பதிவுகளில் அன்று; மே 2003; இதழ் 41.
யமுனா : ரொம்பவும் நேரடியாகவும் 'ப்ருட்டலா'கவுமே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். .இன்றைய இந்திய சூழலில் தமிழ்த்தேசியத்தின் தேவை என்னவென்று கருதுகிறீர்கள்?
தியாகு : தமிழ்த்தேசியம் என்கிறபோது அது ஒன்றுதான் உண்மையான நேர்மறையான தேசியம்..ஏதோ பல்வேறு தேசியங்கள் இருக்கிறமாதிரி அதில் தமிழ் தேசியம் ஒன்றாக இருந்தது அதன் இடம் என்ன அல்லது இந்திய தேசியம் என்பது என்ன என்று பேசுவதற்கான இடம் இதுவல்ல.ஒரு காலத்தில் இந்திய தேசியத்திற்கான தேவை இருந்தது. அது எதிர் மறை தேசியம¡க இருந்தது. தமிழ்த் தேசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அடிப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்..
தமிழ்த் தேசம் என்கிறபோது- அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குடபட்டும் இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசியத்தின் தேசியம் என்ற வகையில் தமிழ்த் தேசியம் இன்று பொருத்தப்பாடுடையது.அந்த வகையில்தான் எல்லா அடிப்படையகளிலும் இங்கு மாற்றத்திற்கான அரசியல் பேசுகிறோம்.
யமுனா : ஒடுக்ப்பட்ட தேசியம் ஒடுக்குகிற ஒரு அமைப்பு எனும் அளவிலாயினும் அல்லது ஒடுக்கப்படுகிற இனமாயினும் ஒடுக்குமறை பாலியல்ரீதியலானதாயினும் மொழிரீதியலானதாயினும் சரி ஒடுக்குமுறைக் கெதிராகப் போராடவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. ஆனால் தேசியம் ஒன்றை முன்வைத்து நாம்.ஒரு அரசியல் இயக்கம் அல்லது தேசிய விடுதலை இயக்கம் நடத்தும் பொது கருத்தியல் வடிவில் அதை உருவாக்குகிறோம். தேசியம் என்கிற கருத்தியலுக்கும் தேசியம் என்கிற கருத்தாக்கத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. தேசியம் தொடர்பாக நிறைய எழுதப்பட்டிருக்கிறது. ஜரோப்பிய தேசிய உருவாக்கம் என்கிற அனுபவத்திலிருந்தது¡ன் நான் பேசுகிறேன். பெனடிக் அண்டர்ஸன், எரிக் ஹாப்ஸ்பாம் , டொம் நாய்ன் போன்றவர்கள் தேசியம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார்கள். நவீன தேசியத்தின் வரலாறு என்பது ஜம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்கிறார் மார்க்சீயரான பிளாக்பெர்ன். எரிக் ஹாப்ஸ்பாம் ஜரோப்பிய அனுபவங்களை அடியொற்றி தேசியம் தொடர்பான விவாதங்களை இட்லரின் தேசிய சோசலிசம் , பாசிசம் போன்றவற்றோடு வைத்துப் பாரக்கிறார். பல்வேறு மார்க்சியர்களும் தாராளவாதிகளும் கருத்தியல் எனும் அளவில் தேசியம் பாசிசத்தை நோக்கித்தான் செல்லும் என்கிறார்கள். பெனடிக்ட் அண்டர்ஸன் அச்சுக் கலையின் வளரச்சி தொழில்மயமாதல் தகவல் தொழில்நுட்ப ஊடகத்தின் பரவலாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் தேசியம் கட்டமைக்கப்படுவதையும் அவ்வகையில் அது கற்பிதமானது என்றும் கூறுகிறார்.டொம் நாய்ன் அடிப்படையில் ஏகாதிபத்தியம் வளர்ச்சியோடு வளர்ந்து வரும் பொருளியல்அசமத்துவம் போன்றவற்றை தேசிய வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்றாகக் கூறுகிறார். பொருளியல் ரீதியான அதிகாரம் பண்பாட்டு அதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது.மொழி அதிகாரத்திற்கான கருவியாக இதன்வழி வளர்ச்சியடைகிறது. இவ்வகையில் பொருளியல் பண்பாட்டு மொழி சார்ந்த ஒரு எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டிய தேவையிருக்கிறது. இவ்வகையில் தேசியம் என்பது கட்டமைக்கப்பட்டதாக இருக்கிற அதே போதில் அது ஒரு நிபந்தனையர்கவும் ஒரு வரலாற்று நிலையாகவும் இருக்கிறது.
ஜரோப்பிய தேசியங்களின் தோற்றத்திற்கும் பாசிச காலகட்டத்துக்கும் அடுத்தாக நாம் காலனியாதிக்க எதிர்ப்பு தேசியவிடுதலை இயக்கங்களைப் பார்க்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு காலனியாதிக்க எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்களை பெரும்பாலுமான மார்க்சீயர்கள் நேர்மறையானதாகப் பாரத்திருக்ககிறார்கள். அயர்லாந்துப் போராட்டம் பற்றிய மார்க்ஸ் எங்கெல்சினுடைய லெனினுடைய பார்வையின் ஆக்கபூர்வமான தொடர்ச்சி இது என்றும் சொல்லாம். நாம் வாழ்கிற காலத்தில் தேசியம் என்பது இரண்டு இடங்களில் உருவாகியிருக்கிறது.
சோவியத் யூனியன் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப்பிறகு பழைய சோவியத யூனியனுக்குள்ளும் கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்குள்ளும் உருவாகியிருக்கிறது. செச்னியா கொசவா பொஸ்னியா போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.மூன்றாம் உலகநாடுகளில் ஆசியஆபிரிக்கா இலத்தீனமெரிக்க நாடுகளில் மத்தியகிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் தேசிய எழுச்சி என்பது உருவாகியிருக்கிறது. இன்றைய அனுபவங்களை நாம் பார்த்தோமாயின் காலனியாதிக்க எதிர்ப்பு யுத்தக் காலகட்டத்தில் அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு என்பது பெருந்தேசியம்- அந்தக் குறிப்பிட்ட நிலப்பிரப்பில் ஆதிக்கம் பெறுகிறதற்கான எதிர்ப்பாகவே நிறைவேறியிருக்கிறது தெரியவருகிறது. அக்காலகட்டத்தில் பிரதானமான மேலெழாத இந்த முரண்பாடு இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறது. இலங்கையை எடுத்துக் கொண்டால் பிரிட்டீஸ் காலனியாதிக்க எதிர்ப்பென்பது சிங்கள பெருந்தேசியத்தைக் கட்டியெழுப்பக்கூடிய காலனியாதிக்க் எதிர்ப்பாகவே இருந்திருப்பதை நாம் இப்போது காணக்கூடியதாகவிருக்கிறது.
சிங்கள புத்த கலாச்சார தேசிய மேலான்மையயை நிலைநாட்டக்கூடிய ஒரு தேசியமாகத்ததான் இலங்கை தேசியம் உருவாகியது. ஆப்ரிக்க தேசியத்திலும் இஸ்லாமிய தேசியத்திலும் இவ்வகையிலான உள்முரண்கள் கொண்ட பண்புகளை நாம் நிறையப் பார்க்கமுடியும். ருவாண்டா ஈரான் அனுபவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். காலனியாதிக்க எதிர்ப்பு கொண்ட இவ்விரண்டு நாடுகளில் ருவாண்டாவில் இனக்கொலை பிரதான அரசியலாகிறது. ஈராக்கில் கொமேனியின் ஷா எதிர்ப்பு ஆட்சியில் பெண் குழந்தைகள் திருமணம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வகையில் நிலப்பிரபுத்தவத்திலிருந்து முதலாளித்துவம் நோக்கிய வளர்ச்சி : இக்காலகட்டத்தில்தான் ஜரோப்பிய தேசியங்கள் உருவாகின்றன. முதலாளித்துவம் தன்னை விரிவாக்க§க் கொண்டு ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைகிற காலகட்டம் : இக்காலகட்டத்தில்தான் காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்கள் உச்சமடைகின்றன. இவற்றிலிருந்து மூன்றாம் உலகின் தேசிய விடுதலை போராட்டங்கள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைப் நாம் பிரித்துப் பாரக்கமுடியாது.
இவ்வாறான சூழலில் பெருந்தேசிய இனத்திற்கெதிராகப் போராடுகிற குறுந்தேசிய இனங்களின் போராட்டத்தை நாம் எவ்வகையில் ஆக்கபூர்வமானதாகப் பாரக்க இயலுமெனில் குறிப்பிட்ட மொழிசார்ந்த கலாச்சாரம் குறிப்பிட்ட நிலப்பரப்பு இதில் இறையாண்மையை நிலைநாட்டுவது என்பது ஒரு ஐனநாயகபூர்வமான கோரிக்கை எனும் அளவில்தான் நாம் ஆக்கபூர்வமானதாகப் பார்க்கமுடியும். ஆனால் காலம் இடம் கடந்த ஒரு கருத்தியலாக இதை முன்வைக்கிறபோது எந்தத் தேசிய கருத்தியலுக்கும் இருக்கிற அதே கருத்தியல் ஆபத்து இதற்கும் இருக்கிறது. ருவாண்டாவில் நடந்த இனக்கொலையை பொஸ்னியாவில் நடந்த இனக்கொலையை இதற்கு ஆதரவாகச் சொல்லலாம்.இலங்கையில் நடக்கிற பல்வேறு விடயங்களையும் கூட நாம் இவ்வகையில் ஒப்பீட்டளவில் பாரக்கமுடியும்.தேசியம் ஒரு கருத்தியலாகிறபோது அதற்கு நேர்கிற ஒரு மிகமுக்கியமான அம்சம் அது 'எக்ஸ்க்ளுசி'வானதாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது. அது கலாச்சாரத்ததை மொழியை வரையறுக்கும். இன்னும் மொழி கலாச்சாரம் சார்ந்த விடயங்களை அது மதத்தோடு சேர்த்து வரையறை செய்யும் அப்படியான நிலை வரும்போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் 'எக்ஸ்க்ளுசிவி'டியைக் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்க தேசியவாதிகள் நினைப்பார்கள் இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்ப என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முஸ்லீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகிவருகிறது. என்னுடைய அழுத்தம் இங்கு யாதெனில் தேசியக் கருத்தியல் உருவாக்கத்தில் இந்த 'எக்ஸ்க்ளுசிவி'டியைக் கோரிக்கொள்வதுதான் மிகவும் எதிர்மறையான கூறாக இருக்கிறது. தேசிய சோசலிசத்தில் இனக் கொலை தொடர்பான என்ன ஆபத்து இருந்ததோ அந்த ஆபத்து விமர்சனமற்ற எல்லாத் தேசியங்களிலும் இருக்கிறது என்பதுதான் வரலாறாக இருக்கிறது.
மார்க்சிய இயங்கியலை எழுதிய குணாவின் பாசிச தமிழ்த் தேசியம் தெலுங்கு பேசுகிற தலித் மக்கள் உள்ளிட்டு தமிழகத்தில் நு¡ற்றுக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிற தெலுங்கு பேசுபவர்களை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்கிறது. இந்த வெளியேற்றம் என்பது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு தமிழ்தேசியத்தின் பெயரிலான இனக் கொலை நடவடிக்கைக்கான முஸ்தீபு. இதுதான் இனக்கொலையாக கொசவாவில் பொஸ்னியாவில் ருவாண்டாவில் தேசியத்தில் பெயரில் நடந்தது. இது அப்பட்டமான பாசிசம் என மார்க்சியரான கோ.கேசவனும் தலித்தியக் கோட்பாட்டாளரான அ.மார்க்சும் குறிப்பிடுகிறார்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருந்துதான் நீங்கள் முன்வைக்கும் தமிழ் தேசம் பற்றிய எனது கேள்விகள் அமைகிறது. இவ்வாறான வரலாற்று அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசத்தின் கருத்தியல் மற்றும் எதிர்காலம் எவ்வாறாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள்?
