பதிவுகள் முகப்பு

தீபாவளித் திருநாள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
02 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!  தீப ஒளித் திருநாள் என்றும் தீபாவளியை அழைப்பர். இந்து மதத்தவர்களால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை இதுவாகும். மனிதவாழ்க்கையில் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இப்பண்டிகை இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மியான்மர், பிஜி தீவு, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. இப்போது புலம்பெயர்ந்த சில நாடுகளிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான ஆண்டுகளில் பொதுவாக தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகின்றது. தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்குப் புராணக்கதைகள், இராமாயணக் கதைகள் போன்றவற்றின் மூலம் பல காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அறிவியல் வாதிகள் பொருத்தமற்ற புராணக் கதைகள் என்றும் வாதிடுவர். புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளையே இன்று தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் 2021 நவெம்பர் மாதம் 4 திகதி வருவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலாச்சார நாடாகிய கனடாவில், அவர்களின் நாட்காட்டியின் குறிப்புக்கு ஏற்ப, வெவ்வேறு தினங்களில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. சிலர் ‘தீபாபலி’ என்றும் இத்திருநாளைக் குறிப்பிடுவர்.

தீபாவளி அன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அதிகாலையில் தூக்கத்தால் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பலகாரங்களைப் பரிமாறியும் கொள்வர். சிலர் விருந்தினருக்குப் பரிசுகள் தந்தும் மகிழ்வர். பெரியோரை வணங்கி அவர்களி;டம் இருந்து ஆசீர்வாதம் பெறுவர். தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வது மக்களின் வழக்கமாகும்.

மேலும் படிக்க ...

கூவாமல் கூவும் கோகிலம்: கலைஞர் போட்ட தவறான கணக்கால் வாழ்விழந்த மு.க.முத்து! - குயில் -

விவரங்கள்
- குயில் -
கலை
01 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு.

மு.க.முத்துவின் மீது இன்னுமொரு விதத்திலும் எனக்கு அவர் மீது அனுதாபமுண்டு. அவரது தாயான கலைஞரின் முதல் மனைவியும், பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே காச நோய் காரணமாக இறந்தபோது அவருக்கு வயது 20. குழந்தையிலேயே தாயன்பை இழந்து வளர்ந்தவர் மு.க.முத்து. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை அவரது தந்தையின் செயற்பாடுகளாலேயே முடிவுக்கு வந்தது. இவ்விதமான வாழ்க்கைப் போராட்டங்களே பின்னர் மு.க.முத்துவின் வாழ்வின் சீரழிவுக்கும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டுமென்றே தெரிகின்றது.

மேலும் படிக்க ...

அக்டோபர் 31 கலோவீன் தினம்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
31 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.

பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.

பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'பாலாற்றில் சேலாடுது' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
29 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கே.வி.மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் மொழியில், சீர்காழி கோவிந்தராஜன் & ஜமுனாராணி குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடற் காட்சியில் நடித்திருப்பவர்கள் எம்ஜிஆர் & எல்.விஜயலட்சுமி. பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: 'கொடுத்து வைத்தவள்'.

மேலும் படிக்க ...

'நூலகம்' இணையத் தளத்தில் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன்

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது 'குடிவரவாளன்' நாவலைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். நியூயோர்க் மாநகரத்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் இருத்தலுக்கான போராட்டத்தை விபரிக்கும் நாவல் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்டது. இவ்வகையில் ஒரு குறிப்பிட்ட காலச் சம்பவங்களை ஆவணப்படுத்தும் நாவலிது.

மேலும் படிக்க ...

