சிறுகதை: மாட்டுப் பிரச்சனை - கடல்புத்திரன் -
சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது .
எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் . மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல் கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது . பின்வளவின் மத்தியிலே இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடிய கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ....நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ?