'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய தொடரொன்றின் முதற்பகுதியை யு டியூப்பில் பார்த்தேன். அந்நிகழ்வினைத்தொகுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுதாங்கன். அதில் ஜெயலலிதாவின் எழுத்து முயற்சிகளைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவார். .
எண்பதுகளில் 'எண்ணங்கள் சில' என்னும் தொடர் எழுதினார் அதனைத் 'துக்ளக்' சஞ்சிகையில். எழுதியிருக்கின்றார்.
'தாய்' வார இதழில் 'எனக்குப் பிடித்த ஊர்', 'எனக்குப் பிடித்த வாத்தியார்', 'எனக்குப் பிடித்த ஓவியர்', 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்', 'எனக்குப் பிடித்த நாவல்', 'எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்' என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே 'மனதைத்தொட்ட மலர்கள்' என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த நாவலாக சார்ள்ஸ் டிக்கன்ஸின் 'டேவின் காப்பர்ஃபீல்ட்' டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.
68இல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.'இவை 'காவிரி தந்த கலைச்செல்வி' காணொளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.
ஜெயலலிதா எழுதிய நாவல்கள்:
ஜெயலலிதாவின் நாவல்கள் இரண்டு கல்கியிலும், குமுதத்திலும் வெளிவந்ததாக அறிய முடிகிறது. கல்கியில் அவர் எழுதிய நாவலின் பெயர் 'உறவின் கைதிகள்'. இது பற்றி 'வள்ளூவன் பார்வை' என்னும் கூகுள் குழுவொன்றில் தமிழ்த்துறை மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளரான அரங்க ராஜா என்பவர் பின்வருமாறு பதிவு செய்திருக்கின்றார்:
"கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா."
'துக்ளக்'கில் வட இந்தியாவில் காவற்துறையினரால் காவல் நிலையமொன்றில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருத்தி பற்றிய விரிவான செய்திக்கட்டுரையொன்றினைத் தொடராக ஆரம்பத்தில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார். மிகுந்த வரவேற்பினைப்பெற்ற அத்தொடரின் இறுதிப்பகுதியிலேயே அவரது பெயர் விபரங்கள் அறியப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இவை தவிர ஜெயலலிதா அவர்கள் மேலும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார். அவை பற்றி அறிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும். விபரங்களை அனுப்ப ம வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சான்றுகள்:
1. காவிரி தந்த கலைச்செல்வி (ஜெயா டிவி தொடர்) https://www.youtube.com/watch?v=XgSt1ROOaRE
2. https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/4D-X1fuEJjk