இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51 “நூல்களைப் பேசுவோம்” - அகில் -
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.
வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிப்பதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவில்லை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம்.
ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. 'மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு' என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
ஈழத்திலும் ஐரோப்பாவிலும் நீண்ட காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த, மூத்த பத்திரிகையாளர் 'ஈழநாடு" எஸ். கே. காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா பாரிஸ் மாநகரில் கடந்த மாதம் 25 -ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (25 - 05 - 2025) மாலை சிறப்பாக நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலை இலக்கியப் பத்திரிகைத் துறையினர், சமூக நிறுவனங்களின் பிரிதிநிதிகளெனப் பெருந்தொகையானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் விழா நாயகனின் உறவினர்கள், நண்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.
* ஓவியம் - AIஇன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய பாரதநாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.
சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவிலுள்ள நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். டாக்டர் கே.ராமநாதன்இ எம்.எல்.இ பி.எச்.டிஇ பிரணதி - அபிநயா - நடனக் கலைஞர தேவ தர்ஷினி - நடனக் கலைஞர் ருத்ரா - நடனக் கலைஞர் ஷஹானா - நடனக் கலைஞர் ஷாமிலி பிரியா - நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் குரு நடனமாமணி ஸ்ரீ மதி பூர்ணா புஷ்கலா ஒரு திறமையான பரதநாட்டிய நிபுணர் மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர். அவர் சென்னை மற்றும் திருச்சியில் கிளைகளைக் கொண்ட ஸ்ரீ பரதகலா அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.
இது ஆர்வமுள்ள கலைஞர்களிடையே பாரம்பரிய நடனத்தை வளர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பரதநாட்டியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு நடனமாமணி என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கியது. கலைகளுக்கான அவரது அர்ப்பணிப்புஇ தமிழக அரசால் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. கூடுதலாகஇ அவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிலம்பட்டம் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்இ பாரம்பரிய நடனத்துடன் பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் வென்றுள்ளார்.
இந்திய பாரம்பரிய கலைகளை உலகளாவிய தளங்களுக்கு எடுத்துச் செல்வதில் அவர் கொண்டிருந்த ஆர்வம்இ மலேசியா மற்றும் தாய்லாந்தில் சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வழிவகுத்தது. மலேசியாவில்இ அவருக்கு வாழ்நாள் தமிழ் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇ மேலும் தாய்லாந்தில்இ சர்வதேச நடன விழா 2017 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையுடன் பங்கேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க உத்திரகோசமங்கை கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நடன விழாவின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையாளரும் இவர்தான்இ இது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
'பாரதியார் சரித்திரம்' என்னும் இந்நூல் முக்கியமானதொரு நூல். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லதோர் ஆவணம். இந்நூலைப் பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி கூறுவது போல் எழுதியிருப்பவர் அவரது மகள் தங்கம்மா பாரதி.
சக்தி காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 1941. இணையக் காப்பகத்தில் இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பைத் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார். அதற்காக அவருக்கு என் நன்றி.
நூலை வாசிப்பதற்கான இணைய இணைப்பு
“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
தனிமையும் மௌனமும், ஒன்றுசேர,ஒரு மோன நிலையில் தரிசிக்க தெரிந்த மனிதர். இவ்விரண்டையும் பல்வேறு மனிதர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம் வாழ்நாட்களில் சந்தித்து இருக்கலாம். கண்ணதாசனில் இருந்து கலாம் வரையிலும் அல்லது பாரதியில் இருந்து கைலாசபதி வரையிலும் இவை இரண்டினதும், (தவத்தின் வலிமையானது) அவரவர் தெரிவு செய்யும் மட்டங்களிலேயே இருப்பதாய் இருக்கும். அதாவது, அவர்கள் எந்த மட்டங்களில் எவ்வாறு இவற்றை தரிசித்தனர் என்பதற்கான விடை அவர்களின் செயற்பாட்டின் சாரமாக வெளிப்படவே செய்யும்
(எழுத்திலும்).
‘தனிமை கண்டதுண்டு
சாரம் நிறைந்ததம்மா’
என்ற வரிகளின் ஆழத்தைக் கண்டுப்பிடித்து கோடிட்டவர் கைலாசபதி.
இதனைப் போலவே, தனிமையின் அழகை, தன்னளவில் கண்ணதாசனும் காணத்தவறினார் இல்லை:
‘தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி…’
எனக் கண்ணதாசனும் ஓர் உரையின்போது கூறியதும் கவனிக்கத்தக்கதே.
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்
எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே.
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்.
நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது.
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்.
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்.
* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!
தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 30-06-2025 தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும், கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு. ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும் செயற்படவுள்ளனர்.
* Photo by David Edelstein on Unsplash
மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது.
எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது.
யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது.
கவிஞர் ஜெயதேவனின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவாக எழுத்தாளர் பொன்.சுகுமார் எழுதிய கவிஞர் ஜெயதேவனின் 'கண்ணாடி நகரம்' கவிதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பிது. இக்குறிப்பு கவிஞர் ஜெயதேவனின் ஆளுமையை நன்கு விபரிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், சுற்றுச் சூழற் பாதுகாப்பு, விம்ப வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் நவகாலத்து மானுடர், விவசாயத்தின் தேவை, புலம்பெயர்தலின் வலி எனக் கவிஞரின் பன்முகப்பட்ட பார்வையினை வெளிப்படுத்தும் குறிப்பு. கவிஞர் நவீன தொழில் நுட்பத்தை நன்கறிந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதையும் மேற்படி குறிப்பு புலப்படுத்துகின்றது.
கவிஞர் ஜெயதேவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அதே சமயம் கவிஞரின் எழுத்தை, ஆளுமையை இத்தருணத்தில் அறிந்து கொள்ளலின் அவசியம் கருதிப் பொ.குமாரின் முகநூற் குறிப்பையும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள்.காம்
டால்ஸ்டாய் இறைவன் போலவே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். உடல்
உருக்குலைந்து, கசங்கி, சிறுத்துப்போய் இருந்தாலும் களைப்பினால் அல்லது சலிப்பினால் எழுந்ததாய் இருக்க வேண்டும்-உதடுகளைக் குழந்தைகள் போல் பிதுக்கி, குவித்துச் சீழ்கை அடிக்க முயன்று கொண்டிருந்தார்-எங்கோ ஒளிந்திருந்த ஒரு சிறு பறவையைத் தன் கூர்மையான கண்களால் தேடியப்படி. பற்றைகளும் அடர்ந்த தழைகளுமாய் இருந்த ஓரிடத்தில் இருந்து அந்த குருவி மறைந்தவாறே பாடியபடி இருந்தது. “உயிரை வாட்டி எடுக்கிறது. முழு உயிரையும் கொடுத்துப் பாடுகிறது… ஆனால் ஒரே ஒரு ராகம்… என்ன குருவி…”.
சிவந்த மார்பை உடைய இவ்வகை குருவிகளை நான் அறிவேன். சின்னஞ்சிறியவை. சொல்லத் தொடங்கினேன் - முக்கியமாக இக்குருவிகளில் இருக்கும் பொறாமை குணத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்டேன்.
“அப்படியா. பொறாமையா?-வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ராகம். இதற்குள் பொறாமை வேறு! மனிதனுக்கோ, அவனது இதயத்தில் ஆயிரம் ராகங்கள் உண்டு. அவனது ஆத்மாவில் இருந்து. இருந்தும் அவன் பொறாமை கொள்வதற்காகச் சபிக்கப்படுகின்றான்… எப்படி?”
“ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களில், அவ் ஆண்மகன் தான் சொல்ல நினைக்காத உண்மைகளைக்கூட அவளிடம் மனம் திறந்து ஒப்புவிக்கின்றான். அதன் பின்னர், அவன் அது குறித்தெல்லாம் முற்றிலுமாய் மறந்து போயிருப்பான். ஆனால், அவள்? அவள் அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பாள். ஏன்? தன்னைத் தாழ்த்திக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணம். பொறாமை இங்குதான் உருவாகின்றது. எங்கே தன்னைக் கீழ்மைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து பிறக்கின்றது. எனவேதான் உன் ஆன்மாவை இறுகப் பற்றுபவளே அபாயகரமானவள் - உனது ----- அல்ல”.
* அறிவித்தலைத் தெளீவாகப் பார்க்க, படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -
2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்
இயல் விருது - சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)
புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)
அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)
கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)
மொழிபெயர்ப்பு : நீட்ரா ரொட்ரிகோ நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan)
பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.
பெண்கள் பலம்:
ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
„நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்“
என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது.
அனுப்பும் படைப்புகளில் ஒழுங்காகத் தரிப்புக் குறிகள் இட்டு அனுப்புங்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற தரிப்புக்குறிகள் அற்று வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும். ஒருங்குறிகளில் படைப்புகளை அனுப்புங்கள். இயலாதவர்கள் பாமினியிலும் அனுப்பலாம். படைப்புகளுடன் புகைப்படங்களை, படங்களை இணைத்து அனுப்புபவர்கள் அவற்றுக்கான உரிமை இல்லாதவிடத்து அவற்றை அனுப்ப வேண்டாம்.
நிகழ்வுகள் அல்லது சிறப்புத் தினங்கள் பற்றிய படைப்புகளை உரிய கால அவகாசம் கொடுத்து அனுப்புங்கள். இறுதி நேரத்தில் அனுப்பினால் அவை நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. ஏனைய ஊடகங்களில் வெளியானவற்றை அனுப்பாதீர்கள். ஊடகங்கள் குறிப்பிடாதவாறு கிடைக்கப்பெறும் படைப்புகளே ஏற்றுக்கொள்ளப்படும்.
