வீரகேசரி.காம்: பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி
2013-09-22 06:40:59 - வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக) கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,
மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1
கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -