பதிவுகள் முகப்பு

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



                          - இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

              யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc  வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1


மேற்கு நாடு நோக்கிப்  பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய  தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

மேலும் படிக்க ...

பன்முக இலக்கிய ஆற்றல் மிக்க எழுத்தாளர் ஈழக்கவி பற்றி... - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

விவரங்கள்
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -
இலக்கியம்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

               - எழுத்தாளர் 'ஈழக்கவி' ஏ. எச். எம். நவாஷ் -

ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.

1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.

ஈழத்துத் தமிழறிஞர்களான பேராசிரியர்கள் சுவாமி விபுலாநந்தர், தனிநாயகம் அடிகளார், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், ம. மு. உவைஸ் முதலியோர் பற்றிய ஈழக்கவியின் சிறு நூல் வரிசை இவர்கள் பற்றிய பயனுடைய அறிமுகமாகவும், ஆய்வாகவும் மதிக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

ஓடை II - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டையிட்டாய்
கடலைக் கடைந்து
கடலோரம் முட்டையிட்டேன்.

சற்றே மாற்றி பாடினால் இவ்வாறுதான் அமையும். ஆனால் இயற்கை அடிப்படையில் மாறாது எனில், மனிதன் இயற்கையோடு தொடுக்கும் போரும் மாறாது. (சாராம்சத்தில்).

காலை ஆறுமணியளவில் பாதையின் வலப்புறமாய் கடற்கரைக்கு அடுத்ததாயிருந்த அந்த பெரிய வீதியில் நடக்க தொடங்கினேன். எனது வலதுபுறத்தில் ஒரு மைதானம் போல் கிடந்தது வயல்வெளி. உண்மையில் அதனை வயல்வெளியென்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால், புல்வெளியென்று சொல்லலாம். நடக்;க முடியாது - சதுப்புநிலம் என்று விடுதி உரிமையாளன் எனக்கு சொல்லியிருந்தான். எனவேதான் வீதி நெடுக நடக்க முடிவு செய்தேன். ஆனால் வயலை அடுத்ததாய் அந்த பிரம்மாண்டமான குளம் கிடந்தது. பல சிறு சிறு குடில்கள் கரையோரமாய் முளைத்திருந்தன. ஒருவேளை அவை இறால் பிடிக்க வசதி செய்வனவாக இருக்கக்கூடும். பெரிய படகுகள் சிலவேளை அங்கு வந்து இறங்கக்கூடும். தெரியவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் பனைமரங்கள் வீதியோரமாய் ஆங்காங்கே, நிற்க தொடங்கி இருந்தன. அதாவது வீதி. அடுத்ததாய் பனை மரங்கள். அடுத்ததாய் வயல்வெளி. அடுத்ததாய் குளம். ஒரு பத்து பதினைந்து பனை மரங்களை கடந்தால் வயல்வெளி. பின் குளம்.

இறங்கி, அந்த பனை மரங்களை கடந்து வயலை அடைந்தேன். சில ஒற்றையடிப்பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின. ஒன்றின் வழியே குளத்தருகே சென்றேன். இப்போது அவை கரையோடு ஒட்டி இருந்த குடில்களாய் இல்லை. கரையில் இருந்து, ஐந்தாறடி உள்ளே குளத்து நீரில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றின் ஓரமாய் படகொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை யாரேனும் வந்திறங்கியிருக்க வேண்டும். வந்து என்ன செய்வார்கள்? தெரியவில்லை. தூரத்தே, தீவு போலிருந்த ஒரு சிறு பிரதேசத்தில் நாணற்புற்கள் இடுப்புவரை வளர்ந்திருந்தன.

மேலும் படிக்க ...

இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


                                             ஓவியம் AI
                                  - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

மேலும் படிக்க ...