கூவாமல் கூவும் கோகிலம்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்! -

விவரங்கள்
- குயில் -
சமூகம்
28 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழை வளர்ப்பது என்றால் எப்படி? தமிழ் நூல்களை அதிக அளவில் தேடிப்பிடித்து இணையத்தில் அல்லது அச்சில் வெளியிடலாம். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை , வெளியிட்ட சஞ்சிகைகளை, நூல்களை, பத்திரிகைகளைச் சேகரிக்கலாம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவை. பலரின் பங்களிப்பு தேவை. ஆனால் இவற்றையெல்லாம் பல சுய இலாபமற்று இயங்கும் அமைப்புகள் செய்து வருகின்றன. உதாரணத்துக்கு மதுரைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். நூலகம் அறக்கட்டளையைக் குறிப்பிடலாம். இணையக்காப்பகத்தில் கூட (Archive.org)) பல அரிய தமிழ்ப்படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உதவ விரும்பினால் இவை போன்ற இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்குக் கொடுங்கள். உதவுங்கள். ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இவற்றை விட எவற்றைச் சாதிக்கப்போகின்றது? எத்தனை மில்லியன்கள் சேர்த்துள்ளார்கள். 2030இல் பார்ப்போம்  ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை தமிழ் மொழி வளர்க்க என்ன செய்திருக்கின்றதென்று.

மேலும் படிக்க ...

நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
27 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
பதில்: நிறமும், கருவும் தான்.

கேள்வி: நிறத்தை பற்றி விளக்குவீர்களா?
பதில்: அவரது நிறங்கள் ஆழமானவை. எண்ணற்றவை. நிறங்களை அவர் தேர்வு - தெரிவு செய்வது வித்தியாசமானது. உதாரணமாக வானத்துக்கான அவரது நிறத்தின் தேர்வு படத்துக்கு படம் வேறுபடும். அதுபோலவே மரங்கள், மேகங்கள், பூக்கள், நீர் - இவை அனைத்துமே - தான் கூற வரும் பொருளுக்கேற்ப அவரது கரங்களில் - வித்தியாசப்பட்டு நிற்கும். நிறங்களை அவரே ஆக்கி கொள்வதாகவும் ஒரு கதை உண்டு. பொதுவில் இது ஓவியர்களுக்கு நடக்கும் ஒன்றே. தங்களுக்கு தேவையான நிறங்களை அவர்களே ஆக்கி கொள்வார்கள். அது, உண்மையாக இருக்கலாம் - இவர் ஆக்கியுள்ள நிறங்களை பார்க்கும் போது – கபில வானம், நீல வானம், செம்மஞ்சள் வானம், எத்தனை வானங்கள். அத்தனையும் வித்தியாச வித்தியாசமான அதிர்வுகளை ஏற்படுத்துபவை.

கேள்வி: கவிஞர் ஜெயபாலன் அவர்கள், வான்கோவின், தூரிகையின் அசைவு குறித்து பேசும் பொழுது, தீப்பற்றியெறியும் காட்சியை போல அவரது தூரிகையின் வீச்சு அவ்வப்போது இடம்பெற்றுள்ளது என குறித்தார். அவரது தூரிகை வீச்சைப் பற்றி (Brush strokes) என்ன கூறுவீர்கள்?

பதில்: அவரது Brush strokes பற்றி என்னால் கூறவே முடியாது. என்னால் மாத்திரம் அல்ல. யாராலும்தான் என்றே கூறுவேன். ஏனென்றால் அப்படி அவை இயங்குபவை. தான் எடுக்கும் பொருளுக்கேற்ப, வண்ணங்களை மாத்திரமல்ல தனது தூரிகையையும் வித்தியாச வித்தியாசமாக பாவித்த மகா கலைஞன் அவன். உதாரணமாக ஒரு மூன்றாம் பரிணாமத்தை பெற்றுக் கொள்ள அவர் சமயங்களில் Pallet Knife பாவித்துள்ளதாகவே படுகின்றது. அதாவது, தான் கூறவரும் பாவத்திற்கு, ஓவியத்தின் செய்திக்கு – தூரிகை அவருக்கு போதாமல் போகின்றது.

மேலும் படிக்க ...

அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் இருக்கும் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம்போல, ஹவாயிலும் ஒரு இயற்கைத் துறைமுகம் இருக்கின்றது. பேர்ள் ஹாபர் என்ற பெயரைக் கொண்ட இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகயுத்தத்தின் திருப்புமுனையாக இருந்தது. இந்த பேர்ள் ஹாபர் துறைமுகம்தான் அமெரிக்காவின் பசுபிக்பிராந்திய முக்கியமான கடற்படைத் தளமாக இருந்தது. சுமார் 80 வருடங்களுக்கு முன், அதாவது 1941 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது இங்கே உள்ள பேர்ள் ஹாபர் என்ற இயற்கைத் துறைமுகம்.

