பதிவுகள் முகப்பு

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "செயற்கை நுண்ணறிவு - செயன்முறை உரையாடல்”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
08 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - எரியும் உலகின் தீயை அணைப்போம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
வணக்கம் நண்பர்களே!  ' வ.ந.கிரிதரனின் பாடல்கள்' என்னும் யு டியூப் சானலில் செயற்கை அறிவின் (AI) துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பாடல்கள் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
                                 இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
 
* யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=KuQXDp9wRIA
 
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
 
மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம் இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.
 
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
 
வாயுக் குமிழ் போன்றது நம் வாழ்வு.
ஓயும் வரையும் உணராமல் ஓடுகின்றோம்.
சாயும் வரையில் சரிபிழை தெரிவதில்லை.
மாயும் வரையில் சிந்திக்காமல் வாழுகின்றோம்.
 
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (19) : நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - வின்சர் எனும் அபூர்வம்! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
06 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உனது மண்ணில் பூக்கும்
இரவுகள் அழகாகி விடியும் கணங்களை
ரசித்த அதே உன் கண்கள்
இனி புலரப்போகும் காட்சிகளையும் நிச்சயமாக நேசித்திருக்கும்.
அத்தனை அழகல்லவா எம் தாய்மண்?
கடல் அழகு.
கடலில் வந்து விழும் செம்பொன் பரிதியின் அழகு.
நீலத்தை உடுத்துநிற்கும் வானமும் வடிவு.
ஊரைக்காக்க எழுந்து நிற்கும் கோபுரங்கள்
வழிகாட்டும் பனைகளும் தென்னைகளும்.
குளங்களும்,தாமரைகளும்.
விடியலை பறைச் சாற்றும் பறவைகள்.
மனதை வருடும் தவிலும்,நாதஸ்வரமும்.
காற்றைத் தழுவி எமக்குக் கடத்தும்
அரசமரம்,ஆலமரம், பூவரசு.
பச்சைப்பசேலென
காற்றில் அலைபோல் அசையும் பயிர்கள்
என எல்லாமே அழகல்லவா?

அத்தனை அழகையும் வாரி அள்ளிக் கொட்டிக்கொண்டேயிருந்த மண்ணில்தான்  'யாழ்ப்பாணம்' என்ற நகரமும் மழையிலும், வெயிலிலும், ஏன் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டிலும்கூட கண்ணுபடப்போவதாய் செழித்துக்கிடந்தது.

மேலும் படிக்க ...

மீராபாரதியின் மிதிவண்டிப் பயணம் - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
பயணங்கள்
05 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமூக அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி தற்போது இலங்கையில் தனது மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.  பருத்தித்துறையில் ஆரம்பித்து பொத்துவில் வரையிலான்  பயணமிது. இதன் நோக்கத்தை அவரது  மிதிவண்டிப்பயணத்துக்கான முகநூல் இவ்விதம் கூறுகிறது:

"கதைப்பதனூடாக கற்போம் .  கற்பதனூடாக  கதைப்போம்.  கலந்துரையாடல் தலைப்புகள்: மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், மிதிவண்டியின் நன்மைகள், பாதுகாப்பான மிதிவண்டிப் பாதை நடை பதைகளை ஊக்குவித்தல், வீதிகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீடுகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் &  ஊள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல். உங்கள் ஊர்களில் பின்வரும் திகதிகளில் நீங்களே உள்ளூர் புலமையாளர்கள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யலாம்.  பின்வரும் திகதிகளில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்கலாம். இப் பயணத்திற்கும் அதற்கான செலவுகளும் பங்குபற்றுகின்றவர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். பின்வரும் திகதிகளில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் தாமே அனைத்து தங்குமிட, உணவு, மிதிவண்டிப் பொறுப்புகளையும் எடுக்க வேண்டும். "

மேலும் படிக்க ...

கனடாவில் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் விழா - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
05 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகசபை அங்கத்தவர்களால் மங்களவிளக்கு ஏற்றப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன பைரவி அருள் மாறன், லதிசா தயாளன், பிரகதி சர்மா ஆகிய சிறுமிகளால் இசைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து புஸ்பா சிவராசா, இந்திராணி சங்கநிதி ஆகியோரின் தமிழரின் பாரம்பரிய பறை இசையும், சிலம்பாட்டமும் இடம் பெற்றன. அடுத்து வரவேற்பு நடனமும், திருமதி அருள்மலர் மதியழகனின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.