நான் பார்த்த சீக்கிய மதத் திருமணம்! - கனகசபை குருபரன் -

விவரங்கள்
- கனகசபை குருபரன் -
சமூகம்
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                              - ஓவியம் AI -

    கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான  திருமணம் ஒன்றைப்  பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக்  கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

    ஏற்கனவே சீக்கிய இனத்தவருடன் எனக்கு இருந்த தொடர்பு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் போட்ஸ்வானாவில் சீக்கியர் ஒருவரோடு  மூன்று மாதங்கள் ஒரே வீட்டில் வசித்திருக்கிறேன். வீடு விற்பனை முகவராகக் கனடாவில் வேலை பார்த்த அவர், அக்காலப் பகுதியில் ஏற்பட்ட  பொருளாதார மந்த நிலை காரணமாகத்  தொழில் தேடி போட்ஸ்வானாவிற்கு வந்தார். கனடாவில் இருக்கும் எனது சகோதரரின் பரிந்துரையோடு வதிவிடம் தேடி எனை நாடி வர,  இந்திய அமைதிப்  படையின் அடடூழியங்களை நேரடியாகப்  பார்த்திருந்தாலும், வேறு வழியில்லாமல்  ஒத்துக் கொண்டேன். எனினும் அவருடன் நான் வசித்த அந்த மூன்று மாதங்கள், சீக்கிய சமுதாயம் பற்றிய எனது எண்ணத்தை முற்றாக மாற்றி விட்டன. அன்று தொடங்கிய எமது நட்பு, நான் போட்ஸ்வானாவை விட்டு வரும் வரை தொடர்ந்தது.
     
    சுவாரசியமாகப்  பேசவும்  சுவையாகச்  சமைக்கவும்  கூடிய அவரோடு  நடந்த உரையாடல்களில் இருந்து சீக்கிய மதத்தின் வரலாறு, சீக்கியர்களின் வாழ்க்கைமுறை பற்றி  விபரமாக அறிந்து கொண்டேன்.  ஒரு இந்துத் தகப்பனுக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்த குரு நானக்(1469-1539) எனும் குருவினால் சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அவரைத்  தொடர்ந்து வந்த 9  சீக்கிய மத குருமார்களினால் அது மெருகூட்டி  வளர்த்தெடுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், அவர்களுடைய புனித நூலான குரு கிரந்த் சாஹிபை தனக்கு அடுத்த குருவாக பிரகடனப்படுத்த, இன்று வரை அந்தப் புனித நூலையே குருவாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் உள்ள தர்பார் சாஹிப்  என்று அழைக்கப்படும் சிறு மேடையில் குரு கிரந்த்  சாஹிபை  வைத்து, கவிதை வடிவில் அதில் உள்ள சுலோகங்களைப்  பாடித்  துதிப்பது, அவர்களின் வழிபாட்டு முறையாகும். இந்து, இஸ்லாம் இரண்டினதும் வரலாறு, இறையியல்த் தடங்களை  சீக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது. சீக்கியம், எப்படி வாழவேண்டும் என்று பல நல்ல விடயங்களைக்  கூறி இருந்தாலும்,  தியாகம், மனித நேயம் மற்றும் நேர்மையான நடத்தை  என்பவற்றிக்கு அதிக முக்கியத்துவம்  கொடுக்கிறது.  

மேலும் படிக்க ...

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         -  ஓவியம் AI -

                                  இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

மேலும் படிக்க ...

மாணிக்கவாசகா் வரலாறும் படைப்புச் சூழலும்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சோ்ந்த படைப்பாளிகளால் படைக்கப்படுவதாகும். ஆதலால் இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை, முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் என்று கூறுவா். இதனால் இலக்கிய உருவாக்கத்தில் வரலாற்றுப் பின்னணியின் முதன்மை இடத்தை உணர முடிகின்றது. வரலாற்றிற்குப் பலமுகங்கள் உள்ளன. அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப்படும் பல முகங்களுக்கும் அடிப்படையானது – அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது அரசியல் வரலாறு ஆதலால் படைப்பு, படைப்பாளா் வரலாறு அறிவதற்கும், அரசியல் வரலாறு அவசியமாகின்றது. இலக்கியம் உருவாகி வளா்ந்திட்ட, தமிழகத்தின் அரசியல் வரலாறாகிய படைப்புச்சூழல், படைப்பாளா் வரலாறு அறியப்பட்டால் பக்தி இலக்கியங்களைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் மாணிக்கவாசகா் வரலாறையும் படைப்புச் சூழலையும் ஆராய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

மாணிக்கவாசகா் பிறப்பு

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில், மதுரை நகரிலிருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள திருவாதவூரின் கண், மானமங்கலத்தில் மறையோதும் ஓா் அந்தணா் குடியில் பிறந்தவா் மாணிக்கவாசகா். இவா் தாய் தந்தையார் பெயா் புலப்படவில்லை. ஆயினும் சிலா் இவரது தாய் தந்தையார் பெயா் சம்புபாதாசிரியா் என்றும் சிவஞானவதியார் என்றும் கூறுவா். ஆனால் மறைமலைஅடிகள் இக்கருத்தை பின்வருமாறு மறுத்துக் கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc

கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது.