மேலும் படிக்க ...

விசுவாசம் மிக்க போராளி: 'ஆனந்தி' (சுப்பிரமணியம் சதானந்தன்)!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிலர் தாம் சார்ந்த அமைப்புக்கு அல்லது நிறுவனத்துக்கு விசுவாசமாக இறுதிவரை வெளிச்சத்துக்கு வராமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள். எவ்விதத்தேவையற்ற பிரச்சினைகளிலும் சிக்காமல் , எல்லோருடனும் அன்புடன் பழகும் இவர்கள் கடமையே கண்ணாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வகையான மனிதர்களில் ஒருவராகவே அண்மையில் மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளில் இயங்கிக்கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சதானந்தன் (ஆனந்தி) அவர்களை நான் அறிந்துகொண்டிருக்கின்றேன். புரிந்துகொண்டிருக்கின்றேன். இவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எவற்றையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஆரம்பத்தில் இவர் காந்திய அமைப்பிலும் இயங்கிக்கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. பழகியதில்லை. ஆனால் ஒருமுறை இவரிடமிருந்து இயக்க இலச்சினை பொறிக்கப்பட்ட நன்றிக்கடிதமொன்றினைப் பெற்றிருக்கின்றேன். 86-89 காலகட்டம். இவர் தமிழகத்தில் இயக்கத்தளப்பொறுப்பாளராக இயங்கிக்கொண்டிருந்தாரென்று நினைக்கின்றேன். கனடாவில் வெளியான 'புரட்சிப்பாதை'க் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான எனது 'மண்ணின் குரல்' நாவல் நூலுருப்பெற்றபோது அனுப்பியிருந்தேன். அதற்கு நன்றி தெரிவித்து வந்த கடிதம் அது. தட்டச்சு செய்யப்பட்டிருந்த கடிதத்தில் 'ஆனந்தி' என்று கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார். அது இன்னும் என்னிடமுள்ளது. 

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் நீலாவணனின் 'பல்லிகள்'! & எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.

'வெண்டிப்பிஞ்சின் இருபுறமும் விரல்கள் வந்து முளைத்ததுபோல்' பல்லியின் உடல் வாகு இவருக்குத் தென்படுகின்றது. 'பாசி மணி பதித்தது போல் பளபளக்கும்' பல்லிகளின் விழிகள் அமைந்திருக்கின்றன. இவ்விதம் பல்லியின் உடலமைப்பை ஆரம்பத்தில் வர்ணிக்கும் கவிதை பின்னர் அவற்றின் கூடலை வர்ணிக்கின்றது. அதனை வாசிக்கையில் இலேசானதொரு புன்னகை அரும்பாமல் போகாது. 'பூச்சியுண்ட போதை கொண்டு , புருஷனைப்போய் வளைத்துக்கொண்டு , கீச்சுமூச்சு மூட்டு'தாம். 'கிசுகிசுத்து'ப் பேசுதாம் பெண் பல்லி. 'அதற்காகத்தானடியேய் ஆடை அவிழ்த்தோம் என் ஆண் கதையாதே காதலில் கட்டுண்டு' கிடக்குமாம். நிச்சயம் சொல்லுங்கள் இவ்வரிகளைப் படிக்கையில் உங்கள் இதழ்களில் புன்னகை படர்கிறதா இல்லையா?

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நந்தனி சேவியருக்கான அஞ்சலி நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்: நந்தின்னி சேவியர் குடும்பத்தினர் -
நிகழ்வுகள்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

“நான் கே.எஸ்.பேசறேன்”– நினைவாஞ்சலிக் கூட்டமும் நூல் வெளியீடும்! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
25 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று. அவருடைய ஆளுமை, எழுத்தாற்றல், மொழிபெயர்ப்புத்திறன், சமூக அக்கறை ஆகியவற்றை நினைவுகூரும் எளிய அஞ்சலிக்கூட்டம் ஒன்று புதுப்புனல் பதிப்பக அலுவலகத்தில் 24.10.2021 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. டாக்டர் .கே.எஸ்.சுப்பிரமணியனின் மகனும் மகளும் அயல் நாட்டில் கல்வித் துறையில் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். தங்கள் தந்தைக்கான எளிய அஞ்சலியாய் ஒரு நூல் அவருடைய நினைவுநாளன்று வெளி யிடப்பட வேண்டும் என்று விரும்பி அந்தப் பொறுப்பை என் கையில் கொடுத்தனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 373: புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுகதையும் , சிறுகதை பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் முக்கிய சிறுகதைகளில், பலராலும் அடிக்கடி நினைவுக் கூரப்படும் கதைகளிலொன்று இச்சிறுகதை. கதைக்குப் பங்கங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதாம். சிறந்த சிறுகதையொன்று பக்கங்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்யப்படுமொன்றல்ல. அதற்கு உதாரணமாக விளங்கும் சிறுகதைகளிலொன்றுதான் பொன்னகரம்.

