பதிவுகள் முகப்பு

புரிந்துணர்வைப் போதிக்கும் படைப்பு : சிவ ஆரூரனின் ஊமை மோகம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
04 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

சிவ ஆரூரனின் வெளிவந்த ஏனைய நாவல்களில் இருந்து உள்ளடக்கத்தில் வேறுபட்டது ஊமை மோகம். பலரும் எழுதத் தயங்குகின்ற ஆண்பெண் உறவுநிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. தமிழ்ச்சூழலில் இவ்வகை எழுத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாவலின் உருவாக்கம் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

“ஆண்பெண் உறவின் அதிருப்தி குறித்தும் புரிந்துணர்வு இன்மை குறித்தும் பலர் பேசியதை நான் செவிமடுத்த பிறகு அவற்றை என் மனவானில் உலவவிட்டவேளை என் மனம் உளைந்தது. என் நூலறிவின் துணை கொண்டு என் மனஉளைவிற்கு ஒரு கலைப்பெறுமதியைக் கொடுக்க முனைந்துள்ளேன். ஒழுக்க நெறியுடன் வாழநினைக்கும் யாழ் மண்ணின் கீழ்மத்தியதரக் குடும்பம் ஒன்றின் வாழ்வுக் கோலத்தையும் அதில் இழையோடிக் கிடக்கும் அபாக்கியமான ஊமை மோகத்தையும் இந்நாவல் பேசுகின்றது.” (தந்துரை, சிவ. ஆரூரன்) என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

மேலும் படிக்க ...

மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் நூல்வெளியீட்டு விழா! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
நிகழ்வுகள்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் மலையக கலை கலாசாரச் சங்கம் இணைந்து நடத்தும் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட  ஊடவியலாளர் இக்பால் அலி ஆகியோர் பதிப்பில் முதற்பதிப்பாக வெளிவரும் மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் வெளியீட்டு விழா கண்டி டி.எஸ். சேனநாயக வீதியில் (கண்டி அசோகா வித்தியாலத்திற்கு  முன்னால்) அமைந்துள்ள செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை  2.-12-2023 , பி.ப. 3.00 மணிக்கு,மலையகக் கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: 'கூற்று' பெண்களின் குரல் 25 வருடங்கள்! மனம்விட்டுப்பேசும் 'வெளிகள்' பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                   - பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு -

கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.

இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழ்ந்த சித்திரலேகா பற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும் எழுதியிருக்கின்றேன்.

பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.

பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.

இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க ...

கனடாவில் 'மாவீரர் தினம்' - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விடுதலைப்புலிகளின் மாவீரருக்கான  அகவணக்க நிகழ்ச்சி கனடாவில் பல இடங்களிலும் சென்ற வாரம் இடம் பெற்றது. குறிப்பாக ‘மார்க்கம் பெயகிறவுண்ட்ஸ்’ திடலில் திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலைவரை ‘தமிழர் நினைவெவெழுச்சி நாள்’ . தமிழர்கள் பலர்  இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினர் பலர் மிக ஆர்வத்தோடு இந்த நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொண்டது, எமது வரலாற்றை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து இளந்தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களுக்கு நடனமாடியதையும், அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடிச் சபையோரைக் கண்கலங்க வைத்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் சுயநலம் கருதாத இந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும், நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற மாவீரருக்கான அகவணக்க நிகழ்வு ஒன்றிக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். மாவீரருக்கான ஒரு பாடல் வெளியிடுவதாகவும், அந்தப்பாடலைக் கேட்டு அதைப் பற்றியும் எனது மதிப்புரையை வழங்கும்படியும் கேட்டிருந்தனர். எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன்.

மேலும் படிக்க ...

மக்கள் எழுத்தாளன் இன்குலாப் நினைவாக... ( இது ஒரு மீள்பதிவு) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று டிசம்பர் 1 எழுத்தாளர் இன்குலாப் (எஸ். கே. எஸ். சாகுல் அமீது)  அவர்களின் நினைவு தினம். அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான  'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

'சமயம் கடந்து மானுடம் கூடும்,
சுவரில்லாத சமவெளி தோறும்,
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்;
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்'

என்று பாடிய மக்கள் கவிஞன்.  அவன் தன் மானுட நேயம் மிக்க எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி வழங்கும் எழுத்தாளர் அரங்கம் 16

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
29 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 838 2346 8673 |Passcode: 2023

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சர்வதேச ஆண்கள் தினம் - 2023ம் ஆண்டின் கருப்பொருள்: ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்! - சிவம் வேலாயுதம் -

விவரங்கள்
- சிவம் வேலாயுதம் -
சமூகம்
28 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2023 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி, சர்வதேச ஆண்கள் தினமாகும் (International Men’s Day). இந்த அமைப்புடன் “ஆண்களின் குரல் 360 (Voice of Men 360)” அமைப்பும் இணைந்துள்ளது. இதன் செயற்பாடு, ஆண்களின் தற்கொலையினை பூஜ்ஜியமாக மாற்றமுறச் செய்தல் என்ற வகையில் நீள்கின்றது. இதன் நோக்கம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கியவர்களுக்கு மிகவும் ஊட்டமளிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க உதவுவதாகும்.

ஆண்களின் தற்கொலைக்கான காரணங்களை அடையாளம் காண்பதற்கு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் முதலியோர் உதவுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகள் வாயிலாக ஒரு விரைவான சிகிச்சையை அல்லது தீர்வை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் தேவை, தலையீடுகள், ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் முதலியவை அடங்கும்.

மேலும் படிக்க ...

தற்கொலை வீதம் தமிழ் சமூகத்தில் அதிகரிப்பதற்கான காரணிகள் ! ? தீர்வுகள் எம்மிடமே இருக்கின்றன! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
சமூகம்
28 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் “ என்ற பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம். வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன. ஏமாற்றம், துரோகம், வறுமை, அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள் நிகழுகின்றன. அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர். உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர் முதல்கொண்டு பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: முப்பது ஆண்டுகள் பிந்தி பெய்த மழை! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
சிறுகதை
27 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான்.

பதினொரு மணிபோல் சாப்பிட்டுவிட்டு சிவம் தூங்கச் சென்ற அறையுள்ளிருந்து வெளிமூச்சில் எழுந்த மெல்லிய கீரொலி கேட்டது. தூங்கியிருப்பாரென எண்ணிக்கொண்டாள்.

மாலையில் விமானநிலையத்திலிருந்து வானில் வந்திறங்கியது கண்டபோதே கொஞ்சம் வயதாகிவிட்டார்போலவே சிவம் அவளுக்குத் தென்பட்டார். ஆயினும் தளர்ந்துபோனாரென்று சொல்லமுடியாதபடியே உடல்வாகு இருந்தது. கடைசியாக அவள் பார்த்திருந்தமாதிரி அல்லவென்றாலும், அதே சிரிப்பும் பேச்சும் கண்வெட்டுமாகத்தான் சிவம் இருந்தார். டென்மார்க்கிலிருந்து அவரின் மகள் கலாவதிதான், ‘வயது போயிட்டுதெல்லோ, ரண்டு மாசத்துக்கு முன்னால இஞ்ச பாத் றூமில சறுக்கி விழுந்தும்போனார், சொன்னாக் கேட்டாத்தான, ஊரைப் பாக்கத்தான் வேணுமிண்டு ஒரே அடம், நீங்கள் இருக்கிற துணிவிலதான் ரிக்கற்றைப் போட்டு அனுப்புறன், அசண்டையீனமாய் இருந்திடாதயுங்கோ, அக்கா, அய்யா கவனம்… கவனம்’ என பத்து தடவைக்கு மேலயாவது போனிலே சொல்லியிருந்ததில், அல்லிக்கே அவ்வாறாக அவரின் பலஹீனத் தோற்றம் மனதில் உருவாகிற்றோ தெரியவில்லை.

மேலும் படிக்க ...

நீர் நாடி வெடிக்கும் ஒரு புரட்சி! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
அரசியல்
26 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேளாங்கண்ணி கடலுக்குத் தவழ்ந்து
மணலை அரித்துக் கொண்டு  ஓடும்
அரிச்சந்திரா நதி,

ஐப்பசி மாதத்தில் ஆற்றில் தண்ணீர்
காணாமல் வறண்டு கிடப்பது
ஆற்றின் விதியா?
ஆற்று நீரை நம்பி வாழும்
விவசாயி,
விளைச்சல் நிலம் வறண்டால்
விவசாயி வயிறும்
வறண்டு விடும் என்று தெரியாத
படுபாவி!

மேலும் படிக்க ...

கார்த்திகைக் குறிப்புகள் - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
26 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

01.

மழையோடு,
மாமழைக் கண்ணீரும் பொழிய...
ஓராயிரம் படையலிட்டோம்...!

தீவட்டியோடு..
மெழுகுவர்த்தியும்,
சிட்டியும்
மின்னியெழ...
ஓராயிரம் ஒளியேற்றினோம்..!

சிறுமாலைச் சரத்தோடு,
பெருமாலையும் சூட்டி...
ஓராயிரம் மலர் தூவினோம்...!

நீர் பேசவில்லை...!

எங்குள்ளீர்... எங்குள்ளீர்... என
எம் கண்ணீரைத் தூவினோம்..!

உம்மைப் புதைத்த கல்லறைகளை
உடைத்தெறிந்த பின்போ
தரிசு நிலமாயிற்றுத் தாய் மண்
என நினைந்தார் பாவியர்!

ஆயினும்...!
இனி யாரும் அழிக்கா,
மனக் கனவு நிலத்தில்
உமை விதைத்தேன்!
நீரோ...
முகங்காட்டி எழுகின்றீர்..!

அங்கே
புன்னகைக்கும் உங்கள் உதடுகளில்
வாசிக்கிறேன்...
நிஜமும் நிழலும் கலந்தொட்டிய
தீ உருவங்களாய் உங்களை என்றேன்...

ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது...!

மேலும் படிக்க ...

நாலடியார் கூறும் நிலையாமை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலக இலக்கியங்களின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூல்கள் என போற்றப்படுபவை கடைச்சங்க நூல்களே ஆகும். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். இப்பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நாலடியார் எனும் நூலாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் நீதிநூல் நாலடியார். உலகப்பொதுமறையான திருக்குறளில் நிலையாமை பற்றி ஒரு அதிகாரம் மட்டும் காணப்பட, நாலடியாரில் மூன்று அதிகாரங்களில் நிலையாமை அமைந்துள்ளதால் நாலடியாரை நிலையாமையை வலியுறுத்தும் நூல் என்று அழைக்கலாம். நிலையாமையை முதலில் வைத்து வற்புறுத்தும் பாட்டுக்களும் சொல்லோவியங்களாய் இலக்கியச் சுவையோடு அமைந்துள்ளமை இந்நூலின் சிறப்பியல்பாகும். இந்த புவியில் கண்ணில் காணும் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையற்ற தன்மையை நாலடியார் வழி எடுத்துகூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை – விளக்கம்

நிலையாமை என்பதற்கு உறுதியற்றதன்மை என்று கோனார் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

வாழ்கின்ற காலத்தில் நாம் வாங்கிய மாடுகளும். கட்டிய வீடுகளும், மனைவி, மக்கள், உறவினர்களும், வாங்கிய தங்கம், வெள்ளி போன்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மை கொண்டதால் அழியாத சிவகதி என்ற பரகதியைச் சேர வேண்டும்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளம்பராயத்தில் தாடிக்காரர்களைத்தேடிய ஒருவர், வாசிப்புப்பழக்கம் ஏற்பட்டதும் தாடிக்காரர்களின் நூல்களை நூலகத்தில் தேடித்தேடி படித்தவர், காலப்போக்கில் ஒரு எழுத்தாளனாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர்.

