உலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி
* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -
அணுவைப் பிளந்தார்கள்!
1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது! ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார்! அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.
ஜெர்மன் வெளியீடு "பயன்படும் இரசாயனம்" [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, "கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது" என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்! சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து. பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

- * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். - 
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு 'பாரம்பர்யக் கட்டடக்கலை' என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.
ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள். 
இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.
ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.
சிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன? தத்துவத்தால் என்ன பயன்..? பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும்.
-டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.


தொழில் நுட்ப வளார்ச்சியால் நித்திய வாழ்வைப் பெறாலாம் எனப் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறுபவர் கூகிளின் (Google) பொறியியல் பணிப்பாளாரில் (director) ஒருவரான றே கேர்ஸ்வில் (Ray Kurzweil) ஆவர். 68 வயதான இவர் இன்னும் முப்பது வருடங்களில் இது சாத்தியமாகும் என எதிர்வுகூறி 2045 வரை வாழ்ந்து நித்திய வாழ்வை அடைவதற்காக தனது தேக, மன ஆரோக்கியத்தை மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார். அவருடைய முக்கிய கருதுகோள், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, நேரியல் (linear) வீதத்தில் இல்லாமல் அடுக்கேற்ற (exponential) வீதத்தில் நடைபெற்றாலும் அதனை நாம் உணராமல் இருப்பதே. 




"ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்." என்றார் தீனக் குரலில். காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது. 'ஐயா' என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது. இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions) காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பௌதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நியமான துறையில்; ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின்போது குருதி இழப்பினால் மரணத்தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட்டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. (முழமையான விபரங்களை இணையத்தில் தேடுங்கள்)
டிசம்பர் 2012 உயிர்மை இதழில் வெளியாகியுள்ள 'ராஜ்சிவா'வின்
July 7, 2012- The world is celebrating the discovery of the sub-atomic particle at CERN, Geneva, which many believe could well be the long sought after Higgs-Boson. This particle is also called the ‘God Particle’ because its existence is fundamental to the creation of the universe. School physics teaches us that everything is made up of atoms, and inside atoms are electrons, protons and neutrons. They, in turn, are made of quarks and other subatomic particles. Scientists have long puzzled over how these minute building blocks of the universe acquire mass. Without mass, particles wouldn't hold together and there would be no matter.
தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.
Dr Aubrey De Grey also believes that the first person to live to 1,000 will be born in the next two decades. It's a milestone that few, if any, of us expect to reach. But the first person who will live to see their 150th birthday has already been born, according to a leading scientist. Even more incredibly, Aubrey De Grey believes that the first person to live for 1,000 years will be born in the next two decades. The biomedical gerontologist and chief scientist of a foundation dedicated to longevity research claims that within his own lifetime doctors will have all the tools they need to 'cure' ageing. This will be done, he believes, by banishing all diseases and extending life indefinitely. Dr De Grey said: 'I'd say we have a 50/50 chance of bringing ageing under what I'd call a decisive level of medical control within the next 25 years or so. 'And what I mean by decisive is the same sort of medical control that we have over most infectious diseases today.' The British scientist sees a time when people will go to their doctors for regular 'maintenance', which by then will include gene therapies, stem cell therapies, immune stimulation and a range of other advanced medical techniques to keep them in good shape.
CAMBRIDGE, ENGLAND—British scientist Stephen Hawking has decoded some of the most puzzling mysteries of the universe but he has left one mystery unsolved: How he has managed to survive so long with such a crippling disease.
NOTE: This article has been edited from a previous version. Theoretical physicists may have found the missing key to the workings of the universe: the Higgs boson, a subatomic particle thought responsible for giving mass to all particles in the universe. A group of 3,000 scientists around the world, including seven faculty members and several graduate students from the University of Toronto, have contributed to the research. They don't have enough evidence to declare it a discovery yet, but this is the closest the Higgs hunters have come to the particle in more than 40 years. But why is this important? Robert Orr, the founder of the U of T research team, explains in the following edited interview with the Star.
அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான 'ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)' என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் 'ஒருங்குறி' எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.'
முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பைப்பற்றி ஆதாரங்களுடன் விபரிக்க முற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எமது சிற்றறிவுகொண்டு இப்பரந்த முடிவற்ற பிரபஞ்சத்திலே வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பை மறுப்பது இப்பூமியிலே மனிதனது இருப்பை மறுப்பதற்கு ஒப்பானது.
பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உலக மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வடிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