 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

மேலும் படிக்க ...

பிரசன்ன விதானகேயின் Paradise திரைப்படம்! இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், இராமாயண ஐதீகத்தைப் பேசும் உலக சினிமா ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பூலோகத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட இலங்கைக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு இருப்பதை ஐதீகக் கதைகள் மூலம் அறிகின்றோம். இராமாயணத்தில் வரும் இராவணன் தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களின் குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வால்மீகி இராமாயணம் – கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட கதைகள் தொடருகின்றன.

இந்தியாவில் உத்தரபிரதேசம் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று சொல்லிக்கொண்டு 32 வருடங்களுக்கு முன்னர் ( 1992 – டிசம்பர் 06 இல் ) ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பாபர் மசூதியை இந்துத்துவா கரசேவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர். இது இவ்விதமிருக்க, தாய்லாந்தில்தான் இராமர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள்.

இந்தோனேஷியாவின் ஆளுகைக்குள்ளிருக்கும் பாலித்தீவில்தான் அவர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு சிலைகள் எழுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு இராமாயணக் கதைகள் பலவுள்ளன.

    -  திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே -

ஆனால், அவன் மனைவி சீதையை கடத்தி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்த இராவணன் இலங்கை மன்னன் என்பதனால் இவனுக்கு இலங்கேஸ்வரன் எனவும் பெயர் உண்டு. குறிப்பிட்ட அசோகவனம் அமைந்துள்ள இடத்தில் நாம் சீதையம்மன் கோயிலை பார்க்க முடியும். சிங்கள மக்களும் வழிபடும் இவ்விடத்திற்கு சீதா எலிய என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாகவும் இவ்விடம் காணப்படுகிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஒரு காதல் கதை! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                  - ஓவியம்: AI -

“கண்ணை மூடிக்கொண்டு, ரிகார்ட் பிளேயரில் ஒலிக்கும், மென்னிசை தாலாட்டு ஒலிக்க, படுத்துக்கிடப்பேன். ஒரு நங்கையானவள் மலை உச்சியிலிருந்து மென் ஓட்டத்தில் இறங்கி ஓடி வருவது போல் ஒரு பிம்பம் மனத்திரையில் தோன்றும்…”

இது அவனது நிசப்தம் நிறைந்த இரவு.

பகலும், மாலைகளும் வேறு விதமானது.

கோர்ட் வேலை முடிந்தவுடன், இவனும் இவனது நான்கு அல்லது ஐந்து நண்பர்களுமாய் சேர்ந்து கூடிவிடுவார்கள்.

பகல் நேரத்தில், நேரமிருந்தால், ஒரு மூத்த தொழிற்சங்கவாதியின் அலுவலகத்தில்… அவனும், ஒரு வித்தியாசமான ஆள். தோழமை மிகுந்த ஒரு அரசியல்வாதி.

மாலை நேரமென்றால் வைட் ஹவுஸ் தேனீர் சாலையில். நான்கு மணியளவில், இந்த நால்வரையும், அந்த வைட் ஹவுஸ் தேநீர் சாலையில் வழமையான மூலையில் காணலாம்.

அங்குள்ள சிப்பந்தியில் - அதிலும் சீனியர்கள் - அவர்கள் ஏதோவொரு வழியில், ஏதோவொரு தொழிற்சங்க நடவடிக்கையில் தம்மை இணைத்து, ஏதோவொரு வகையான வழக்கு வம்பென்று ஊடாடி வந்திருந்ததால், இவன், அவர்களது கதாநாயகன் ஆனான். எனவே இவர்கள் நேரம் போவது தெரியாமல் கதைப்பதை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே இது வழமையாகியது. அத்தேநீர் சாலையில் இது இவனுக்குத் தரப்படும் தனி மரியாதை. பாலற்ற வெறும் தேநீரை சுவைத்து சுவைத்து இவனும் இவனது நண்பர்களும் ஆர அமற நாட்டு நிலவரங்கள், உலக நடப்புகள், பத்திரிகை செய்திகள், கட்சி விவகாரங்கள்- இத்தியாதி என்று ஒருமுறை வைத்து கதைத்து இறுதியாய் புறப்பட ஓரிரண்டு மணி நேரம் சென்று, மாலை மங்கவும் ஆரம்பித்திருக்கும்.