அவர் இலங்கையரோ தமிழகத்தவரோ அல்ல. அவர்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கோடு அயராமல் இயங்கிய சை.பீர்முகம்மது. கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

அவரை பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் சந்தித்தேன். அந்த பட்டிமன்றத்தில் ஒரு மலேசிய பேச்சாளர், அவரது பெயரில் பீரும் இருக்கிறது மதுவும் இருக்கிறது என்று வேடிக்கையாகச்சொல்லி சபையை கலகலப்பாக்கினார்.

எனது வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவர் இலக்கியவிருந்து படைத்து விடைபெற்றார். அன்று முதல் எனது இலக்கிய நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். மலேசியாவுக்கு நான் அவரது விருந்தினராகச்சென்றபோது நீண்டபொழுதுகள் அவருடன் இலக்கியம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், என விரிவான உரையாடலுக்கு உகந்த படைப்பாளி. வெறும் படைப்பாளியாக மாத்திரம் திகழாமல் இலக்கிய யாத்ரீகனாகவும் அலைந்தவர். 1942 இல் கோலாலம்பூரில் பிறந்த பீர்முகம்மது, 1959 முதல் எழுதினார்.

மேலும் படிக்க ...

முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து  வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள்  கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும் அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி. - வ.ந.கி -


எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.

“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.

மேலும் படிக்க ...

உலகறிந்த கலைஞராக, எழுத்தாளராகக் கோவிலூர் செல்வராஜன் திகழ்கிறார்..! - அசலகேசரி -

விவரங்கள்
- அசலகேசரி -
நிகழ்வுகள்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'ஈழத்துக் கலை இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவரான 'பல்துறைக் கலைஞர்" கோவிலூர் செல்வராஜன் இன்று உலகறிந்த தமிழ்க் கலைஞராக விளங்குகிறார். அவரது பொன்விழா சிறப்பு மலரில் உலகெங்குமுள்ள எம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்களின் கட்டுரைகள்,  வாழ்த்துகள் நிரம்பியுள்ளன. எல்லோருக்கும் அறிமுகமான,  பிடித்தமான படைப்பாளியாக அவர் விளங்குகிறார். வானொலிக் கலைஞராகஇ எழுத்தாளராக,  பாடலாசிரியராகப்,  பாடகராக,  நடிகராக அவர் பணி தொடர்கிறது. இன்று அவரது பொன்விழா பாரிஸ் மாநகரில் நடைபெறுவதும்,  அவரது நூல்கள் இங்கு வெளியிடுப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. நூல்களை அச்சிட்டு வெளியிடுவதும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று மிகவும் செலவுகரமான விடயமாகவுள்ளது."

மேலும் படிக்க ...

கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் அவர்கள் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

தலைவர் உரையில் எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்கள் தமிழ் இலக்கியத் துறையில் படைத்த சாதனைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், நண்பர் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பழகுவதற்குச் சிறந்த நண்பர் என்பதையும் மேலும் குறிப்பிட்டார். தலைவர் உரையைத் தொடர்ந்து நிகழ்வில் ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள்’ பற்றி எழுத்தாளர் திரு. அருண்மொழிவர்மன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 166 பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஜீவநதி வெளியீடாக வந்திருக்கின்றது.

தொடர்ந்து 23 அத்தியாயங்களைக் கொண்ட  ‘நவீன விக்கிரமாதித்தன்’ என்ற நாவல் பற்றி  சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான திரு. சிவா முருகுப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்கள். வதிலைபிரபாவால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு, ஓவியா பதிப்பக வெளியீடாக வந்த இந்தப்புதினம் 152 பக்கங்களைக் கொண்டது.

மேலும் படிக்க ...

