பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மினட் டி சில்வா (Minnette de Silva): அவரது வாழ்வும் , பணியும் பற்றியொரு நோக்கு!

E-mail Print PDF

Minnette De Silvaஇலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது  பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.  1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.

பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய  அரசியல்வாதி.  இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும்  விளங்கியவர். இவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.

மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித  மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால்  அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய  மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry)  மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும்  கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.

அங்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார, அரசியல் துறைகளில் ஈடுபாடுள்ள வட்டமொன்றில் இணைந்து செயலாற்றினார். அவ்வட்டத்தில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், சிதார் வாத்தியக் கலைஞரான ரவிசங்கர் ஆகியோரும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடன் மினட் டி சில்வாவுக்கும் நட்பு உருவானது. அக்குழு வெளியிட்ட சஞ்சிகையான 'மார்க்' (Marg)) இதழின் , கட்டடக்கலைக்கான ஆசிரியராக மின்ட டி சில்வா பங்காற்றினார். நவீனக் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிரதான விடயங்களாகக்கொண்டு வெளியான இதழ் மார்க் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டம். மகாத்மா காந்தியின் போதனைகளால் நடத்தப்பட்ட பாத யாத்திரையொன்றினுள் கலந்துகொண்டதற்காகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த கல்வி நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்காததன் காரணமாகவே அவர் அவ்வாறு வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து , பெங்களூரில் வசித்து வந்த கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் வல்லுநருமான ஓட்டொ கொனிஸ்பேர்கர்  (  Otto Koenigsberger) என்பவரின் கட்டடக்கலை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு பணியாற்றுகையில் பீகாரில் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 'டாடா உருக்கு நகரத் திட்ட'த்துகாக முன்னுருவாக்கப்பட்ட வீடுகளுக்கான (Prefabricated house)வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் இலங்கைக்குத் தற்காலிகப் பயணமொன்றின்போது சென்றிருக்கையில் , அப்போது இலங்கையின் ஆளுநராகவிருந்த ஹேர்வால்ட் ராம்ஸ்பொதமைச்  (Herwald Ramsbotham) சந்திக்கின்றார்.  அவர் இவரது கட்டடக்கலைத்துறைத் திறமையினை இனங்காண்கின்றார். இங்கிலாந்தின் கல்விக்குழுத்தலைவராகவுமிருந்த அவர் அப்பதவியைப்பாவித்து, கட்டடக்கலைச் சங்கம் மினட் டி சில்வா முடிக்குரிய பிரித்தானியக் கட்டடக்கலை நிறுவனத்தின் சிறப்புத் தேர்வினை எடுப்பதற்கு ஒழுங்கு செய்தார். உலக யுத்தத்தின் பின் திரும்பிய மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு அது.

 

