பதிவுகள் முகப்பு

மேலைநாட்டவரான மாக்ஸ்முல்லரின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புகள்! - ந.சதுர்ஜியா, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை -

விவரங்கள்
- ந.சதுர்ஜியா, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை -
ஆய்வு
12 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்து கலாசார, நாகரிக, சமயவழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சகட்ட காலமாக 19ம் நூற்றாண்டினைக் குறிப்பிடலாம். இக் காலக்கட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய, இலக்கியங்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக தமது ஈடுபாடுகளையும் பங்களிப்பினையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டினர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினை கற்க தொடங்கினார்கள். அவர்கள் அவ் மொழியினை கற்றது மட்டும் அல்லமால் இந்துப்பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களை வெளியிட்டமை, மொழிபெயர்ப்பு பணியினை செய்தமை மற்றம் தொல்பொருள் ஆராய்ச்சி என்பனவற்றினையும் மேற்கொண்டனர்.

மேலைநாட்டினர் வேதங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் உள்ளிட்ட இந்து சமய இலக்கியமூலங்களை அச்சுருவாக்கினார், ஆங்கீலமொழியில் மொழிபெயர்த்தனர், விரிவுரைகள் செய்யப்பட்டன, ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன, அகாரதிகள் உருவாக்கினார் மற்றும் தொல்லியல் ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள், சமய ஆய்வுகள் நடந்தேறின. இதற்கு துணை செய்தவர்களில் சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், கீத், மொனியர் வில்லியம்ஸ், எச்.ரி.கோல்புறூக், எச்.எச்.வில்சன், வின்ரநிட்ஸ், சேர் ஜோன்வூட்றொவ் போன்ற மேலைத்தேச இந்தியவியல் ஆய்வாளர்களின் வகிபாங்கு அளப்பெரியது ஆகும். இவ் ஆய்வாளர்களில் முதன்மையானவரும் சுவாமி விவேகானந்தரால் வேத ரிஷிகளுக்கு ஒப்பானவர் என்று போற்றப்பட்ட சிறப்புக்குரியவருமான ஜேர்மன் நாட்டறிஞராகிய மாக்ஸ்முல்லரின் இந்துப் பண்பாடு தொடர்பான பங்களிப்புகள் பற்றி இக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.

ஜேர்மனியில் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள s Dessau என்ற சிறுநகரில் வில்லியம் முல்லர், அடல்ஹெய்ட் முல்லர் ஆகியோருக்கு 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி மக்ஸ்முல்லர் மகனாகப் பிறந்தார். இவர் இளவயதில் இருந்தே காவியங்களையும், இசைகளையும் கற்பதில் பெரிதும் ஆர்வம் உடையவாரக திகழ்ந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியினைக் ஜிம்னானிஸம் உயர்பள்ளி மற்றும் நிகோலாய் உயர் கல்லூரி என்பவற்றில் கற்றார். இவர் தனது பல்கலைக்கழக அனுமதிக்காக கீழைத்தேச மொழிகளில் குறிப்பாக சம்ஸ்கிருத்தை ஆழமாக கற்றிருந்தார். இவர் தனது 18வது வயதில் ஜேர்மன் பல்கலைக்கழகமான லெய்ப்ஸிஸ் பல்கலைக்கழகத்தில் மொழிப்பிறப்பியல் தொடர்பான கற்கையினை மேற்கொள்வதற்கு தெரிவாகினார். தனது பட்டப்படிப்பின் போது தொல்சீர் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், அரபு, பாரசீக மொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவாரக திழ்ந்த இவர் 1843ல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் மிக இளவயதிலேயே ஹிதோபதேசத்தினை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (2) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
11 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 2

விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் - இவை,அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாததாக இருக்கின்றன. போதாதற்கு, ஒரு வகையில், இவற்றின் ஒட்டு மொத்த பிம்பமாய் அல்லது உருவகமாய் திகழ முற்படும் மார்க்சிஸ்டுகள் பொறுத்தும், அவன் தன் அந்தரங்கத்தில், ஏளனமும் ஒரு வகை வெறுப்பும் கலந்த உணர்வினைக் கொண்டவனாய் இருக்கின்றான். ஒரு பாத்திரம், மார்க்சிஸ்டுகள், பொறுத்த தன் கருத்தைக் கூறும்:

“அவர்களிடம் நீ அறத்தைப் பற்றியோ அல்லது வாய்மைகள் பொறுத்தோ கதைப்பது என்பது உனது நேரத்தை வீணடிக்கும் செயல்தான். அறம் என்ற, அப்படியான ஒன்று அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே இருந்தாலும் கூட, அது ‘அவர்களது’ அறங்களாக அல்லது அவர்களது‘வாய்மைகளாக’ மாத்திரமே இருக்கின்றது. அவர்கள் நம்புகிறார்கள்: உ;ன்னை விட, என்னை விட அவர்களிடம் அதிகளவில், உண்மையான மனித நேயம் இருப்பதாக… ஒரு, ‘தனி மனிதனைப்’ பற்றி; அதாவது ஒரு தனி ;நபரை’ பொறுத்து அவர்களிடம் நீ கதைப்பது என்பது உதவாத ஒரு விடயமாகிறது. நேரத்தை வீணடிப்பது. “மனிதன்”– அது பிற்பாடு என்கிறார்கள் அவர்கள். முதலில், சுயமான முளைத்தலுக்காய், மண் பண்படுத்தப்படட்டும். பின்னரே ‘மனிதன்’! நீ கூறும், ‘மனிதன்’ என்பவன் யார்? அவன் எங்கிருக்கிறான் என்று கேட்கிறார்கள். கூறுகிறார்கள்: இருப்பது எல்லாம் வெற்று அடிமைகள். மண்டியிட்டு, அல்லது நன்றாய், நீட்டிசா~;டாங்கமாய் வணங்கத் தெரிந்த அடிமைகள்… அவ்வளவே…”

மேலும் படிக்க ...

வாழ்த்துவோம்: இளந்தொழில் அதிபர் நிவேதா பாலேந்திரா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அறிவியல்
11 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிவியல் அறிஞரும் , உடலியற் துறையில் இளமானிப்பட்டதாரியும், இளந்தொழிலதிபருமான நிவேதா பாலேந்திரா மொன்ரியலிலுள்ள மரினாபொலிஸ் கல்லூரியில் (Marianopolis College) தனது கல்வியைத் தொடரும் காலத்திலேயே ஊடகங்கள் பலவற்றின் , அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதற்குக் காரணம் நீரில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இவரது ஆய்வுகள்தாம். Pseudomonas fluorescens என்னும் நுண்ணுயிரின் ஒரு வகையினைப்  பாவித்துப் பெறப்படும் இரசாயனப் பொருள் மூலம் இக்கசிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வகையான எண்ணெய்ச்சுத்திகரிப்புப் பொருட்கள் பெற்றோலியம் பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் இவரது கண்டுபிடிப்போ நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகின்றது. அத்துட ன் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 2019இல் லவால்,மொன்ரியாலில் 'டிஸ்பேர்சா' (Dispersa) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். வளர்ந்து வரும் இந்நிறுவனம் நுண்ணுயிரியிலிருந்து சவர்க்காரம் போன்ற வீடுகளில் சுத்திகரிக்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. உலகளாவியரீதியில், ஆரம்பிக்கப்பட்ட இவ்வகையான இரசாயன நிறுவனங்களில் 2022இல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Global Startup Heat Map என்னும் தரவுகளைத் தேர்ந்தெடுக்கும் பொறிமுறையினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது ஆய்வுகளுக்காகப் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

உரையாடல்- 08: “இலங்கையின் சமகால நிலைமை - ராஜதந்திர பிரதிபலிப்புகளும் சர்வதேச ரீதியான விளைவுகளும்” - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
11 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 - 2011 ) நினைவுகள்! மே 10 அன்னாரின் 90 ஆவது பிறந்த தினம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை.

பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்தநிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் அங்கு விரிவுரையாளராக விருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன். சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர், அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு, “ என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரைப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

வாழும் சுவர்கள். - இளவாலை எஸ்.ஜெகதீசன். -

விவரங்கள்
- இளவாலை எஸ்.ஜெகதீசன். -
கலை
11 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முன்னொரு காலத்தில் பான்ஸ்கி பற்றி நான் எழுதிய கட்டுரையை மீண்டும் பார்க்க வைத்தது கிறிஸ்டியின் கட்டுரை. இலங்கையில் சுவரோவியங்கள் வீதி ஓரங்களில் உயிர் பெற்ற பொழுது இந்தக் கட்டுரையை பரணில் இருந்து தூசி தட்டி எடுத்து வீதிகளில் காதல் ஆக்கியிருந்தேன். - எஸ்.ஜெகதீசன் - -


முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.

பரவலாக ஆசியாவில் மட்டுமே இவ்வகை கிறுக்கல்கள் வம்பை வதந்தியாக்கிட ஏனைய கண்டங்களில் அரசை விமர்சித்தும்இவிழிப்புணர்வை ஏற்படுத்தியும்இரகஸிய தகவல்களை பகிரங்கமாக்கியும்இநாட்டு நடப்புடன் கேலி பேசியும் மனங்களை வெள்ளை அடித்தன. மன்னிக்கவும் கொள்ளை அடித்தன. அதனால் அங்கெல்லாம் மறைவிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு வந்து சிரிக்கும் சந்தியாக சாட்சியளிக்கின்றன. தெருச் சித்திரம் (STREET ART) வரைகலை (GRAPHIC) கிறுக்கல்; (GRAFFITI) சுவரோவியம் (MURAL) போன்ற பல பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்காலத்தில் வாழும் சுவர் ( LIVING WALL) என்ற புதுப் பெயர்; பொலிவு பெறுகின்றது.

மேலும் படிக்க ...

(பதிவுகளில் அன்று) வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1) - கி. ஷங்கர் (பெங்களூர்) -

விவரங்கள்
- கி. ஷங்கர் (பெங்களூர்) -
'பதிவுகளில்' அன்று
09 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


 ஆகஸ்ட் 2003 , பதிவுகள்

பெங்களூர், இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம்.


வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1)

உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு கிராமத்திலோ, குக்கிராமத்திலோ அல்லது நகரத்திலோ பிறந்து வளர்ந்து வரும் எந்த ஒரு இளைஞநிடமோ, இளைஞியிடமோ இருக்கக்கூடிய ஒரு தாக்கம், _ பொதுவான ஒரு தாக்கம் என்னவென்றால் அது வெற்றியின் தாக்கம்தான். இளம்பிராயத்தினர் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் விரும்புவது என்னவென்றால் அது வெற்றியின் சிகரத்தை தொடுவதுதான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. ஏன்? காரணமென்ன?

ஏனென்றால் சிலர்தான் வெற்றியின் சிகரத்தை தொடும் சூழ்நிலையில் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள் அல்லது தயார் செய்யப் படுகிறார்கள். பலருக்கு இந்த வெற்றி என்பது ஒரு எட்டாக்கனியாக, ஒரு அடிமனக் கனவாகவே முடிந்து விடுகிறது. ஏன்? எல்லோராலும் இந்த உலகில் வெற்றி பெற முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். இந்த உலகில் உள்ள எல்லோருமே வெற்றி பெறுவதற்காக பிறந்தவர்கள்தான். மனிதர்களை இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடியும். அது ஆண், பெண் என்ற பிரிவல்ல. வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்பது கூட அல்ல. அது முயற்சி உள்ளவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்பது ஒரு பிரிவு. முயற்சி இல்லாதவர்கள், பயிற்சி பெறாதவர்கள் என்பது இன்னொரு பிரிவு.

மேலும் படிக்க ...

காலன் ஒத்திவைத்த மரணம்! ஐ. தி. சம்பந்தன் வாழ்வும் பணிகளும்! மொழிவழித் தொழிற்சங்கங்களை உயிர்ப்பிக்க ஒலித்த குரல் ஓய்ந்தது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான். எமது தமிழ் சமூகத்தில் ஒருவர் மரணம் எய்தி அமரத்துவம் அடைந்துவிட்டால், இயற்கை அநர்த்தத்தினால் அல்லது விபத்தினால், வேறு ஏதும் காரணங்களினால் கொல்லப்பட்டால், “ காலன் கவர்ந்துவிட்டான் “ என்போம்.

உயிரைக்கவர வரும் எமதர்மன், தனது செயலாளர் சித்திரகுப்தனிடம் ஒருவரை எவ்வளவு காலம் பூவுலகில் வைத்திருக்கலாம் எனக்கேட்டுத்தான் மரணத்தீர்ப்பை வழங்குவார் என எமது முன்னோர்கள் சொல்வார்கள். சித்திரகுப்தனின் கணக்குத்தவறி, எமதர்மன் தனது கடமையைச் செய்யாமல் திரும்பிச்சென்றால், “ மரணிக்கவிருந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார் “ என்ற பிரயோகமும் சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87 வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , ஆவணப்பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட எமதர்மராஜனதும் அவரது செயலாளர் சித்திரகுப்தனதும் கணிப்பின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட மரணத்தை அடைந்திருக்கிறார். இதனை வாசிக்கும் வாசகர்கள், “ அது என்ன ஒத்திவைக்கப்பட்ட மரணம்…? “ எனக்கேட்கலாம். ஆம்… அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதியே முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் எமதர்மனிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியவர்.

மேலும் படிக்க ...