மேலும் படிக்க ...

ரவி அல்லது கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. இனியது கேட்கின்.

மன பாரம் நீங்க
மழை நாளில்
வெகுதூரம் வந்திருக்க கூடாதுதான்
ஒதுங்கி நிற்கும்பொழுதில்
தெரிந்தவர்கள்
பரிவு கொண்டு
வீட்டிற்கு வரச்சொல்லிய
அசௌகரியம் வராமல் இருப்பதற்கு.
அழைத்தவரின்
அப்பாவினுடைய
நோய்த் துயரை
கவலையோடு
காட்சிகளாக்கினார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: வான் அலைகளில் கலை பரப்பிய அப்பல்லோ சுந்தாவின் துணைவியார் கலாரசிகை பராசக்தி சுந்தரலிங்கம் விடைபெற்றார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வானொலி மற்றும் லண்டன் பி. பி. சி . யில் முன்னர் சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின் பாசமிகு தாயாரும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும், சேந்தன், சேயோன் ஆகியோரின் பிரியத்திற்குரிய பேத்தியாருமான திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான் அன்றைய நாளின் காலைப்பொழுது எனக்கு விடிந்தது.

சிட்னியிலிருந்து இலக்கியச் சகோதரன் கானா. பிரபா, காலை வேளையில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால், ஏதோ ஒரு கலை, இலக்கியப் புதினம்தான் சொல்லப்போகிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், அவர் அன்று சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தத் தகவலைத்தான் இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். எங்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகக் குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் தற்போது இழந்து நிற்கின்றோம். எம்மால் அக்கா என அன்புபொங்க அழைக்கப்படும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், எமது அந்த நேசம் இழையோடும் உணர்வுபூர்வமான குரலை இனிமேல் கேட்கமாட்டார்கள்.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிட்னிக்குச் சென்றிருந்தவேளையில், என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர்கள் கவிஞர் அம்பியின் புதல்வன் திருக்குமாரனும், புதல்வி மருத்துவர் திருமதி உமாதேவி சிவகுமாரனும்தான். அன்று அக்கா, எங்களைக்கண்டதும் உற்சாகம் பொங்க நீண்டநேரம் உரையாற்றினார்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளையின் ஆற்றல்மிகு ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா 2024 கனடா. - தகவல்: வென்சிலாஸ் அனுரா -

விவரங்கள்
- தகவல்: வென்சிலாஸ் அனுரா -
நிகழ்வுகள்
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்கு படங்களை ஒரு தடவை அழுத்தவும். -


 
கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது  சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி  கனடாவில் நடைபெறவுள்ளது.
 
தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை  இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து  ஏனையோர்க்கு  முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில்  பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே  வென்மேரி அறக்கட்டளை.

மேற்படி அறக்கட்டளையின்   முதலாவது விருது  வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில்  உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்  அறக்கட்டளையின் தலைவர்  வென்சிலாஸ் அனுரா தலைமையில்    நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து  ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான    இரண்டாவது சர்வதேச விருது  வழங்கும் விழா பிரான்ஸில்   நாட்டில் நடைபெற்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான    மூன்றாவது  சர்வதேச விருது  வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

அனைவரையும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

வென்சிலாஸ் அனுரா
நிறுவுனர்,
வென்மேரி அறக்கட்டளை

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் இசைத்தொடர் 42: 'இசைமரபுக்கு டாக்டர் S. இராமநாதன் அவர்களின் பங்களிப்பு’

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 813 0576 0745 | Passcode: 381740

மேலும் படிக்க ...

SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் வ.ந.கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம்.