டொமினிக் ஜீவாவின் கதைக்களம்! - முனைவர் கி. ராம்கணேஷ், உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 -

விவரங்கள்
- முனைவர் கி. ராம்கணேஷ், உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 -
இலக்கியம்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டொமினிக் ஜீவா. கொள்கைகளை மட்டும் கூறுபவர்களுக்கு மத்தியில் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்து காட்டிய மார்க்சியவாதி. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைத் தமது கதைகளில் காட்சிப்படுத்தியவர். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் சென்றோ, குளுகுளு அறையில் சுகத்தை அனுபவித்துக் கொண்டோ சிறுகதை எழுதுபவர் என இவரை யாரும் நினைத்துவிடக் கூடாது. தொழிலாளர்களைப் பற்றிய கதை எழுதியவர் என்று மட்டுமே பலரும் கருதிக் கொண்டிருந்த வேளையில், அவரும் ஒரு தொழிலாளிதான் எனத் தெரிந்த போது, ஏனோதானோவென்று நினைத்தவர்களும் அண்ணாந்து பார்த்து அகலக்கண்களை விரித்து ஆச்சரியப்பட்டனர்.

இந்தியத்தாயின் உடலிலிருந்து அறுந்து விழுந்த இதயமாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கை மண்ணின் யாழ்ப்பாணத்தில் 27.06.1927 அன்று ஒரு தொழிலாளி வீட்டின் பிள்ளையாய் டொமினிக் ஜீவா பிறந்தார். எழுதுவதைப் பொழுது போக்காகவோ, தொழிலாகவோ இவர் செய்யவில்லை. தொழிலாளிகளுடன் இணைந்து தொழிலாளியாகவே வாழ்ந்து எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சிறுகதைகள் படைத்தவர்.

டொமினிக் ஜீவாவின் கதைகளில் மிகப்பெரிய தேசத்தை ஆண்ட இராஜாக்களையோ, செல்வச் சீமான்களோ, புகழ்பெற்றுத் திரிந்தவர்களோ கதையின் நாயகராக இருப்பர் எனக் கருதினால் அது தவறு. தொழிலாளர்களின் இரணங்களையும் மனங்களையும் அனுபவித்து, உள்வாங்கி,  தன்னுடைய கதைகளின் நாயகர்களாகக் காட்சிப்படுத்தியவர். கற்பனைச் சிறகுகளைக் கொண்டு இலக்கியவானில் பறக்காமல், நிஜ வாழ்க்கையில் பம்பரமாய்ச் சுழலும் உண்மை மாந்தர்களின் உணர்ச்சிகளைக் கருக்களாக்கிக் கதைகளாகப் பிரசவித்தவர்.

மேலும் படிக்க ...

'சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?' - முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) , திருநின்றவூர் -

விவரங்கள்
- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) , திருநின்றவூர் -
இலக்கியம்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“சமயம், சாதி, பல்துறை இலக்கியம், நவீன இலக்கியம், கவிதை, ஹைக்கூ கவிதை, நாடகம், திரை, கலை, ஓவியம், மார்க்சியம், பெரியாரியம், பொது அரசியல், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், தொல்லியல், நாட்டுப்புற இலக்கியம், குறளியம், செய்தி இதழ்கள், தன்னம்பிக்கை, சூழலியம், தொழிலாளர், இலக்கணம், நூலறிமுக இதழ்கள், கல்வி, மாணவர் இதழ்கள், விளையாட்டு, சட்டம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சிறுவர், மொழிபெயர்ப்பு, மனித உரிமை போன்ற பல துறைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிற்றிதழ்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.” என்று பட்டியலிடுவார் சிற்றிதழ்கள் குறித்து அதிக திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் கீரைத்தமிழன்.

