. அதன்பின் அமைதி வணக்கம் இடம் பெற்றது.

செயலாளர் கணேஸ்வரி குகனேசன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஐயாத்துரை ஜெகதீஸ்வரனின் தலைமையுரை இடம் பெற்றது. அடுத்து மறைந்த கவிஞருக்கான அஞ்சலி உரைகள் இடம் பெற்றன. திரு. வி.எஸ் துரைராஜா, திரு. க.சிவதாசன், எழுத்தாளர் இரா. சம்பந்தன், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், வீணைமைந்தன் சண்முகராஜா, பொன்னையா விவேகானந்தன், தமிழ்ப்பணி வா.மு. சே. திருவள்ளுவர் ஆகியோரது அஞ்சலி உரைகள் இடம் பெற்றன.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு  மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள். ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.

மேலும் படிக்க ...

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?

மேலும் படிக்க ...

மொழிபெயர்ப்புச் சிறுகதை - ஒரு வித்தியாசமான கதை! - ஆங்கிலத்தில் மூலம் - ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -

விவரங்கள்
- ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -
சிறுகதை
10 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இங்குள்ள சிறுகதை 'ஒரு வித்தியாசமான கதை'  ஆங்கில மூலத்தில் 400 சொற்களே உள்ள உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான ஓ. ஹென்றியின் புகழ்பெற்ற சிறுகதை. நம்மவர்களிடம் ஒரு குறைபாடுண்டு. குறிப்பாகப் புனைகதைகளைப்பற்றி விமர்சனம் எழுதுபவர்களிடத்தில். ஓரிரு பக்க அல்லது ஒரு பக்கச் சிறுகதைகளை அவர்களில் பலர் சிறுகதைகளாகவே நினைப்பதில்லை. மதிப்பதில்லை. அந்த அளவுகோலுடன் அவ்விதமான படைப்புகள் பற்றி கருத்துகளைக் கூறுவார்கள். இவர்கள் உலக இலக்கியத்தில் வெளியான சிறந்த சிறுகதைகளை அதிகம் தேடியெடுத்து வாசித்தால் ஒன்றைப்புரிந்துகொள்வார்கள் எழுத்தாளர்கள் பலரின் ஓரிரு பக்கச் சிறுகதைகள் பல முக்கிய சிறுகதைகளாக விளங்குவதை.  எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நல்லதோர் உதாரணம்.
நல்லதொரு சிறுகதைக்கு அளவு முக்கியமில்லை. அது வெளிப்படுத்தும் உணர்வு அல்லது விடயம், வாசகர்களிடத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியமானது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்.காம் -

ஆஸ்டினின் வடக்குப் பகுதியில் ஒரு காலத்தில் ஸ்மோதர்ஸ் என்ற பெயரில் ஒரு நேர்மையான குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பம்  ஜோன் ஸ்மோதர்ஸ், அவரது மனைவி, அவர், அவர்களின் சிறிய மகள், ஐந்து வயது, மற்றும் அவரது பெற்றோர்  ஆகியோரை உள்ளடக்கியது.  ஒரு சிறப்பு பதிவுக்காக நகரத்தின் மக்கள்தொகையை நோக்கி கணக்கிடப்பட்டபோது  ஆறு பேராக இருந்தது.  ஆனால் உண்மையான எண்ணிக்கையில் மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.

ஒரு நாள் இரவு உணவிற்குப் பிறகு சிறுமி கடுமையான வலியால் பாதிக்கப்பட்டாள்.  ஜோன் ஸ்மோதர்ஸ் சில மருந்துகளைப் பெற நகரத்திற்கு விரைந்தார். அவர் திரும்பி வரவே இல்லை. சிறுமி குணமடைந்து காலப்போக்கில் பெண்ணாக வளர்ந்தாள்.

அந்தச் சிறுமியும் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொண்டாள். காலம் விரைவாக ஓடியது. அவளுக்கும் ஐந்து வயதில்  சிறுமி இருந்தாள்.

அவள் தந்தை சென்றபோதும், திரும்பி வராதபோதும் அவர்கள் குடியிருந்த அதே வீட்டில்தான் அவள் இன்னும் வாழ்ந்து வந்தாள்.

ஜோன் ஸ்மோதர்ஸ் காணாமல் போய்  ஓராண்டு நிறைவு நாளில் சிறுமிக்கு  இரவு கடும் வலி ஏற்பட்டது. அவர் உயிருடன், ஒரு நிலையான வேலையில் இருந்திருந்தால், இப்போது அவளுடைய தாத்தாவாக இருந்திருப்பார்.

மேலும் படிக்க ...

23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதே அரும்பியிருக்கக்கூடிய பாரதி என்ற இந்த இளைஞனை இனங்கண்டு, அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து, சென்னை சுதேசமித்திரனிற்கு இட்டுவந்த பெருமை, திரு.ஜி.சுப்ரமணிய ஐயரையே சாரும்.  மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியனாய் இருந்த இவ் இளைஞன், தனது தமிழாசிரியர் பதவியை விட்டுவிட்டு, விடுதலைப்போர் மோகம் சூழ்ந்த காலத்தில் ஓர் பத்திரிகை தொழிலில் - அதுவும் பதவி இன்னதெனச் சரியாக நிர்ணயிக்கப்படாத ஒரு சூழலில் சென்று சேர தீர்மானம் கொண்டது – அவனது வாழ்வில், அவன் எடுத்து வைத்த முதல் திருப்புமுனை படிகளில் ஒன்றாகின்றது (1904 – நவம்பர்). இம்முடிவு, இவ் இளைஞனை ஒரு பரந்த உலகத்தை நோக்கி உந்தித்தள்ளி இருந்திருக்க வேண்டும். குறுகிய காலத்துள், பல்வேறு திறமைகளால் தன்னை நிரூபித்துவிடும் இவ் இளைஞன், அப்பத்திரிகையின் உபபத்திராதிபராய், சில மாதங்களிலேயே நியமிக்கப்படுகின்றான். திரு.ஜி.சுப்ரமணிய ஐயரின் வியப்பையும், விநோதத்தையும், வாஞ்சையையும், சம்பாதித்துக்கொள்ளும் இப்புதிய இளைஞனை அவர் மிகுந்த பிரியத்துடன் பார்க்கின்றார் - அதிசயத்துடன்.

வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் கட்டுரையின் துவக்கம் :

1905 நவம்பரில் சக்கரவர்த்தினியில் வேல்ஸ் இளவரசனை வரவேற்று அவன் பின்வரும் பொருள்பட எழுதியது அவனது அன்றைய சிந்தனை ஓட்டத்தை எடுத்துரைப்பதாக இருக்கின்றது : “கோழி முட்டையை ஏழுமுறை இளவரசியின் தலையைச் சுற்றி உடைப்பதும், பின் அவளது தலையில் அரிசியைக் கொட்டுவதும் (அட்சதை), பின், அவளது கன்னத்தில் கைவைத்து அவளைத் திருஷ்டி கழிப்பதும், குங்குமத்தை அவளது நெற்றியில் தீட்ட முயற்சிப்பதும் - அது அந்த வேல்ஸ் இளவரசிக்கு பிரியமில்லையாம் - எனவே அவ் விஷேசம் நடத்தப்படவில்லையாம்…” (பக்கம் - 81).

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

மேலும் படிக்க ...

அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
07 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."

இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார்.  எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது.  அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள்.  இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.

மேலும் படிக்க ...

மனிதர்கள் -துவாரகன் -

விவரங்கள்
-துவாரகன் -
கவிதை
05 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதனைக்
கொல்லக்கூடியவை
எவையாக இருக்கலாம்?

ஓர் ஆயுதம்
ஒரு விபத்து
தீராத நோய்
இன்னமும் எவையெவையோ...

இவற்றைவிடவும்
மேலான ஒரு கொலைக்கருவி
மனிதர்களிடம் உண்டு
அதனை எங்கும் எடுத்துச் செல்லலாம்
யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்
ஒவ்வோர் வேளையும்
ஒரு துளி இரத்தமின்றி  
ஒரு விரல்கூடத் தீண்டாமல்
கொல்லமுடியும்

மேலும் படிக்க ...

ந.சுசீந்திரனின் நூல்கள் வெளியீடும் அறிமுக உரையும் - தகவல்: கிருபா கந்தையா -

விவரங்கள்
- தகவல்: கிருபா கந்தையா -
நிகழ்வுகள்
03 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கம்பராமாயணத்தில் மாதரைக் கொல்லுதல் பாவம் என்பது குறித்த பதிவுகள் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
03 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் ராமாயணத்தில் குற்றமுடைய செயல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். நமக்குத் துன்பத்தைச் செய்தாலும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மகளிரைக் கொல்வது பாவம் என்றும், குற்றம் என்றும் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.

பெண் கொலை புரிந்த மன்னன்

சங்க இலக்கியத்தில் நன்னன் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவனுடைய காவல் மரம் மாமரம். அந்த மரத்தில் உள்ள பழங்களை யாரேனும் சாப்பிட்டால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. காவல் மரத்தின் மாம்பழம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்தது. அது இன்னாருடையது என்பதை அறியாமல், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கோசர் குடி பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது காவல் மரத்தின் மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக, அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அப்பெண்ணை உயிருடன் விட்டு விடும்படி மன்றாடினார்கள். ஆனால் மன்னன் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல், அவளைக் கொன்று விட்டான். இதனால் புலவர் இவனைப் ’பெண் கொலை புரிந்த மன்னன்’ என குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. படித்தோம் சொல்கின்றோம் : ஜேகே. எழுதிய மாயப்புனைவு நாவல் வெள்ளி ! புதிய படைப்பு மொழியால் உருவான சங்க இலக்கியக்கதை ! - முருகபூபதி -
  2. எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார்!
  3. யாழ் பொது நூலக எரிப்பு நினைவாக : கௌதம இரத்தம் --- செ. சுதர்சன் ---
  4. கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -
  5. சிவ. ஆரூரனின்'ஆதுரசாலை' நாவல் நயவுரை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  6. கனடாவில் 'சமூகம் இயல்' பதிப்பக நூல்களின் அறிமுகமும் வெளியீடும்!
  7. சம்பந்தனின் நிலைப்பாடும், அண்மைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ! - ஜோதிகுமார் -
  8. நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள் - பேராசிரியர் அ.ராமசாமி -
  9. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்
  10. (மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -
  11. இரு நூல் அறிமுக நிகழ்வு!
  12. பிரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா
  13. 'காற்றுவெளி'யின் இங்கிலாந்து சிறப்பிதழ் 2024
  14. வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் இரண்டு!
பக்கம் 33 / 115
  • முதல்
  • முந்தைய
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • அடுத்த
  • கடைசி