['நிகழ்வுகள்' பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் - பதிவுகள்] நாள்: சனிக்கிழமை (12-03-2011). இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 மணி)
கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சிம்பொனி மற்றும் சேர்ந்திசைக் கலைஞர் அகஸ்டின் பால் கலந்துக் கொள்கிறார். இசையின் நுணுக்கங்கள் பற்றியும், குறும்படங்களில் இசையைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் ஆர்வலர்களுடன் விரிவாக கலந்துரையாடுகிறார். தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் இதுவரை இசைப் பற்றிய வழிகாட்டல் நடைபெற்றதே இல்லை என்கிற ஆர்வலர்களின் அந்த குறையும் இப்போது போக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
அனாதை ஆனந்தன்
காசிராஜன்
15 நிமிடங்கள்
கார்த்தீஸ் கனவா
கார்த்தி
05 நிமிடங்கள்
நண்பா ரோஹின்
08 நிமிடங்கள்
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் அஜயன் பாலா சித்தார்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் கதை விவாதக் குழுவில் பங்கேற்று வருபவர். மதராசப் பட்டினம், தென்மேற்குப் பருவக் காற்று போன்ற படங்களில் விவாதங்களோடு, நடிகராகவும் வலம் வந்தவர்.
விகடனில் நாயகன் தொடரின் மூலம் சரித்திர எழுத்தாளராகவும் அறியப்படுபவர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.