அடுத்து இளையதலைமுறைக்கும் பெண்களுக்குமான ‘வதனம்’ சஞ்சிகையின் முதலாவது ஆண்டுமலர் வெளியீட்டுரையை எழுத்தாளரும் முதன்மை ஆசிரியருமான குரு அரவிந்தன் நிகழ்தி வைக்க, இளைய தலைமுறை இணையாசிரியர் ஆகாஸ் ஞானவேலு அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. திருமதி கேதா கிருபராஜனின் இதழ் ஆய்வுரையைத் தொடர்ந்து, முதல் பிரதியை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க ...

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
05 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத்  தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின்  ஆட்சிக் காலங்களில்  தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.

இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்  தன்னைக்  காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.

ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள்   தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

கவிதை பற்றிய உரையாடலொன்று... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.

கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.

அவரது கவிதை -

நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?

கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.

ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து  கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.

இதுவரை அதற்கான உரையாடலை நம் கவிஞர்களும் சரி, விமர்சகர்களும் சரி முன்னெடுக்கவில்லை.  கவிஞர்கள் பலருக்குத்  தாம் எழுதும் கவிதைகளையே புரிவதில்லை.  இந்நிலையில் இந்நிலை எனக்கு ஆச்சரியத்தைத்  தரவில்லை. விமர்சகர்கள் பலரும் பிறர்தம் கருத்துகளை  மேற்கோள் காட்டி விமர்சனம் செய்யப் பழகியவர்கள்.  அதனால் அதுவும் ஆச்சரியம் தரவில்லை.  இக்கவிதையை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். இது பற்றிய என் எதிர்வினையே  இது.

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் -5 சல்ஸ்பேர்க் (Salzburg) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
03 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் .

ஏன் அங்கு போகவேண்டும் ?

அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க் முக்கியமாக இருந்தது. நான் சிறு வயதில் பார்த்த ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த நகரிலே எடுக்கப்பட்டது . அந்தப் படத்தை நகலெடுத்த படமாகச் சொல்லப்பட்ட தமிழ்ப் படமாகிய ‘சாந்தி நிலயமே’ நான் 1969 இல் பார்த்த படம். உண்மையில் சாந்தி நிலையம், ஜேன் இயர் (Jane Eyre by Charlotte Bronte) என்ற பிரித்தானிய நாவலையும் ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற அந்தப் படத்தை ஆஸ்திரிய கதையையும் இணைத்த நகல் எனக்கேள்விப்பட்டேன். மேலும் எனது நண்பன் ஒருவன் சாந்தி நிலையத்தில் நடித்த சிறுமி பிற்கால நடிகை மஞ்சுளா மீது ஏற்பட்ட பிரியத்தால் ஒன்பது தடவை பார்த்தான் என்பது, நாங்கள் இந்து கல்லூரி விடுதியில் இருக்கும்போது ஒரு வித சாதனையாகப் பார்க்கப்பட்டது. அவனும் அக்காலத்தில் சாதனையாளனாக எங்களுக்குத் தெரிந்தான்.

அதன் பின்பாகவே அது சவுண்ட் ஒவ் மியூசிக் இலங்கைக்கு வந்த பிற்காலத்தில் என் மனைவி சியாமளா பாடசாலையில் படித்த காலத்தில் அந்த படத்திற்கு யாழ்ப்பாணத்தில், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியினர் பாடசாலையால் கொண்டு சென்றார்கள் என்று சொன்னபோது சல்ஸ்பேர்க் செல்ல அதுவே முக்கிய காரணமாகியது .

சவுண்ட் ஒவ் மியூசிக் ஆங்கிலப்படத்தின் கதாநாயகி ஜுலி அன்ரூ மலையுச்சியில் நின்று பாடுவது என் மனத்தில் மட்டுமல்ல பலரது மனங்களில் பசுமையான காட்சியாக படிந்திருந்தது. இறுதிக் காட்சியில் , ஹிட்லரின் நாஜி படையினரிடமிருந்து முழுக் குடும்பமும் ஒரு சவக்காலையில் ஒழித்திருந்து, அதன்பின் அங்கிருந்து வாகனத்தில் கதாநாயகனும்( Mr. Christopher Plummer as Captain Georg Von Trapp) கதாநாயகியும் ஏழு பிள்ளைகளுடன் மலையில் ஏறி தப்பிச் செல்வதாகப் படம் முடிகிறது.

மேலும் படிக்க ...

நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
01 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்?  தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா?  அல்லது  அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா?  அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின்  கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.

நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம்  தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.  இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான்  இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.

மேலும் படிக்க ...

பெரியாரும் தமிழும் திராவிடமும்! சூழ்ச்சியால் மொழிவாரியாகச் சிதறுண்ட தென்னாடு. இன்றும் சூழ்ச்சி தொடர்கிறது தமிழ்நாட்டைப் பிரிக்க! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம்  இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில்  (பெரியார் ஈ.வெ.ரா  சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.

அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக  எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார்.  கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.

மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார்.  அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய் அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார். இதை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்காக அவர் பல கட்டுரைகள் எழுதினார். உதாரணத்துக்குத் 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரை பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:

" தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது  வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன். தமிழை அறியாதவன். ஆரியத்திற்குச் சோரம் போனவன்.  நம்மைக் காட்டிக்கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.  இவை நான்கும் வேறு வேறு மொழியென்று கூறுபவர்கள் தமிழர் என்று தம்மை நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கருதிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறலாமே தவிர - இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது.''

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் (4): மெல்க் .(Melk) , ஆஸ்த்திரியா. - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
31 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெல்போர்னில் வீடு கட்டுவதற்கு நகரசபையில் அனுமதி வாங்கும்போது, வீடு கட்டி மிகுந்த நிலத்தில் எப்படி பூந்தோட்டம் அமைப்பீர்கள்? வீட்டின் முன்பகுதியில் எப்படி வேலி அமையும்? எனப் பல கேள்விகள் கேட்பார்கள். இப்படிப் சில கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியே அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமான நாங்கள் அதற்காக, பதிலைக் கூறாது கட்டடக் கலைஞரையும் (Architect) லாண்ண்ட்ஸ் ஸ்கேப் கலைஞரிடமும் ( Landscape Architect) விட்டு விடுவோம். இவற்றின் வழமை எப்படி மேற்கு நாடுகளில் உருவாகியது?

15 ஆம் நூற்றாண்டுகள் வரையில் மனிதர்கள் வசிக்காத இடமெல்லாம் விவசாயம் செய்ய வேண்டும். முக்கியமாக உணவு உற்பத்தியே விவசாயத்தின் நோக்கம். அலங்கார தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் என்பவற்றை அரசர்கள் மட்டுமே செய்வார்கள். மற்றவர்களுக்கு வசதியில்லை . ஆனால், 16ஆம் நூற்றாண்டுகளின் பின்பாக ஐரோப்பாவில் பிரபுக்கள், மத நிறுவனங்கள் தங்களது நிலங்களை அழகுபடுத்த முடியும். தங்களது செல்வத்தை வெளிக்காட்ட முடியும் என்பதால் வீடுகளிலும் மதகுருக்களின் மடங்களைச் சுற்றி பூந்தோட்டங்கள் வைத்தார்கள். இப்படியான புல்தரை , பூந்தோட்டங்கள் பேணும் முறையும் பரோக் வடிவமைப்பு (Baroque architecture) என்ற கட்டிடக்கலை மரபோடு இணைந்து உருவாகியது. இந்த வழமை ஐரோப்பிய நாடுகளிலிருந்து காலனி நாடுகளுக்கு உலகெங்கும் பரவுகிறது.

அது என்ன பரோக் வடிவமைப்பு?

அதுவரையும் நேரான கட்டிடங்கள், நேர் கோடுகளாகவும், வளைவுகளற்று இயற்கையிலிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான இடவசதிகளோடு (Functional Space)  மட்டுமே தேவை எனக் கட்டப்பட்டன. கட்டிடங்களது உறுதியும் நீடித்த தன்மையுமே முக்கிய விடயமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டிலே வளைவுகள், பூந்தோட்டங்கள், நீச்சல் தடாகங்கள் என உருவாகியது .

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (18) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்! - விடியலை வருடிய தாலாட்டு - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
31 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சேவல்கூவி எம்சயனம் கலைந்தவேளை அதிகாலை 4 மணியிருக்கும்.அரசமர இலைகள் பழுத்து மஞ்சளாய் காற்றில் அவை பறந்து மண்ணைத்தழுவிய வேளையது. நேற்றைய இரவில், தென்றல் சுகமாக எம்மைவருடிய பொழுதில், கொட்டிய மழையில்,குளித்த மல்லிகை பூத்து பரவசப்படுத்திக்கொண்டிருக்க நானும், நண்பர்களும் இந்த விடியலில் ஏ.எஸ்.கே (கனகரட்ணம்) மாஸ்ரரிடம் ஆங்கில பயிற்சி வகுப்புக்காகச் செல்கின்றோம்.மணி இப்போது 4.30தாண்டியிருக்கும். வேய்ந்த வீட்டின் தாழ்வாரத்து ஓலைகளிலிருந்து சொட்டிய மழைநீரின் சத்தத்தைத்தவிர ஊர்சனம் இன்னும் உறக்கத்தில் நிசப்தம். மார்கழியின் விசுவாசமா இது?