யார் இந்த பேங்க்ஸி? - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
08 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby's Auction House), லண்டன்; காலம்: ஆக்டோபர் 05, 2018

உலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக்கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலையியக்கியை - remote control device - ஒரு முறை பார்த்து புன்னகைத்துக்கொள்கிறது. ஏலம் ஆரம்பமாகிறது! முதலில் ஏலத்திற்கு வந்த பொருள்... உலகில் பெயர்போன ஆநாமதேய தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸியின் (Graffiti artist: Banksy) "பலூனுடன் ஒரு சிறுமி - Girl with the balloon" எனும் ஓவியம். மிக அழகாக தங்கமுலாம் பூசப்பட்ட அந்த பிஃறேமின் நடுவில் பதிக்கப்பட்டிருந்தது. நிமிடங்கள் நகர ஏலம் சூடு பிடித்து $1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதன் விலை நகர்த்தப்படுகிறது. இறுதி விலை அதுவாக நிர்ணயிக்கப்பட்டு சதபி விற்பனையாளர் தம் கையில் இருந்த மரச்சுத்தியலை பலமாய் மேசையில் மோதி "SOLD" என்ற வார்த்தையை உரக்கக்கூவி அந்த ஏலத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார். எல்லாம் முடிந்தது! கடைசி இருக்கையில் இருந்த அந்த உருவம் மெதுவாய் கதிரையை விட்டு எழுந்து தன் கையில் இருந்த தொலையியக்கியை ஒரு முறை அழுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறி லண்டன் சனக்கும்பவில் கலந்து மறைகிறது. அக் குமிழியில் இருந்து பிறந்த ஆணைக்கமைய $1.4 மில்லியனுக்கு விலைபோன அந்த ஓவியம் மெதுவாய் "ர்ர்ர்ர்....... " என்ற ஒலியுடன் கீழே நகர்ந்து சிறு கீற்றுக்களாய் துண்டுற்று ஒரு கிழிந்த திருவிழா அலங்காரம் போல் அலங்கோலமாய் காற்றில் அசைந்தது அமைதியானது. அக்கூடத்தில் இருந்த எல்லோர் முகத்திலும் ஒரு ஆச்சரியம் மிகுந்த அதிர்ச்சி! அந்த ஓவியத்திற்கான ஏலம் உடனே இரத்து செய்யப்படுகிறது.

மேலும் படிக்க ...

'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (14 - 17) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

14

சமூகம் தொடர்பிலான தமது கராரான ஆய்வு முறையை அவர் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படைகளில் இருந்தே தொடங்குகின்றார். ஆனால் அவர்களோ (மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்) தமது கராரான ஆய்வு முறையை – தமக்கு மிக நெருக்கமான அயர்லாந்து கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கின்றனர். அயர்லாந்தின் கேள்வியை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அணுகிய விதம் கவனத்துடன் நுணித்து நோக்கத்தக்கது. “ஓர் இரண்டு லட்சம் இளைஞர்களை தாருங்கள்–இங்கிலாந்தின் ஆதிக்க சக்திகளை தூக்கி எறிய” என ஏங்கெல்ஸ் ஆற்றிய கூற்று பிரபல்யமானது –அது அயர்லாந்தின் சூள் கொண்ட தீயின் வெம்மையை, சமரசமற்ற புரட்சியின் நாக்குகளை விபரிப்பது, என்றாகின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில், அயர்லாந்தின் வரலாற்றை வடிக்க முற்பட்ட ஏங்கெல்ஸ், அயர்லாந்து பொறுத்து தன் பார்வையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து – அதாவது, கிட்டத்தட்ட டீஊ 258 க்கு முன்பிருந்து – அகல செலுத்த முற்பட்டிருப்பது, ஆழ்ந்து அவதானிக்கத்தக்கது. இம் மிக நீண்ட நெடுநாளைய வரலாற்று அவதானிப்பு, அல்லது வரலாற்று கற்கை, அவருக்கு தனது பிற்பட்ட நூலான, “குடும்பம், தனிசொத்து, அரசு” என்ற நூலினை எழுதவும் வடிவமைக்கவும் கைக்கொடுத்தது என கருதுவோரும் உண்டு.

பண்டைய சமூகங்கள், பண்டைய சட்டங்கள், 16, 17ம் நூற்றாண்டின் சட்ட- வரலாற்று ஆவணங்கள், பயணிகளின் குறிப்பேடுகள், பவ்வேறு வகைப்பட்ட நூல்கள், முக்கியமாக பண்டை காலம் தொட்டு 1860 வரையிலான பதிவாக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் - இது பொருத்து அவர் வந்து சேர்ந்த முடிவுகள் - புள்ளி விபரங்கள் இத்தியாதி என மிகப் பரந்;த ஆய்வு அணுகுமுறையை அவர் அயர்லாந்தின் வரலாற்று தொடர்பில் கொண்டிருந்தார். மறுபுறத்தில், 1840லேயே, ஆரம்பமாகும், மார்க்ஸின் அயர்லாந்து தொடர்பிலான கரிசனை, அவருக்கு தன் பின்னைய பிரதானமான நூலான, “மூலதனத்தை” எழுத அடிப்படையாயிற்று எனக் கருதுவோர் உண்டு. வேறு வார்த்தையில் கூறுவதானால், அயர்லாந்து பொருத்து ஆழ்ந்த ஒரு 40 வருட அவதானம் இருவரிடையேயும் மிக ஆரம்பத்திலேயே, குவியத் தொடங்கியது எனலாம்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
08 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'ஒளிவிளக்கு' எம்ஜிஆரின் நூறாவது திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்பாக வெளிவந்த திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் முதல் வெளியீட்டிலும், மீள் வெளியீட்டிலும் நூறு நாட்களைக் கடந்து பெரு வெற்றியீட்டிய திரைப்படம்.

இந்தக் காணொளி மிகவும் தெளிவாகவுள்ளது. பார்ப்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சி தருகின்றது. மீள்பகிர்ந்தலுக்கு அதுவொரு காரணம். பாடலைக் கேட்டதும் காலக்குருவி சிறகடித்து என் பால்ய பருவத்துக்கே சென்று விட்டது.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
05 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்.' - பாரதியார் -

கே.ஜே.ஜேசுதாஸ் , சசிரேகா & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கூட்டணியில் உருவான மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் அமலாவும் . ரகுமானும். பின்னணிக்காட்சி, அமலாவின் நடனம் எல்லால் நன்கு சிறப்பாக ஒளிப்பதிவாக்கப்பட்டுள்ளன.

https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA

மேலும் படிக்க ...

கனடாவில் பால சுகுமாரின் நூல்கள் அறிமுகமும் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: பால சுகுமார் -
நிகழ்வுகள்
04 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(பதிவுகளில் அன்று) மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -

விவரங்கள்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
'பதிவுகளில்' அன்று
04 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  -


பிரச்சினையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம். கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.

பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஒரு பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

மேலும் படிக்க ...

ஆய்வு: வாடாமல்லி சிறுகதை வெளிப்படுத்தும் வாழ்வியல்நெறி! - பேரா. செ. நாகேஸ்வரி, தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம் -

விவரங்கள்
- பேரா. செ. நாகேஸ்வரி, தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம் -
ஆய்வு
04 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்
தமக்கென்று வாழாது பிறர்க்கென்று வாழும் உண்மையானச் சான்றோர்கள் வாழ்வதால் தான் இந்த உலகம் இன்றளவும் அழியாமல் இருக்கின்றது. மனிதன் தாம் வாழும் காலங்களில் பல்வேறு ஒழுக்க நியதிகளைக் கடைபிடித்து வாழ்கின்றான். இத்தகைய ஒழுக்க நியதிகளையே பண்டையத் தமிழர் பண்பாடு என்று போற்றிப் பேணிக்காத்தனர். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல. இவ்வுலகத்தில் தோன்றிய மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவாகும் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து போற்றி ஒழுக வேண்டும். அதிலும் குடும்ப வாழ்வு என்பது சமூகத்தின் அடிப்படை அலகு. அத்தகைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வாழ்வியல் நெறிகளின் ஒன்றான, விட்டுக்கொடுத்தலை பின்பற்றினால் மட்டுமே அமைதி நிலவும். தனக்கென வாழாது தன் துணையின் இன்ப துன்பங்களையும் உணர்ந்து புரிதலுடன் வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையே நமது பண்பாட்டின் வேர். என்பதைத் தற்காலத்தில் உள்ள நவீன இலக்கியமான கண்மணி குணசேகரன் சிறுகதையின் வழி அறியலாகிறது.

முன்னுரை
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். கணவனும் மனைவியும் இணைந்து வாழ்தல் என்பது அவர்கள் இருவரின் வாழ்க்கை நலனைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை உள்ளடக்கியது. சமூகத்தில் அன்பும், அறனும் விளையக் அத்தகையக் குடும்பமே ஆதாரமாக திகழ்கின்றது என்பதை வள்ளுவர்,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 1

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் தனிமனிதன் சமுதாயத்திற்கு இயற்ற வேண்டிய பணிகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். இத்தகைய இல்லற வாழ்வில் மனிதநேயத்துடன் கூடிய வாழ்வியல் முறையை கடைப்பிடித்தால் மட்டுமே குடும்பமும் சமூகமும் சிறக்கும் என்பதை மண்வாசத்தோடு தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கி, மக்கள் வாழ்வில் நடைபெறும் வாழ்வியல் நெறிகளை, உண்மை நிகழ்வின் அடிப்படையில் தனது படைப்பாற்றளின் வழி பல்வேறு இலக்கியங்களை கொண்டு சித்தரித்துக் காட்டுபவர் படைப்பாளர் கண்மணி குணசேகரன். இப்படைப்பாளரின் சிறுகதைகளின் வழி மனித நேயத்திற்கான அடித்தளம் குடும்பத்திலிருந்தே இடம்பெறுகிறது. குடும்பமே மக்களைப் பிறப்பித்துச் சமுதாயத்தில் உலவவிடுகிறது என்பதை எடுத்துக்காட்டி மக்களை நெறிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்காகும்.

விட்டுக்கொடுத்து வாழ்தல்
குடும்பம் என்ற அமைப்பில் ‘விட்டுக்கொடுத்து வாழ்தல்’ என்ற பண்பு அரண் போன்றது. இத்தகைய பண்பு குடும்பத்தில் வாழும் அனைவரிடமும் நிறைந்திருக்க வேண்டும். அப்போழுது தான் முழுமையான இன்பத்தை நுகருவதற்கு ஏதுவாக இருக்கும். அதிலும் கணவன், மனைவியிடையே மிகச் சிறந்த புரிதல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். இல்லற வாழ்வில் தனது இணையின் கடந்த கால வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகள் தெரிய வந்தாலும் அதனைப் பற்றி ஆய்ந்தறியாமல் நிகழ்காலத்தை மட்டுமே பங்கிட்டு வாழ்வதே சிறப்பானதொன்றாகும். இவ்வாறு வாழும் போது மட்டுமே, ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு நிறைந்து, இருவருக்குள்ளும் ஆன்ம பினைப்பு உருவாகி, உருகுலையாத பந்தத்தை வாழ்நாள் முழுதும் ஏற்படுத்தும். விட்டுக்கொடுப்பதால் நம் உறவை வலிமைப்படுத்துகிறோம். மற்றவர்களை உறவாக்கிக் கொள்கிறோம். மற்றவர்களின் பகைமையை விரட்டுகிறோம். விட்டுக்கொடுத்தல் விவேகம் நிறைந்தது. நமது வாழ்க்கையை வளமாக்கும் வழியுமாகும். இதனைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அன்றில் பறவைகளின் புனிதமான அன்பை சிறைக்குடி ஆந்தையார்,

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 20: " அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் : ஓர் உரையாடல்" - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
03 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

உரையாடல்- 07 - நிகழ்வின் விபரமும் ZOOM இணைப்பும்: “சமகால மக்கள் போராட்டங்களும், சமூக - ஜனநாயக சக்திகளின் பொறுப்பும் பங்களிப்பும்” - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
03 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

காக்கும் கரங்கள்:  அவள் ஒரு மருத்துவச்சி! - முனைவர்.கோ.புஷ்பவள்ளி, 21 வா.உ.சி நகர் முத்தியால்பேட், புதுச்சேரி -3 -

விவரங்கள்
- முனைவர்.கோ.புஷ்பவள்ளி, 21 வா.உ.சி நகர் முத்தியால்பேட், புதுச்சேரி -3 -
கவிதை
03 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதி கண்ட பெண்ணே!
எம் பாரத நாட்டின் கண்ணே!
சந்ததி தழைக்க
தலைமுறை சிறக்க
ஈரைந்து திங்கள்
கருவை சுமந்து
சுமையாய் கருதாமல்
சுகமாய் பிள்ளையை பெற்றெடுக்கும்
தாய்மையின் வடிவே!
தாய்ப்பால் புகட்டும் நீயே மழலையின் திருவே!

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்பிரசுரம்: இயக்கவியல் - ஓர் அறிமுகம் (இயக்கவியலும் - இயக்கவியல் வகையினங்களும்)  - A.K..ஈஸ்வரன் -

விவரங்கள்
- A.K..ஈஸ்வரன் -
அரசியல்
03 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்“சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.)

இன்று இயக்கவியலைப் (Dialectic) பார்க்கப் போகிறோம். இயற்கை, சமூகம் ஆகியவை ஒரு விதிக்குள் தான் இயங்குகிறது. அனைத்து நிகழ்வுகளையும், விதி என்று கூறிடமுடியாது. அதாவது நிகழ்வது அனைத்தும் விதியாகாது. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நடைபெறுவதையே விதி என்று கூறப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும், இன்றைய சமூகம், ஒரு மாறுதலுக்கு உட்பட்டு, அடுத்தப் புதிய சமூகத்திற்கு மாறும் என்பதை இயக்கவியல் ஏற்றுக் கொண்டு, விளக்குகிறது. அதனால் தொழிலாளர்களுக்குத் தேவையான அணுகுமுறை இயக்கவியல் ஆகும். இன்றைய சுரண்டும் சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இயக்கவியலை மறுக்கின்றனர். அவர்கள் இயக்கவியலுக்கு மாறான இயக்கமறுப்பியலை ஏற்கின்றனர். இன்று நாம் இயக்கவியலைப் பற்றிப் பார்ப்போம்.

மார்க்சியத் தத்துவமான, பொருள்முதல்வாதம் இயக்கவியல் அணுகுமுறையையே ஏற்கிறது. அதனால் தான் மார்க்சியத் தத்துவத்தை, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம், இயக்கவியலால் அணுகப்பட்டது. மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல், இயக்கவியல் முறையால் எழுதப்பட்டது. அதனால் தான், மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகள் இயக்கவியலை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ...

சுயகொல்லி (கோவம்) - செ. நாகேஸ்வரி , உதவிப்பேராசிரியர், இலொயோலா கல்லூரி, வேட்டவலம் -

விவரங்கள்
- செ. நாகேஸ்வரி , உதவிப்பேராசிரியர், இலொயோலா கல்லூரி, வேட்டவலம் -
கவிதை
01 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆற்றாத நோய்!
உன்னை
அணுவணுவாய்
சாகடிக்கும்
சுயகொல்லி!

கண்ணுக்கு தெரியாமல்
கனல் மூட்டும்!
காட்டுத்தீயாய் பரவி
உயிர் குடிக்கும்
உணர்வைக்
கெடுக்கும்!

மேலும் படிக்க ...

சிறுகதை: கூட்டுக்குள் கல்லெறிந்தவள்! - முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்ததுறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -

விவரங்கள்
- முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்ததுறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
சிறுகதை
01 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென வாழாமல் தன் குடும்பதிற்காகவும், தன் பிள்ளைகளே வாழ்க்கை என்ற முனைப்பில் இரவும் பகலும் அவா்களின் நினைப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளின் அறிவையும் ஆளுமையும் கண்ட அவ்வூா் மக்களுக்கு சிறந்த முன் மாதிரி பெண்ணாகவும் விளங்கினாள். இதனைக் கண்டு அவளின் உற்றார், உறவினர்கள் மிகுந்த பொறாமை உணா்வை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவளுக்கு அடிக்கடி தொந்தரவு தந்துகொண்டே இருந்தனா்.

அவளின் கணவனோ ஒன்றுமே அறியாத வெகுளியான வெள்ளந்தியான குணம் உடையவா். ஆனால் அவா் வீடு, வீட்டை விட்டால் விவசாயம் என்று தன் வாழ்நாளினை வாழ்ந்துக்கொண்டிருப்பவா். இருவரும் நல்ல புரிந்துணா்வுகளோடு இல்லறத்தைத் தொடா்ந்து கொண்டிருந்தனர். இவா்களின் அன்புக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தையோடு தன் இல்லறக் குருவிக்கூட்டை கட்டமைத்து வாழ்ந்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஓா் எண்ணம் தன் பெண்பிள்ளையை நன்கு வளா்த்து சிறந்த அரசு வேலையில் உள்ள மணமகனுக்குத் தான் தரவேண்டும் என்னும் வைராக்கியத்தில் பிள்ளையை வளா்த்துவந்தாள். ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அப்பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை வரத்தொடங்கினா். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இவள் மகளுக்கு மட்டுமே மாப்பிள்ளை வருவதும் போவதுமாக இருக்கின்றார்களே என்று பேச ஆரம்பித்தனா். தன் மகளை அந்த அளவுக்கு அழகு நிறைந்தவளாகவும், குடும்ப பாங்கானவளாகவும் வளா்த்திருந்தாள். ஆனால் அப்பெண்ணுக்கோ திருமண வயதுவரவில்லை என்பதால் வருகின்ற மாப்பிள்ளை எல்லாம் நிராகரித்தாள். பின்னா் சில வருடங்களுக்குப் பிறகு தன் மகளுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாளோ அதே போல அரசு வேலையில் உள்ள மணமகனுக்கு பல்வேறு எதிர்ப்புச் சூழ்நிலையில் திருமணம் முடித்தாள்.

மேலும் படிக்க ...

ஆய்வு: கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கடவுள் என் சோரநாயகன்' கவிதை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) அவர்களின் 'கடவுள் என் சோரநாயகன்' என்னும் கவிதையினை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இலங்கை சாகித்திய மண்டலக் கவியரங்கில் அ.ந.க ஓதிய கவிதை. அதனைப்பற்றி எழுத்தாளர் அ.ந.க பற்றி எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய 'பாவோதல்' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். "

இந்தக் கவிதையினைச் சில வருடங்களின் முன் முனைவர் சேரனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவரது தந்தையாரிடமிருந்த பழைய கோப்புகளிலிருந்து பெற்றதாகக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.