Karunaratne House

இங்கிலாந்தில் கட்டடக்கலைத்துறைத் தேர்வில் சித்தியடைந்த அவரை அரசியல்வாதியான அவரது தந்தையார் சுதந்திரமடைந்த நாட்டுக்குத் திரும்பி அதற்குப்பங்களிக்குமாறு  வலியுறுத்தினார், அதற்காகவே நாடு திரும்பிய மினட் டி சில்வா கண்டியில் தனியாகக் கட்டடக்கலைத்துறையில் இறங்குகின்றார். போதிய நிதியற்ற நிலையில் சுயமாக அவர் கட்டடக்கலைஞராகத் தன் தொழிலை ஆரம்பிக்கின்றார். அவர் வடிவமைத்த முதலாவது கட்டடம் ஒரு வீடு. கண்டியில் உருவாக்கப்பட்ட கருணாரத்தின வீடு என்றழைக்கப்பட்ட வீடுதான் அவர் முதன் முதலாகக் கட்டடக்கலைஞராக வடிவமைத்த கட்டடம் (1949). அவரது பெற்றோரின் நண்பர்களான வழக்கறிஞரான அல்ஹி, மற்றும்  லெட்டி கருணாரத்தின ஆகியோர் தமக்காக ரூபா 40,000 செலவில் வீடொன்றினை அமைத்துத்தருமாறு அவரிடம் கேட்டனர். அதற்காக அவர் வடிவமைத்த வீடான 'கருணாரத்தின வீடு' பின்னாளில் புகழ்பெற்ற அவர் வடிவமைத்த கட்டடங்களிலொன்றானது.  மலைப்பிரதேசமான கண்டியில் , தளங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் (Split -Level) அவ்விதம் முதன் முதலில் அமைக்கப்பட்ட வீடு அதுதான். அதுவும் இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட வீடென்ற பெருமையும் அதற்குண்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறையொன்றில், ஆண் பங்காளர் எவருமின்றி, காலூன்றிய கட்டடக்கலை நிறுவனம் என்னும் பெயரற்ற நிலையில் அவர் தன் தொழிலை ஆரம்பித்தபோது அத்துறை சார்ந்த சகல வர்த்தக நிறுவனங்களுக்கும் நம்பிக்கையைத்தரவில்லை. ஆனால் அவர் அவ்வீட்டினை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கியதும்  (1951) அவர்கள் கவனமெல்லாம் அவர்பால் திரும்பியது. அடுத்த பத்தாண்டு காலம் அவர் புகழ்பெற்ற  கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கினார் எனலாம். இக்காலகட்டத்தில் முப்பது கட்டடங்களை அவர் வடிவமைத்ததாக அறியப்படுகின்றது.

Karunaratne House Drawings

அறுபதுகளில் அவரது கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பில் வீழ்ச்சி நிலவியதென்றே குறிப்பிடலாம். அதற்கு அவரது தாயாரின் மறைவும் (1962) அதனைத் தொடர்ந்து அவரடைந்த மனத்தளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட உடல்நலச்சீர்கேடும் முக்கிய காரணங்கள். இதனைத்தொடர்ந்து அவர் அதிக காலத்தை வெளிநாட்டுப் பயணங்களில் செல்வழித்தார், இதன் விளைவா அவரால் தன் கட்டடக்கலைத்தொழிலில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடியவில்லை/ அப்பயணங்களின்போது அவர் கிரேக்கம், ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.  இதன் பிறகு நாடு திரும்பிய அவர் கவனம் உல்லாசப் பயணிகளுக்கான பெரிய ஹொட்டல்களை அமைப்பதில் திரும்பியது.  அவரது கட்டடக்கலை பற்றியும் , வாழ்க்கை பற்றியும்  ஃபுளோரா சாமுவல் (. Flora Samuel) எழுதிய லெ கோபுசியே: கட்டடக்கலைஞரும் பெண்ணியவாதியும் (Le Corbusier: Architect and Feminist) என்னும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான லெ கொபுசியே அத்துறைகளில் அன்று உலகப்புகழ்பெற்றிருந்தாரென்பதும், பஞ்சாபின் சண்டிகார் நகரை வடிவமைத்தவர் அவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மினட் டி சில்வாவின் நெருங்கிய நண்பர்களிலொருவராக விளங்கியவர் என்பதும் நோக்கத்தக்கது.

இக்காலகட்டத்தில் மினட் டி சில்வா வடிவமைத்த கட்டடங்களில் எண்ணிக்கை பதினொன்று (1960 -1974)

