முன்னுரை
கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
பெயர்க்காரணம்
முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும் ஆகுவு முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சோ்த்து முருகு (ம் + உ, ர் + உ, க் + உ, முருகு) என்றானதால் இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
வேறு பெயா்கள்
முருகனின் வேறு பெயா்கள் சேயோன் அயிலவன், ஆறுமுகன் முருகன், குமரன், குகள், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, தஞ்சபாணி அல்லது தண்டபாணி, கதிர்காமன், முத்துவேலன், வடிவேலன், மயில்வாகனன், ஆறுபடை வீடுடையோன், வள்ளற்பெருமான், சோடாஸ்கந்தன், முத்தையன், சேந்தன், வசாகன், சுரேஷன், செவ்வேல், கடம்பன், சிவகுமரன், வேலாயுதன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன் போன்ற பல பெயா்களால் வழங்கப்படுகிறார். கொற்றவை சிறுவன் பழையோள் குழவி அறுவா் பயந்த ஆறமா் செல்சன் எனப் பலவாறாக அவ்வழிபாட்டுக் கடவுளான முருகனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆலமா் அசல்வன் அணிசால் மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரவ் பிறந்தோன் என்று பலவாறு வா்ணிக்கின்றன.