நம்மவரில் பலருக்குச் சிறுகதையொன்றின் வடிவம் அல்லது கூறும் பொருள் பற்றிய புரிதல் போதிய அளவில் இல்லையென்பதையும் உணர முடிகின்றது. அவர்கள்தம் ஆதர்ச எழுத்தாளர்கள் பல பக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளை எழுதியிருந்தால் இவர்களும் அவற்றையே , அவ்விதம் எழுதுவதையே சிறுகதையொன்றினை எழுதுவதற்குரிய வழியாகக் கருதிக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அதிக அளவில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்திருக்க மாட்டார்கள். படித்திருந்தால் சிறுகதையொன்றின் தரத்தினை நிர்ணயிப்பது அதன் பக்கங்களின் எண்ணிக்கை அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்குச் சிறுகதைகள் என்றால் அது வெளிப்படுத்தும் அம்சம் என்ன என்பதைப்பற்றிய புரிதல் இல்லாமலிருக்கும். உதாரணத்துக்கு ஒரு சிறுகதை கருத்தினை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தால் உடனேயே அதனைப் பிரச்சாரமாகக் கருதி விடுவார்கள். இவ்விதம் இவர்கள் கருதுவதற்கு முக்கிய காரணம் போதிய அளவிலான வாசிப்பு இல்லாததே. ஒரு சிறுகதையானது ஒரு கருத்தினை மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். ஓருணர்வினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். ஓரிடத்தைப்பற்றிய அல்லது ஒரு விடயத்தைப்பற்றிய விவரணச்சித்திரமாக இருக்கலாம். ஓரிடத்து மாந்தரைப்பற்றிய நடைச்சித்திரமாக இருக்கலாம். ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். நான் இங்கு என்ன கூற வருகின்றேனென்றால் ஒரு சிறுகதையை ஒருவர் வாசித்து முடிக்கையில் அச்சிறுகதை அதனை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு ஏற்படுத்தும் விளைவையே குறிப்பிடுகின்றேன்.

மேலும் படிக்க ...

வன்னியியல் ஆய்வரங்கம் -8

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

“இலக்கியவெளி” நடத்தும் இணைவழி கருத்தாடல் நிகழ்வு! - அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நம்பிக்கையளிக்கும் சிரித்திரன்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிரித்திரனின் அண்மைய இதழ்களைப் பார்த்தேன். 'டொராண்டோ'வில் முருகன் புத்தகசாலையில் சிரித்திரன் சஞ்சிகையை நீங்கள் வாங்கலாம். சிரித்திரன் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் ஆசிரியர் சுந்தர். (சிவஞானசுந்தரம்). அவர் சிறந்த கேலிச்சித்திரக்காரராக இருந்தது முக்கிய காரணம். தன் திறமையை முழுமையாக அவரால் அச்சஞ்சிகைக்கு வழங்க முடிந்தது. கேலிச்சித்திரங்களே சிரித்திரன் சஞ்சிகையின் இதயமென்று கூறலாம்.அதற்குப்பின்தான் ஏனைய அம்சங்கள் எல்லாம். ஏனென்றால் சிரித்திரனின் பிரதான நோக்கமே அனைவரையும் சிரித்திருக்கச் செய்வதுதான்.

மேலும் படிக்க ...