எழுபதுகளில் புதிதாகப் பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் அரசின்மீது அதிருப்தியுற்ற மினட் டி சில்வா தன் கட்டடக்கலை நிறுவனத்தை மூடிவிட்டு இலண்டன் சென்றார். அங்கு ஃபிளாட் ஒன்றினை வாடகைக்கெடுத்து வசித்து வந்தார். அங்கு வசிக்கையில் அவரது கவனம் உலகக்கட்டடக்கலையின் வரலாறு பற்றித்திரும்பியது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கட்டடக்கலையின் வரலாறினைப் படிப்பவர்கள் பாவிக்கும் பிரதான நூல் பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture) என்னும் நூலாகும்.  அந்நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை எழுதியபோது இலண்டனில் வசித்த அக்காலகட்டத்தில்தான். கட்டடக்கலையின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைப் பணி அவருக்கு ஹொங்ஹொங் பல்கலைகழகத்தின் கட்டடக்கலைப்பீடத்தில் ஆசியக்  கட்டடக்கலையின் வரலாறு பற்றிப் போதிக்கும் விரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்க வழிவகுத்தது. அவர் அங்கு பணியாற்றியபோது (1975-1979) புதிய கோணத்தில் ஆசியக் கட்டடக்கலையைப் போதிக்கும் போக்கினை உருவாக்கினார். இவ்விதம் போதிப்பதில் அவரே முன்னோடியாகவும் விளங்குகின்றார்.

மீண்டும் 1979இல் நாடு திரும்பியதும் மீண்டும் தடைப்பட்டிருந்த தனது கட்டடக்கலைத் தொழிலை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றார். ஆனால் தகுதி வாய்ந்த இத்துறையில் பாண்டித்தியம் பெற்ற  பணியாளர்களைப்பெறுவதில் சிரமத்துக்குள்ளாகின்றார். இதுவே அவரது கட்டடக்கலைப் பங்களிப்பின் இறுதிக்காலகட்டமெனலாம். இக்காலகட்டத்தில் வடிவமைத்த முக்கியமான கட்டடங்கள் மூன்று, அவை: கண்டி கலை மையம் ( Kandy Arts Centre,சேகர் இல்லம் (Segar House, Ja-Ela -1991) & சிறிவர்தனா இல்லம் ( Siriwardene House, Colombo, 1992)

கண்டி கலை மையம்

கண்டி கலை மையம் பல மட்டங்களிலான கிடையான ஓட்டுக்கூரைகளையும், வாசல்களையும், திறந்த முற்றங்களையும் ,  மண்டபங்களையும், ஆடல் மற்றும் இசை அரங்கு மற்று கூட்டுவாழ்வுக்கான சுதேசிகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டடம். பொழுதுபோக்கையும் கட்டடக்கலையும் மனத்திலிருத்தி உருவாக்கப்பட்ட சிறந்த  கட்டடமே மின்ட டி சில்வாவின் கண்டிக் கலை மையம்.

இவ்விதமாக இலங்கைக் கட்டடக்கலைக்கு, உலகக் கட்டடக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர் மினட் டி சில்வா. கட்டடக்கலைஞரும் , நகரமைப்புத்திட்ட வல்லுநருமான  லெ கொபுசியே, நவீன ஓவியர் பிக்காசோ, எழுத்தாளர் முல்க்ராஜ்  ஆனந்த் போன்ற கலை,இலக்கிய ஆளுமைகளுடனெல்லாம் நட்பைப்பேணி  வந்தவர் மினட் டி சில்வா.

இவ்விதமாக உலகக்  கட்டிடக்கலைக்குப் பெருப் பங்காற்றிய  கட்டடக்கலைஞர்களிலொருவர் இலங்கையைச் சேர்ந்த மினட் டி சில்வா என்பதும் , அவர் 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியை உருவாக்கிய முன்னோடியென்பதும் பெருமைப்படத்தக்கது. இவ்விதம் பெருமைக்குள்ளான மினட்  டி சில்வாவுக்கு  அவர் இறப்பதற்கு இரு வருடங்கள் முன்பு (1996) இலங்கைக் கட்டடக்கலைஞர்களுக்கான சங்கம் அவரது இலங்கைக் கட்டடக்கலைக்கான பங்களிப்புக்காகத் தங்க விருதினை வழங்கியது.

சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர், இலங்கைக் கட்டடக்கலைஞர்களின் முன்னோடிகளிலொருவர்,  உலகக் கட்டடக்கலையின், தெற்காசியக் கட்டடக்கலைக்கு முக்கிய பங்களிப்பை  வழங்கியவர், முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண், பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture)  நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதியவர், மார்க் சஞ்சிகையின் கட்டடக்கலைபகுதி ஆசிரியர் , 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கின் முன்னோடி எனப்பல்வகைப் பங்களிப்புகளைச் செய்ததுடன், இலங்கையில் பல கட்டடங்களை வடிவமைத்துக் கட்டடக்கலைக்கு மிகுந்த பங்களிப்பினை வழங்கியவர் மினட் டி சில்வா.

அதே சமயம் இன்னுமொரு விடயத்திலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் தனித்து ஒரு பெண்ணாக , உறுதியாக நின்று சாதித்திருக்கின்றார். அது நிச்சயம் மதிக்கப்பட வேண்டியதொன்று. அதே இதனால் அவரது வாழ்க்கை இத்துறையிலோ எத்துறையிலோ நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களுக்கு மாதிரியாகவிருக்கின்றது.


மினட் டி சில்வாவின் கட்டடக்கலைப்பங்களிப்பு!

1940s

Karunaratne House, Kandy (1947–51)

1950s

Jinaraja College, Gampola (1950–51)
Red Cross Hall, Kandy (1950) (Unbuilt)
Day Nursery Extension, Kandy (1950) (Unbuilt)
Pieris House I, Colombo (1952–6)
Daswani House, Kandy (1952)
House for buisnessman, Nawala (1952) (Never built)
Wickremaratna House, Colombo (1953)
Open Air Theatre for the Arts Council in Colombo, Colombo, (1953–54)[22]
C. H. Fernando House, Wellawatte (1954)[24]
Mrs. D. Wickremasinghe Flats, Colombo, (1954)
Senanayake Flats, Colombo, (1954–57)
Asoka Amarasinghe House, Kollupitiya (1954)
Dr. Chandra Amarasinghe Flats, Colombo, (1954–55)
Aluwihare Sports Pavilion, Police Park, Kandy (1955)
Bunnie Molamure House, Bolgoda, (1955)
Sri Rao House, Bangalore (1955) (Proposal)
Ivor Fernando Flats, Colombo, (1956)
V. Sachithanandam House, Colombo, (1956)
Mrs. N. De Saram House, Colombo, (1956–57)
Art Centre, Horana (1957) (Unbuilt)
Dr. Perera House, Colombo, (1957–58)
Watapuluwa Housing Scheme, Kandy (1958)
Amaduwa Game Reserve Lodges, Kandy (1958) (Proposal)
Sri Palee Open Air Theatre, University of Peradeniya, (1958–59)
Ceylon Match Factory (1958)[22]
General Habibullah Defence Academy Chief's House, India, (1958–59)
A. G. De Silva House, Cinnamon Gardens (1958–59)
Kalkudah Sea Side Resort, Kalkudah (1959)
Hikkaduwa Resr House, Hikkaduwa (1959) (Renovation)1960s

Chandra Amarasinghe House, Colombo, (1960)
Dr. Hensman House, Ratmalana, (1960–61)
Dr. P. H. Amarasinghe House, Colombo, (1960)
Dr. Nadesan Villa, Kandy, (1960–61)
R. G. Senanayake House, (1960–61)(Unbuilt)
Keerthisinghe House, (1961)(Unbuilt)
Pieris House II, Colombo (1963)

1970s

Coomaraswamy Twin Houses, Colombo (1970)
Seneviratne House, Kandy, (1972)
Gamini Wickremasinghe Flat, Colombo, (1972)
Dr. and Mrs. PVJ Jayasekera House, Kandy, (1974)

1980s

Kandy Arts Centre, Kandy (1982–84)

1990s

Segar House, Ja-Ela (1991)
Siriwardene House, Colombo (1992)உசாத்துணை:

1. நன்றி: விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 28 August 2020 10:51  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can


books_amazon
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி