தொடர் நாவல் : சுதந்திர மனிதன்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!
சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.
எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது? ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.
இரவுகளில் நட்சத்திர வானைப்பார்த்து மெய்ம்மறக்கும் இயல்பு அவனுக்கு அவனது பால்யப் பருவத்திலிருந்தே அவனுக்கிருந்தது. அதற்குக் காரணம் அவனது தந்தைதான். பூமத்தியரேகைக்கண்மையிலிருந்த வெப்பமண்டலத் தீவொன்றில் பிறந்தவன் அவன். பகலும், இரவும் சமமாகப் பிரிக்கப்பட்ட பிரதேசத்தில் ,இரவுகளில் அவன் தந்தை சாய்வு நாற்காலியில் அண்ணாந்து சாய்ந்தபடி விரிந்து ,பரந்திருக்கும் இரவு வானைப்பார்த்திருப்பார். அவரது சாறத்தொட்டிலுக்குள் படுத்திருந்தபடி அவனும் அண்ணாந்து பார்த்தபடி , இரவு வானை, அங்கு கண்சிமிட்டும் நட்சத்திரக் கன்னியரை இரசிப்பான்.
காலம் எவ்வளவு தூரம் விரைந்தோடி விட்டது? பருவ மழை பொழியும் வெப்பமண்டலத்திலிருந்து , பருவப்பனி பொழியும் குளிர் மண்ணுக்கு அவனது இருப்பு மாறி ஆண்டுகள் பல ஓடிவிட்டிருந்தன. போரும், சமூக,ம் அரசியல், பொருளியற் சூழலும் அவன் இருப்பை நிர்ணயித்ததன் விளைவு அவனது புலம்பெயர்தலுக்கான முக்கிய காரணம்.
இந்த இட மாற்றம் அவனைப்பெரிதும் பாதித்ததா? இல்லையென்றே கூற வேண்டும். அங்கிருந்தால் எப்படியிருப்பானோ, எப்படிச் சிந்திப்பானோ அவ்விதமே இங்கும் அவன் இருந்தான். சிந்திக்கின்றான். இருப்பை எதிர்கொள்கின்றான். உண்மையில் நவீனத் தொழில் நுட்ப வசதிகள் இருப்பை மிகவும் எளிதாக்கியிருந்தன என்றும் கூறலாம். ஒரு விதத்தில் இருப்பைப் பொருளியல்ரீதியில் கொண்டு நடத்தத் தொழில் நுட்பம் மிகவும் உதவியிருக்கின்றதென்றே கூற வேண்டும். சமூக ஊடகங்கள் அவனைப் பொருளியல்ரீதியில் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறியிருந்தன என்றும் கூறலாம். வீட்டிலிரிந்து சுய தொழில் முனைவனாக வேலையாற்றவும் தொழில் நுட்பம் வழி சமைத்தது. இப்போது மேலதிகமாகப் பொருள் ஈட்டவும் வழி காட்டியிருக்கின்றது. இது அவனது சுய சிந்தனைகளுக்கு , சுய விருப்புகளுக்கு மேலும் உரமூட்டிச் சிறகடிக்க வைத்திருக்கின்றது.
இருப்பு பற்றிய தேடல் எப்போதும் அவன் இருப்பினோர் அம்சமாகத்தான் இருந்திருக்கின்றது. இருந்து வருகின்றது. இருக்கும் வரையிலும் இருந்து வரும்.
அர்த்தத்துடன் இங்கு வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமென்றால் அர்த்தமுண்டா ? இருப்புக்கு அர்த்தமுண்டா? இடை விடாமல் அவன் இருப்பில் இன்றுவரை தொடர்ந்து வரும் வினா. இதற்கான விடைதான் என்ன? அர்த்தமுள்ள விடை இதற்குண்டா? அல்லது இல்லையா? அர்த்தத்தடன் வந்தோமென்றால் ஏன் வந்தோம்? அர்த்தம்தான் என்ன? அர்த்தமில்லையென்றால் எதற்கு வந்தோம்? எதற்கு இந்த இருப்பு?
சிந்தனைகள் சுதந்திரனைத் துரத்துகின்றன. விடாமல் துரத்துகின்றன. இருப்புக்கு ஒரு சாரமுண்டா? சாரம்தான் இருப்பை நிர்ணயித்ததா? அல்லது இருப்புத்தான் சாரத்தின் அடித்தளமா? இருப்பற்று சாரமில்லையா? ஏன்? ஏன்? ஏன்?
இந்தக்கேள்வி எழுந்தால் சிந்தனைக்கொரு முடிவே இல்லை. விரிந்திருக்கும் காலவெளி நிரந்தரமானது அல்ல. இயங்கிக்கொண்டிருப்பது. இடைவிடாது , ஓய்வேதுமற்று இயங்கிக்கொண்டிருப்பது. ஒவ்வொரு கணமும் இடம் மாறிக்கொண்டிருப்பது. இதில் நிலைத்து நிற்பதென்று எதுவுமேயில்லை இயக்கம் தவிர. மாறுதல்கள் தவிர. இதில் அவனது இருப்பு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
இருப்பு தற்செயலானது. முக்கியத்துவம் அற்றது. தற்செயலான ஒன்றினுள், முக்கியத்துவம் அற்ற ஒன்றினுள் இருக்கும் இருப்புக்கு அர்த்தம் கண்டு இருப்பதில் ஏதும் அர்த்தமுண்டா? ஆனால் அப்படியும் இருக்காவிட்டால் இருக்கும் வெறுமைக்குப் பதில், அப்படி அர்த்தம் கண்டு இருப்பதால் உருவாகும் அர்த்தம் இருக்கும்வரை திருப்தியை, இன்பத்தைத் தராதா? தரும் அல்லவா? சுதந்திரனின் சிந்தனைகள் இவ்விதமும் இருப்பது அவன் இருப்பின் இயல்பு.
இவ்விதமாக இருப்பு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தவன் இறுதியில் வழக்கம்போல் ஒரு முடிவுக்கு வந்தான். இருப்புக் காரணம் அர்த்தம் அல்ல. அர்த்தத்துக் காரணம் இருப்பே. சாரம் அற்ற இருப்புக்குச் சாரம் தருவது இருப்பே. இதுவே சரியானது என்று தனக்குத்தானே ஒரு தடவை கூறிக்கொண்டான் சுதந்திரன். இவ்விதம் சுதந்திரன் கூறிக்கொண்டாலும் அவனது இருப்பு பற்றிய விசாரம் இத்துடன் நிறைவுக்கு வந்து விடுவதில்லை. அடுத்த நாளிரவும் மீண்டும் அவன் வந்து இந்தச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து , இரவு வானை நோக்கும்போது முதலிலிருந்து ஆரம்பித்து விடும். முடிவில் இவ்விதம் முடிந்தாலும் , அது அப்பொழுதுக்கான ஒரு முடிவே. தற்காலிகமான தீர்வே. மீண்டும் மற்றோர் இரவில் மீண்டும் அவ்விசாரம் தொடங்கும் வரையிலான தற்காலிகமானதொரு தீர்வே.
இவ்விதமாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுதந்திரனை நித்திராதேவி பூரணமாக ஆட்கொண்டபோது, அவன் நிலையைக் கண்டு தொலைவில் , கவிந்திருந்த வெறுமைக்குள்ளிருந்த, காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாசம் செய்து கொண்டிருந்த நட்சத்திரக் கன்னியர்கள் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
[தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் AI