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. விமர்சன உரையினைக் கேட்பதற்கான  இணைய இணைப்பு

வாழ்த்துகள்: எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமனுக்கு ரூபா 5 இலட்சம் நிதி நல்கை

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

           - எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் -

எழுத்தாளர்கள் ஜோர்ஜ். இ.குருஷேவ், கற்சுறா ஆகியோர் நண்பர்கள் சிலரின் ஆதரவுடன் நிதி திரட்டி ரூபா 5 இலட்சத்தினை இலங்கையிலிருந்து செயற்படும் எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் (இராசு தங்கவேல்) அவர்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். இதனை அமரரும் , தமிழ் மக்கள் ஜனநாயகி முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவருமான சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக வழங்கியிருக்கின்றார்கள்., நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள் அனைவருக்கும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஏகாநேகம் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
02 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                      -  ஓவியம்: AI -

தொலைபேசி ஒலித்த விதம் மது அழைக்கிறாள் என்பதை யசோவுக்குச் சொல்லாமல் சொன்னது. வேகமாகச்சென்று அதைக் கையிலெடுத்தவள், “ஓ, ரண்டு பேருமா இருக்கிறியள், எல்லாம் ஓகேயா?” ஆங்கிலத்தில் கேட்டாள்.

“எங்களிட்டை ஒரு நல்ல செய்தி இருக்கு,” மதுவும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள்.

“கர்ப்பமாயிருக்கிறாயா?”

தலையை மேலும் கீழும் ஆட்டிய மதுவின் முகம் திரையில் பிரகாசமாக மின்னியது.

“ஓ, கொரோனாக் காலம் கவனமாயிரு, அதோடை அவசரப்பட்டு ஒருத்தருக்கும் இப்ப சொல்லாதே”

“நாங்க ஒரு இடமும் போறேல்லை அம்மா, ரிலாக்ஸ்,”.

“அன்ரி, நீங்க பாட்டியாகப் போறியள்! இனித்தான் அம்மாவுக்குச் சொல்லப்போறன், அவ மகிழ்ச்சியில மிதக்கப்போகிறா,” பீற்றரின் வாய் புன்னகையுடன் அகல விரிந்திருந்தது.

‘சீ, சந்தோஷமா நான் வாழ்த்தியிருக்கலாம். கவனமாக இருக்கவேணுமெண்டது அவைக்கும் தெரியும்தானே…” தொலைபேசியை வைத்தவளுக்கு ஆதங்கமாக இருந்தது.

“கர்ப்பமா? தாய் ஆகுறதுக்கான தகுதி உனக்கு இப்ப இருக்கெண்டு நான் நினைக்கேல்ல” என்ற குணத்தின் அன்றைய வார்த்தை அம்புகள் அவளைக் கூறுபோட்டது நினைவுக்கு வர அவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணம்: நினைவுகூர் நிகழ்ச்சி - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன! - தகவல்: பொ.ஐங்கரநேசன் -

விவரங்கள்
- தகவல்: பொ.ஐங்கரநேசன் -
நிகழ்வுகள்
02 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பெற்றன. தாய்மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அதிக நூல்களை வெளியிட்ட பெருமை பேராசிரியருக்கு உண்டு.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து செல்வி சத்திய சங்கவி முகுந்தனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பெற்றது. கனடா தேசியப் பண்ணைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

வரவேற்புரையை எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது. வாழ்த்துரை அறிஞர் சாமி அப்பாத்துரை மற்றும் அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் ஆகியோரால் வழங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.  

மேலும் படிக்க ...

இருபத்தி நான்காம் வயதில் பாரதி : பகுதி II - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



01

பாரதியின் எழுத்துக்களில், மூன்று முரண்களை நாம் அடையாளப்படுத்தலாம்:

ஒன்று, அவனது ஆன்மாவில் (அல்லது சிந்தையில்) தட்டுப்படக்கூடிய முரண். இரண்டாவது, அவனது அரசியலில் காணக்கிட்டும் முரண். மூன்றாவது, அவன் தன் எழுத்தை ஓர் வாகனமாக வடிவமைக்கும்போது அங்கே எழக்கூடிய முரண். இம்முரண்கள் ஒவ்வொன்றும், தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப வாதிக்கப்படுவது விரும்பத்தக்கது. இதன் காரணத்தினாலேயே, இக்கட்டுரைத் தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன.

