நேட்டோ தற்போதைய ருஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்குக் காரணமா? இதனை மையமாக வைத்து 'கிராவிட்டாஸ் செய்திகள்' சானலில் 'பல்கி சர்மா' (Palki Sharma) விபரிக்கும் இக்காணொளி முக்கியமானதென்பதால் பகிர்ந்துகொள்கின்றோம். இக்காணொளியில் பல்கி சர்மா நேட்டோ அமைப்பு பற்றியும், அதன் விஸ்தரிப்பு பற்றியும் , அதனால் ரஷ்யாவுக்கு ஏற்படும் அதன் நலன்களுக்கு எதிரான ஆபத்துகள் பற்றியும் , உக்ரைனின்ம் , நேட்டோவின் பரஸ்பர அரவணைப்பு பற்றியும் இக்காணொளியில் ஆராயப்படுகின்றது.
சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.
ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
முன்புபோல் அல்லாமல், இப்போதெல்லாம் தொழில் நுட்பவளர்ச்சியால் எல்லாமே உடனுக்குடன் கிடைக்கக்கூடியதாக இருப்பது, எங்கள் தலைமுறைக்குக் கிடைத்த அதிஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும். வீடு தேடியே சீடி, டீவீடி என்று சொல்லப்படுகின்ற குறும்தட்டு, காண்தட்டு என்று எல்லாம் ஒழுங்காக வரும். விரும்பிய நேரம் போட்டுக் கேட்கலாம், பார்க்கலாம் என்று எத்தனையோ வசதிகள் இருந்தன. இதைவிட இதற்கென்றே சில இணையத் தளங்களும் இருந்தன.
அப்பாவிற்கு பழைய பாடல்கள் என்றால் நல்ல விருப்பம். நான் சொல்வது சிவாஜி, எம்ஜிஆர் காலத்துப்பாடல்கள் அல்ல, அதையும்விட பழையது. கிராமபோன் காலத்துப் பாடல்கள். அப்போ, அவர்களது இளமைக் காலத்தில் இப்படியான வசதிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
புத்தகத் திருவிழா என்றதும் பழைய ஞாபகங்கள் சில காட்சியாய் மனதில் ஓடின. எங்க மாணவப் பருவத்தில் இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய நூலகம் கட்டாயம் இருக்கும். அது அறை முழுவதும் பரப்பப்பட்டும் இருக்கும், அல்லது ஒரு அலுமாரிக்குள் அடங்கியதாகவும் இருக்கும். பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் நூலகங்கள் இருந்தன. வீடு தேடியும் இதழ்கள் வரும். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு எங்கள் அடையாளங்களை அழிக்க முற்பட்ட சம்பவங்களும் அவ்வப்போது நினைவில் வந்து போகும். வாசிப்பு என்பது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்குத் தந்த கொடைகளில் ஒன்றாகும்.
சின்ன வயதில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துத் தந்ததால் நாங்களும் வாசிப்புக்கு அடிமையாகி விட்டிருந்தோம். அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி, கல்கண்டு போன்ற புத்தகங்கள் கிடைத்தன. வளர்ந்ததும் எங்களுக்குப் பிடித்தமான நூல்களை நாங்களே தெரிவு செய்து வாசித்தோம். இன்று தமிழ் உலகறிந்த ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது வாசிப்பு மூலம் எனக்குக் கிடைத்த அனுபவமும் எனது வாசகர்களும்தான். இம்முறையும் சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி, கனடிய எழுத்தாளரான எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கடைசியாக நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தன.
வாகனத்தின் வானொலியை இயக்கினான் . ' குட்டிக்கதை ' ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார் . இதில் இடம் பெறுகிறது ' மனம் ' என்ற இத்தூணித்துண்டு . அது தலையிலே , நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும் . " ஒரு ராஜா .... " ஏன் அவரை இழுக்கிறார்கள் . பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது . அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார் . என்ன , நடை பயில்கிறாரா ? . எளிமையாகப் போகிராராம் . ஊரிலே தெரு , கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார் . நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது , நடக்கிறது , முடிகிறது . ஏன் ? . அழுத்தம் கொடுக்க ...மனதிலே ஒருவர் தோன்றுகிறார் . அவரின் அடுத்த நகர்வு என்ன ? , தெரியாது . எனவே எளிமையாக தொடர்வது . அதுவும் ஒருவிதத்திலே ...சரி போலவே தோன்றுகிறது . இன்று லொஜிக் மீறலையே கதைக்கருவாக எடுத்து , கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக ...கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள் . தொழினுற்பம் கதை சொல்லி . சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது .
கதை இது தான் . ராஜா கடைக்குமுன்னால் நடந்து போகிறார் . கடைக்காரர் , முதலை எல்லாம் போட்டு சந்தனக்கட்டைக் கடை திறந்திருக்கிறார் . பூஜைப் பொருட்கள் விற்கிற கடை இருக்கிறது .விறகாலை இருக்கிறது . இந்தியாவில் ...சந்தனக்கட்டை வெட்டின வீரப்பன் புகழ் அந்த மாதிரி பறக்கிறது . ஆனால் நிஜத்தில் ...இந்தக்கடை இருக்கிறதா? . சவ இல்லம் இருக்கிற போது , வாங்கிறவர் இருக்கலாம் தான் . கதை நம் காலத்தில் நடக்கவில்லை . அரசர் காலம் . இன்று தடை செய்யப்பட்டவை சில அன்று விடுதலைப் பெற்றிருந்தன . அப்பவும் சாதாரணர் வாங்க முடியாது . அப்படியென்றால் விலையான பண்டம் . ஏன் அந்தக் கடையைப் போய்த் திறந்தார் ? . அரசர் போறார் எனத் தெரிகிறது . இவர் மனதில் , " அரசன் செத்துத் தொலைத்தால் நம்கட்டைகள் அத்தனையும் விற்பனையாகி விடுமே ! " என்ற நினைப்பு எழுகிறது .அரசரை சந்தனக்கட்டைகளை அடுக்கியே எரிப்பார்கள் . ஒரு லோடு போகும் . திரும்ப வாங்கி விற்கிற போது ...என்ன யோசிப்பாராம் ? . கதையைக் கேட்கிற போது கேள்விகள் கேட்கக் கூடாது . இலங்கை அரசு , வடக்கு , கிழக்கு இணைப்பையோ , சுயாட்சியையோ ... ஏன் மாகாணவரசையோ கொடுக்கவில்லை ? . இந்திய அரசு வரும் வரையில் தாழ்ந்த மாவட்டசபைகள் , அதிலும் யாழ் மாவட்டசபைகளை தமிழ்க்கட்சிகள் கைப்பற்றி விட்டது என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பொருளாதாரத்தையே சிதைத்தார் ; உயிர்களைப் பறித்தார் . இந்திய அரசால் தான் மாகாணவரசு ஒப்பந்தத்தையே ... எழுத முடிந்தது . நம் அரசியல்வாதிகளுக்கு எதன் பெறுமதி தான் தெரிகிறது ? . சந்தையிலே கூச்சல் போட மட்டும்... தெரிகிறது . அப்பப்ப மக்களின் தலைகள் உருளும் . உருப்படியாக கவனிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்தாலும் தலையிலேறுமா ?
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!
உலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் தலைசார்த்து வணங்குகின்றேன்.
உரத்த குரலால் உலகை முத்தமிட்டு
உலகைப் படைக்கும் பெண்ணே!
உன்வீட்டுத் தாளிப்பு வாசனையில்
அடுப்புகள் கரைந்து கொண்டபோது
உள்ளமோ சுழல்காற்றாய் இரைந்தது.
மாற்றத்தின் தத்துவத்தில்
சமத்துவம் வேண்டி நின்று
சிந்தனையில் சிங்கப்பெண்ணாகி
பூமியோ நீலநிறமாகியது!
ரத்தக் குளியலில்
சித்திரம் வரைந்த பெண்களின் எழுச்சியால்
எழுந்ததே இன்றைய பெண்கள் தினம்.
அண்மையில் முகநூலில் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரை பற்றிய பதிவொன்றினை இட்டிருந்தேன். அதில் கலாநிதி கா.இந்திரபாலாவினால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட அக்கட்டுரை பற்றிய விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன் (Ceylon Antiquary and Literary Register 2(3), Jan 1917, pp.194-195, 'Sankily's Fortress at Kopay'). அப்பக்கங்களைத் தேடியெடுத்து அனுப்பியிருக்கின்றார் என் முகநூல் நண்பர்களிலொருவரான யாழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் கு.சரவணன் அவர்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் ஒருமையைத் தேடி. திரு. மூஸா ராஜா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் IN SEARCH OF ONENESS. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல் . மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு.மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள: புதுப்புனல் பதிப்பகம்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல நூல்களை, நவீன தமிழ்க்கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் நெருங்கிய நண்பரான திரு. மூஸா ராஜா மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்தும் உருது மொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில நூலை தன் நண்பர் மொழிபெயர்க்கவேண்டுமென்று விரும்பினார் திரு.மூஸா ராஜா. திரு.கே.எஸ்.சுப்பிரமணியனின் வேலைப்பளு காரணமாக அந்த மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் தந்தார் அவர். என் மொழிபெயர்ப்புகளை மேற்பார்வையிட்டார். சில திருத்தங்களைப் பரிந்துரை செய்தார்.
கலாநிதி பாரதி ஹரிசங்கரைப் 'பதிவுகள்' வாசகர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். இவரது மொழிபெயர்ப்புப் படைப்புகள் பல (கவிதை, சிறுகதை) 'பதிவுக'ளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று 2007இல் விஜயம் செய்திருந்தபோது 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். அப்பொழுது இவரைக் குறுகிய நேரம் எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா ஆகியோருடன் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது பற்றிப் 'பதிவுக'ளிலும் குறிப்பொன்று வெளியாகியிருந்தது. கலாநிதி பாரதி ஹரிசங்கர் அவர்கள் கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பதவியேற்றுள்ள செய்தியினை அண்மையில் அறிந்தோம். மகிழ்ந்தோம். அவரைப் பதிவுகள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இன்று காலை தங்கள் பதிவுகளில் அவுஸ்திரேலியா இலக்கியவாதியும் ஓவியருமான திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய தீக்குள் விரலை வைத்தால் - கட்டுரையில் - ரஷ்யா - உக்ரேய்ன் மோதலின் உறைபொருள் - மறைபொருளைப்பார்த்து அதிசயித்தேன். கிறிஸ்டி பல தகவல்களை சொல்லி, இந்த மோதலின் பின்னணியையும் விளக்கியிருக்கிறார்.
இப்பாடலின் சிறப்பு 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவனின் இசை, டி.எம்.எஸ்ஸின் குரல், கவிஞர் அ.மருதகாசியின் கருத்துமிக்க வரிகள் ஆகியவைதாம். 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' போன்ற வரிகள் கேட்கையிலேயே உள்ளத்தில் உற்சாகம் பொங்கி எழும். உழைத்து பிறந்த மண்ணை முன்னேற்ற வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும்.
நினைவுகள் சாசுவதமானவை. நினைவுகளை தேக்கி வைப்பதற்கு நினைவாற்றலும் தேவை. அத்துடன் நினைவுகள்தான் மனச்சாட்சி. அத்துடன் நீதி புகட்டும் ஆவணம். இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை எழுத்தாளர், ஆய்வாளர், இலங்கை அரச மட்டத்தில் பல உயரிய பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன் “ நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள் “ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இலங்கை எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசுவழங்கும் திட்டத்தின் அடிப்படையில் நடத்திய போட்டியில் கட்டுரைப்பிரிவில் தாம் எழுதிய "குன்றிலிருந்து கோட்டைக்கு " நூலுக்கு இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசினைப்பெற்றிருக்கும் எழுத்தாளர் வாமதேவனுக்கு வாழ்த்துக் கூறியவாறு, இந்நூல் பற்றிய நயப்புரைக்குள் வருகின்றேன்.
கல்வி, தொழிற்சங்கம் – அரசியல், நிர்வாகம், இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி அமரத்துவம் எய்திவிட்ட, இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், டி.வி. மாரிமுத்து, எம். சின்னத்தம்பி, வி. கே. வெள்ளையன், பெ. சந்திரசேகரன், ஓ. ஏ. இராமையா, எம். இராமலிங்கம், சி. நவரட்ன, பி. முருகேசு, சி. வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி. குமார் எஸ். எம். கார்மேகம், ந. நெடுஞ்செழியன், பொன். கிருஷ்ணசாமி ஆகியோர் பற்றிய நினைவுகளை நூலாசிரியர் வாமதேவன் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் சித்திரிக்கும் இந்த நூலைத் திறந்ததும் மனதை அதிர வைக்கும் செய்தியையும் அறிந்துகொள்கின்றோம். அதனைப்பார்த்தவுடன் மனம் கனத்துப்போனது. சில நிமிடங்கள் மனம் உறைந்துவிட்டது. நூலாசிரியர் வாமதேவனின் அருமைத் தந்தையாரும் அன்புச் சகோதரிகள் மூவரும் 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அப்புத்தளை பெரகலை மண்சரிவில் உயிர் நீத்திருக்கும் செய்தியே அது. அவர்களுக்கும் அதன்பின்னர் இயற்கை எய்திய அன்புத்தாயருக்கும் நூலாசிரியர், இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
போர் ஆரம்பம்!
இந்த இரு வார்த்தைகளின் பின்னே உள்ள சோகங்களையும் இழப்புகளையும் வேதனை வடுக்களையும் பற்றி சொற் சுனாமிகள் இனி கரைதட்டத் தொடங்கும். 'ஏன் போர்?' என்பதற்கான வியாக்கியானங்களை போர் ஆராய்வாளர்கள் எம்முன் படைக்கத் தொடங்கிவிட்டனர். எந்தப் போருக்கும் பல பரிமாணங்கள் உண்டு. இப்பரிமாணங்கள் முற்றிப் பழுத்து போராய் வெடிக்கும் போது நிகழும் இழப்புக்கள் மீட்டெடுதலுக்கு அப்பாற்பட்டவை! நேட்டோவில் (NATO) இணைவதற்கான உக்ரையினின் நகர்வு, ரஷ்ய ஆதிக்கத்தை விஸ்தரிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முன் நகர்வு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரின் உச்சம் என பல பரிமாணங்கள் இங்கு உண்டு. இப்பரிமாணங்களின் தொகுப்பை ஆராய்ந்து அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாததால் ரஷ்ய- உக்ரைன் போரின் ஒரு பரிமாணத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.
இன்று உலகில் நிகழும் அனர்த்தங்களுக்கும் போர்களுக்கும் இறைவன் இயற்கை வளங்களை சமமாக பங்கிடுவதில் விட்ட தவறுதானோ என எண்ணத்தோன்றுகிறது. இன்றய மனித இனம், காட்டுவாசிகள் வேட்டையாடிய மாமிசத்திற்காக அடித்துக்கொண்டது போல், இயற்கைச் வளங்களுக்காய் கையில் ஆயுதமேந்தி போராடுவதை பார்த்து அந்த இறைவன் தலையிலடித்து தன் பிழையை நொந்து கொள்வானோ என எண்ணத் தோன்றுகிறது.
எழுத்தாளர் 'தாயகம்' ஜோர்ஜ்.இ.குருஷேவ் 'பொன்னியின் செல்வன்' நாவலைப்பற்றி முகநூற் பதிவொன்று இட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "பொன்னியின் செல்வன் வாசிக்கவேயில்லை என்ற விசயத்தை வெளியில சொன்னா... கேவலமா பாப்பாங்களா!? பிரெண்ட்ஸ்!"
அதற்கு எதிர்வினையாற்றியிருந்த எழுத்தாளர் அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்: "பலர் புளுகினாற்போல் அது திறமானதென்றில்லை. நான் கல்கிப்பிரியனல்லன். என்னிடம் 'பொன்னியின் செல்வன்' இருந்தது. கடைசி வரைக்கும் வாசித்து முடிக்கவில்லை."
இவர்கள் இருவரும் தம் வாசிப்பின் பரிணாம வளர்ச்சிப் படிக்கட்டிலொன்றில் அனுபவித்திருக்க வேண்டிய இன்பத்தை இழந்து விட்டார்கள். இவர்கள் பொன்னியின் செல்வனை வாசித்திருக்க வேண்டியது அவர்களது வாசிப்பின் ஆரம்ப காலத்தில். அப்பொழுதுதான் அதன் அருமை புரிந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் அம்புலிமாமாக் கதைகளை வாசித்து இன்புற்றோம். அடுத்த எம் வாசிப்புப் படியில் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை வாசித்தோம்.. அக்காலகட்டத்தைத் தவற விட்டு வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினால் அதனை ஒருபோதுமே இரசிக்க முடியாது. அதனைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். அதனால்தான் பொன்னியின் செல்வனை இவர்களால் இரசிக்க முடியவில்லை. நான் இப்போது பொன்னியின் செல்வனை வாசித்தாலும் எனக்கு அதனை முதன் முதலில் வாசித்தபோது அடைந்த இன்பமும், ஆர்வமும் ஏற்படாது. ஆனால் அது இப்பொழுதும் மகிழ்ச்சியைத் தருவதற்குக் காரணம் பால்ய , பதின்மப் பருவங்களில் வாசிப்பின்போது அது தந்த இன்பம்தான். அவ்வின்பமும், அவ்வாசிப்பனுபவமுமே இன்று எம் உணர்வுகளில் அதனைப்பற்றி எண்ணியதும் எழுகின்றன. ஆனால் ஒருபோதுமே இன்று என்னை வாசிப்பில் ஒன்றிவிடச் செய்யும் படைப்புகளான 'தத்யயேவ்ஸ்கியின்' 'குற்றமும், தண்டனையும்'. 'அசடன்', 'க்ரமசாவ் சகோதரர்கள்', 'டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' , 'போரும் அமைதியும்' போன்ற நாவல்களை என்னால் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் இரசித்து வாசித்திருக்கவே முடியாது. அதற்குரிய மானுட அனுபவமும், அறிவும் அப்போது எனக்கில்லை.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் தாய்மண்ணின் மீதான பாசம் எல்லோருக்கும் பொதுவானது. இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் அந்த நேசம் மனதை விட்டுச் செல்வதில்லை. அந்த மண் பசுமை கொண்ட விவசாய நிலமாக இருந்துவிட்டால் சொந்தப் பிள்ளைகளைப் போல் பேணிவளர்ப்பதும், வளர்ச்சி கண்டு பூரிப்பதும், பலன் தரும்போது பெருமிதம் கொள்வதும் மனிதஇயல்பு.
அதே மண்ணை பிரிய நேர்தலும் அன்றி அதன் அழிவைக் காண நேர்தலும் ஒரு விவசாயிக்கு எத்தனை வேதனை தரும் அனுபவம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் பெற்ற பிள்ளைகளை இழப்பதை ஒத்த துயரம் தருவதுதான். இந்த மகிழ்வையும், துயரத்தையும் இலங்கைத் தமிழர் வரலாற்றுடன் இணைத்து 'பச்சைவயல் கனவு' என்ற நாவலை நெஞ்சில் நிறைத்தவர் எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள்.
2004 இல் வெளிவந்த இந்நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளது என்பது மெருமைக்குரியது. வெளிவந்து இருதசாப்தங்களை நெருங்கும் நிலையில் இன்று வாசித்தாலும் உயிரோட்டம் மிகுந்த உணர்வுகளைத் தருவது நாவலின் சிறப்பு. இந்நாவல் தனிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கைச் சரிதத்தினூடு சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைக் குறியீடாகவே எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் சுதந்திரம் பெற்றது முதல் 2004 வரையிலான இனவன்முறை சார்ந்த வரலாற்றுச் சம்பவங்களின் மீள்பார்வை ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சோவியத் குடியரசைத் துண்டுகளாக்கியதில் வெற்றி பெற்றன மேற்கு நாடுகள். அதுவும் போதாதென்று அவற்றையெல்லாம் தம் கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, ரஷ்யாவை மேலும் பவீனப்படுத்தி, உலக அரசியலில் ஓரங்கட்ட முயற்சி செய்ததன் விளைவுதான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வரும் முயற்சி. அது இன்னும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும். அதன் தேசிய நலன்களுக்கும் எதிரானது; ஆபத்தானது. உக்ரைன் மட்டும் தான் ஒருபோதும் நேட்டோவுடன் இணையப்போவதில்லையென்று அறிக்கை விட்டிருந்தால் இந்தப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். தான் ருஷ்யாவுக்கு மிக அருகிலிருப்பதால், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுடன் தான் பின்னிப்பிணைந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து தனது பூகோள அரசியலை அது நடத்தியிருந்தால் இப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம் போர்கள் அவை எக்காரணங்களால் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. அது மிகவும் துயரமானது.
ஜீவநதி' சஞ்சிகையின் இதழ் 166 எழுத்தாளர் திக்குவல்லை கமால் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. இதனைச் சாத்தியமாக்கிய 'ஜீவநதி' ஆசிரியர் பரணீதரனுக்கு நன்றி. ஏற்கனவே எழுத்தாளர்கள் பலரின் சிறப்பிதழ்களை 'ஜீவநதி' வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் திக்குவல்லை கமால் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு கதை, உருவகக்கதை, கவிதை, சிறுகதை,நாவல்,மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பங்களிப்பை நல்கிய படைப்பாளி. அவரைச் சரியாகக் கெளரவித்துள்ளது ஜீவநதி, வாழ்த்துகள்.
கோப்பாய்க் கோட்டை பற்றிப் பேராசிரியர் புஸ்பரட்னம் அவர்கள் பகிர்ந்துள்ள பதிவினை இங்கு பகிர்கின்றேன். அதில் விடுபட்டுப்போன முக்கியமானதொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பேராசிரியர் புஸ்பரட்னத்தின் கோப்பாய்க் கோட்டை பற்றிய தகவல்கள் பயனுள்ளவை, ஆனால் இதில் விடுபட்டுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவது இத்தருணத்தில் பொருத்தமாகவிருக்குமென எண்ணுகின்றேன்.
1. சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்
குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.
கங்கை அமரனின் இசையில், கவிஞர் முத்துலிங்கத்தின் எழுத்தில், மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் பாடலுக்கு தம் நடிப்பால் உயிரூட்டியிருப்பவர்கள் சுதாகரும், , ராதிகாவும்.