தியாகு : உங்களுடைய உதாரணம் ஒரு குறிப்பிட்ட வரலாற்று இயக்கத்தின் உதாரணம்.ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு இயக்கம் எடுக்கக் கூடிய முடிவின் தன்மைகள் தொடர்பான உதாரணம். நாம் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு கருத்தியலாக தேசியம் என்ற பொதுக் கோட்பாட்டை என்ற பேசாது வரலாற்றுப் போக்கை பார்த்தோமானால் சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேசிய சமுதாயங்கள் உருவாவது என்பது- அந்த தேசிய சமுதாயங்களுக்குப் பொருத்தமான தேசிய அரசுகள்.உருவாவது என்பது ஒரு முற்போக்கான பங்கு வகிக்கிறது. இது இன்று நேற்றல்ல. லெனின் தனது தேசிய இனச் சிக்கல் குறித்த ஆய்வுகளில் தேசிய இனச் சிக்கலை எப்படி அணுகவேண்டும் என்று சொல்லும் போதும் இதுதான் முதல் செய்தது. முதலாளித்துவ வளர்ச்சியினுடைய எந்தக்கட்டத்தில் ஜரோப்பா எப்படி ஒரு பிற்போக்கு ஜரோப்பாவாக முடிமன்னராட்சி மதகுருமார்கள்¢ன் ஆதிக்கத்தில் இருந்த ஜரோகப்பாவாக அரசுகளாக இருந்தபோது- தேசிய அரசுகளாக மொழிவழிப்பட்ட எல்லைக்ககுட்பட்ட அரசுகளாக இல்லாமல் எப்படிக் கலந்து கிடந்தன என்பதையும் பார்ப்தோடு ஐனநாயக வளர்ச்சிப் போக்கில் சமய மறுமலர்ச்சி மதகுருமார்களின் ஆதிக்கம் ஒழிக்ப்பட்ட நிலைமை வாக்குரிமையின் விரிவாக்கம் இதனோடு இணைந்துதான் தேசிய அரசுகளின் உருவாக்கத்தை அவர் பார்க்கிறார். சமூகத்தில் ஏற்படுகிற ஐனநாயக வளர்ச்சிக்குப் பொறுத்தமான ஒரு அரசு வடிவம்தான் தேசிய அரசு வடிவம்.
இதை ஏன் லெனின இப்படிப் பாரக்கிறார் என்கிற போது- தேசியம் என்பது ஒரு கருத்தியல் அது ஒரு உணர்வு அது ஒரு மனநிலை எனப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தக் கருத்தியலுக்கும் உணர்வுக்கும் மனநிலைக்கும் ஒரு புறஞ்சார்ந்த அடிப்படை இருக்கிறது.. புறஞ்சார்ந்த அடிப்படையில்லாத ஒரு கருத்தியலைத்தான் நாம் கற்பிதம் என்று கூறுகிறோம். மொழி என்பது கறபிதமல்ல. ஒரு மொழி பேசுகிற மக்கள் ஒரு நிலப்பரப்பில் சேர்ந்து வாழ்வது கற்பிதமல்ல. இப்படி வாழ்கிறபேது அவர்களுககிடையில் ஏற்படுகிற மனநிலை அவர்களுக்கென்று ஏற்படுகிற பண்பாடுகள் போன்றன ஒரு புறநிலை அடிப்படையிலிருந்து எழக்கூடிய அகநிலைக்கூறுகள். அதே போல ஒரு தேசிய சந்தையினுடைய உருவாக்கம் சரக்கு உற்பத்தியினுடைய வளர்ச்சி இவையெதுவுமே கற்பிதமல்ல அனைத்துமே புறநிலையானவை. வுரலாற்று வழியில் இவை இணைந்துதான் ஒரு தேசம் உருவாகிறது. தேசம் என்கிற மக்கள் சமுதாயம் உருவாகிறது. தேசிய சமுதாயம் என்பது கற்பிதமல்ல என்கிபோது இந்த தேசிய சமுதாயத்தின் வளர்ச்சிக்குரிய ஒரு கருத்தியலாக அதை நிலைப்படுத்திக் கொள்கிற ஒரு கருத்தியலாக தேசியக் கருத்தியல் உருவாகிறது.
தேசியக் கருத்தியலில் இரண்டு போக்குகள் இருக்கிறது. ஒன்று வெளியிலிருந்து வருகிற தடைக்கெதிராகத் தன்னை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தேசிய சமுதாயம் ஒரு சமுதாயமாக ஒன்று படவேண்டும் தங்களை ஒரு ஒருங்கிணைந்த முழமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முழுமைப்பட்ட ஒருமையாக மாற்றிக் வெளியிலிருந்து வருகிற தடைகள் இருக்கிறமாதிரி உள்ளிருந்தும் வருகிற தடைகள் இருக்கிறது. உள்ளிருந்து வரக்கூடிய தடைகள் என்பது ஒரு பிரபுத்துவ சமுதாயத்தில் அச்சமூக வனர்ச்சிக்கே தடையாக இருக்கிறது. அவர்கள் மொழி அடிப்படையில் இன அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முகவரி பெறுவதற்கே தடையாக இருக்கிறது. நம்முடைய சமுதாயத்தில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். ஓரு தேசிய இனம் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இங்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வரக்கூடிய ஆதிக்க தேசியம் இரண்டாவதாக சமூகத்துக்கள்ளிருந்து வருகிற சாதீயம். இந்த இரண்டு விதமான தடைகள் இருககிறது. அப்போது தேசிய வளர்ச்சி என்பது இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரான வளர்ச்சிதான். இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரானது எனும் அளவில் அது வரலாற்று வளர்ச்சியில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறது. எந்த ஒரு கருததியலுமே வரலாற்று ரீதியில் அதனது பாத்திரம் முடிந்த பிறகு நிலைநிறுத்தப்படுகிறபோது அதனது தேவையைக் கடந்து அது வாழ்கிறபோது அது பிற்போக்காக மாறிப்போகிறது அல்லது பிற்போக்குத்தனத்தின் கருவியாகக்கூட அது மாறிப்போகிறது. ஜெர்மன் தேசியம் என்பது பிரஸ்யன் முடிமன்னராட்சிக்கு எதிராக இருக்கிறவரைக்கும் ஜெர்மனி துண்டு துண்டாகப் பிளவுண்டு கிடப்பதை மாற்றி ஒன்றுபடுத்துவது உதவுவது எனும் வரைக்கும போலந்து பிரான்ஸ் மற்ற தேசியஇனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தும் கருவியாக இருந்த பிரஸ்ஸிய முடிமன்னராட்சியை எதிர்த்து மற்ற தேசிய இனங்களின் விடுதலைக்கு உதவிய வரைக்கும் வரலாற்றுரீதியில் அது முற்போக்கு பாத்திரத்தை வகிக்கிறது. லெனின் இது பற்றிக் குறிப்பிடுகிறபோது 1789 பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி 1871 முடிய ஜரோப்பாவில் இந்த முற்போக்குப் பாத§திரம் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்து ஜரொப்பாவைப் பொறுத்த அளவில் தேசிய இயக்கம் என்பது முடிந்து போய்விட்டது. ஐனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகத்தான் ஜரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகிவிட்டது. அவ்வகையில் தேசியம என்பது அங்கு முடிந்து போய்விட்டது. அதற்குப் பின்புதான் பாசிசம் போன்றன உருவாகிறது. இந்த தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட இனத்தினது தேசியமாக இல்லாமல் ஒரு ஆதிக்க தேசியமாக இருக்கிறது. இது பழையதைப் பயன்படுத்திக் கொள்ளும் கற்பனையாக எதிரிகளைக் கூட உருவாக்கிக் கொள்ளும் நீங்கள் சொல்கிற எக்ஸ்க்ளுஸிவ்நஸ் போன்ற தேசியத்தின் எதிர்முறைக் கூறுகள் அப்போது முன்னணிக்கு வந்துவிடுகிறது. இவற்றை நாம் எதிர்க்கிறோம். முதல் செய்தி யாதெனில் ஜரோப்பாவில் தேசியம் என்பது ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. அந்தக் கட்டத்திற்குப் போகாத நம்மைப் பொறுத்தவரைக்கும் ஆசிய ஆப்ரிக்க போன்ற நாடுகளைப் பொறத்தவரைக்கும்- தமிழ்ச்சமுதாயத்தைப் பொறுத்த அளவில் ஒரு மாற்றம் வேண்டும்.
தமிழ்ச்சமுதாயத்தைப் பொறுத்தவரைக்கும்- நமக்கிருக்கிற ஒரே பிரச்சின தில்லி அல்ல. அது பிரச்சினைகளில் ஒன்று. அரசியல் அதிகாரம் அங்கே இருப்பதனால் உடனடியான அரசியலில் அதை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சினை அத்தோடு முடிவதல்ல நமக்கு இங்கே நமக்குள் இருக்கிற பிரச்சினை முக்கியமானது நமது தேசிய வளர்ச்சிக்கான தடைகள்.- நமது தேசிய சந்தை உருவாவதற்கான தடைகள்-. ஐனநாயக உறவுகளுக்கான தடைகள்-. மொழி வளர்ச்சிக்கான தடைகள்-அனைவரும் கல்வி கற்பதிலுள்ள தடைகள் அனைத்தமே தேசியத்திற்கான தடைகள்தான். நாம் ஒரு தேசமாக ஒன்றுபடுவதிலுள்ள தடைகள்- முதன்மையாக இதில் சாதியத்தை நாங்கள் முன்வைக்கிறோம். இது தொடர்பாக எமது இயக்கத்தில் ஒரு விவாதம் நடந்தது. தமிழ்த் தேசியம் என்பதை அதனளவில் வலியுறுத்துவதல்ல எமது நிலைப்பாடு. தமிழ்த்தேசியச் சமூகநீதி என்பதைததான் நாம் வலியுறுநுத்துகிறோம். தேசிய ஐனநாயகம் அல்லது தமிழ் நிகரியம் என்று இதைச் சொல்கிறோம். ஏந்த தேசியமும் வெறுமனே அவுட்வேர்ட் லுக்கிங்கில் இருந்து வளரமுடியாது அது மக்களிடம் இருந்து வரவேணடுடம் என்றாலே அது உள்ளார்ந்து பார்க்க வேண்டும். அது பிரச்சினைகளைத் தீரக்கிறதோ இல்லையோ அது அடுத்த பிர்சினை. திலகர் காலம் வரைக்கும் காங்கிரஸ் ஒரு வெகுஐன இயக்கமாக மாறவில்லை. ஏனெனில் வெறுமனே அவுட்வேட் லுக்கிங். உள்ளார்ந்து மோசமாகக் கன்ஸர்வேடிவ் ஆக இருந்தது. அதைவந்து ஒரு மக்களியக்கமாக மாற்ற காந்தி என்ன செய்ய வேணடியிருந்ததெனில்- உள்ளார்ந்து அவரளவலே சில் சீர்திருத்தங்களை முன்வைத்துத்தான் ஒரு மக்களியக்கமாகக் மாற்ற முடிந்தது.
தீண்டாமை சொந்தப்பிரச்சினை என்று சொன்னார்கள் இவர் வருகிற வரைக்கும். இவர்தான் தீண்டாமை குற்றம் அது சமூக விரோதக் குற்றம் அது எதிர்க்கப்படவேண்டும் என்று சொன்னார். ஏதோ ஒரு வகையிலான சீர்திருத்ததத்தைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அது புரட்சிகரமானது அல்ல. காந்தியின் சீர்திருத்தவாதம் என்பது நிலப்பிரபுத்துவ சமூகம் தொடர்பான ஜாதிய சமூகம் தொடர்பான சீர்திருத்தவாதம். நம்மளவில் தமிழ்ச் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான தடைகள் என்னவென்று பார்கக்வேண்டும். நாம் மார்க்சியத்தின் அடிப்படையில் இரண்டுவிதமான தடைகளைபபார்க்கிறோம். புறத்தடையாக மற்றும் அகத்தடையாகப்பாரக்கிறோம். இரண்டுமே நமக்கு எதிராக இருக்கிறது.எந்தக் கருத்தியலும் வளர்கிறபோது- நாம் தேசியம் என்று வருகிறபோது- தேசிய சமுதாய வளர்ச்சி என்று வருகிறபோது- நமது சமூகம் வளரவேண்டும் என்கிறபோது- தேசிய சமதாயமாகத்தான் வளர வேண்டும். கார்ல் மார்க்ஸ் சொல்கிறபோது -வு¡ந றழசம¨பெஉடயளள ¡யள வழ ழசபய¦ளைந வைளநடக ழ¦ ய யெவழையெட டியளளை யனெ வழ வாயவ நஒவநவெ வை ளை யெவழையெடளைவ ழெவ ¨¦ வாந டிழரசபநழரள ளநளெந ழக வாந வநசஅ- தொழிலாளிவர்க்கம் தேசிய அடிப்படையில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும்.அந்த அளவுக்கு அது தேசியக் கண்னோட்டம் கொண்டது முதலாளித்துவ அர்தத்தில் அல்ல. லெனின் என்ஸைக்ளோபீடிய பிரிட்டானிக்காவக்கு மார்க்ஸ் சம்பந்தமாக எழுதிய குறிப்பில் இதை மேற்கோள் காட்டுகிறார். ஓரு சர்வதேசியக் கருத்தரங்கில் லபார்க் போன்றவரக்ள் நாம் தேசியத்தை அழித்தொழிக்கவேண்டும் என்கிறார்கள்.
அப்போது மார்கஸ் ஒரு சுருக்கமான பதிலுரைத்தார்: தேசிய இனங்களை ஒழித்துவிடவேண்டும் இவர்கள் சொல்கிறார்கள். .இந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவருமே இதுவரை பிரெஞ்சு மொழியில் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களில் பத்து பேருக்குக்கு கூட பிரெஞ்சு மொழி தெரியாது. பிரெஞ்சு மொழி பேசிக் கொண்டு தேசிய இனத்தை ஒழு¢க்க வேண்டும என்கிறார்கள். உங்களால் பிரெஞ்சு மொழியை ஒழிக்கமுடியவில்லை என்றால் பிரெஞ்சு தேசிய இனத்தையும் ஒழிக்கமுடியாது என்று சொன்னார் .சர்வதேசியம் என்பது தேசியத்தை ஒழிப்பதோ அல்லது தேசியத்தை மறந்து விடுவதோ அல்ல. தேசியத்தை அங்கீகரிப்பது அவர்களது சமத்துவத்திற்காகப் பேராடுட வேண்டும் என்பதுதான் பிரச்சினை.
தேசியவாத எக்ஸ்க்ளுஸிவ்நஸ் பிரச்சினைக்கு இப்போது வருவோம். எல்லாவிதமான எக்ஸ்களுஸிவ் நஸ்ஸ¥க்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். நியாயமான சமூக அடிப்படை கொண்ட காரணங்களுக்காக தலித் இயக்கத்தைத் திரட்டுகிறோம். னால இயக்கத்திற்குள் தலித் எக்ஸ்க்ளுஸிவ்னெஸ் வருமானால் அதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் இயக்கமானவுடன் என்ன செய்கிறார்கள்- தாம் தனியே இருக்க வேண்டும் என பிறரை மறுக்கிறார்கள். இவையெல்லாம் கட்ந்த கால சமூகக் கருத்த்¢யலின் தொடர்ச்சியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இவ்வகையில் தேசிய எக்ஸ்க்ளுஸிவ்நெஸ் என்பதும் வரும2 .அதை எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். முதலாளித்துவ தேசியம் என்பது ஓர் போக்கு. அது மக்களைப்பற்றிக் கவலைப்படாது.. இன்னொரு போக்காக புரட்சிகர ஐனநாயக தேசியம். நான் பாட்டாளிவர்க்க தேசியத்திற்குள் போகவிரும்பவில்லை. ஏனெனில் பாட்டாளிவர்க்கம் முழு வளர்ச்சி பெறாத ஒரு சமூகத்தில் நீங்கள் பாட்டாளிவர்க்கத்தவனாக எல்லாவற்றையும் அணுகமுடியாது.
புரட்சிகர ஐனநாயகம் என்று லெனின் குறிப்பிட்டது போல நாங்கள் புரட்சிகர சமூக நீதி என்று குறிப்பிடுகிறோம். தமிழ்நாட்டுச் சூழலில் அது புரட்சிகர சமூகநீதி. புரட்சிகர சமூகநீதிக் கண்ணோட்டத்திலான தமிழ்த் தேசியம். இந்தத் தேசியம் தேசிய எக்ஸக்ளுஸிவ்நெஸ்சுக்கு எதிரானது. குணா போன்றவர்கள் முன்வைக்கிற பாசிசப் போக்குள்ள தேசியத்திற்கு எதிரானது. தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் அல்ல அவர்களை வெளியேற்ற வேண்டும் போன்ற கருத்துக்களை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வரலாற்றுப் பரிணாமம் என்பதும் உருவாக்கம் ( நஎழடரவழை¦ யனெ ளவயடிடைளையவழை¦) என்பதும் ஒரு நீண்ட செயல்போக்கு கொண்டது. மிகுந்த வரலாற்றுத் தன்மை கொண்டது. இந்த அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். இரத்தசுத்த அடிப்படையில் தேசிய இனம் உருவாவதில்லை. அவர்களை இணைத்துக் கொண்டுதான் தேசிய இனம் உருவாகிறது. அமெரிக்க தேசியத்தைப் பார்த்தோமாயின் வெளிப்படையாகத் தெரியும். நவீன உதாரணம் அமெரிக்கா. அவர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல மொழியிலேயே இதை நாம் காணலாம். அடிப்படையில் ஆங்கில வொகாபுலரி இங்கிலீஸ் ஸ்டரக்சர். உச்சரிப்பு எனும் வகையில் ஸ்லாங் எனும் வகையில் அது பல வகைகளைத் தனக்குள் இணைத்துக் கொள்கிறது. ஆகவே தூய தமிழ்த்தேசியம் கலப்பில்லாத தமிழ்த் தேசியம் போன்ற கருத்துக்கள் எனக்கில்லை. நான் விருமபுகிற தமிழ்த்தேசியம் ஒரு அகண்ட ஐனநாயகக் கண்ணோட்டத்தோடு கூடிய சமூக மாற்றத்துக்குகுத் துணைசெய்யக்கூடிய மக்கள் நலன்சார்ந்த சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய தமிழ்த் தேசியமாகும்..
அப்படி இல்லாத தேசியங்கள். ஜெர்மன் நாசிசம் என்று சொன்னீர்கள்.. இந்திய வகைப் பாசிசம் இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கட்டம் வரைக்கும் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கெதிராக இந்திய தேசியம் எதிர்மறையானதாக இருந்தாலும் கூட ஒரு ஆக்கபூர்வமான பாத்திரம் வகித்தது. உளளார்ந்து அதற்கு எந்த முற்போக்குப் பாத்திரமும் இல்லை. அது ஜாதியத்தோடு சமரசம் செய்து கொண்டது. ஜாதியத்தைப பாதுகாத்தது. ஆக்கபூர்வமான வரலாற்றுக் காலகட்டம் கடந்த பின் அது முற்றிலும் ஏதிர்புரட்சித்தன்மை கொண்டதாக பிற்போககானதாக ஆகியது. அது முழுக்க இந்துத்துவத்தைச் சார்ந்து நிற்கிறது. இராமன் போல் எங்களுக்கு ஒரு தேசியநாயகன் வேண்டுமென மல்கானியா கேட்கிறான். பார்ப்பனியக் கருத்தியில்அரசியலாக இந்திய தேசியஅரசியல் இருககிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மதச்சார்பின்மைவாதிகள் உள்பட இந்திய தேசியத்தை முன்வைக்கிற அனைவருமே தவிர்க்கமுடியாமல் இந்துத்வத்தின் பக்கம் போய்விடுகிறார்கள். அடுத்ததாக தேசிய இயக்கத்தில் வரும் ராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். ராணுவவாதம என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல சோசலிசத்திலும வந்திருக்கிறது. ஏ.என்சியின் நிறஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் கூட வந்திருக்கிறது.மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்ட அனுபவங்களிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.ச§க்கு இருந்தது. ஆனால் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரி அனுபவங்கள் இல்லை. ரொம்பவும் அடிப்படைநிலையில் இருந்தவர்கள். கற்றுக்கெர்ள்ள வேண்டிய பருவத்தில் இருந்தவர்கள். ஒரு அனுபவமும் கிடையாது. அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டது. ஆனால் ஏ.என்.சியில் நிங்கள் அபபடிப் பார்க்கமுடியாது. அரசியல் தலைமைதான் ராணுவத்தலைமையாக மாறுகிறது. மண்டேலா எல்லாக் கட்டங்களையும் தாண்டிவற்தவர். அங்கோலாவில் நாம் பார்த்தோம். ஏம்பி.எல.ஏ மட்டும்தான் கடைசிவரை போராட்டத்தில் நின்றது. யுனிட்டா தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசின் கருவியாகவும் .என.எல்ஏ சிஜ.ஏ.வின. கைக்கூலியாகவும் ஆனது. இதற்காக நாம் அங்கோலாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் குறை சொல்ல முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மறைப் போக்குகள் பறறி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும. ஓடுக்கப்பட்ட ஒரு தேசியத்தின் வெளியிலிருந்து ஏகாதிபத்தியத்தாலும் இந்திய அரசாலும் உள்ளிருந்து சாதியத்தாலும் வளர்ச்சி மறுக்கப்பட்டு தடைப்ப த்தப்பட்டிருக்கிற ஒரு தமிழ்த் தேசியம் என்பது முற்போக்கானது. ஐனநாயகத் தன்மை கொண்டது. ஐனநாயக உள்ளடக்கம் கொண்டது.அந்த உள்ளடக்கததை சரியான வழியில் வெளிப்படுத்துகிற கடமை தமிழ்த்தேசியத்திற்காகப் போராடுகிற சக்திகளின் கையில்இருக்கிறது. இதற்கு மாறான வடிவத்தை வெளிப்படுத்துபவர்களை எதிர்க்கிறோம். எம்முடைய தமிழ்த் தேசியத்தில் பாசிச ஆபத்து இல்லை. அப்படியாக நாம் பயப்படவேண்டிய அவசியமும் இல்லை.
யமுனா : தமிழ் தேசியத்தின் திட்டம் மற்றும்அதனது அரசியல் தந்திரோபாயம் என்ன? அதனது நேச சக்திகள் என்று எதனைக் கருதகிறீர்கள்?
