விகடன்.காம்: "நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி." ஒரு பெண் புலியின் வாக்குமூலம் இது ஒர் உண்மைக் கதை
[விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.. - பதிவுகள்]
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற...வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.