அஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்
சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்!
தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.
குருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.
தொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!
'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல். இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும். இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல் துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:
இன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது? ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது. திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.
(தமிழகம்) பெண்களுக்கு சொத்தில் சமபங்கு! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு: http://www.documents.gov.lk/files/egz/2020/8/2188-02_T.pdf
அறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்!
அண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது? ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.
இப்பொழுது ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? பெரிய கண்டுபிடிப்பு! பாராளுமன்ற நடைமுறைகளைத் தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.
அயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்!
"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.
யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...
தேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.
தேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.
முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது? வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா? அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.