சி.சு. செல்லப்பா - பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா
நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை 'எழுத்து' என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:
மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே - அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.
அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.
மேற்கத்திய இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இலக்கிய விமரிசகர்களாகத் திகழ்ந்தவர்கள் க்ளோத் லெவி-ஸ்த்ராஸ், வால்டர் பெஞ்ஜமின், டி.எஸ். எலியட், ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், ஜாக் லக்கான், நோம் சாம்ஸ்கி, ஜாக் தெரிதா, ரொலான் பார்த், மிஷல் ஃபூக்கோ, ஹெரால்ட் ப்ளூம். இவர்களுள் ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள முயல்பவர்களுக்கு ஹெரால்ட் ப்ளூமின் The Western Canon என்ற புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். ஷேக்ஸ்பியர், தாந்தே, மிகேல் செர்வாந்த்தேஸ், மோலியர், மில்டன், சாமுவல் ஜான்ஸன், கதே, வேர்ட்ஸ்வொர்த், எமிலி டிக்கின்ஸன், சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் எலியட், தோல்ஸ்தோய், இப்ஸன், ஜாய்ஸ், போர்ஹேஸ், பெக்கட் உட்பட்ட 26 எழுத்தாளர்களைப் பற்றிய விமரிசன நூல் அது. இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு எனக்கு முன்னோடியாக விளங்கும் நூலும் அதுதான்.
ஓர் இளம் வாசகர் தமிழின் சமகால எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே அதிக நூல்கள் இல்லை. ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, எஸ். வைத்தீஸ்வரன், தி.சொ. வேணுகோபாலன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பிரம்மராஜன், தேவதேவன், தேவதச்சன் போன்ற கவிஞர்களையோ நகுலன், ப. சிங்காரம், எம்.வி. வெங்கட்ராம் போன்ற படைப்பு ஆளுமைகளைப் பற்றியோ ஒருவர் அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களே படித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான். இருந்தாலும் ஜெயமோகன், கவிஞர் சுகுமாரன், சி. மோகன் போன்றவர்களின் விமரிசனங்கள் சமகால இலக்கியத்தை அறிந்து கொள்ள ஒரு பெரும் திறப்பை வழங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதெல்லாம் மிகவும் சொற்பம்.
விமரிசனம் தவிர்த்து செல்லப்பா செய்த மற்ற இரண்டு காரியங்கள் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கக் கூடியவை. புனைகதையில் அவர் செய்த சாதனைகளைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். பண்டிதர்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராக ஒற்றை மனிதராக, கிட்டத்தட்ட ஒரு கெரில்லா போராளியைப் போல் போராடியிருக்கிறார் செல்லப்பா. அந்த வகையில் இன்றைய தினம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்த மகத்தான மனிதருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள். ‘எழுத்து’ என்ற பத்திரிகை மூலம் அவர்தான் சமகால இலக்கியத்துக்கான வெளியை உருவாக்கினார்.
எத்தனையோ சிறுபத்திரிகைகளைப் போல் ‘எழுத்து’வும் ஒரு சிறுபத்திரிகை அல்ல; அது ஓர் இயக்கம். அந்த இயக்கத்தின் ஒரே தலைவனும் போராளியும் செல்லப்பாதான். இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழ்க் கலாச்சார சூழலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளிலும் Pulp writing எழுதப்பட்டு வாசிக்கப்படுகிறது. நான் அதற்கு எதிர்ப்பாளன் அல்லன். ஆனால் ஓர் ஆங்கில வாசகருக்கு சிட்னி ஷெல்டன், ஸோஃபி கின்ஸெல்லா போன்றவர்களுக்கும் கார்ஸியா மார்க்கேஸுக்குமான வித்தியாசம் தெரியும். ஆனால் தமிழில் அசோகமித்திரனை எழுத்தாளர் என்றால் ரமணி சந்திரனும் எழுத்தாளர்தான். இரண்டு பேருக்குமான வித்தியாசம் தமிழ்ச் சூழலில் இல்லை. ஒரு பிரபலமான எழுத்தாளர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ஆன்மீகமும் எழுதுவார், செக்ஸும் எழுதுவார். பத்திரிகைகளிலிருந்து உதவி ஆசிரியர்கள் போய் அவர் வீட்டில் நிற்பார்கள். எழுத்தாளர் ஓர் உதவி ஆசிரியரைக் கூப்பிட்டு ‘போன வாரக் கதை என்ன, எங்கே முடித்தேன்?’ என்று கேட்பார். அவர் சொன்னதும் அந்த வாரக் கதையை டிக்டேட் செய்வார். அடுத்து, இரண்டாவது பத்திரிகையின் உதவி ஆசிரியரை அழைத்து அதே கேள்வி. அதே பாணியில் அடுத்த அத்தியாயம். அவர் ஏழு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தபோது அவர் பெயரைத் தெரியாதவர் கிடையாது. இப்போது அவர் பெயரை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனாலும் தமிழ்ச் சூழலில் ரமணி சந்திரனும் ஒன்றுதான்; அசோகமித்திரனும் ஒன்றுதான். இதைத்தான் தன் வாழ்நாள் பூராவும் எதிர்த்தார் செல்லப்பா. ‘உங்களையெல்லாம் நூறு பேர் தானே படிக்கிறார்கள்; எங்களை லட்சம் பேர் படிக்கிறார்கள்’ என்று சொல்லியே செல்லப்பாவை எதிர்த்தது பாமர ரசனைக் கூட்டம். செல்லப்பா என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்கட் சாமிநாதனின் கட்டுரைத் தொடரைப் பாருங்கள்.
செல்லப்பாவின் பணி மிகக் கடினமானதாகவும் யாராலும் புரிந்து கொள்ள முடியாததாகவுமே இருந்தது. ஒருவர் ஒரு துறையில் சாதனைகள் செய்திருப்பார்; பெரும் மதிப்புக்குரியவராக இருப்பார். ஆனால் இலக்கியம் என்று வந்தால் பாமர ரசனையாக இருக்கும். ராஜாஜி ஒரு சிறந்த உதாரணம். எல்லோருடைய மதிப்புக்கும் உரியவர் அவர். ஒருமுறை மகாத்மா சென்னை வந்தபோது ராஜாஜியும் மகாத்மாவும் வேறு சிலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வந்த பாரதி நேராக மகாத்மாவிடம் சென்று, அன்றைய தினம் திருவல்லிக்கேணியில் அவர் நடத்த இருந்த கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்கிறார். காந்தி தன் உதவியாளரிடம் தனது மதறாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு அன்று வேறு கூட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டிருப்பதால் நாளை வருவதாகச் சொல்கிறார். ‘பரவாயில்லை; கூட்டம் இன்றுதான், நன்றி மிஸ்டர் காந்தி’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் பாரதி. அப்போது ராஜாஜியிடம் காந்தி பாரதி பற்றி விசாரிக்க, ராஜாஜி ஏதோ சொல்லியிருக்கிறார். உடனே காந்தி ‘இவர் உங்கள் மொழியின் பொக்கிஷம். இவரை நல்லபடியாகப் பாதுகாக்க வேண்டியது உங்கள் எல்லோருடைய கடமை’ என்று சொல்லியிருக்கிறார். காந்தியிடம் ராஜாஜி சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகளை காந்தி ராஜாஜியிடம் சொன்னார். வேறொரு சந்தர்ப்பத்தில் க.நா.சு. ராஜாஜியை ஒரு கூட்டத்துக்கு அழைப்பதற்காகச் சென்றபோதும் க.நா.சு.வை ராஜாஜி அவமதிக்கும்விதமாகப் பேசியது பற்றி க.நா.சு. விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் தவிர, புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ குறித்து புதுமைப்பித்தனை மிக மோசமாகத் திட்டி எழுதியிருக்கிறார் ராஜாஜி. காரணம், எழுத்தாளன் என்றால் யார் என்பதே தமிழ்ச் சமூகத்துக்குத் தெரியவில்லை. ராஜாஜியைப் பொறுத்தவரை கல்கிதான் எழுத்தாளராகத் தெரிந்திருப்பார். ஆனால் பாரதி வாழ்ந்த அதே காலகட்டத்தில் தாகூர் வங்காளத்திலும் அகில இந்தியாவிலும் எப்படிக் கொண்டாடப்பட்டார் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. தாகூரை முதல் முதலில் குருதேவ் என்று அழைத்தவர் காந்தி.
இப்படிப்பட்ட சூழலில் கல்கி போன்ற மாபெரும் வாசகர் பரப்பைக் கொண்ட எழுத்தாளர்களை எதிர்த்து தன் மனைவியின் நகைகளை அடகு வைத்த காசில் ஐநூறு பிரதிகளுடன் ஒரு பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டு தமிழின் வெகுஜன கலாச்சாரத்தை ஒற்றை ஆளாக நின்று எதிர்த்திருக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விஷயம்?
செல்லப்பாவின் மற்றொரு சாதனை, புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வடிவம் தோன்றக் காரணமாக இருந்தது. ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதை நாற்பதுகளில் வெளியாகி மறக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அதை எடுத்துத் திரும்பவும் ‘ எழுத்து’வில் (1959) பிரசுரம் செய்தார் செல்லப்பா. இது பற்றி வெங்கட் சாமிநாதன்:
‘நாற்பதுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத அந்தக் கவிதை, ‘எழுத்து’ பத்திரிகையில் பிரசுரமானதும் உடனே அடுத்த ‘எழுத்து’ இதழ்களில் பசுவய்யா, தி.சொ. வேணுகோபாலன், க.நா.சு. (அவரது மிகச் சிறந்த கவிதையான தரிசனம்) என ஏதோ இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல ஒரு கவிஞர் கூட்டமே பிச்சமூர்த்தியின் கவிதை தந்த ஆதர்சத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தனர். ஏதோ இது மாதிரி ஒரு சமிக்ஞை எப்போதடா வரும் என்று காத்திருந்தது போல. இதில் ஒவ்வொருவரின் கவிதையும் இதுகாறும் எழுதப்படாத பொருளில், எழுதப்படாத கவிதை வடிவில் எழுதினர். ஒருவரது கவிதை போல இன்னொருவரது இல்லை. க.நா.சு.வின் தரிசனம் கவிதைக்கும், பசுவய்யாவின் உன் கை நகத்துக்கும் ஏதும் ஒற்றுமையோ சம்பந்தமோ இருக்கவில்லை. அதுபோலத்தான் தி.சொ.வேணுகோபாலனதும்.