ஆய்வு: “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” - முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -

விவரங்கள்
- முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -
ஆய்வு
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ஆதிகாலப் பழந்தமிழரின் வாழ்வியலைப் பதிவுசெய்வது சங்க இலக்கியமாகும். ஒரு செல் உயிரி முதல், பிற உயிர்களனைத்தும் இயற்கையின் ஆதாரமாகத் திகழுகின்றன. பண்டைய காலந்தொட்டுத் தற்போதைய நவீனக்காலம் வரை, ஒவ்வொரு உயிரும் தன்னைச் சுற்றிருக்கும் சூழலைச் சார்ந்து வாழ்கின்றது. நமது முன்னோர்களான சான்றோர்கள் அருளிய இயற்கைக் குறித்த சிந்தனை, தெளிவு, பாதுகாப்பு, இயற்கையைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை அறிவை ஆராயுமிதமாக, “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” என்கிற தலைப்பின்கீழ் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

மனித இனத்தின் பகுத்தறிவு சாதனையாகக் கருதுவது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகும். எவற்றையும் அறிவியல் கண் பார்வைக்கொண்டுப் பார்க்கும்போக்கு இந் நூற்றாண்டில் சாத்தியமாகியிருக்கிறது. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தான் சார்ந்த இடத்தைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டி பல முயற்சிகளை எடுத்திருக்கிறான். அதன்பொருட்டு தோன்றியதே அறிவியல் யுகம்.

சுற்றுச்சூழல் என்ற சொல் சுற்றுப்புறங்களை உணர்த்தும் சொல்லாக்க (Etymologically) விளக்கமாகும். இது ஒரு ஒருங்கிணைந்த சொல்லாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இச்சொல் உயிரினங்கள் வாழும் முறைமைகளையும் நீர், உணவு, சூரிய ஒளி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய கருத்தினை ஆராயும்போது, எல்லா உயிர்களும் சுற்றுப்புறத்தைச் சார்ந்து இருக்கின்றன. அதுபோல், ‘சுற்றுச்சூழல்’ என்கிற சொல்லும் உயிரினங்களைச் சார்ந்து தான் பொருள் தருகிறதென்பதை அறியமுடிகிறது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbour front), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனேன். இந்த மண்டை ஓடுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதை அறிந்து கொள்வதற்காக, அருகே சென்று பார்த்த போதுதான் தெரிந்தது, அவை எல்லாம் செயற்கையாகச் செய்யப்பட்ட மண்டை ஓடுகள் என்பது. கடந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் நடந்த ‘உயிர்வதைகள்’ (Built on Genocide) பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மண்டையோட்டுக் கோபுரம் செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: எழுத்தாளர் எஸ்.பத்மநாதனின் சிந்தனைப்பூக்கள் பாகங்கள் 4 & 5!

விவரங்கள்
- தகவல்: எஸ்.பத்மநாதன் -
நிகழ்வுகள்
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நேர்காணல் (பகுதி ஒன்று): ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
20 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான அறிமுகக்குறிப்பொன்றினை அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தோம். தற்போது இவருடனான நேர் காணலினைப் பிரசுரிக்கின்றோம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்நேர்காணல் உதவும். 'பதிவுகள்' சார்பில் இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


கேள்வி: உங்கள் சிறு வயது குறித்தும், உங்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓவிய நாட்டங்கள் குறித்தும் கூற முடியுமா?

பதில்: நான் ஆரம்ப கல்வியை கற்றது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில். எனது தந்தை மு.சு.வீரப்பா, ஹட்டன் நீதிமன்றத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பாளராக (முதலியாராக) இருந்தார். அவர், 1940 களில் இருந்தே நீதிமன்ற அலுவலராக இருந்து வந்துள்ளார். ஓர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தை பெற்ற அவர் பொதுவில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவர். அவரும் எனது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில் அதிபராக பணியாற்றிய வணக்கத்துக்குரிய பிரதர் தோமஸ{மே என்னை முதன் முதலாக இனங்கண்டு என்னை ஓவியத்திற்கான தூண்டுதலை தந்தவர்கள்.

கேள்வி: அப்படியென்றால் உங்கள் தந்தையைப் பற்றியும், பிரதர் தோமஸை பற்றியும் அவர்கள் எவ்வகையில் ஓவியங்கள் தொடர்பில் உங்களுக்கு உதவினார்கள் என்று கூற முடியுமா?

