நிகழ்வு - சண்முகதாசன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும்!



டால்ஸ்டாய், இவ்வகை டால்ஸ்டாய்களை அறிந்தே இருந்தார்… ஒரு சமயம், ஒரு இளைஞர் Yasnaya Polyanaவில் வர்ணித்தார்: ‘வாழ்வானது எளிமையாக மாறியுள்ளது: –ஆன்மா தூய்மை நிறைந்ததாக மாறியுள்ளது - இது, டால்ஸ்டாயின் தத்துவத்தைப் பின்பற்ற தொடங்கியதிலிருந்துதான்’ என்றார்.
டால்ஸ்டாய் என்னிடம் குனிந்து முணுமுணுத்தார்: ‘போக்கிரி. அனைத்தும் பொய். ஆனால் என்னைச் சந்தோசப்படுத்துவதற்காகவும் இருக்கக் கூடும்…’
ஆகவே, பலரும் இதை முயல்வாராயினும், இறுதிக் கணிப்பில் அவர்கள் தோல்வியையே தழுவினர் எனலாம். அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எதை ஒன்றையும் முழுமையாய்ப் புரிந்ததாய் இல்லை.
ஆனாலும், என்னிடம், தமது வழமையான தலைப்புகளான-உலகளாவிய மன்னிப்பு, அண்டை வீட்டாரைக் காதலிப்பது அல்லது பரிசுத்த வேதாகமத்தை அல்லது உலகளாவிய உயரிய பௌத்தத்தைப் பற்றிக் கூறுவது – ஆகிய ஒன்றையும் என்னிடம் தொட்டார் இல்லை. ஏனெனில் மிக ஆரம்பத்திலேயே எனது ஈடுபாடுகள் குறித்து அவர் நன்கு அறிந்தவராய் இருந்திருக்கக் கூடும். ஆனால், இதனை மிக ஆழமான முறையில் நான் வரவேற்றிருக்கவே செய்தேன்.
பெண்கள் பொறுத்து அவர் பேசியவற்றை நான் மதித்தேன் இல்லை. காரணம் இப்பேச்சு, சில சமயங்களில் இயற்கைக்கு மாறாகவும் சற்றே பொய்மை கலந்ததாகவும் சில சமயம் மிக தனிப்பட்ட அந்தரங்க விடயங்களைத் தொடுவதாகவும் இருப்பதை நான் கண்டேன். யாரோ அவரை மிக ஆழமாகப் புண்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அக்காயத்தை அவர் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதாகவும் நான் கருதினேன்.

- தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் -
முன்னுரை
தமிழில் முத்திரை பதித்த மூத்த தமிழறிஞர். பள்ளி சென்று கல்வி கற்காமலே கற்றவரை வியப்பிலாழ்த்தியவர். முந்தைய தலைமுறையினருக்கு செந்தமிழ்ப் பற்றினை ஊட்டியவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருச்சியைச் சார்ந்தவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் போராளி ஆவார். தமிழுக்கு இவர்ஆற்றிய பணிகள் அளப்பரியன. 23 தமிழ் நூல்களை தமிழிலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
கி.ஆ.பெ அவர்களின் நூல்கள்
கி.ஆ.பெ அவர்கள் 1899ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது பெற்றோர் பெரியண்ணபிள்ளை, சுப்புலட்சுமி ஆவர். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் அறிவுக் கதைகள், அறிவுக்கு உணவு, ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்?எவர் வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள்-பாகம்1, திருக்குறள் புதைபொருள்-பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம், நல்வாழ்வுக்கு வழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம், வானொலியிலே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

ஆய்வுச்சுருக்கம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். எல்லா ஊர்களிலும் கோயில்கள் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு பெற்றிருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் அருள்வழங்கும் திருத்தலங்களுள் ஒன்று செங்கம் அடுத்த வில்வராணி எனும் கிராமத்தில் அமைந்துள்ள லிங்க சொருப சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு வருபவர்களின் 27 நட்சத்திரக்காரர்களின் அனைத்து தோஷங்களையும் விலக்கி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட சுப்பிமணியர் அருளாசி வழங்குகின்றார். இத்தலத்தை நட்சத்திரதலம் என்றும் நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர்.
முக்கியச்சொற்கள்
வில்வராணி, முருகன், சுப்பிரமணியன், நட்சத்திரக்குன்று, நட்சத்திரத்தலம்
முன்னுரை
செங்கத்துக்கு அருகில் வில்வராணி எனும் கிராமத்தில் மலையின் இடைபட்ட (நடுவில்) இடத்தில் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனை நட்சத்திரக்கோயில், நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர். இங்கு வந்து முருகனை வழிபடுவோரின் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவர் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை இக்கட்டுரையில் காணலாம்.