இதனால், பாரதியைக் கற்கும் இத்தகையவொரு செயற்பாட்டில், அவனது வளர்ச்சிக்கேற்ப, இக்கட்டுரைத் தொடரின் இறுதி முடிவுகள், மாற்றமுறலாம் என்பதனை ஆரம்பத்திலேயே கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

02

பாரதி என்ற இளைஞன், தன் 24ஆம் வயதிலேயே, மனித வாழ்வு பொறுத்தும், மரணம் பொறுத்தும், சிந்தித்துத் தெளிய முற்பட்டிருப்பது குறிக்கத்தக்கதாகின்றது. இதன்போது, இவ் இளைஞன் கூறுவான்: “உலக வாழ்க்கை மிகவும் நம்பத்தகாததாக இருக்கின்றது. எந்த நிமிசத்திலே மரணம் சம்பவிக்குமோ அல்லது எந்த நிமிசத்திலே நீக்க முடியாத நோய் வந்து சேருமோ (என்பதனை) நம்மால் நிச்சயித்துக் கூற இடமில்லை… பெரும்பாலர் துன்பக்கடலில் மிதந்து கொண்டே செல்லுகிறார்கள்… எத்தனைப் புயற் காற்றுகள்! எத்தனைச் சுழிகள்! எத்தனைப் பாறைகள்! நடுவே… சில சில இன்பத் தீவுகள்… மறுபடியும் அலைகள், சுழிகள், பாறைகள், புயற் காற்றுகள்… மிக மிகச் சில ஆறுதல்கள்…” (பக்கம் -235, ஜுலை 1906 : சக்கரவர்த்தி)

மேலும் படிக்க ...

எம்.ஜி.ஆர் என்னும் வள்ளல்! - - ஆய்வாளர்: கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 -

விவரங்கள்
- ஆய்வாளர்: கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 -
ஆய்வு
30 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஆய்வாளர்:  கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 | நெறியாளர்: முனைவர் தே. தேன்மொழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை - 117 --

முன்னுரை

புரட்சித் தலைவர் என்றும் மக்கள் திலகம் என்றும் மக்களால் அழைக்கப்படும் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகராய் இருந்து அரசியியலில் அடியெடுத்து வைத்து பல ஆண்டு காலம் மக்கள் பணியாற்றியவர். இவர் நடிகராய் இருக்கும்பொழுதே அன்றைய தலைமுறை இளைஞர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் பேசும் வசனங்களுக்காகவே இவர் நடித்த திரைப்படங்கள் பல மாதங்கள் ஓடியிருக்கின்றன. திரைத்துறையில் ஆளுமைமிக்க நடிகராக இருந்தபோதும் இவர் அரசியல் மீது கொண்டிருந்த விருப்பினாலும் மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகள் செய்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார். குறிப்பாக இவரின் வள்ளல் தன்மைக்காகவே இவர் தமிழ் மக்களால் இன்றைக்கும் மறக்க முடியாத மனிதராக அவர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்குத் தன்னலம் கருதாது மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் தன்மை பற்றி அவரை அறிந்த அறியாத மனிதர்கள் கூறும் செய்திகளைப் பதிவுசெய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

பாரதியாரின் குடும்பப் புகைப்படம்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
28 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதியார் தன் குடும்பத்தவருடன் நிற்கும் அரியதொரு புகைப்படம்.  17.2. 1982 அன்று வெளியான ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமான  'பாரதி தரிசனம்' தொடர் கட்டுரையில் இடம் பெற்ற புகைப்படம்.

என் யு டியூப் சானல்: வ.ந.கிரிதரனின் பாடல்கள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இங்குள்ள யு டியூப் தளத்தில் எனது பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பாடல்கள். இத்தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன். இதன் ஆரோக்கியமான அம்சங்களை நான் மிகவும் வரவேற்கின்றேன். பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல்களை பல்வேறு இசை வடிவங்களில் அல்லது கலக்கப்பட்ட பல்வேறு இசை வடிவங்களில், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இசை வடிவங்களில், பல்வேறு வாத்தியங்களைப் பல்வகைகளில் கலந்து பாடல்களை உருவாக்க இத்தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. அது இத்தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று.
மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நூல் அறிமுகம்
27 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குமரன் புத்தக நிலையத்துக்கூடாக, 2019ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா ரொறன்ரோவில் நிகழ்ந்தபோது எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால், அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. அண்மையில் வேலைக்காகச் சென்ற ஓரிடத்தில், என்னைச் சந்தித்த ரூபவதி நடராஜா அவர்கள், இந்த நூலின் ஒரு பிரதியை எனக்குத் தந்து, அது பற்றிய கருத்துக்களை கூறும்படி கேட்டிருந்தார். நேற்றுவரை இதனை வாசிப்பதற்கு எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. வாசித்ததும் உடனேயே இதனைப் பற்றி எழுதவேண்டுமென்ற உத்வேகம் ஏற்பட்டது.