பதில்: முதலில் எனது தந்தையாரை பற்றி கூறுவது பொருத்தமானதாக இருக்கும். எனக்கு பத்து வயதாக இருக்கும் போதே எனது தந்தையாரானவர் நான் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரைவதற்கான ஓவிய தாள்களையும் வர்ணப்ப10ச்சிகள் செய்வதற்கான வண்ணங்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். அதுமாத்திரமல்லாமல் பண்டிகைகள் வரும் போதெல்லாம் அஞ்சல் அட்டைகளை வாங்கி அவற்றில் என்னை ஓவியங்கள் தீட்ட வைத்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழும் வழக்கமும் அவரிடம் இருந்தது. போதாதற்கு மாலை வேளைகளில், வேலை பளுக்கள் மிகுதியான நாட்களில், ஓரளவு மது அருந்திவிட்டு தன்னிடமிருந்த கலைக்களஞ்சிய தொகுதிகள் (encyclopedia) பதினொன்றில் அவர் விரும்பியதை தேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். அச்சமயங்களில் ஓவியர்களை பற்றி அவர் வாசிக்க நேரும் போதெல்லாம் என்னையும் அழைத்து அவ் ஓவியர்களை பற்றி கூறி அவர்களின் ஓவியங்களையும் காட்டி என்னிடம் விவரிப்பதில் இன்பமடைவார்.

மேலும் படிக்க ...

சிறுகதை : பரமு!  - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
19 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

" பரமு காலமாகி விட்டான் ! " என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது . அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில் , இவர்களுடைய தலைமையில் , பரமுவும் ஒருத்தன் . மெலிந்த தேகம் .எளிமையான ஆடை .நட்பான பார்வை . முக்கியமாய் அவனை விட ஒன்று, இரண்டு வயசு மூத்தவன் . அகிலை , கிராமப்பொறுப்பாளர் ஏதோ ...விசயத்திற்கு சுளிபுரம் அனுப்பி இருந்தார் . அவனுடைய நண்பன் சேகருடன் சென்றிருந்தான் . சேகர், ஆதரவாளன்.தோழனாகவில்லை . இருவருமே எங்கும் திரியிற நண்பர்களாக இருந்தவர்கள் . இவன் சேர்ந்து விட்டான் . ஆனால் , திரியிறது நிற்ககவில்லை .தவிர , அவனுக்கு வட்டுக்கோட்டையில் , உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் ,திருத்திய வானொலிப்பெட்டி ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது . " குடுத்திட்டுப் போவோம் "என்று கையளித்து விட்டு ,சிறிய கூலியைப் பெற்றுக் கொண்டு வந்தான் . அவனோடு திரியிறதால் சுளிபுரம் முன்னமே சிறிது தெரியும். ஆனால் , அன்று தான் வலக்கம்பறை தேர்முட்டியில் இருந்த கிளி ,மதன் , வனபால் , செந்தில் , பரமு எல்லொரும் அறிமுகமாகிறார்கள் . கூட இருந்த பாபுவை அவனுக்கு , யாழ் புதியசந்தையில் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற போது வந்து தேனீர் குடிக்கிற கடைக்கு ...அவனும் வருவான் . கதைக்கிற போது 'மூளாய்' என்ற போது சுளிபுரத்திற்கு அருகில் ஊர் என்பதால்...நட்பு எற்பட்டு விட்டது . காலையில் அங்கிருந்து வார மினிபஸ் ஒன்றில் வந்து விட்டு எப்படியோ பொழுதைக் கழித்து விட்டு மாலையில் போய் விடுகிறேன்"என்றான் . ' வாழ்வே மாயம் ! ' என்றால் என்ன என்று அகிலுக்கும் தெரியும் . ஆனால் , அவனுக்கு தொழில் நுட்பவேலைகள் அத்துப்படி . அங்கே இருக்கிற பொயிலரில் பிரச்சனை வந்து விடும். திருத்தி இயங்க வைத்து விடுவான் . மின் இணைப்பு வேலைகளையும் நன்கு தெரியும் . அதனால் , கடையில் இருந்த குலம் அவனுக்கு சிலவேளை இலவசமாக தேனீர்க் கொடுப்பான் . கடனுக்கும் தேனீரைக் கொடுத்து எழுதி வைத்திடுவான் . குலம் கூறுகிற‌வன் . " இவன் மாச முடிவிலே எப்படியும் ...கணக்கை இல்லாமல் செய்து விடுவான் . நல்லவன் " . இயல்பான ஒரு வேலை ...? யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் என்றால் ? , யாரைப் போய் நோவது ! ...தெரியவில்லை . எப்பவுமே ஒரு சமூகம் எந்தகாலத்திலும் இரவல் ஆட்சியில் கிடக்கக் கூடாது . பல்லைக்கடித்துக் கொண்டு விடுதலையப் பெற்று விட்டால் தான் உய்யும் . இல்லையேல் சந்ததி பாலையைக் காண வேண்டியது தான் .