தமிழில் வெளிவந்துள்ள சிற்றிதழ்களைப் பல்வேறு ஆர்வலர்கள் சேகரித்துப் பதிவு செய்துள்ளனர். அதில் குன்றம் இராமநத்நம், பொள்ளாச்சிநசன், நந்தவனம் சந்திரசேகரன், தி.மா.சரவணன், மு.முருகேஷ், கிருஷ் ராமதாஸ், சுந்தரசுகன், நவீன்குமார், சொர்ணபாரதி ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழம் இணையதளத்தில் தொடர்ந்து சிற்றிதழ்களைப் பதிவு செய்தும், அது குறித்தெழுதியும் வருவது சிறப்பிற்குரிய காரணங்களில் ஒன்றாகும். கீற்று இணையதளம் தொடந்து இவ்விதழ்களைப் பதிவிடுகின்றன. பதிவுகள் போன்ற வெளி நாட்டு இணையதளங்களும் சிற்றிதழ் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -

விவரங்கள்
- சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
நூல் அறிமுகம்
22 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. - பதிவுகள்.காம் -


மூன்று விதமான அறிமுகங்களாக  என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன்.  புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச்  சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில்  அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம்.  இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது.  கபொத சாதாரண தர  வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்ப்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.

மேலும் படிக்க ...

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -

விவரங்கள்
- என்.கே.மகாலிங்கம் -
நூல் அறிமுகம்
21 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -


ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.

இவரின் இக்கவிதைத் தொகுப்பு முன்னுரையிலும் சரி, கவிதைகளிலும் சரி அவர் இருப்பைப் பற்றியே எக்சிரென்சஸ் பற்றியே அதிகம் பேசுகிறார். அதுவே அவர் தேடலாகவும் இருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில் ஏறக்குறைய அத்தனையுமே இருப்பைப் பற்றிய தேடலாகத் தான் இருக்கிறது. எனக்கு வாசிக்கக் கிடைத்த மற்ற நூல்களான அமெரிக்கா,  கட்டடக் காட்டு முயல்கள், குடிவரவாளன் ஆகியவை வித்தியாசமானவை. ஆனால் நவீன விக்கிரமாதித்தன் என்ற நாவலும் இருப்பைப் பற்றிய தேடலையே ஏதோ ஒருவகையில் அலசுகிறது. இவர் சொல்லும் இருப்பு வேறு இருத்தலியல் பிரச்சினை வேறு  என்று தான் நினைக்கிறேன். இருப்புப் பற்றிய இவர் கவிதைகள் மெற்றாபிசிக்ஸ் என்ற மெய்யியல் வகையைச் சார்ந்தது. அது ஒன்ரோலொஜி என்ற வேறு ஒரு மெய்யியல் பிரிவுக்கு எடுத்துச் செல்கிறது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடும், உரையாற்றியவர்களும் & சிறப்புப் பிரதிகள் பெற்றவர்களும்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
20 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று,  நவம்பர் 19,  எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், வருகை தந்தவர்கள்  இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.  இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக் காணொளியை ஒளிப்பதிவு செய்தமைக்கும், புகைப்படங்கள் எடுத்ததற்கும்  தடயம் நிறுவனத்துக்கும், அதன் ஸதாபகர் கிருபா கந்தையாவுக்கும், நிகழ்வைப் புகைப்படங்களில் ஆவணப்பதிவாக்கிய நண்பர் அலெக்ஸுக்கும் நன்றி. அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும் மீண்டும் என்  மனம் நிறைந்த நன்றி.

மேலும் படிக்க ...

அஞ்சலி: Elham Farah

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
19 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

84 வயது முதியவரான இசை ஆசிரியர் Elham Farah. இவரைக் காசாவிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் முன் வைத்துச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேலிய இராணுவம். முதலில் இஸ்ரேலிய இராணுவத்தால் காலில் சுடப்பட்டு வீதியில் விழுந்து கிடந்திருக்கின்றார் இந்த மூதாட்டி. உதவுவதற்காக ஆலயத்தில் இருந்து ஒருவராலும் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே தாக்குதல் பலமாக இருந்துள்ளது. நிலத்தில் விழுந்து கிடந்த இவர் மேல் இஸ்ரேலியத்தாங்கி ஒன்றை ஏற்றிக் கொண்டிருக்கின்றது இஸ்ரேலிய இராணுவம். ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

சீர்மியத்தொண்டராகவும் இயங்கும் இலக்கியவாதி கோகிலா மகேந்திரன்! நவம்பர் 17 அவரது பிறந்ததினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
17 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்மாதம் 17 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடும் எழுத்தாளர், சீர்மியத் தொண்டர், திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்த ஆண்டு 1984. அவரது எழுத்துக்களை ஊடகங்களில் படித்திருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு முன்னர் கிட்டவில்லை. கோகிலாவின் இரண்டாவது கதைத் தொகுதி முரண்பாடுகளின் அறுவடை நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவரான பொன்னரி ( இயற்பெயர் கனகசிங்கம் ) வீரகேசரியில் எனது சமகால ஊழியர். அந்த நூலுக்கு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் அதிபர் எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் ( தசம் ) அவர்களின் தலைமையில் வெளியீட்டு அரங்கினை ஒழுங்குசெய்துவிட்டு, என்னை உரையாற்ற வருமாறு கோகிலா கடிதம் எழுதி அழைத்திருந்தார்.

அக்காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி எனும் பத்தி எழுத்தை எழுதிவந்தேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் ஊடாக நான்தான் அந்த ரஸஞானி என அறிந்துகொண்டு, என்னை உரையாற்ற வருமாறு அழைத்ததுடன், எனது பொருளாதார நிலையறிந்தோ என்னவோ, எனது பயணப்போக்குவரத்துச்செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார். அத்தகைய விந்தையான ஆளுமை கோகிலா மகேந்திரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கூறியவறே இந்தப்பத்தியை எழுதுகின்றேன்.

மேலும் படிக்க ...

அன்பான நினைவூட்டல்: கனடாவில் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீடு (நவம்பர் 19, 2023)

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
17 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம் நண்பர்களே! எனது மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகமும் எதிர்வரும் ஞாயிறு , நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ளது.  'தேடகமும்' , 'பதிவுக'ளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு இது. நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணி  தொடக்கம் 8 மணி வரை 3600 Kingston road இல்  அமைந்துள்ள Scarborough Village Community Recreation Center இல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன்.

நிகழ்வில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு பற்றி எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களும், 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' பற்றி எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவர்களும், 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றி  சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவர்களும் உரையாற்றுவார்கள்.  எழுத்தாளர் பா.அ.ஜயகரன் அவர்கள் தலைமைதாங்கி நெறிப்படுத்துவார்.

மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும்  அன்புடன் அழைக்கின்றேன்.

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலிக்குறிப்பு : ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க உதவிய தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா - முருகபூபதி -
  2. தாயகத்தில் ஆங்கிலக் கல்வியின் அவசியமும் ஸ்டெம் கல்வியின் பங்கும் - கலா ஸ்ரீரஞ்சன் -UK -
  3. படித்தோம் சொல்கின்றோம்: அருந்ததியின் ஆண்பால் உலகு நாவல்! ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! - முருகபூபதி -
  4. இசைக்குயில் பி.சுசீலா! - ஊர்க்குருவி -
  5. இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
  6. கனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா - குரு அரவிந்தன் -
  7. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு” - ரொறன்ரோ தமிழ் சங்கம் -
  8. இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் , நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் , 200ம் ஆண்டின் செல்திசை? - ஜோதிகுமார் -
  9. நிலத்தினில் தீபாவளி நிறைவினைத் தரட்டும் !
  10. ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' சுய அனுபவத் தொகுப்பு நூல் பற்றி... - வ.ந.கிரிதரன் -
  11. இலக்கிய சிருஷ்டிப்பு குறித்து மூன்று நாள் பயிற்சிப் பட்டறை! - தகவல்: மேமன்கவி -
  12. ஈராக்கிய இரவுகள் - டுன்யா மிக்கைல் | தமிழில்: க. நவம்
  13. எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' - வ.ந.கிரிதரன் -
  14. சங்க இலக்கியத்தில் பாலைத்திணை மரங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
பக்கம் 38 / 107
  • முதல்
  • முந்தைய
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • அடுத்த
  • கடைசி