தந்தைக்கும், கணவருக்கும் காணிக்கையாக்கப்பட்டிருக்கும் அவரின் இந்த நூல், அன்று யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் அவரது நூலகர் வேலையை (1974 -1987) எத்துணை விருப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருப்பாரென்பதை காட்டுகிறது. முன்னட்டையில் யாழ் நூலகத்தின் படத்தைத் தாங்கியிருக்கும் இதில், யாழ் மாநகராட்சி மன்றத்தின், மன்றக் கீதம் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது.

தேவ மந்திர கீத மொலிக்கும்
விளக்கிடு குர் ஆன் நாதமொலிக்கும்
ஓதிடு பைபிள் போத மொலிக்கும்
ஓங்கிய கோபுர மணிகள் ஒலிக்கும்

என சமத்துவத்தைக் கூறுமொரு கீதம் யாழ் மாநகரசபைக்கு இருக்கிறது என்பதிலிருந்து, பிராயச்சித்தம் தேடும் வெண்தாமரை இயக்கம்வரை இதுவரை அறிந்திராத பல விடயங்களையும் இதன்மூலம் நான் அறிந்துகொண்டேன்.

மேலும் படிக்க ...

அஞ்சலி! எழுத்தாளர் அ.சேகுவேரா மறைவு! ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுநா குழுமம் தன் முகநூற் பதிவில் ஊடகவியலாளரும், முன்னாட் போராளியும், வவுனியா பிரசைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும்,, எழுநா ஆவணப்பட வரிசைப் பொறுப்பாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அ.சேகுவேராவின் மறைவுச் செய்தியினை அறிவித்திருந்தது. ஆழ்ந்த இரங்கல்.

அ.சேகுவேரா என்ற பெயரைக்கேட்டதும் உடனடியாக நினைவுக்கு வந்தது பதிவுகள் இணைய இதழுக்கு இவர் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள்தாம்.  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்து தன் படைப்புகளை  அனுப்புவார். சில வேளைகளில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்தும் அனுப்புவார். அவரது கவிதைகள், கட்டுரைகள் சமுதாயப் பிரக்ஞை மிக்க அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. அதனால் அவற்றைப் பதிவுகள் பிரசுரித்தது.

படைப்புகளூடு மட்டுமே எனக்கு இவருடனான தொடர்பிருந்தது. நேரடியாக நான் அறிந்திருக்கவில்லை. எழுநா குழுமத்தின் இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவே எனக்கு இவரைப்பற்றிய நினைவுகள் மீள் ஏற்படுத்தின. இவரது நினைவாக இவர் அனுப்பிப் பதிவுகளில் வெளியான கட்டுரைகளை,கவிதைகளை மீளப்பதிவிடுகின்றேன். ஒரு வகையில் இவை ஆவணப்பதிவுகளாகவும்  இருக்கும் என்பதால் முக்கியத்துவம் மிக்கவை.

எழுத்தாளர் அ.சேகுவேராவின் பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகள்:


1. 08 மார்ச் 2014 - “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! - அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -      
    
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள்,  இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது.  குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.    

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலி: வரலாற்றுப் புனைகதைச் சேகரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
  2. அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -
  3. இரவு மெதுவாக வந்தது (The Night Came Slowly) - மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -
  4. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 41ஆவது நினைவு தினம்! 1983 ஜூலை 25 – 27 – 28 ஆம் திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -
  5. கறுப்பு ஜூலை நினைவுகள்! - முருகபூபதி -
  6. சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் - த.அகிலன் -
  7. இருபத்தி நான்காம் வயதில் பாரதி - ஜோதிகுமார் -
  8. அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கி -
  9. திரைப்படம் விமர்சனம்: இந்தியன் – 2 - சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்! - முருகபூபதி -
  10. காலமும் கணங்களும்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )! நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -
  11. யி டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!
  12. பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -
  13. கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன்--
  14. இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை' - ஊர்க்குருவி -
பக்கம் 30 / 115
  • முதல்
  • முந்தைய
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • அடுத்த
  • கடைசி