ஊரும்,ஊரின் அழகும்,பூக்களின் வாசங்களும், நண்பர்களின் அந்த நேரத்து சிலேடைச் சொற்களும் மனசை உசுப்பிவிட விடிந்தும் விடியா வெளிச்சமில்லாத்தெருக்களுக்குள் சேர்ந்தே ஊடுருவிய சைக்கிள்கள் பிரதான வீதி தாண்டி மெதுவாக இப்போ மாஸ்ரரின் வீட்டடி வந்து சேர்கின்றன.அங்கே சில இளஞ்சிட்டுக்கள் தமக்குள் முணுமுணுத்தபடி சைக்கிள்களை ஓரங்கட்டிவிட்டு மண்ணைப்பார்த்தபடி, எம்மைப்பார்த்தும் பார்க்காதவர்கள்போல வகுப்புக்குள் நுழைய,ஒன்றாய் வந்த எங்கள் கூட்டத்தின் சில கண்களும் கனவுகளில் மிதந்தபடி! மனசுக்கு விடை தெரியா சிறகடித்துப்பறந்த வயதது.இரண்டு பல்ப் மட்டுமே வெளிச்சம்தர வெள்ளை பெனியனும், வேட்டியுமாக மெல்லிய புன்னகை பூத்தபடி உள்ளே வருகின்றார் ஏ.எஸ்.கே.

"குட் மோர்னிங்" என்ற அவரது சொற்பதம் எம்மை ஆசீர்வதிக்க அவர் வீட்டுக்கடிகாரம் 'டொங் டொங்'கென 5 தடவை ஒலித்து ஓய்கிறது.இன்றுதான் கிரமர்கிளாஸ் ஆரம்பம் என்பதால் வகுப்பு நிரம்பி வழியுது. 'இளசுகளா,சிட்டுக்குருவிகளா ஒருகை பார்க்கலாம்' என கேள்விகளுக்கு இரு தரப்புக்களிலுமிருந்து கைகள் உயர்கின்றன. ஒன்றேகால் மணித்தியாலம் எப்படிப்பறந்ததோ தெரியவில்லை. "இன்றைக்கு இதுபோதும்"என மாஸ்ரர் கூற "ஐயா ஆள விடு" என ஓர்குரல் எழ வகுப்பறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.

மேலும் படிக்க ...

பெரியார் சிந்தனைகள் - தொகுப்புகள்! பதிப்பாசிரியர் - வே.ஆனைமுத்து! பதிப்பகம் - சிந்தனையாளர் கழகம்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
30 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள்

ஈ.வெ.ரா பெரியார் பெரும் சிந்தனையாளர். வர்க்கம், வர்ணம், மூட நம்பிக்கைகளால் சிதைந்து கிடக்கும் உலகில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமநீதி, பெண் உரிமைகளுக்காக இருந்தவரை தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பிரமிப்பைத்தருகின்றன. அவரது சிந்தனையின் ஆழத்தைக் காட்டுகின்றன.

பெரியாரின் சிந்தனைகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் அவர் எழுத்துகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.அதற்குப்பின் அவற்றின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். அவற்றைப் படிக்காமல், அறியாமல் அவர் மீது சேற்றை வாரியிறைக்காதீர்கள்.

மேலும் படிக்க ...

ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! காந்திக்கு 'மகாத்மா' பட்டத்தை அளித்தவர் ரவீந்திரநாத் தாகூர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக் காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்கள் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.

இந்திய தேசிய கீதமான ஜனகனமண பாடலை இயற்றிய வங்கக் கவிஞர் இரவீந்திர நாத் தாகூர்தான் காந்திக்கு மகாத்மா என்ற பெயரைச்சூட்டினார்.

இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி இன்று வரையில் இதுபோன்ற அகிம்சைப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச் சென்றவர்தான் அண்ணல் காந்தி!

மேலும் படிக்க ...

தமிழ் எழுத்தாளர்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும், ஒரு வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் வந்து மேய்கிறார்கள். முட்டி மோதுகின்றார்கள். ஆனால் இணையத்தொழில் நுட்பம் அவர்கள்தம் கலையான எழுத்துக்கலைக்கு  உதவக்கூடிய விடயங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் படைப்புகளைக்கூட வெளியிடுவதற்கு முயற்சி செய்வதில்லை. படைப்புகளை வெளியிடுவதென்றால் இன்னும் அச்சு வடிவில் தம் படைப்புகள்  வெளிவர வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். அவ்விதம் வெளியிடப் பணமில்லையே என்று அழுது வடிகின்றார்கள். இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் வாழும் இன்றுள்ள  உலகம் டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் வசமாகிக்கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இவ்விதம் எண்ணுவது அவர்கள் காலத்தின்  இயல்பையும், அது வழங்கும் பயன்களையும் அறிந்துகொள்ளவில்லையென்பதையே காட்டுகின்றது.

