கனடாவில் நடைபெற்ற எழுத்தாளர் கோமகன் நினைவு கூரலும், நடு 50 இதழின் வெளியீட்டு நிகழ்வும்! - வ.ந.கிரிதரன் -

இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.
முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.
அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.

 மேற்படி நடுக்கமூட்டும், ஆவிகளையும், ஆன்மாக்களையும் விட்டு இலக்கியத்துக்கு வந்தால், மரீனாவின் இலக்கிய அறிவும் கூட, வியக்கதக்கதாய் இருப்பதை கண்டு கிளிம் அதிசயிக்கின்றான். அது மிக மிக ஆழமானதாயும், சமயங்களில் உலக இலக்கிய வரலாற்றையே நாடி பிடித்து விடும் அளவுக்கு, பற்பல தளங்களுக்குள் ஊடுறுவுவதாகவும் அமைந்து விடுகின்றது.

 மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில்  ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )  எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.

 தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.
தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ். 'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.
'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர். முன்னுரை
முன்னுரை
 சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.

 ஹோரேஸ் ஹேமன் வில்சன் ஒரு ஆங்கில 'ஓரியண்டலிஸ்ட்' ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் முதல் போடன் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் (St Thomas’ Hospital) மருத்துவம் பயின்றார். மேலும் 1808 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ஸ்தாபனத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியா சென்றார். பொது அறிவுறுத்தல் குழுவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டு கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியின் படிப்பை மேற்பார்வையிட்டார்.

 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்
 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்  