இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI - - 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் கேட்டுக் களிக்க
1. அலைந்து திரியும் அகதி மேகமே!
நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=k5ayU9KObjc
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
நாடு விட்டு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
அலைந்து திரியும் அகதி மேகமே.
அகத்தில் ஒருபோதும் நம்பிக்கை இழந்திடாதே.
நிலைகுலைந்து உன்வாழ்வு குலைந்திட விட்டிடாதே.
நிலைமாறும் என்னும் நம்பிக்கையை இழந்திடாதே.
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
வரலாற்றில் நீதி அழிவதும் இல்லை.
அநீதி நிலைத்து நிற்பதும் இல்லை.
அதர்மம் அழிவது எப்போதும் நிச்சயம்.
தர்மம் வெல்வதும் அதுபோல் சத்தியம்.
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
2. நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
யு டியூப்பில் கேட்டுக் களித்திட - https://www.youtube.com/watch?v=IrpgAWDscCU
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
முடிந்த போரின் அழிவுகள் இன்னும்
படிந்தே இருக்கும் அனைவர் நினைவினில்.
நடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
நல்லெண்ணம் வளர்த்திட நடவடிக்கை எடுப்போம்.
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.
என்னும் நிலையினை ஏற்படுத்தவே வேண்டும்.
குற்றம் புரிந்தவர் எவராயினும் அவரைச்
சட்டத்தின் முன்னே நிறுத்தவே வேண்டும்.
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
காணமல் போனவர் நிலையினை காண்போம்.
கடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
அத்து மீறிய குடியேற்றத் திட்டங்களை
அடியோடு ஒழித்தல் மிகவும் அவசியம்.
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
சார்பற்ற அரசு இல்லை என்றால்
யார் மனத்திலே நம்பிக்கை எழுந்திடும்.
ஊர் ஒன்றாக வேண்டும் என்றால்
சார்பற்ற அரசின் இருப்பு அவசியம்.
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
வரலாற்றுத் தவறுகள் பாடங்கள் ஆகட்டும்.
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படவே வேண்டாம்.
நாட்டு மக்கள் அனைவரும் இணைந்திட
நல்லிணக்கம் தேவை என்பதை உணர்வோம்.
நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட
3. என்னை மாற்றிய உன் வரவு!
யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=YTiFhzsETqU
உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.
காதல் உணர்வு படைப்பின் அற்புதம்.
காலம் கடந்தும் நிலைக்கும் காவியம்.
பொருள் உலகில் மருள் நீக்கும்
அரும் பெரும் ஓருணர்வு அதுவாகும்.
உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.
என்னைப் பற்றி எண்ணி இருந்தேன்.]
என்னவன் உன்னைக் காணும் வரையில்.
உன்னைக் கண்ட நாள் முதலாய்
என்னை நான் எண்ணுவதைத் துறந்தேன்.
உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.
உன் முறுவல் முகம் நிழலாடும்
என் மனத்தில்தான் எத்துணை இன்பம்.
உன்னை நினைக்கும் தருணங்கள் எல்லாம்
என்னை வியப்படைய வைக்கும் கண்ணா.
உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.
சுயநலம் , பொருள்வெறி கொண்ட உலகில்
மயங்கிக் கிடந்தேனே எனை மறந்து.
மயக்கம் துறக்க வைத்தது உன்வரவு.
மண்ணில் புத்துணர்வு தந்தது உன்நினைப்பு.
உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.
4. தாழ்வு மனப்பான்மை தவிர்போம்!
வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாள்.
மானமுள்ள மனிதருக்கு அவ்வை அன்றே.
மதி தாழ்த்தும் எவற்றையும் தவிர்ப்போம்.
மண்ணில் வெற்றி நிச்சயம் குவிப்போம்.
வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.
சொல்லும் செயலும் ஒன்றென வைப்போம்.
வெல்லும் செயலின் தந்திரம் காண்போம்.
எல்லாத் தடையும் மறைந்தே போகும்.
பொல்லாத் துயரும் புறமுதுகிட்டே ஓடும்.
வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.
சவால்கள் கண்டு சஞ்சலம் அடையோம்.
எதிர்த்து நின்றே ஏற்றம் படைப்போம்.
சோர்வு நீக்கித் துள்ளி எழுவோம்.
பாரில் வெற்றிப் பயிர் உழுவோம்.
வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.
இருப்பது ஒரு வாழ்வே அறிவோம்.
இருக்கும் காலம் அரியதே உணர்வோம்.
இருப்பைப் பயன் ஆக்கியே இருப்போம்.
இன்பப்பூ பூத்துக் குலுங்குமே. இங்கு.
வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.
5. காதல் செய்வீர்!
யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=b330WfgTSUM
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
உடல்நலம் சீர்செய்யும் அரு மருந்து.
உளநலம் சீர்செய்யும் மருந்தே காதல்.
உளநலம் சீரடைந்தால் நலமாகும் உடலுமே.
உயிர்வாழ உதவிடும் மருந்தே காதல்.
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
பூங்காக்கள் பூக்கள் சிரிக்கும் சொர்க்கம்.
பூக்கள் பூக்கும், நறுமணம் பரப்பும்.
காதல் மலர்கள் பூக்கும் நந்தவனம்
ககனத்தில் மானுடர் எம் வாழ்வும்.
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
மழைத்துளி தீண்டின் மெய் சிலிர்க்கும்.
மகிழ்வால் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.
காதல் துளி தீண்டின் சித்தம் சிலிர்க்கும்.
உண்மை அன்பில் தன்னலம் அருகும்..
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
காதல் செய்வீர் என்றான் மகாகவி.
காதல் மலர் கொய்வோம் நாம்.
காதல் மலர்கள் பூக்கும் பூங்காவென.
மாற்றிடுவோம் மண்ணுலகை நாம் எல்லோரும்.
காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.
6. இணைந்து வாழ்வோம்.
யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=TZNTRdlr6_M
வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.
மல்லிகை, முல்லை, தாமரை என
மலர்கள் இருப்பது மகிழ்வினைத் தரும்.
மா, முதிரை, பாலை என
மரங்கள் இருப்பதும் பயனைத் தரும்.
வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.
மனிதர் பலர் வாழும் பூமி.
மனிதரின் ஒற்றுமை பூமியின் ஒற்றுமை.,
வேற்றுமையில் ஒற்றுமை நன்மை தரும்.
ஒற்றுமையாய் இருப்போம். வாழ்ந்து சிறப்போம்.
வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.
இனம், மதம், மொழி என
இருப்பதால் இங்கு நன்மையே உண்டு.
பல்லினம் இணைந்து பயணிப்பதால் உலகம்
பெருநன்மை அடையும். முன்னேற்றம் அடையும்.
வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.
பிறப்பின் நியதி ஒற்றுமையின் நியதி.
சிறப்புற்று வாழ ஒற்றுமை கொள்வோம்.
இருக்கும் வரையில் இணைந்து வாழ்வோம்.
இருக்கும் இடர் நீக்கி வாழ்வோம்.
வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.
girinav@gmail.com
* - 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=wU6xORFbUbw