முதலில் ஒன்றைக் கவனியுங்கள். எதற்காக உங்கள் படைப்புகள் அச்சுருவில் வரவேண்டுமென்று விரும்புகின்றீர்கள்? நூல்களை விற்றுப் பணம் சம்பாதிப்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரையில் உண்மையான எழுத்தாளர்கள் தம் படைப்புகள் பலரைச் சென்றடைய வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஒரு காலத்தில் குறைந்தது ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார்கள். இப்பொழுது அவ்வாறு யாரும் அச்சடிப்பதில்லை. தேவைக்கேற்ப 300 அல்லது அதற்கும் குறைவாகவே அச்சடிக்கின்றார்கள். தேவைக்கேற்ப அச்சடிக்கும் நிலை டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக ஏற்பட்டு விட்டது. 300 பிரதிகள் அச்சடித்து எத்தனை பேர் வாங்கி படிக்கப்போகின்றார்கள்? வெளியீட்டு விழாவுக்கு வரும் பெரும்பாலனவர்கள் உங்கள் உறவுக்காரர், நண்பர்கள் , உங்களைத்தனிப்பட்டரீதியில் தெரிந்தவர்கள். இவர்களில் பலர் உங்கள் முகத்துக்காக வருபவர்கள். இவர்களில் எத்தனைபேர் உங்கள் நூல்களை உண்மையில் வாசிப்பார்கள் என்பது தெரியாது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் நுட்ப அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம் -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம் -
ஆய்வு
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று நுட்ப அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் நுட்ப அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

நுட்ப அணி

நன்கு தெரிந்து வேறுபட மொழியாது குறிப்பினாலும், தொழிலாலும் அரிதாக உணரும் தன்மை கொண்டு விளக்குவது நுட்ப அணியாகும்.

“தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
அருதுணர் வினைத்திறம் நுட்பம் ஆகும்”
(தண்டியலங்காரம் 37)

நுட்ப அணியின் வகைகள்

குறிப்பு நுட்பம்,தொழில் நுட்பம் என இருவகைப்படும்.

1.குறிப்பு நுட்பம் - ஒன்றனுக்கு எந்தவிதமான இடர்களும் ஏற்படக்கூடாது என நுட்பமாக நடந்து கொள்ளுதல் ஆகும்.

2.தொழில் நுட்பம் - தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த செயலால் வெளிப்படுத்துவதாகும்.

குறிப்பு நுட்பம் அகம், புறம் இரண்டிலும் அமைந்துள்ளது.தொழில் நுட்பமும் அகம், புறம் இரண்டிலும் அமைந்துள்ளது

மேலும் படிக்க ...

ஒரு பக்கக் கதை: மது ஒழிப்பு - மணிராம் கார்த்திக் (மதுரை) -

விவரங்கள்
- மணிராம் கார்த்திக் (மதுரை) -
சிறுகதை
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில்,

அதிகாலை ,

இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி,

“ ஏன் சுந்தரம் ? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க ?“ என்று மீனாட்சி கேட்டாள். ,

“ மது ஒழிப்பு. அரசுக்கு எதிரா போராட்டம்.மதுவை ஒழிக்க சொல்லி மாபெரும் போராட்டம் நடத்தியது எதிர்கட்சி “ என்று சுந்தரம் கூறினான்.

“ மது ஒழிப்பு போராட்டம்னு சொல்ற , இங்க பார்த்தா ஒரு லோடு சரக்கு பாட்டில் கிடக்கு. இத சுத்தம் செய்யவே நேரமாகும் போல !” என்றாள் மீனாட்சி.

“ மது ஒழிப்பு போராட்டம் தான் , அதான் மதுவ வாங்கி ஒழிச்சிருக்காங்க. போராட்டத்தில் கலந்திருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும் யாருக்கும் தெரியாம கொடுத்திருக்காங்க. கூட்டம் கூடிருச்சு.” என்று சுந்தரம் கூறினான்.

“சிரிப்பு தான் வருது.பேரு மது ஒழிப்பு மாநாடு , மது குடிக்காத ஆளே இல்லை “ என்று மீனாட்சி நக்கலாக கூறினாள்.

மேலும் படிக்க ...

அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி வழங்கும் "ஏணிப்படிகள் 92 - நேர்காணல் நிகழ்ச்சி"! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

      ZOOM Meeting ID: 626 491 9582 | Passcode: 6643  | ZOOM LINK

மேலும் படிக்க ...

சிறுகதை: கொடியின் நிழல் - டானியல் ஜீவா -

விவரங்கள்
- டானியல் ஜீவா -
சிறுகதை
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

கடந்த கால கசப்புகளை மனதிற்குள் விழுங்கியிருந்த சைமனுக்கு கொஞ்ச நாட்களாகத்தான் அவனிடமிருந்து அந்த எண்ணங்களும் நினைவுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவன் கொடியின் மீது கொண்ட அளவற்ற பிரியமே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்ற சைமனுக்கு ;ஓய்வு நேரம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும் போய் வருவான். அப்படிப் போய் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை அவனுடைய அம்மாவிடம் கொடுப்பான். ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுடைய கைச் செலவுக்கு வைத்துக் கொள்வான். இவ்வளவு பிரச்சனையும், சிக்கலும் நிறைந்து இருக்கின்ற அவனுடைய வாழ்க்கையில் மலர்க்கொடி மீது தீராக் காதல் எப்படியோ வளர்ந்து உறைந்து கிடக்கிறது. எப்போது அவளைப் பார்க்கின்றானோ அப்போதெல்லாம் தன் உயிரில் அவள் உயிர் உரசியது போல் உணர்வான். அலையற்ற பெண் கடலின் மீது ஒரு சருகொன்று மிதந்து தன் உடல் முழுவதும் ஊர்ந்து செல்வது போல் தோன்றும். அவள் அவனைக் கடந்து செல்லும் போகும் போதெல்லாம் தன்னுள் ஊறும் உயிர் ஒன்று எப்படி தன்னிடம் இருந்து விலகிப் போகும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். காலத்தையும் நேரத்தையும் கடந்து செல்ல முடியாமல் அவள் நினைவில் ஊறிக் கிடந்தது அவனுடைய உணர்வும் உடலும் .

அவன் ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தொழிலுக்கு எழுந்து விடுவான். அதனால் அவனது. கண்களில் தூக்கக் கலக்கமும் எரிச்சலும் கலந்த உணர்வே எப்போதும் ஏற்படும். உடல் முழுவதும் சோர்வாக உணர்வான். கண்களின் கீழே கரு வளையம் படர்ந்திருந்தது.

புருவங்களின் இடையே இருக்கும் மென்மையான இடத்தில் தோல் தடித்து கண்டல் காயத்துடன் ஒரு வீக்கம் தோன்றியிருந்தது. அந்த வீக்கம் முகத்தில் பரவியதால் அவன் வேறு ஒருவன் போல் காணப்பட்டான். முந்தைய நாளில் காலையில் களங்கட்டி தொழிலுக்குப் போகும் போது வள்ளத்தில் நின்று மரக்கோலை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு தாங்கும் பொழுது சமநிலை இழந்து விழுந்து, அடிபட்ட காயம் அது. அவனுக்கு இப்படி அடிக்கடி விழுந்து காயப்படுவது அவனுக்கு ஒரு சாதாரண விடயமாகவே மாறிவிட்டது. யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சைமனுக்கு, கடல் மீது தீராத பற்று ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் கடலின் அலைகள், அவற்றில் மறைந்திருக்கும் மர்மங்கள், கடல் சுழிகளில் காணாமல் போகும் மனிதர்கள், கடல் சுணை நீர் உடலில் படும் போது ஏற்படும் வலி இவற்றைப் பற்றித் தானாகவே அவன் எண்ணும் போது அவனது மனதில் அவனை அறியாமலே ஒரு பயம் தோன்றி மறையும். ஆயினும் மீன்களின் பாடலும், பறவைகளோடு பேசுவதும் கடலுடன் கூடி வாழ்வதும் அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான மகிழ்ச்சி தரும் விடயங்களாகவே  இருந்தன.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் (17) - மறக்க முடியாத தமிழ் ஆசான் சிவராமலிங்கம்பிள்ளை மாஸ்டர் - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கல்லூரிமணி நாளொன்றுக்கு எத்தனை தடவை ஒலிக்கும்? அந்த மணியில் எத்தனை பறவைகள் குந்தியிருந்து விட்டு மீண்டும் பறந்துபோயிருக்கும்? நினைத்தவுடன் மணியில் குந்தவோ, மறுபடியும் அங்கு சங்கமிக்கவோ அவைகளால் முடியும். ஆனால் எமக்கு?