இந்தக் கவிதையில் அ.ந. க கடவுளைச் சோரநாயகனாக்கி உருவகித்திருப்பார். மிகவும் சிறப்பான கவித்துவக் கற்பனை.  இதுவரையில் வேறு யாராவது கடவுளைச் சோர நாயகனாக்கியிருக்கிறார்களா என்பது ஆய்வுக்குரிய விடயம். கவிதை நாஸ்திகராக அறியப்பட்ட ஒருவரைப்பற்றிப் பேசுகிறது. நாஸ்திகராக அறியப்பட்டவர் உண்மையில் நாஸ்திகரா என்றால் அதுதான் இல்லை. அவரை அவ்விதம் அறிந்தவர்கள் அறியாமல் அவரது மனம் கடவுளை நாடுகின்றது. அவரது பகுத்தறிவாளர்களான் நண்பர்கள் அறியா வண்ணம் அவரது உள்ளம் கடவுளை மோகிக்கின்றது. நண்பர்கள் அருகில் இல்லையென்றதும் நாஸ்திகரான அவரின் உள்ளம் பக்திப்பரவசத்தில் குதித்தாடத் தொடங்கிவிடுகின்றது.

மேலும் படிக்க ...

திருச்சி: `பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம் 04-05-2022 புதன் கிழமை

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
01 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்குக் கீழுள்ள 'இமேஜ்'தனை அழுத்தவும்.

மேலும் படிக்க ...

உழைப்பாளர்தினக் கவிதை: உழைப்பை மதிக்கும்நாள் உன்னதமே உலகினுக்கு !   - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
01 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே 1 உழைப்பாளர் தினம்!

ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது
காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது
கவலையுறும் உழைப்பாளர் கண்ணீரில் மிதக்கின்றார் !
சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு நிறையவே வைக்கின்றார்
அனைத்துமே உழைக்கின்றார் அனுசரணை என்கின்றார்
ஆனாலும் உழைக்கின்றார் அல்லலிலே இருக்கின்றார் !

மேலும் படிக்க ...

திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940-27.04.2022) - என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் -

விவரங்கள்
- என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் -
சமூகம்
30 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள் அவர்களுடன் திருமதி பரராஜசிங்கமும் இடம்பெற்றிருந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.04.1940 இல் பிறந்தவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வம் மிக்கவர். தன் இளமைக் காலத்தில் பென்குவின் பதிப்புகளைத் தேடித் திரிந்து வாசித்து மகிழ்ந்தவர். அவரது நூல்களின் மீதான ஆர்வமே விலங்கியல் பட்டதாரியான அவரது வாழ்வின் திசையை நூல்களையும் நூலகங்களையும் நோக்கித் திருப்பியுள்ளது.

திருமதி ரோ.பரராஜசிங்கம் 1961இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில், தனது B.Sc. சிறப்புப் பட்டத்தை விலங்கியல்துறையில் பெற்றுக்கொண்டவர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சிறிது காலம் கார்கில்ஸ் நிறுவனத்தின் புத்தக விற்பனைப் பிரிவின் (Cargill’s Book Centre) பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கணவள் என்று ஏன் மனைவியை அழைக்கக்கூடாது? - எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் கேள்வி!   - வ.ந.கிரிதரன் -
  2. கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி... - ஜோதிகுமார் -
  3. தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (10 - 13) - ஜோதிகுமார் -
  4. கவிதை: அன்னையார் பிரிவு! - கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) -
  5. உன் கடவுளிடம் போ! - கே.எஸ்.சுதாகர் -
  6. மழைப்பீப்பாய் (Rain Barrel)) வாங்க விரும்புகின்றீர்களா?
  7. எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல் வெளியீட்டுக் காட்சி!
  8. ஆய்வு: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலும் , ;குருட்டு வாழ்க்கை சிறுகதையும் சோபாகிளிஸ்ஸின் எடிப்பஸ் நாடகமும்! - வ.ந.கிரிதரன் -
  9. ஆய்வு: குடும்ப சூழலில் பெண் அடையாளங்கள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் – 605 602 -
  10. சிறுகதை: வாரிசுகள் ! - சுப்ரபாரதிமணியன் -
  11. என்னைப் பற்றி.. - பிரபஞ்சன் -
  12. பயனுள்ள மீள்பிரசுரம்: நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை! - ஜெயமோகன் -
  13. கலந்துரையாடல்: என்.கே.ரகுநாதம் - தகவல்: கற்சுறா -
  14. கவிதை: காலவெளிக் கைதியொருவனின் பிரகடனம்!  - வ.ந.கிரிதரன் -
பக்கம் 74 / 104
  • முதல்
  • முந்தைய
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • அடுத்த
  • கடைசி