டோக்கியோவிலிருந்து கிழக்கே காமகுரா போகும் வழி கடற்கரைச்சாலை ஒரு பக்கம் கடற்கரை மறுபகுதியில் மலைத்தொடர்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலைத்தொடரின் மத்தியில் யப்பானின் முக்கிய ஃபூஜி மலை உள்ளது. இந்தியாவில் இமயமலைபோல், யப்பானிய மதச் சடங்குளிலும் இலக்கியத்திலும் ஃபூஜி மலை கருப்பொருளாக உள்ளது. தற்காலத்தில் வெளிநாட்டினரும் இங்கு செல்வதும் மலையேறுவதும் முக்கிய ஒரு விடயமாக உள்ளது.
நாங்கள் சென்ற இலையுதிர்காலத்தில் காலத்தில் பஸ்ஸில் போகும்போது பனிபடர்ந்த சிகரங்கள் மத்தியில் ஃபூஜி மலையை எங்களால் பார்க்க முடிந்தது . எரிமலையானதால் வெள்ளை பனி, மலை முகட்டிற்கு கொடுத்தகம்பிளித் தொப்பி போன்ற வடிவம் கவர்ச்சியானது. மலைச்சிகரம் பெரும்பாலும் மேகங்களால் மறைக்கப்பட்டு இருக்கும்.
அழகானதாக இருந்தபோதிலும் இந்த மலையை வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் ஏற முடியும். மற்றைய காலத்தில் பாதுகாப்பிற்காக மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்றார். ஃபூஜி மலை மற்றைய மலைகள் போன்றது அல்ல. அது ஒரு எரிமலை கடைசியாக 300 வருடத்திற்கு முன்பாக பொங்கியது. நமது நாடுகளில் வானிலை அறிக்கையில், மழை வெயிலைக் காண்பதுபோல் தினமும் ஃபூஜி மலையின் நடத்தைகளை அறிவிப்பார்கள் . டோக்கியோவிற்கு அண்மையில் ஃபூஜி மலை இருப்பதால் மக்கள் உணவுகளை வாங்கி வைப்பதும், எரிமலையின் பொங்கலை எதிர்பார்த்து இருப்பதுமான விடயங்கள் நடப்பதாக ரிச்சாட் சொன்னபோது எரிமலையை மடியில் கட்டியபடியே வாழ்க்கைதான் டோக்கியோ மக்களுக்கென நினைக்கத் தோன்றியது.
எங்களுக்கு மலையேறும் எண்ணம் இல்லாதபோதிலும் ஃபூஜி மலை பற்றிய சுவையான விடயங்கள் அறிய முடிந்தது. பத்து மணி நேரத்தில், தான் மலைக்கு ஏறியதாகச் சொன்னார் ரிச்சாட் என்ற அந்த இளைஞர். மலையின் மேல் குடிசைகள் உள்ளதால் ஏறுபவர்கள் மலையின் பல இடங்களில் தங்கிச் செல்ல முடியும் . யப்பானில் அடிக்கடி சொல்லும் வசனம் உள்ளது: “ஒரு முறையாவது ஃபூஜி மலை ஏறாமல் விட்டால் நீ முட்டாள் ஆனால் , இரண்டாவது தடவை ஏறினால் அதை விட முட்டாள் “.

* ஓவியம் AI
கோர்ட், சூட் சகிதம் கூலிங்கிளாசுடன் காரிலிருந்து ஒய்யாரமாக இறங்கிய விமலனைப் பார்த்ததும், பக்கத்து வளவில் வியர்க்க விறுவிறுக்கப் புல் வெட்டிக்கொண்டிருந்த பாஸ்கரனின் கரங்கள் அவனையறிமாலேயே புல்வெட்டும் மெசினை நிறுத்தின.
“அடேயப்பா, பென்ஸ் எண்டால் பென்ஸ்தான். சொக்கான கார்! உங்கட பிஎம்டபிள்யூவுக்கு என்னாச்சு?” பாஸ்கரனின் கண்கள் அகல விரிந்தன.
“சும்மா, ஒருக்கா மாத்துவமெண்டு நினைச்சன். வாழ்க்கையை அனுபவிச்சு வாழோணும்!” சாவிக்கொத்தைத் தனது வலது கைச் சுண்டுவிரலில் சுழற்றியபடி, தோள்களைக் குலுக்கினான் விமலன்.
“குடுத்துவைச்சனீங்க,” என்ற பாஸ்கரன், “சொகுசான கார் மட்டும்தான் வாழ்க்கையெண்டு இல்லை” எனத் தனக்குள் முணுமுணுத்தபடி முகத்தை மறுபக்கம் திரும்பிக்கொண்டான். அங்கே, அவனின் பழைய ரொயாற்றோ கொரலா, அதன் நெளிந்த இடது பக்கம் இன்னும் திருத்தப்படாத நிலையில், கறள் கட்டிய முன்பக்கம் தெரியப் பரிதாபமாக நின்றிருந்தது.
புல்வெட்டும் இயந்திரத்தை அவன் மீளவும் இயக்கினான். அது பெருத்த ஒலியுடன், புற்களைத் தனக்குள் மீளமீள வாரிக்கொண்டது. வரிக்கணக்குச் செய்துகொடுத்து எப்படித்தான் விமலன் இப்படி உழைக்கின்றானோ - அவனுக்குள் கிளர்ந்த பெருமூச்சின் வெப்பம் அவனைத் தகித்தது. ஏற்கனவே தொந்தரவுசெய்து கொண்டிருந்த அவனின் முதுகுடன், இணைந்துகொண்ட அவனின் கனத்துப்போன தோள்களும் அவனைப் பெரிதும் இம்சைப்படுத்தின.