மேலும் படிக்க ...

'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் பற்றி எழுத்தாளர் திக்குவல்லை கமால்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"இழந்த மண்ணும் புகுந்த மண்ணுமாய் வாழ்வின் இருத்தலையும் வலிகளையும் பிசைந்து தருகின்றன இச்சிறுகதைகள்." - எழுத்தாளர் திக்குவல்லை கமால் , அண்மையில் வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுதி பற்றி.

எழுத்தாளர் திக்குவல்லைகமால் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக வெளிவந்த எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் ' பற்றி குறிப்பின்றினை எழுதியுள்ளார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி. 


திக்குவல்லை கமால் அவர்களின் முகநூற் குறிப்பு கீழே:

புது வரவு - கட்டடக் கா( கூ)ட்டு முயல்கள் - திக்குவல்லை கமால்-

மேலும் படிக்க ...

சேனையூர்க் கலம்பகம் நூல் வெளியீடும் புதிய அகவை கொள்ளலும்! - தகவல்: பாலசுகுமார் -

விவரங்கள்
- தகவல்: பாலசுகுமார் -
நிகழ்வுகள்
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேவனின் (யாழ்ப்பாணம்) 'பெண் பாவை' நாடகம் பற்றி...

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் தேவன் (யாழ்ப்பாணம்) ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தைத் தமிழில் 'பெண்பாவை' என்னும் பெயரில் நாடகமாக்கியதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தினகரன் பத்திரிகையில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது."

'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்' நூலிலும் அறுபதுகள், எழுபதுகளில் வெளியான நாடகங்களிலொன்றாகப் 'பெண் பாவை' குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தேவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

என் பால்ய , பதின்ம வயதுகளில் இவரது 'மணி பல்லவம்' நாவல் என்னிடமிருந்தது. றோபேர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் புகழ்பெற்ற நாவலான 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு. எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நாவல்களிலொன்று. தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆய்வுக்குரியதோர் விடயம்.

மேலும் படிக்க ...

செவிநுகரக் கவிதந்த கவியரசன் நீயன்றோ! - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , ஆஸ்திரேலியா -

விவரங்கள்
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , ஆஸ்திரேலியா -
கவிதை
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்

பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: சரஸ்வதியும் சங்கரலிங்கமும்!  - முருகபூபதி -
  2. 'டொராண்டோ' முருகன் புத்தகசாலையில்...
  3. துயர் பகிர்வோம்: கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். - குரு அரவிந்தன் -
  4. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் “மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம்”
  5. கிடைத்தது வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு!
  6. 'கனவு' முப்பத்தாறு ஆண்டுகளும், நூறு இதழ்களும் -இறையடியான் -
  7. 'தலைவி' பார்த்தேன்! - வ.ந.கிரிதரன் -
  8. தொடர் நாவல்: கலிங்கு (2009-7) - தேவகாந்தன் -
  9. தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது..  -  நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
  10. அறிமுகம்: ஓவியர் வீரப்பன் சதானந்தன் - வ.ந.கிரிதரன் -
  11. அந்தக் கணத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலும்!   - ஸ்ரீரஞ்சனி -
  12. ஓராயம் அமைப்பின் ஆதரவில் நடந்த மெய்நிகர் நிகழ்வு: 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' - வ.ந.கிரிதரன் -
  13. ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -
  14. ஆய்வு: எஸ். பொன்னுத்துரை படைப்புகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்! - முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -
பக்கம் 90 / 107
  • முதல்
  • முந்தைய
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • அடுத்த
  • கடைசி