தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல்! - தகவல் : முருகபூபதி -
மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/88645005608?pwd=M1J5TS9TR3ZUbzVxZVVMQlcySFBJZz09
Meeting ID: 886 4500 5608 | Passcode: 334900
கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது. அதனையடுத்து அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார். அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பல வருடங்களாகப் பதிவேற்றினார். தேனீ இணைய இதழை தனிமனிதராக அர்ப்பணிப்போடு வெளியிட்டு, மாற்றுச்சிந்தனைகளுக்கும் சிறந்த களம் வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர். தேனீயில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன் ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும்போது அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.


வெள்ளையானையின் சித்தரிப்பின்படி, பஞ்சங்கள் சூழ்ந்த நிலையில், அவலங்களும் கொடுமைகளும் கண்முன்னே விரிய ஒரு வகையில், கூடவேஷெல்லியின் தாக்கத்தாலோ என்னவோ, சமூக நீதிக்கான உள்ளுணர்வு ஏய்டனை மேலே கூறியவாறெல்லாம், தடுமாறவைக்க, காத்தவராயன் தன் “கருணை அரசியலோடு” வந்து சேர்கின்றான். காத்தவராயனின் மேற்படி கருணை அரசியலால், இறுதியில், இந்தியாவின் முதல் வேலை நிறுத்தமும் ஐஸ் ஹவுசில் வந்து சேர்ந்ததாய் நாவல் விபரிக்கின்றது. வேலை நிறுத்தங்களை, அதன்போது வேகம் பெறும் மனித நடத்தைகளை, அங்கே ஒன்றிணையும் திரள்களின் தோழமைகளை ஒன்றிணையும் திரட்சியின் தியாகங்களை, விவரிக்கும் நவீனங்களை இலக்கிய பாரம்பரியம் அறியும். ஆனால் திரு.ஜெயமோகன் அவர்கள் முன்நிறுத்தும் வேலைநிறுத்தம் சற்று வித்தியாசமானதாகவே அரங்கேறுகின்றது. வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் தலித்திய வீரன் காத்தவராயன், வேலை நிறுத்தத்தை, கருணையின் அடிப்படையில் கட்டுவிக்க முனைகின்றான்.
பாயில் சரிகிற இரவுகளில், ‘அப்பனே முருகா!’ என்று ஆசுவாசத்துடன் படுக்கிற காலமொன்று இருந்ததை பரஞ்சோதி கண்டிருக்கிறாள். அது வெகுகாலத்துக்கு முந்தி. அம்மாச்சிபோல் அந்தளவு ஆசுவாசமாகத் தூங்கச் சரிந்த வேறெவரையும் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. ‘அப்பனே, சன்னதியானே!’ என்று அவள் முனகிச் சரியும்போது, அந்த ஒலியலைகளால் உலகமே நிறைந்து பனைவெளிக் காற்றும், தள்ளியிருந்த விரிகடல் அலையும்கூட அடங்கித் தோன்றும். அக்கணத்திலிருந்து விடியும் முன் வரும் எக் கணத்திலும், எருது வாகனமேறி யமதர்மன் வந்துவீசக்கூடிய பாசக் கயிற்றில் மிக இலகுவாக தன் உயிரைக் கழற்றிக் கொளுவிவிடும் நிறைவாழ்வின் பூரணம் அவளில் இருந்தது. விடிந்தெழுந்தால்தான் அன்றைய கடமைகள் பாரமாகும். அன்றைய நாளின் பூர்த்தி, அன்றைய வாழ்வின் பூர்த்தியாய் ஆசை, அவா, அவதி யாவுமறுத்து விரிந்திருந்த காலம் அது.


“ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.
(ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)


* ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி – ஆசிரியர் டாக்டர் சிவ.விவேகானந்தன் , வெளியீடு காவ்யா, விலை – 300
மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.



- பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புவோருக்கான அறிவிப்பில் 'ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே! உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது.'என்று கூறியிருக்கின்றோம். அத்துடன் 'பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும்' என்றும் கூறியிருக்கின்றோம். பதிவுகளுக்குப் படைப்புகள், எதிர்வினைகள் அனுப்புவோர் அவற்றில் தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கொப்ப ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவி பற்றிய கட்டுரைக்கான உடையப்பன் அன்பரசு லெனினின் எதிர்வினையில் சில சொற்பதங்களைக்கொண்ட சொற்றொடர்களைத் தவிர்த்திருக்கின்றோம். ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்துகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்காள் காட்டிய வீடியோ காட்சி, என்னை அதிரவைத்த காரணம், அதிலே அவளின் மகன் தனது இரண்டு கக்கத்திலும் கைத்தடியை வைத்தபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.
என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க முடிந்தது? செயற்பட முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட. இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









