இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான 'தமிழ் மகளிர் பேரவை' புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

இலங்கைத் தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது. தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர். அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.
இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.



தமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.


கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.




இவர் தம்பிராசா மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வி. பதுளையில் பிறந்தவர் தனது ஆரம்பக்கல்வியை பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் பெற்று பின் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கல்விகற்றவர். பின் யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டு. இலங்கைக் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தி்ல் விவசாய பீடத்தில் கலைமானிப்பட்டம் பெற்று அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். திருமணத்திற்கு பின்னர் நெதர்லாந்திற்கு புலம்பெயர்ந்து டச்சு மொழியை திறம்பட கற்றார். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். இவர் நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியவர். பின் அகதிகளுக்கான உதவிக்காரியாலயத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும்
அடுத்த நாள் எமது பயணம் ஹெக் (Hague), ரொட்டர்டாம் (Rotterdam), டெல்ஃவ்ற் (Delft) என்ற நெதர்லாந்தின் என்ற நகர்களுக்குள் ஊடாகச் செல்வதற்கு அம்ஸ்ரர்டாம் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உல்லாசப் பிரயாணிகளுக்கான இடத்தில் பதிவு செய்திருந்தோம் .
உலகிலை பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தாம் பலர். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம், வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு விட்டு தாமாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

கனடா, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 - 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கை நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், ஊடகவியலாளரான பி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
புலம்பெயர் தமிழ்ப்பெண்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலும் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். தமிழருக்கான வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றினர். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இயற்கையைப் பருகினர். அதன் இன்பத்தை அனுபவித்தனர். சங்க கால மக்களது இயற்கையின் நேசிப்பை மணிமாலா மதியழகனின் கதைகளில் காணமுடிகிறது. இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த பறவைகளின் இயல்புகளையும் அதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும் இவள்..? சிறுகதைத் தொகுப்புச் சுட்டுகிறது. மனிதர்களின் சிறுமைத்தனமான எண்ணங்களையும் கதைகள் விளக்குகின்றன. தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் இச்சிறுகதைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
தேர்ந்தெடுத்த படைப்பாளர்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் நான் வாசிக்கத் தோன்றும்போதெல்லாம் அவை நேராகவே என்னுடன் பேசுவது போலவும், அவை நித்திய ஜீவியாக என்னுடன் இருப்பதுபோலவும் நான் உணர்வதுண்டு. அந்த வகையில் இந்நூலை வாசிக்கும்போது அது என்னைச் சிறைப்படுத்தியது.



மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர் நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.
பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.

'ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ளபொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் 1955 வரை எழுந்ததாகத் தெரியவில்லை. மூதூரைச் சார்ந்த வ.அ.இராசரத்தினம் 1955 இல் ஈழகேசரியில் எழுதிய கொழுகொம்பு நாவலே இவ்வகையில் முதல் நாவலாகக் கிடைக்கிறது.' என்று ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் நா. சுப்பிரமணியன் எழுதியுள்ளார். கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்ட வகையில் தனிமனித உணர்வுசார்ந்த காதல், உறவு, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கொழுகொம்பு அமைந்திருக்கின்றது.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