எங்கோ நாலு பேர் படிக்க எழுதிக்கொண்டிருந்தவர்கள் தமிழ் உலகம் அறியாதவர்கள், சாதனையாளர்களாக முன்னிறுத்தப்பட்டு, பெரும் ஜாம்பவான்களாக பவனி வந்த கல்கி, மாயாவி, ஆர்வி, அகிலன், ஜெகசிற்பியன், லக்ஷ்மி, மு.வ, கி.வா.ஜ. என்று அத்தனை பேரும் தூக்கிக் கடாசி எறியப்பட்ட ஒரு நிகழ்வு சாதாரணமானதல்ல. ஆனால் அவர்களுக்கு அப்போது ஏதும் பாதிப்பு இல்லைதான்.
எழுத்து தொடங்கியபோது பல லட்சங்கள் என வாசகர்களைக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு எதிரான ஒரு குரல், ‘எழுத்து 2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது’ என்று பிரகடனப் படுத்திக்கொண்டு வந்த முதல் இதழே 700 பேருக்கு மேல் சென்றடையவில்லை. 104 இதழ்களோ என்னவோ வந்த ‘எழுத்து’வின் கடைசி இதழ் 120 பேருக்கு மேல் சென்றடையவில்லை. ஆனால் அதற்குள் அது ஒரு விமரிசன மரபை தமிழ் மண்ணில் ஸ்தாபித்துவிட்டது. தமிழ்க்கவிதையிலும் ஒரு புதிய மரபை ஸ்தாபித்தது. சிறு பத்திரிகை என்ற மரபையும் ஸ்தாபித்தது.’
செல்லப்பாவின் முயற்சியைக் கேலி செய்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்கும் அதிகார பலம் இருந்தது. அவர்கள் பேராசிரியர்களாக இருந்தார்கள்.
‘அவர்கள் மாத்திரமல்ல, சி.சு. செல்லப்பாவின் மணிக்கொடிக் கால சினேகிதரான சிட்டி கூட கேலி செய்தார். செல்லப்பா தனக்கு வழிகாட்டியாகக் கொண்டாடிய பி.எஸ் ராமையா கேலி செய்தார். இருப்பினும் செல்லப்பாவின் துணை நின்று பலம் அளித்தது அவரது நம்பிக்கையும் பிடிவாதமும். ஆறு மாத காலம் அவருடன் துணை நின்ற மணிக்கொடி அன்பர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட பிறகு செல்லப்பா தனித்துவிடப்பட்ட போதிலும் அவருக்கு நம்பிக்கையும் மன உறுதியும் தந்தது, சிவராமு, ந.முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம், நகுலன், பசுவய்யா, தி.சொ.வேணுகோபாலன், எஸ் வைதீஸ்வரன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு நீண்ட அணிவகுப்பே திருவல்லிக்கேணி 19-A பிள்ளையார் கோயில் தெரு, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது. அத்தோடு, தமிழ்ப் பண்டிதர் உலகிலிருந்தும் சி. கனகசபாபதி, தொடர்ந்து புதுக்கவிதையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றி, சங்கப் பாடல்களின் பின்னணியில் விரிவாக எழுதத் தொடங்கினார். அவர் காரணமாக மதுரை பல்கலைக் கழகத்தில் புதுக் கவிதைக்குத் தமிழ்ப் புலவர் உலக அங்கீகாரமும் கிடைத்தது.’
‘ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில், ‘ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பா வகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா’ என்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர்.’
சாரு எழுதியுள்ள ஒன்பது பகுதிகளுமே அவசியம் தீவிர இலக்கியத்தில் ஈடுபாடுள்ள யாருமே படிக்க வேண்டியவை. முதல் பகுதிக்கான இணைப்பைக் கீழே தருகிறேன். அதன் முடிவில் எல்லாப்பகுதிகளுக்குமான இணைப்பு இருக்கும். சொடுக்கி வாசிக்கலாம். சாருவின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.
பழுப்பு நிறப்பக்கங்கள்- சாரு நிவேதிதா- சி.சு. செல்லப்பா- பகுதி ஒன்று இணைய வெளியில் படித்தவை
சத்யானந்தன்

பழுப்பு நிறப்பக்கங்கள்- சாரு நிவேதிதா- சி.சு. செல்லப்பா- பகுதி ஒன்று
http://sathyanandhan.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.