ஊடகத்தின் சிம்ப சொப்பனமாய்
சிகரம் தொட்ட பாரதி அண்ணன்
இவ்வளவு சீக்கரம்
நம் எல்லோரையும் விட்டுச் செல்வாரென
பேனாக்களிலிருந்து ஊற்றெக்கும் கண்ணீர்க்குளங்கள்
கவிதையாய் பத்தியாய், சித்திரமாய்
செம்மொழியாய் சொல்லி அழுகின்றன.
அவரின் உள்ளம் மென்மையானவை
ஆனாலும்
அவரின் எழுத்துக்கள்
குட்டக் குட்ட குனியும்
எழுத்துக்கள் அல்ல.
ஒரு சமூகத்தின் விடியலுக்காய்
வீராப்புடன் வீறு கொண்டு எழுந்து
நிமிர்ந்து நிற்கும் வித்துக்கள்.
எழுத முடியாமல் மை தீர்ந்து போன
வெற்றுப் பேனாக்களையும்
இளம் குரும்பட்டிகளையும்
ஊடக நாற்காலியில் அமர வைத்து
அழகு பார்த்தவர் என்று
நாங்கள் காது கொடுத்து கேட்காமல்
இருந்து விட்டோம்.
தினக்குரலை விட்டுப்
பிரிந்தாலும்
தினசரி தந்தையைப் போல்
தட்டிக் கொடுத்து
என் பேனா வீழ்ந்திடாமல்
பக்குவமாய் பாதைகளைக் காட்டி
அளவிட முடியா
வெற்றிகளுக்குச் சொந்தக்காரன் என்பதை
கையடக்கத் தொலைபேசியிடம் கேட்டால்
அது சொல்லும்
அவரின் அன்புக் கட்டளையின் அர்த்தங்களை.
போரினால்
கண்ணீர் கடலில் மூழ்கி தத்தளித்த
தமிழ் தாய் மக்களுக்கு
படகுகாகவும் நின்று
கரையிலும் அகதி முகாமிலும்
பாதுகாப்புக் கவசம்.
செம்மொழிகளில் வீசும்
நறுமணக் காற்றில்
அலை அலையாக எழுந்து
ஞாயிறு தினக்குரலின்
இசையின் இனிய ராகங்கள்
காதில் வந்து உட்கார்ந்து
ரிங்காரமிடும்
அவர் எழுத்தின் வீச்சு.
மனித நேயத்திற்கு
மகுடம் சூட்டிய மகான்
வேறுயாருமல்ல
நம் பாரதி அண்ணன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.