நினைத்தவுடன், விரும்பியவுடன் பறந்துபோய் அந்த உறவோடு பேச முடியுமா? அல்லது எம் கையால் கல்லூரி மணியை ஓங்கி ஒலிக்கும் வரையிலும் அடிக்க முடியுமா? பிரிய முடியாமல் அன்று எம் கல்லூரியைப் பிரிந்தபொழுது கடைசி மணி அன்று,எத்தனை மணிக்கு எம்மோடு பேசி எம்மை வழியனுப்பியது என யாருக்காவது நினைவிருக்கின்றதா? தாயின் மடியும் சரி, பள்ளிக்கூட மணியும் சரி நாம் வாழ மனசார வாழ்த்தும் உறவுகள்.

எங்கள் கல்லூரியிலிருந்து அன்று தொட்டு இன்றுவரை எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் ஆசான் திரு.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள். சிவராமலிங்கம்பிள்ளை மாஸ்ரர் என்றால் காலம் முழுவதும் பேசிக் கொண்டே போகலாம்.சமயம், தமிழ், இலக்கியம்,ஆங்கிலம் என அனைத்தையும் கரைத்துக்குடித்தவர். எப்போது அவரின் பாடம் வரும் எனக்காத்திருந்த காலமது. அவர் மீதும், அவரின் கற்பிக்கும் ஆற்றல்மீதும் அவ்வளவு ஆசை.

மேலும் படிக்க ...

காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு ,பதிவுகள்.காம் வெளியீடு!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதற்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0DV76H5BS

நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.

இவ்வகையில் அல்பேர்ட் ஐன்ஸ்ட்டைனின் சார்பியற் கோட்பாடுகள் என்மேல் ஏற்படுத்திய பாதிப்பும், ஆதிக்கமும் முக்கியமானது. வெளி, நேரம் , ஈர்ப்புச் சக்தி பற்றிய அவரது சார்பியற் தத்துவங்கள் அறிவியற் துறையை மட்டுமல்ல, இருப்பு பற்றிய தத்துவத்துறையையும் மாற்றியமைத்தன என்பேன். குறிப்பாகக் காலவெளி என்னும் சொற்பதம் சிறப்பான சொற்றொடர். சிந்தையை விரிவடைய வைக்கும் தன்மை மிக்க சொற்றொடர்.

மேலும் படிக்க ...

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
இலக்கியம்
27 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது.

உலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா? என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது.

ஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.

மேலும் படிக்க ...

எழுத்தாளர்களின் கவனத்துக்கு.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.

தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல. உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே. கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

ஓர் அருங்காட்சியகமும் இந்திய வரலாற்றின் ஒரு பக்கமும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
27 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1600ல், கிட்டத்தட்ட 215 வியாபாரிகளும் முதலீட்டாளர்களும், லண்டனில் ஒன்றிணைந்து, ஈஸ்ட் இந்தியன் கம்பனி என்ற ஒரு கம்பனியை உருவாக்கிக்கொண்டனர். நோக்கம் : தென்னிந்தியாவில் திரவிய பொருட்களுக்கான, வர்த்தக உறவுகளை ஸ்தாபித்து, ஏகோபிதத்தை நிலைநாட்டுதல், என்பதுவே. (அபின் உட்பட–பருத்திப்பட்டு, ஏனைய பல்வகைப் பொருட்கள்). ஆனால், போர்த்துக்கல்-டச்சு-பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே களத்தில் இருந்த ஒரு சூழ்நிலையில், இக்கொள்ளையடிப்பில் ஓர் ஏகோபித்த நிலையானது, பெருத்த சவாலை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், இலாபங்களை ஈட்டித்தருவது என்ற கோதாவில், மேற்படி நடவடிக்கை தவிர்க்க முடியாததேயாகும்.

ஒரு 39 வருடங்கள் கழிந்துபோன நிலையில், 1639இல், சென்னையின் ஒரு ஒதுக்குபுற மீன்பிடி கடற்கரையில், இதற்கென ஒரு கோட்டை தனது கட்டுமானத்தை துவங்கியது (Fort Saint George). ஆனால், 1608லேயே (அதாவது, இதற்கு 30 வருடங்களுக்கு முன்னரேயே) ஆங்கிலேயர் சூரத், குஜராத் போன்ற இடங்களில் இத்தகைய வர்த்தக தளங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதும் அவதானிக்கத்தக்கதே.

தனது கடந்தகால, இரு தளங்களின் அனுபவங்கள், துணையிருந்தது போல, போர்த்துக்கேயர், திரவிய பொருட்களுக்காக, இலங்கையில், தொடுத்த போரின் போது, இலங்கையில் உள்ள கோயில்களை எல்லாம் சிதைத்தொழித்தனர் என்ற தகவல்களும், அதன் வழி பெற்ற அனுபவங்களும் ஆங்கிலேயருக்கு கை கொடுத்திருக்கலாம்.

இருந்தும், ரோமன் இராணுவத்தில் பணிப்புரிந்து, பின் ஈற்றில், மதத்துறவியாக பழுத்துவிட்ட Saint George என்ற இறந்து போன ஒரு மதகுருவின் பெயராலேயே மேற்படி கோட்டையானது, நிர்மாணிக்கப்பட்டது. இது தனது இறுதிவடிவத்தை 23.04.1644ல் நிறைவு செய்தப்போது, அன்றைய மதிப்பில் அது 3000 பவுன்களை விழுங்கி தீர்த்திருந்தது. ஆனால் இம் 3000 பவுன்கள் என்பது ஓர் ஆங்கிலேய பார்வையில் ஓர் முதலீடாகவே இருந்தது.

மேலும் படிக்க ...

சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
27 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தமிழக நண்பரும், கவிஞருமான மு.முருகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அகணி பதிப்பகத்தின உரிமையாளரான அவரது பதிப்பகத்தின் நூல்களும் அங்கே தனியாக ஒரு காட்சியறையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த காட்சியறையில் எனது 7 சிறுகதைத் தொகுப்புகளும், 7 புதினங்களும் அவரால் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதைவிட 22 தமிழக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எனது நூல்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலையும் காட்சிப்படுத்தியிருந்தார். கல்லூரி மணவ, மாணவிகள் மற்றும் நடுத்தர வயதினர் பலர் எனது புத்தகங்களைத் தேடி வாங்கிச் சென்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை புத்தகத் திருவிழா தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 27-12-2024 தொடக்கம் 12-1-2025 ஞாயிற்றுக்கிழமை வரை நந்தனத்தில் நடைபெற்றது. சென்ற வருடம் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வாசலில் திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, மற்றும் திரு.வி.கா ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 900 அரங்குகள் வரை இங்கே இடம் பெற்றிருந்தன.

புத்தகக் காட்சி இடங்களை ஒன்பது பாதைகள் இணைத்தன. காட்சி அறைகள்; இருந்த பாதைகளுக்கு பாரதியார் பாதை, பாரதிதாசன் பாதை, கம்பர் பாதை, வள்ளுவர் பாதை, இளங்கோ பாதை, ஒளவையார் பாதை, வா.உ.சி. பாதை, கலைஞர் பாதை, வள்ளலார் பாதை என்று பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ‘யாவரும் பப்பிளிகேஸன்ஸ்’ என்று இளையோர்களுக்கான நூல்கள் விற்பனையகமும் தனியாக இருந்தது. இதைவிட குழந்தைகள் சிறுவர்களுக்கான காட்சிச் சாலைகளும் இருந்தன. இம்முறை சில ஆங்கில நூல் பதிப்பகங்களும் தங்கள் நூல்களைக் காட்சிப் படுத்தியிருந்தனர்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஓவியர் மாயாவின் மாயாலோகம்! - வ.ந.கி -
  2. சிறுகதை: கொங்கிறீட் கலவரத்தில் மண்ணின் குழப்பம்! - டீன் கபூர் -
  3. காலத்தால் அழியாத கானம் - 'ரோஜா மலரே ராஜகுமாரி' - ஊர்க்குருவி -
  4. ஈழத்து எழுத்தாளர் சொக்கன் (சொக்கலிங்கம்) படைப்புகளில் படைப்பாக்க உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், மதுரை -
  5. 'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் -
  6. அந்நியமாதல் கருத்துநிலையில் ஈழத்து புகலிடத் தமிழ் இலக்கியம் - நான் நிழலானால் சிறுகதைத்தொகுதி மீதான ஓர் ஆய்வுக்கண்ணோட்டம் - - குமாரசூரியர் யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம். -
  7. இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 45: “நூல்களைப் பேசுவோம்” - தகவல்: அகில் -
  8. பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (3) - நடேசன் -
  9. தத்துவம் அறிவோம்: 'இமானுவல் கான்ட்'டின் (Immanuel Kant): அனுபவம் கடந்த கருத்தியல்வாதம் ( Transcendental Idealism ) - வ.ந.கிரிதரன் -
  10. கவிதை பற்றிச் சில சிந்தனைகள்.... - வ.ந.கிரிதரன் -
  11. கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -
  12. கண்ணம்மாக் கவிதை: தர்க்கம் செய்வோமடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -
  13. நனவிடை தோய்தல் (16): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - அந்தநாள் ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -
  14. சிரேஷ்ட ஊடகவியலாளரும், ராவய வார இதழின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான சிங்கள ஊடகவியலாளர் விக்டன் ஐவன் மறைந்தார்!
பக்கம் 11 / 107
  • முதல்
  • முந்தைய
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • அடுத்த
  • கடைசி