மரணித்தும் மறையாத மகாராணி! - சக்தி சக்திதாசன் - இலண்டன் -

ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை. இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ? இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.



கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல குறைவான அடிகளைக் கொண்டு விளங்கினாலும் முல்லைப் பாட்டில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். சங்க காலத்தில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் புலமையில் சிறந்து விளங்கினார்கள் என்பதை முல்லைப்பாட்டின் வழி காணலாம். “முல்லை சான்ற கற்பு” என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் ‘இருத்தல்’ ஆகும். போர்க் காரணமாகவோ பொருள் தேடும் பொருட்டோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறி பிரிவான். அத்தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும். இதுவே முல்லைத் திணையின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

அதாவது சர்வதேச நெருக்கடிகள், தனது உச்சத்தை தொட்டு, இழுப்பறி நிலைமைகள், யுத்த மேகங்களை உருவாக்கி வருகையில் இந்தியா போன்ற நாடுகளின், நடு நிலைமைத் தன்மை(?) பொருத்துக் கொள்ள முடியாததாகின்றது. 

எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது. உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.
ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று நிற்பது போல , ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும் ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் . அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! . 

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி, ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும் தேர்ந்த இலக்கிய வாசகர் சிற்சபேசன் அவர்களை எமது வாசகர் முற்றத்திற்கு அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர். 

நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.
நினைவுகளின் தடத்தில் - 23


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
முன்னுரை

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