இந்தியத் திரைப் படஉலகம் மட்டுமின்றி அகில உலக் திரைப் பட உலகிலேயே மிகவும் பெருமையாகப் பாராட்டப் படுபவர் திரு சத்யஜித் றேய் அவர்கள். அத்துடன்; வங்காளத் திரைப் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்; திரு சத்யஜித் ராய்.
1. வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
அசோக மரங்களின் குவியல் அடர்த்தியான நிழலைக்கொண்டு வந்திருந்தது. மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகள் திரைப்பட விழாவுக்கானது என்றில்லாமல் அயனக்ஸ் திரையரங்குகளின் நிரந்தரத்தன்மையால் உருவாக்கப்பட்டவை. மண்தரையின் ஈரம் இன்னும் குளுர்ச்சியைக் கொண்டு வர முயற்சித்தது.
அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான் ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர் அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார்.

கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 
பெப்ருவரி 5 அன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் 'பொதுஜனபெரமுன' கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை வென்ற இராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென்று நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கையிலெடுத்தபோதுதான் லக்மாலி ஹேமச்சந்திரா இவ்விதம் பதிலடி கொடுத்தார். 1989இல் பிறந்த லக்மாலில் ஹேமச்சந்திராவின் இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. சிங்கள இளந்தலைமுறையினர் எவ்வளவுதூரம் காலத்துடன் மாறி வந்திருக்கின்றார்கள் என்பது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது. தமிழ் , முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் லக்மாலி ஹேமரத்தின போன்று தம் இன அரசியல்வாதிகள் இனவாத்த்தைக் கையில் எடுக்கும் சமயங்களில் அவர்களைத் தட்டி வழி நடத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதில் இனவாதத்தை எந்நேரமும் கையிலெடுப்பதைக் கண்டிக்க வேண்டும்.

