யப்பானில் சில நாட்கள்:3 சென்சோஜிபுத்தஆலயம் (Sensoji temple in Asakusa) - நடேசன் -

நாங்கள் சென்ற அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில் யப்பான் வருபவர்கள் எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும் இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது.
நமது நாடுகளில் உள்ளது போல் புத்தரை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் தேரவாத புத்த கோயில் அல்ல . மகாயான புத்தகத்தில் சொல்லப்படும் போதிசத்துவரான அவலோகிஸ்வரர் தெய்வம் இங்கு பெண் (Kannon, the Goddess of Mercy in Japanese Buddhism) உருவம் கொண்ட தெய்வமாக வழிபடப்படுகிறார் – அதாவது கருணையின் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் துன்பங்கள், தேவைகள் மற்றும் இயற்கையின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் தெய்வமாக கருதி வழிபட இங்கே வருகிறார்கள். இதில் விக்கிரக வழிபாடுகள் உள்ளது. ஒரு விதத்தில் எங்கள் பெண் தெய்வங்கள் துர்க்கா, காளி என்பது போல் தான் .
எத்தனை பேர் வந்தாலும் யப்பான் சுத்தமான இடம். யப்பானில் பல இடங்களில் குப்பை போடும் கலயங்கள் இருப்பதில்லை . குப்பைகளை நீங்கள் கொண்டு செல்லவேண்டும் என்பதால் எல்லோரும் பொறுப்பாக நடக்கிறார்கள் . நான்கூட சில குப்பைகளை வைத்து இரவு வரையும் அலைந்தேன்.


இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.


தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.

இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.

“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து





அனுப்பும் படைப்புகளில் ஒழுங்காகத் தரிப்புக் குறிகள் இட்டு அனுப்புங்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற தரிப்புக்குறிகள் அற்று வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும். ஒருங்குறிகளில் படைப்புகளை அனுப்புங்கள். இயலாதவர்கள் பாமினியிலும் அனுப்பலாம். படைப்புகளுடன் புகைப்படங்களை, படங்களை இணைத்து அனுப்புபவர்கள் அவற்றுக்கான உரிமை இல்லாதவிடத்து அவற்றை அனுப்ப வேண்டாம்.
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