ஒருமுறை, அவரது Yasnaya Polyanaவிலிருந்து, அவரது ‘எளிய மனிதர்களில்’ ஒருவரோடு நான் பயணம் செய்ய நேரிட்டது. இந்த எளிய மனிதர் கூறினார்: ‘கடவுளே என்ன இது… எப்பேர்ப்பட்ட மனிதர்… கண்டிப்பும்… நேர்த்தியும்… சீற்றமும்’. மேலும் கூறினார்: ‘ஏன். அவர் ஓர் அனார்க்கிஸ்ட்தான்’.
இந்த எளிய மனிதர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகவும், மிக பருத்த வயிற்றைக் கொண்டவராயும், பார்க்க பசிய இறைச்சியின் நிறம் கொண்ட தடித்த முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார்.
ஏன் இவர் டால்ஸ்டாயை ஒரு அனார்க்கிஸ்டாக காண்பதில் திருப்தி கண்டார்? இக்கேள்வியை ஆழ்ந்து அலசும் போதே, ரஷ்ய ஆன்மாவில் உள்ளடங்கும் ஆழ்ந்த ரகசியங்களையும் நான் கற்கக் கூடியதாக இருந்தது.
யாரொருவரையும் திருப்திபடுத்துவது என்றால், அது டால்ஸ்டாய்க்கு, கைவந்த கலையாக இருந்தது. ஒரு புத்திபூர்வமான பெண்ணை விட இதனை அவர், கச்சிதமாக நிறைவேற்றினார். பலதரப்பட்ட வட்டங்களுடன் கைகோர்த்தவர், அவர். ஒரே மேசையில் இவர்களுடன் தேநீர் அருந்தியவர்.
மாபெரும் கோமகன் நிக்கலாய், வீட்டுச் சாயம் பூசுபவன் இல்யா, ஒரு புரட்டஸ்தாந்து மதப்பிரிவைச் சார்ந்த பட்சுக், ஒரு இசைக்கலைஞன், ஒரு கோமகள், ஒரு கவிஞன்-இவர்கள் அனைவரையும் அவர் வெறித்து பார்க்க வைத்து விடுவார். Lao-Tse இன் (சீன தத்துவஞானி) தத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்க உரையாற்றி கொண்டிருப்பார். பல்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு சேர்ந்திசை (Orchestra) செய்கையை இவர் ஒருவராக நிகழ்த்துவதாக, அது காட்சி தரும். ஒரு ட்ரம்ப், ஒரு ட்ரம், ஒரு புல்லாங்குழல், ஒரு எக்கார்டியன்-அனைத்தையும் இவர் ஒருவராகவே வாசித்து கொண்டிருப்பார்.

முன்னுரை
பழங்காலத்தில் ஆயிரம் என்ற எண்ணிக்கை பேச்சுவழக்கில் பெரிய எண்ணாகக் கருதப்பட்டது. ஆயிரம் தடவை சொன்னேனே, ஆயிரம் தடவை போய் சொல்லி என்பது நாம் அறிந்ததுதான். தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர் புணரியல் விதிகள் விரிவாக குற்றியலுகர புணரியலில் இடம் பெற்றுள்ளன. எண்ண இயலாத அளவீடுகளைக் குறிக்க தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலான பெயர்களும், வழக்கில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் காண முடிகிறது. பரிபாடலில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன பேரெண்ணுப் பெயர்கள் என பாடப்பட்டுள்ளது. சங்கம் என்பது கோடி என்றும், தாமரை என்பது கோடாகோடி என்றும் சொல்லப்படுகிறது. கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுபெயர் வரும் இடங்களை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
சீதைக்கு, இராமனுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்
இராமன் வில்லை உடைத்ததைக் கேட்ட மிதிலை நகரத்து மக்கள் சந்தோஷமாகப் பேசினர். இராமனின் அழகைக் காண்பதற்குச் சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். இந்த அழகர்களைப் பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பது சிலர். இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பர் ஒரு சிலர்.
“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்
நம்பியைக் காண்மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார்
இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்”
(கார்முகப்படலம் 657)
ஆயிரம் கைகள்
தசரதன் சேனைகளுடன் சந்திர சயலம் விட்டுச் சோனையாற்றை அடையும்போது, நட்சத்திரங்களாகிய பற்களைப் பெற்ற இரவாகிய இரணியனைக் கோபித்து தொகுதியாக உள்ள வெப்பம் கொண்ட கதிர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆயிரம் கைகளை வெளியே நீட்டிக்கொண்டு, தான் தோன்றுகின்ற இடமாகக் கொண்ட உதயகிரி எனும் பொன் தூணிலிருந்து நரசிங்க மூர்த்தியைப் போல விளங்கும் சூரியன் உதயமானார்.

1995ம் ஆண்டு தமிழில் ஒரு அதிசயம் நடந்தது. அதுதான் பாப்பா பாரதி - மாவை நித்தியானந்தன் - அந்த நாட்களிலே, தொலைக்காட்சியில் தமிழ்க் குழந்தைகள் பார்த்து மகிழ எதுவும் இருக்கவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான். கடைகளில் குழந்தைகளுக்கான ஒரு தமிழ்க் காணொளி கூட இருக்கவில்லை. இந்த நிலையிலேதான், மிகக் குறைந்த தொழில்நுட்ப வசதிகளோடும், நிதி வசதியோடும் பாரதி பள்ளி மூன்று முழுநீளக் காணொளிகளைத் துணிச்சலுடன் தயாரித்தது. முழு உலகமும் இதைப் பார்த்து வியந்தது. பல்லாயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகள் இதில் வந்த பாட்டுகளையும், கதைகளையும், நாடகங்களையும் பார்த்துப் பரவசமடைந்தார்கள். திரும்பத் திரும்பப் பத்துத் தடவைகள், நூறு தடவைகள் என்று பார்த்தார்கள். ஏனென்றால், இதைவிட அவர்களுக்காக அன்று வேறெதுவுமே இருக்கவில்லை.
முதன்முதலில் நாடாவாக வந்த பாப்பா பாரதி, பின்னர் டிவிடி வடிவத்தில் வெளியிடப்பட்டது. எனினும், தொழில் நுட்ப சாதனங்களில் ஏற்பட்ட மாற்றங்களால், இவற்றின் பயன்பாடு தொடர்ச்சியை இழந்தது. இன்றைய நவீன தொழில்நுட்பச் சூழலில், குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. ஆயினும், பாப்பா பாரதி வித்தியாசமானது. ஆங்கிலத்தில் உள்ளதுபோல உண்மையான மனிதர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்றும் தமிழில் காண்பது அரிது.
எனவே, 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் பாப்பா பாரதிக்குத் தனியிடம் உண்டு என்ற நம்பிக்கையில், அதனைத் துண்டு துண்டாகப் பிரித்து, யூரியூப் வழியாக வெளியிடுகிறோம். இதனால் தமிழ்க் குழந்தைகள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.

ஜூலை முதலாந்திகதி எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்!
பாடல் (இசை & குரல் - Suno AI & ஓவியம் - AI) : புகலிட அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=OKPb1UeQF1Y
புகலிட அன்னையே! நீ வாழ்க!
பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே என்றென்றும் வாழ்க நீ!
புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!
இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.
பாடல் (இசை & குரல் - Suno AI & ஓவியம் - AI) : புகலிட அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=OKPb1UeQF1Y

முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்.
சொத்தாகத் தமிழைச் சேர்த்துமே வைத்தார்.
கம்பனைத் தொட்டார் கவிமழை பொழிந்தார்.
கண்ண தாசனாய் கவி மன்னரானார்.
பக்தியில் திளைத்தார் பரமனைத் துதித்தார்.
நெற்றியில் நீறும் பொட்டுமாய் திகழ்ந்தார்.
ஆலயம் சென்றார் அரனை வணங்கினார்.
ஆத்திக வாதியாய் ஆனந்தம் அடைந்தார்.
அரசியல் அலையால் அள்ளுண்டு போனார்.
ஆத்தீக அகத்தில் நாத்திகம் நுழைந்தது.
விதண்டா வாதம் பேசினார் எழுதினார்.
வீணாய்க் காலம் கழித்தார் இருளில்.

உயிர்வாசம்- அலை புரளும் பெருங்கடலை படகு மூலம் பயணித்து கடந்த கதை!
எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களின் 549 பக்கங்கள் நிரம்பிய 'உயிர்வாசம்'நாவலை வாசித்து முடித்தேன்.வாசகரை வரலாற்று வலிசுமந்த உணர்வுடன் பயணிக்கவைப்பது என்ற இலக்கிலிருந்து தளும்பாமலும், ஆழ்கடலில் எம்மையும் தத்தளிக்கவைப்பதுமாக அத்தனை வலிகளையும் வாசகனாகிய எனக்கும் உணரவைத்து,பயணிக்க வைத்துள்ளார் எழுத்தாளர்.எம்வரலாறு எமக்குக்கற்றுத்தந்த அனுபவங்களை இலக்கியக்கியத்திற்குள் உயிரோவியமாய் வரைந்து,உன்னத படைப்பாக்குதல் என்ற கடின உழைப்பை எழுத்தாளர் கையாண்ட யுக்தி பல இடங்களில் பேசுபொருளாக, பேரலைக்குள் மோதிய படகு ஆட்டங்கண்டதுபோல,கதாபாத்திரங்களின் போராட்ட வாழ்வியலை வாசித்த இந்த மனசும் இன்னும் விடுதலையாகி அமைதியாகவில்லை என்பதுதான் மெய்.
500 இற்கும் மேற்பட்ட பக்கங்களை வாசித்து முடிக்க நாட்கள் எடுக்கலாம் என்ற எண்ணம் வாசகருக்கு வருவது புதிதல்ல.நிஜத்தின் பிரதிபலிப்பையும்,வரலாற்று வடுக்களையும் வாசி என பக்கங்களைப்புரட்டியவர்களே கதாபாத்திரங்களான எம்மவர்தான்.அவர்களின் வலிகளும்,இழப்புக்களும் என இழந்தவற்றை கதாசிரியர் வடித்த உரையாடலின் உயிர்நாடித்துடிப்பே அவ்வளவு வேகமாக என்னையும் வாசித்து முடிக்கச்சொன்னது. 'உயிர்வாசம்'ஒவ்வொருவர் வீட்டிலும் வாழவேண்டிய இன்னொரு நிரந்தர உறவு.

டோக்கியோவில் தங்கிய மூன்றாவது நாள் காலையில் எங்களுக்கு ஓய்வு தரப்பட்டு, உங்களுக்கு விரும்பிய இடங்களுக்கு நீங்கள் செல்லலாம் எனச் சொல்லப்பட்டது. காலையில் எழுந்தபின் எங்கள் குழுவில் பலர் புலட் ரெயின் ஏறி டோக்கியோவின் மத்திய நகரத்திற்குச் சென்றார்கள். நாங்கள் ஏற்கனவே இரவில் டோக்கியோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என பிரத்தியேகமான பயணம் ஒழுங்கு பண்ணி இருந்ததால், நாங்கள் பகலில் போவதைத் தவிர்த்துக் கொண்டோம். டோக்கியோ உலகத்தில் பெரிய நகரம் அத்துடன் மொழி தெரியாது என்பதும் சிறிது பயத்தையும் அளித்தது. மொத்தமான டோக்கியோ நகரத்தில் 30 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் பாருங்கள்! அதாவது மொத்த அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்களை விட 5 மில்லியன் அதிகம்.
தமிழ்நாட்டில் வாழ்பவர்களில் அரைப்பகுதியினர் ஒரு நகரில் வாழ்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும் ?
டோக்கியோ இப்படி பெரிதாக உருவாகுவதற்கு காரணங்கள் உள்ளது: டோக்கியோ நகரத்தின் மத்தியில் மக்கள் வாழ்வதற்குக் விலை கட்டுபடியாகாது. உதாரணமாக ஒரு பட்டதாரியின் ஆரம்ப மாத ஆரம்ப வேதனத்தில் 75 வீதத்தை, ஒரு அறை கொண்ட அடுக்கு மாடிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அந்தப் பட்டதாரி தனது வேதனத்தில் 25 வீதம் பணத்தில் டோக்கியோவுக்கு வெளியே புற நகரில் அல்லது பக்கத்து நகரில் சகல வசதியுடன் வாழ முடியும். இதனால் மாத வேதனம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் சிற்றூழியர்கள் காலையில் மூன்று மணி நேரம் மாலையில், மூன்று மணி நேரங்கள் என ரெயிலில் நேரம் செலவழித்து வேலைக்கு, பல்கலைக்கழகம் எனப் போவார்கள். இவர்கள் பயணிக்க, நகரங்களை இணைக்கும் புலட் ரெயின் உதவுகிறது.

நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது செக்காவ் கூறினார்: ‘நம்ப முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைக் கண்டதில்லை என அவர் கூறுவதை!’. ஆனாலும், நான் அதை நம்பத்தான் செய்வேன். நம்ப மறுத்த ஒரு விடயம் உண்டெனில் அது அவர் பிறருக்காக வாழ்ந்தார் எனக் கூறுவதைத்தான். ஏனெனில், மிகுதியாக இருப்பதைத்தான் அவர் பிறருக்குத் தானமாகக் கொடுத்தார். அந்த பிறரையும் அவர் தன் வழியே (?) பயிற்றுவிக்கத் தவறவில்லை. வாசிக்க, நடைபயில, தாவர உணவைப் புசிக்க, கிராமத்து விவசாயிகளின் மேல் அன்பு செலுத்த, முக்கியமாக டால்ஸ்டாயின் மத நம்பிக்கைகளில் ஊறித்திளைக்க, மத சிந்தனையின் தாக்கத்திலேயே மயங்க…’
‘மனிதர்களிடம் இருந்து, தப்பி, விலகி தன்போக்கில் சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமெனில் அவர்களை எதிலாவது ஈடுபடுத்தி அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது முக்கியமானதாகின்றது. முக்கியமாக ஆழ்ந்து துன்புற்றுத் தனிமையில் வாழும் அந்த புனித மனம் ஆதியும் அந்தமும் அற்ற அந்தச் சக்தி பொறுத்து தனது தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருக்க…’… … …. ….
எனது ‘Lower Depths’ இன் கிழவர் லூக்கா மனிதர்களை விரும்புவது போல படைக்கப்படவில்லை. அவன் மனிதர்களுக்கு மேலாக, பதில்களையே–அவை பல்வேறு வகைப்பட்டதாக இருந்தாலும் - விரும்புவான். மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒருவனே அவன். மக்களை அவன் ஆற்றுப்படுத்தினான் என்றால் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே. மக்கள் தனது பாதையில் குறுக்கிட்டு விடாமல் இருக்க அவன் கைகொண்ட நடைமுறைகள் இவை.
இந்தத் தனிநபர்களின் அனைத்து தத்துவங்களும், பிச்சையை மக்களிடை வேண்டா வெறுப்புடன் விட்டெறியும் முறைமைத்தான். அவற்றின் அடியில், பின்வரும் முறையீட்டையும், அவலத்தையும் பயனற்ற தன்மையையும் கேட்கலாம்.:

எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கையிலிருந்து வெளியான சிறந்த தமிழ்ச் சிறுகதைகளிலும் ஒன்று என்று கூறலாம். இந்தச் சிறுகதை இலங்கையின் போர்ச்சூழலின் முக்கிய காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் அதே சமயம் , போர்ச்சூழலில் குடும்பங்களின் அலைதல்கள், அவை ஏற்படுத்திய மன உளைச்சல்கள், அமைப்பையே மாற்றிவிடும் உத்வேகத்துடன் எழுந்த இளையவர்கள்தம் கனவுகளின் சிதைவுகள், காரணமான அவர்களுக்கிடையிலான உள் முரண்பாடுகள், நண்பர்களின் இழப்புகள், பிரிதல்கள் என்பவற்றையெல்லாம் இந்த ஒரு சிறுகதை எடுத்தியம்புகின்றது.
ஒரு மழையிரவில் அவனுக்கு மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வான மழைக்காட்சியில் மனது மூழ்கிக்கிடக்கும் கதையின் நாயகனுக்கு அம்மழைப்பொழுது அவன் வாழ்வில் அவன் எதிர்கொண்ட மூன்று மழை இரவுகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. அவற்றை அவன் விபரிப்பதுதான் கதையாக விரிகிறது.
முதல் மழை இரவு இயற்கை நிகழ்வின் அத்துமீறல். இயற்கை அழகின் பின் மறைந்திருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டும், இயற்கையின் கோரத்தாண்டவத்தை விபரிக்கும் இரவு மழை அது. இரண்டாவது மழை இரவு இலங்கை அரச விமானப்படையினரின் குண்டு வீச்சையும், பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலம் நாடிய மக்களின் நிலையையும், பரிதவிப்பையும் விபரித்தால் அடுத்த மூன்றாவது மழை இரவு அமைதி காக்க வந்த அமைதிப் படை அமைதி கொல்லும் படையாகி புரிந்த அடக்குமுறைச் சூழலை விபரிக்கும்.

*
எங்கள் சூரிய பயல்
கொடி மின்னலில்
வெடி வெடிக்கும் மேகங்களில்
வானவில் பட்டம் ஏற்றுகிற
கோடை மழைக்காலம்.
*
போன வசந்தத்தில்
துருவங்களுக்கு பறந்து சென்ற
வலசைப் பறவைகளா இவை.
அதற்குள் மீண்டும் காதலிக்கவும்
கலந்து விளையாடி குஞ்சு பொரிக்கவும்
தேன் சிந்தும் ஈழ மண்ணை
தேடி தேடி வருகின்றனவே.
எங்கள் புலம்பெயர்ந்த பிள்ளைகள் போல
வாழத் தெரிந்தவை.
*
வானில் யூத கிபீர் விமானங்கள்
கொலைவெறியில் சுற்றிய போது கூட
எங்கள் சிறுவர்கள் ஓடி ஒழியவில்லை.
கண்மூடி மின்னல் பார்த்தும்
இடிக்கு அஞ்சுவதாய் நடித்தும்
ஆலங்கட்டி பந்தாடியும்
குதூகலமாக கும்மாளமடித்தனர்.
இதுவா போர் நிகழும் மண்?
இவர்களைத் தோற்கடிக்க முடியாது என
அன்றே நம்பினேன்.
நாம் தோற்கடிக்கப்படவில்லை போலும்.
பின்னடைவாகவே இருக்க வேண்டும்.
கங்கை கரை மரங்கள் என்றாலும்
எங்கள் வேர் பாதாளம்வரைக்கும்

1
(27-28 அக்டோபர் 1910 இல், தனது 82வது வயதில் டால்ஸ்டாய் தனது வீட்டை விட்டு (Yasnaya Polyana) மருத்துவருடன் வெளியேறினார் (Flight). 07 நவம்பர் 1910 இல் Astapovo ரயில் நிலையத்தில் இறந்தார்.
இது சம்பந்தமாக பல்வேறு சித்திரங்களை, மனம்போன போக்கில், பல்வேறு எழுத்தாளர்கள் தீட்டியிருந்தாலும், கார்க்கியின் இரு கடிதங்கள் முக்கியமானவை. ஒன்று அவரது அகல்வுக்குப் பின் உடனடியாக எழுதப்பட்டது. மற்றது, அதன் தொடர்ச்சியாக, அவரது மறைவுக்குப் பின் எழுதி முடிக்கப்பட்டது.
டால்ஸ்டாய் பற்றி எழுதிய Tomas Mann, Romain Rolland மற்றும் Stefan Zwigh ஆகிய மூன்று ஐரோப்பிய எழுத்தாளரின் கணிப்பிலும் கார்க்கியின் சித்திரமே விருப்பு வெறுப்பைத் தாண்டி, மிகச் சிறந்ததாய் யதார்த்தபூர்வமாக இருந்தது என்று கணிக்கப்பட்டது. ‘இது ஒரு மேதையின் திட்டமிட்ட தீட்டல்’ எனவும் Romain Rolland கூற நேர்ந்தது (பகுதிகளே இங்கு தரப்பட்டுள்ளன. இதன் மூலத்தை முழுமையாக வாசிப்பது வாசகருக்குப் பயன் தருவது).
புலமை மிகுந்த மேதையர் (Genius) என அழைக்கக் கூடியவர்களில், மிக உயரிய மட்டத்தை அடைந்தவர் டால்ஸ்டாய் என்பதில் ஐயமில்லை. ஆழ்ந்த சிக்கல் வாய்ந்தவரும், தன்னுடனேயே தான் முரண்படும் பண்புகளை எய்தியவருமாக இருப்பது இவரது குணாம்சமாகின்றது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே அற்புதமானது–மிக மிக அழகானது என்பதனைக் கூறியே ஆக வேண்டும். அற்புதம் என்று பொதுவாய்ச் சொல்லும்போது அது குறித்த அவரது நடவடிக்கைக்குப் பொருந்தி வருவது போல, அவரது ஆளுமைக்கும் பொருந்தியே வரும்.
நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்த பின்னரே, டால்ஸ்டாயின் அகலல் பொறுத்த தந்தியைக் கிடைக்கப் பெற்றேன். எனவே உங்களிடமிருந்த மனத் தொடர்பை அறுக்காமல், தொடர முடிவு செய்து விட்டேன். அதாவது, இக்கடிதத்தை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளேன். உண்மை. எனது குரல்வளையை யாரோ பிடித்து நசுக்குவது போல் இருக்கின்றது.

- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் வெளியாகியுள்ள ''திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்!' ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை. -
'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல் செய்திருக்கின்றது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக இதனைக் கருதலாம்.
இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய நல்லதோர் அறிமுகத்தையும் , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி. கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.

மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175 ஏக்கர் காட்டுக்குள்ளே நாம் நடந்து போக வேண்டும். இந்த காடு இருக்கும் நிலம் ஆரம்பத்தில் மன்னருக்கு சொந்தமானது .
நாங்கள் போனபோது பகல், இலையுதிர்காலத்து மம்மல்ப் பொழுதாகக் கசங்கி விட்டது. ஆனாலும் அக்காலத்தில் மட்டும் தெரியும் அருங்காட்சி : வானத்தை நோக்கி எரியும் தீக்கொழுந்துகளாக தெரிந்த யப்பானிய மாப்பிள் இலைகளைக் கண்களால் தரிசிக்க முடிந்தது. இயற்கையழகு எம்மை சுற்றிவரக் காடாகச் செழித்திருக்கும் இந்த இடத்திலுள்ள ஆலயம் வனத்திடையே மரத்தால் கட்டப்பட்ட அழகான கட்டிடம். நமது ஊரில் போல் கோயில் கட்ட இயற்கையை அழிக்கவில்லை.
இதுவே யப்பானில் பெரிய சின்ரோ ஆலயமாகும். கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் புதுவருடத்திற்கு முன்னைய நாளிலும் புதுவருட தினத்திலும் இங்கு வருவார்கள் . இந்த ஆலயங்களில் எங்கள் ஊரில் திருமணங்கள் நடப்பது போன்ற சடங்குகளும் நடக்கும். பிள்ளை பிறந்தால் அல்லது வயதுக்கு வந்தால் இங்கு அது ஒரு வைபவமாக நடக்கும்: எங்கள் கோயில்களில் நடக்காதது. மரணக்கிரியைகளை சின்ரோ ஆலயங்களில் நடத்த முடியாது. ஆனால் , பௌத்த ஆலயங்களில் நடத்தலாம் என வழிகாட்டி கூறினார்.மனிதர்களில் வாழ்வின் தருணங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஆலய வளாகத்தின் உள்ளே சென்றதும் தெரிந்தது: ஆலயத்தின் முன்பு ஒரு பலகை தொங்கியது. அதில் மடித்த கடுதாசிகள், பழங்களாகத் தொங்கின. நெருங்கிப் பார்த்தபோது புரிந்தது: நீங்கள், உங்கள் எதிர்கால விருப்பங்களை, வேண்டுதலை எழுதிப் போட முடியும். நான் ஒன்றை நெருங்கிப் பார்த்தபோது, விக்டர்- ஆன் இருவரது பெயர் எழுதி அதன் கீழ் அவர்கள் காதல் நிலைக்க வேண்டும் என ஒரு கடுதாசியில் எழுதியிருந்தது. அதாவது ஜப்பானியரைப் பின்பற்றி எங்களைப்போல் ஊர் பார்க்க வந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைத்தேன்.

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.
இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.

கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம். 493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை குமரன், எழுநா,ஆதிரை பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல். அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி.
தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய, சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை.
இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ
திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி "திருவிடர்கள்" அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார.

ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,
இவர் சொந்தமாக "ஓடம் "என்ற மாத இதழை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலர் அதில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்தோடு "ஆனந்த விகடன்* வார இதழின் ஆசிரியர் துறையில் சில காலம் பணியாற்றியுள்ளார். அதேபோல சாவி இதழிலும் சில காலம் நிருபராக பணியாற்றி உள்ளார்
இவர் 10 கவிதை நூல்கள் எழுதி உள்ளார் .அவற்றில் குறிப்பிடத்தக்கன விடியலை நோக்கி, இன்றைய செய்திகள், சுய தரிசனம், ஐந்தாவது யுகம் , கண்ணாடி நகரம், முச்சூலம், அம்மாவின் கோலம் ,ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல மற்றும் யூகலிப்டஸ் கவிதைகள் என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது* சுய தரிசனம் *கவிதை தொகுப்பு 1997 கான தமிழ்நாடுகலை இலக்கிய பெரு மன்றம் தமிழக அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவருடைய **அம்மாவின் கோலம்* கவிதை தொகுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் நடத்தி வருகிற எழுத்து அறக்கட்டளை விருதினை பெற்றது .அத்தோடு எழுத்து அறக்கட்டளை நிறுவனமே அந்த நூலை வெளியிட்டது.
துவக்கத்தில் மரபுக் கவிதை எழுதிக் கொண்டு இருந்தவர் படிப்படியாக வளர்ந்து புதுக்கவிதை நூல்களை வெளியிட்டார். 2006க்கு மேல் படிப்படியாக நவீன கவிதைக்கு மாறி நவீன கவிதையில் குறிப்பிடத்தக்க கவிஞராக விளங்கி வந்தவர்.
வாழ்வை தத்துவ நோக்கில் கவனிக்கும் கவிதைகள் இவருடைய பெரும்பாலான கவிதைகள். அத்தோடு சமூகம் சார்ந்த விஷயங்களையும் தன்னுடைய பாடுபொருளாக கவிதைகளில் வைத்துள்ளவர்... குறிப்பாக பெரும்பாலான இவருடைய கவிதைகள் சமகால அரசியலை பேசுவன..உலக மயமாக்களின் நல்விளைவு மற்றும் தீ விளைவுகளை பேசக்கூடியவை. இதற்கு உதாரணமாக இவரது கண்ணாடி நகரம் கவிதை தொகுப்பை குறிப்பிடலாம். மரபின் மூச்சை உள்வாங்கி நவீனத்துவத்தோடு வெளியிடுவது இவரது கவிதை பார்வை ஆகும்.

எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்:
1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.
2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால் பெரிய முக்கியமான விடயம் இல்லை.
3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள் இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.
4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?
5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம், என்றால் என்ன நியாயம்?
6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது .
7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.
8. எனது அசோகனின் வைத்தியசாலை, பண்ணையில் ஒரு மிருகம், வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத ஒரு பகுதி என சொல்கிறேன்.

வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை 'விதி வரைந்த பாதையிலே' என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல் ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்' வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது. நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.
வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது. வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது. 'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.