கண்விழித்த விக்ரமின் முகத்துக்கு முன், இரண்டு கோடுகளுடன் இருந்த test kitஐ ஊசலாட்டியபடி மலர்ந்து சிரித்தாள் வர்ஷி. “Oh, my god!” என்றவண்ணம் குதித்தெழுந்தான் அவன். எழுந்தவேகத்தில், உணர்ச்சிப்பெருக்குடனான முத்தங்களை அவள் மேல் மழையாகப் பொழிந்தான். அவளின் நரம்பு முனைகள் ஜில்லிட்டன. பரவசமாகிப்போன அவளுக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. அவனின் இதயம் சலங்கைகட்டி ஆர்ப்பரித்தது. அந்த மகிழ்வின் உச்சம் மிகுந்த நெகிழ்ச்சியுடனான கலவிக்கு அவர்களை அழைத்தது. முதல் கலவியைவிட இது இத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறதே என அவர்கள் கிறங்கிப்போனார்கள். உள்ளங்காலிலிருந்து உச்சம்தலைவரை அவளுக்குச் சிலிர்த்தது.
- கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன்,உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
மாவட்டம் – தர்மபுரி

மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் 'அரசியல் யதார்த்தவாதம்' (Political Realism) மற்றும் மகாத்மா காந்தியின் 'தார்மீக அரசியல்' ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறையற்ற எதிர்ப்பு (Satyagraha) மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (Sarvodaya) மூலம் காந்தி எப்படி ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கினார் என்பதை விளக்குகிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பின் பாடலுக்கு, நடன ஆசிரியர் திருமதி தயாளினி ஜீனராஜின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இந்தப் பாடலை அகணி சுரேஸ் எழுத, சி. சுதர்சன் இசையமைக்க, மயூரதி தேவதாஸ் பாடியிருந்தார். அடுத்து திருமதி கலைமகள் புஸ்பநாதனின் வரவேற்பு உரை இடம் பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் இளையதலை முறையினருக்கான, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ‘வதனம்’ எட்டாவது இதழும், திருமதி கமலவதனா சுந்தா எழுதிய சிறுவர்களுக்கான ‘தைப்பொங்கல்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.
காலை ஏழு மணி. வெயில் ஆறுமணிக்கே விழத் தொடங்கியிருந்த கோடை காலக் காற்றிலும் குளிர் இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன் மரக் கூம்புகள் கொண்ட மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத் தெரியும் வரை இந்தப் புகார் இருக்கும்.


இனி எமது நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கலாமோகனிற்கான வரவேற்பும் அங்கீகாரமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரு தெளிவற்ற சித்திரம் ஒன்றே எம்முன் தென்படுகின்றது. கலாமோகன் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றில் சில தமிழின் மிகச்சிறந்த கதைகளகாக் கொண்டாடப்படுகின்றன. அவரது சிறுகதையான 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் மிகச்சிறந்த 100 கதைகள் என்ற பட்டியலிற்குள் தமிழகத்து இலக்கிய ஆளுமைகள் பலராலும் வகைப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலிற்குள் வெறும் நான்கைந்து ஈழ எழுத்தாளர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு அசாத்தியமான சாதனையாகவே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் தமிழக விமர்சகர்கள் ஈழ-புகலிட இலக்கிய ஆளுமைகள் என்று பட்டியலிடும்போது இவரது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவதாக எஸ்.பொன்னுத்துரை,மு.தளையசிங்கம், மற்றும் சட்டநாதனிற்கு அடுத்ததாக அல்லது அதற்கு முன்னதாக முன்னிறுத்தப்படுகின்றது. இவரது சிறுகதைகள் பலவும் இன்றளவும் பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன.
தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015. இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா?
அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
தமிழியலாய்வு வளர்ச்சியில் இடதுசாரி முற்போக்கு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் பெருந்திருப்பத்தை ஏற்படுத்தின. வரலாற்று நோக்கு, சமூகப் பார்வை முதலானவற்றின் பின்னணியில் தர்க்கபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்துள்ள அவர்கள், கலை இலக்கியங்களுக்கும் சமூக இயக்கத்துக்கும் இடையிலான தொடர்புகளையும் கலை இலக்கியங்களில் வர்க்கக் குணாம்சங்கள் அமைந்துள்ளவாற்றையும் கண்டறிந்து விளக்கினர். அக்குழுவினர் கையாண்ட அணுகுமுறையினால் கலை இலக்கியங்களின் உருவ – உள்ளடக்க அமைவில் சமூக வாழ்வு செலுத்திய தாக்கங்கள் கண்டறியப்பட்டதுடன் கலை இலக்கியங்களைக் கொண்டு சமூக வரலாற்றை மீட்டெடுத்தலும் சாத்தியமாயிற்று. 1950களில் தனித்துவமுடைய செல்நெறியாக வளர்ந்துவந்த அவ்விமர்சனமுறைமை, 1980களின் பிற்பகுதி முதல் தன் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. அத்தேய்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றபோதிலும், முற்போக்கு விமர்சகர்கள் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வுமரபின் தொடர்ச்சியைப் பேணும் முயற்சிகளைச் சிலர் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுள் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க ஒருவராக எல்.ஜோதிகுமார் விளங்குகிறார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