* Photo by David Edelstein on Unsplash
இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது.
ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்!
இலகுவான வழி?
எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது என்ற எனது கேள்வியை நாகரிகமாக எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக் கேட்டேன்.
அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை.
இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது.
அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை?
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
கலாநிதி ஜெயந்தி யோகராஜாவுடன் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைந்து ஆரம்பித்த ‘சாஸ்வதம்’ என்ற நாட்டிய அமைப்பு, அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
பிரதம விருந்தினர்களாக பாரதியவித்ய பவனின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீ நேக்கா நாயகர் அவர்களும், கலாமண்டலம் பாபறா நந்தகுமார், மற்றும் கலாமண்டலம் நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீ ஜெயந்தினி ஸ்ரீகரக்குருக்கள், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்தியா, கங்கேரி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து சிறப்பு நடனங்களை வழங்கியமையைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ரூபேஷ் கேஷி, சமிக்ஷா திவாகர், சுருதி பாக்கியராஜா போன்ற மற்றும் சில நாட்டியத் தாரகைகள் வித்தியாசமான கோணங்களில் தமது நாட்டியத் திறமையை வெளிக்காட்டி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.
அரசியல் படமாக இருந்தாலும் அதனைப் பிரசார நெடியின்றிக் கலைத்துவத்துடன் தர முயன்றுள்ளார்கள். பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்பு, வைத்தியர் பற்றாக்குறை, 2009 ஆம் ஆண்டு போர் வடுக்கள், எம்மவரே எமக்குத் துரோகிகள், அறிவுச்சோலை, ஆவணப்படுத்தலின் தேவையென பல வரலாற்று நிகழ்வுகளுக்கூடாக திரைக்கதை நகர்ந்து செல்கின்றது.
ஆரம்பத்தில் சிறுவனின் கையில் இருக்கும் புகைப்பட பிரதிச் சுருளின் தொகுப்பு, திரைப்படத்தின் நிறைவுப் பகுதியில் திருப்பு முனையாகக் காட்டப்படுவதும், மாநகரப் பொது நூலகத்தில் இருந்து, சிவப்பு நிற ஆவணத் தொகுப்புடன் வரும் சிவம் ஐயா அதனை மோட்டார் வண்டி பெட்டியில் வைப்பதும் அதனைப் பின் குளிர்சாதனப் பெட்டியில் பேணுவதும், புகழ், சிறுமியிடம் பென்சிலைக் கொடுப்பதும், குறியீடாக வரும் பூனை கிணற்றடியிலும் குளிரிசாதனப் பேட்டியில் இருந்து ஓடுவதும், யாழ் நூலகம் எரிந்த அன்று குழந்தை பிறப்பதுமாக வரும் காட்சிகளினூடாகக் கதைத் தொடர்ச்சியினைக் காண முடிகின்றது. அத்துடன் பல திருப்புமுனைகள உருவாக்கும் வகையில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவை கதைக்கருவிற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன. வரலாற்றை அறிந்தவர்களால் இத்திரைப்படத்துடன் இன்னும் இரசனையுடன் ஊடாட முடியும்.
முன்னுரைபண்டைக் காலத்திலே சமண சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலை பெற்றிருந்தது. இந்த சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றி விட்டது. சமணர்கள் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வது பேரறமாகக் கொண்டிருந்தர்கள். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டிலே சமண சமயம் வேரூன்றியது. சமண சமயம் தமிழின் சிறந்த சங்க இலக்கியங்கள் இலக்கண நூல்கள் அறநூல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
சமணம்
சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் போன்ற பெயர்கள் உள்ளன. சமணர் என்பதற்குத் துறவிகள் என்று பொருள். சமணம் என்பது துறவு எனப் பொருள்படும். சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. மேலும் சமணத்திற்குப் பலன்களையும் கர்மங்களையும் வென்றவர் எனவும் கூறலாம். ஆதலால் தீர்த்தங்கரருக்கு ஜீனர் என்னும் பெயருண்டு. ஜீனரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது.
சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும், அதனால் இந்த மதத்திற்கு ஆருகத மதம் என்று பெயர் வழங்கப்படுகிறது. சமணக் கடவுள் பற்றற்றவர். ஆதலின் நீர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதனால் நிகண்ட மதம் எனப் பெயர் பெற்றது.சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது.ஆகவே இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் எனப்பெயர் உண்டாயிற்று.
சமண முனிவர் ஒழுக்கம்
வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று சமணர் இரண்டு விதமாகப் பிரித்துள்ளார்கள் . இவ்விரண்டினையும் சாவக தர்மம் ஆதிதர்மம் என்றும் கூறுவர். இல்லறம் என்பது சாவக தர்மம் மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம் உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கம் ஆகும்.
“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”
ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.
என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை.
எழுத்தாளர் சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?
இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் அல்லது கருத்துகள் இவை