அதனது பிரதான எதிரிகள் என எதை வரையறுக்கிறீர்கள்.? இந்தியதேசியம் என்பது பல்வேறு அண்டை தேசியங்களைக் கொண்ட அரசாக இருக்ககிற சூழலில் இக்கேள்வி மிக முக்கியத்தவமுள்ளது என நான் கருதுகிறேன். ஒரு குறிப்பான சிக்கலான பிரச்சினை இங்கு என்னவென்றால்- நாங்கள் தேசியம் என்கிற போது ஒரு மொழியை வரையறுக்கிறோம் ஒரு எல்லையை வரையறுக்கிறோம்.ஒரு கலாச்சாரத்தையும் வரையறுக்கிறோம். எனக்கு அதிகம் பரிச்சயமான தென் இந்தியச் சூழலில் இருந்து பிரச்சினையைத் துவங்கலாம் என நினைக்கிறேன். தென்னிந்தியாவில் தமிழ்நாது கேரளம் கர்நாடகம் ந்திரா என ( நமது விவாதத்தின பொருட்டு) நான்கு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லா மாநிலங்களிலும் குறிப்பான மோழிபேசுகிறவர்களை மட்டும் கொண்டதாக இம்மாநிலங்கள் இல்லை. தமிழகத்தில் இருக்கிற றுகோடிக்கும் மேலானவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள் இல்லை. தெலுங்கு மலையாளம் கன்னடம்மற்ற பிற மொழி பேசுபவர்களும் உள்ளார்கள். இதே மாதிரியான ஒரு கலப்பான நிலைதான் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் நிலவுகிறது. இவவாறான சூழலில் கன்னட தேசியம் கேரள தேசியம் ஆந்திர தேசியம் தமிழக தேசியம் போன்றன முன்வைக்கப்டக்கூடிய சூழல் இருக்கிறது. எனில் இந்த தேசிய இனங்களின் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பவர்களுக்கிடையிலான உறவுகள் முரண்கள் எவ்வகையில் அமையப் போகிறது?
தியாகு : தமிழ்த் தேசியம் என்று சொல்கிறபோது பிற மொழி பேசுகிறவர்கள் தொடர்பான பிரச்சினையில் இரண்டு விதமான நிலைகள் இருக்கிறது. ஒன்று வீட்டுத் தாய்மொழியாக மட்டும் பிற மொழிகளைக் கொண்டவர்கள். வாழ்ககை மொழியாகத் தமிழை ஏற்றுக கொண்டவர்கள். அது தவிர்க்முடியாதது. ஓரு டைனமிக் சொஸைட்டி அப்படித்தான் இயங்கும். அது ஒரு பெரிய கொதிகலன். அதற்குள் வருவதையெல்லாம் அது கலந்து ஒன்று சேர்த்துக் கொள்ளும்.அப்படியில்லையெனில் அந்தச் சமூகத்தின இயக்கமே சந்தேகத்தக்குரியதாகிவிடும். அவ்வாறு தமிழ்ச் சமுதாயம் என்பது பலநூறு ஆண்டுகளுக்குமுன்பே வந்த குடியேறிய தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் மற்ற தேசிய இனத்தவர்களை மற்ற மொழி பேசுகிற மக்களை உள்வாங்கிவிட்டது. தேசிய இனத்துக்குரிய இலக்கண வரையறையில் பொது மொழி என்று சொல்கிறோமேயொழிய தாய் மொழி என்று சொல்வதில்லை. தாய்மொழியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமேயில்லை. தென் ஆப்ரிக்க தேசியத்தில் பார்த்தோமெனில் வரலாற்றுப் பரிணாமம் என்பது எவ்வாறு பங்கு வகிக்கிறதெனப் பார்கக்முடியும். 13 மொழி பேசுகிற மக்கள் அவர்கள். மண்டேலாவின்மொழி வேறு. புத்லேசியினுடைய மொழி வேறு. ஆனால் அவர்களுடைய மொழிகளெல்லாம் இயல்பாக வளர்ந்து தேசிய மொழிகளாக வளர்ந்து தனித்த தேசிய இனங்களாக வளரக்கூடிய வளர்ச்சிப் போக்கு என்பது வெள்ளையர்களின் குடியேற்ற காலானியாதிக்கத்தினால் பாதியில் குறுக்கீட்டுக்காளாகியது. ஏனவே இந்தமக்களெல்லாம் வளர்ந்து தேசியஇனம் ஆகிய பிறகு நமது விடுதலைக்குப் போராடுவோம் எனப் பாரத்துக் கொண்டிருக்கமுடியாது. எனவே அவசரமாக அவர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே கல்வித்தறை சார்ந்து ஆபரிச்சயமா¡க இருந்தது.
ஆங்கிலத்தையே பொது மொழியாக எடுத்துக் கொணடார்கள். மணடேலா விடுதலையாகி வெளிவந்து ஆங்கிலத்தில்தான் உரையாற்றினார். தென்னாபிரிக்க தேசம் என்பது ஒன்று உருவாகி வளர்ந்தபோது. தேசியம் ஏற்கனவேயே நிறஓதுக்கலுக்கெதிரான போராட்டத்தில் உருவாகிவிட்டது. தென்னாப்பிரிக்க தேசித்தின் மொழி ஆங்கிலம். ஸோவெட்டோ கிளர்ச்சி என்பது ஆங்கிலத்துக்கு ஆதரவாக ஆப்ரிக்க மொழி திணிப்பிற்கு எதிராகத்தான் நடந்தது. ஆகவே பொதுமொழி என்பது முக்கியமாகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பெரும்பகுதியானவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வீட்டு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் பொது மொழியாகத் தமிழைக் கொண்ருப்பவர்களைத் தமிழர்கள் அல்லாதவர்கள் என்று கருத நியாயமேயில்லை. அவர்களும் தமிழ்த்தேசிய இனத்தினுடைய ஒரு பகுதியேயாவர்.ஏற்களவே ஒன்று கலந்து விட்டார்கள் .இன்னும் கலந்து கொண்டே இருக்கிறார்கள். அந்தச் செயல்போக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. பிறிதொரு பகுதியினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாத் தேசியஇனங்களிலும் இருப்பார்கள். எல்லையோரத்தில் வாழக்கூடியவர்கள். அவர்கள் தொடர்ந்து எங்கிருந்து வந்தார்களோ அந்தத் தாய்நாட்டொடு பிணைப்புகள் கொடுக்கல் வாங்கல் உறவு வைத்திருப்பார்கள். ரொம்பவும் அன்மைக்காலத்தில் வந்து குடியேறி தம் அடையாளத்தைக் காத்துக் கொண்டிருக்கிற சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் உலகெங்கிலும் இருப்பவர்கள்தான். நமது நாட்டில் மட்டும் அதிசயமாக இருக்கிறவர்கள் அல்ல. இதற்காக இவர்கள் தேசிய அடையாளத்தைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்றொ தேசிய மொழியைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்றொ அல்ல. இந்தப் போக்கும் ஒரு புறம் இருக்கும் தேசிய சிறுபான்மையினர் உரிமை என்பதும் பிறிதொரு பக்கம் இருக்கும். மொழி கலாச்சாரம் மதம் பண்பாடு ஒரு குறிப்பிட்ட பிரதேசதத்¢ல் தொடர்ந்து வாழ்ந்தால் பிரதேசசுயாட்சி - அடாநமி- உள்பட அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்படும்.
யமுனா: நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பல்கலாச்சார-மல்ட்டி கல்சசுரல்- சமுதாயமாக இருக்குமா?
தியாகு : நோ- ஒரு பகுதி மைனாரிட்டியினர் இருப்பர். ஆனால் பிரதான சமுதாயம் - மெயிளன்ஸ்ட்ரீம்- என்பது ஒன்று இருக்கும். பல் கலாச்சார சமூகத்தில் மெயின் ஸ்ட்ரீம் என்று ஒன்று இருக்காது- நெவர். அப்படிப் பாரப்பது தமிழர் தாயகத்தை நிராகரிப்பதாகும. தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு தமிழ் இனத்தின் வாழ்விடம் இது. நமது எல்லைதான் இது. இதில் சிறுபான்மையினர்க்கு இடம் உண்டு.சிறுபான்மையினர்க்கான உரிமை வேறு. தேசியத்தின் உரிமைகள் வேறு. இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. மைனாரிட்டிகளின் உரிமைகள் அங்கீகரிக்க்ப்பட்டு மதிக்கப்படும். அதே நேரத்தில் இது தமிழர்களின் தேசியத் தாயகம்.
யமுனா : இப்போது மைனாரிட்டிகள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
தியாகு : மொழிவழிச்சிறுபான்மையினர் எல்லையோரங்களில் இருப்பவர்கள். கன்னடர்கள் இருக்கிறார்கள். மலையாளிகள் இருககிறார்கள்.
யமுனா : தமிழ்க்கலாச்சாரம் என்று சொல்கிறபோது நீங்கள் பொது மொழி பொது கலாச்சாரம் போன்றவற்றைக் குறிப்பிடகிறீர்கள். இவ்வகையில் மதம் இங்கு எந்தவிடத்தில் பொருந்துகிறது?
தியாகு : தேசம் என்கிற அமைவில் பல்வேறு கூறுகள் இடம்பெறுகின்றன. அகக்கூறுகள் மற்றும் புறக்கூறகள். புறக்கூறுகள் என்கிற போது அவர்கள் பேசும் மொழி அவர்கள் வாழக்கூடிய நிலப்பரப்பு. இதில் அவர்களின் தெரிவென்று ஏதுமில்லை.இனச் சிறுபான்மையினர என்பது சரியான பிரயோகம்இல்லை. மொழிச் சிறுபான்மையினர் என்று சொல்லாம். நாம் மதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மதம் ஒடுககுமுறைக்கான கருவியாக ஆகிறபோது- பல்வேறு மொழி பேசும் பல தேசிய இனங்களைச் சார்ந்தவராயினும் யூதர்களை மதத்தின் பெயரில் ஒடுக்கியதால் அதுவே அவர்களை இணைக்கக்கூடிய காரணியாகிறது. ஓரே மதத்தில் கூட ஒடுக்கப்பட்டவர்களும் ஒடுக்குபவர்களும் இருப்பர். தென ஆப்ரிக்க உதாரணத்தைப் பாரக்கலாம். கறுப்பர்கள்¢ன் கிறித்தவப்பிரிவு என்பது வேறு. வெள்ளையர்களின் கிறித்தவம் என்பது வேறு. அயர்லாந்துப் பிரச்சினையில் கத்தோலிக்கமும் புராதஸ்தாந்துப் பிரச்சினையும் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. நமது பிரச்சினையில் மதம் ஒரு காரணமாக வைத்து ஒடுக்குமுறை அமையவில்லை. இங்கு நமக்கிடையிலுள்ள பிரச்சினை ஐ¡தியவேறுபாடுதான். அது நமக்கு வெளியிலிருந்து வருவது அல்ல.
யமுனா : மதம் சம்பந்தமாகப் பார்க்கிறபோது மொழியைப் பார்க்க வேண்டியிருககிறது. மொழிசாரந்த பண்பாட்டை நாம் பேசுகிறபோது மொழி மதச்சார்பற்றதாக இல்லாதிருக்கிறதை நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.மொழி சம்பந்தமான ஆய்வுகளிலிருந்த பாரக்கிறபோது மதம் சம்பந்தமான சார்நிலையினின்று மொழியைப் பிரித்துப் பார்க்கமுடியாது. உதாரணமாக ஈழத்தில் சைவத்திலிருந்து தமிழ்மொழியைப் பிரித்துப் பார்ப்பது கடினம். அம்மொழி மதச்சார்பற்ற மொழியாக ஆகவில்லை. அதைப போலவே மொழி நாம் பேசுகிற சமுதாயச் சூழலில் ஜாதி ஆதிக்த்தினுடைய கருவியாக இருக்கிறது. அவ்வகையில் மொழி மத திகக்த்தினுடைய கருவியாக இருக்கிறது. ஜரோப்பிய மொழிகளுக்கும் நமது மொழிகளுக்கும் இருக்கிற மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்று மேற்கில் மொழிக்குள் மதச்சார்பற்ற பாலாதிக்கநீக்க மொழிக்கான நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது மொழிகளில் அவ்வகையிலான முயற்சிகள் பிரக்ஞைபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. கலைஞர் கருணாநிதி பேசுகிற தமிழும் கிருபானந்தவாரியார் பேசுகிற தமிழும் ஒரு தலித் பேசுகிற தமிழும் பல்வேறு வகைகளில வித்தியாசமானது. மொழி மதநீக்கம் அடையாத போது எவ்வாறு மொழியை தேசியத்தின் பொது அலகாக நீங்கள் வரையறுக்கிறீர்கள்?
தியாகு : உங்கள் அபிப்ராயங்களில் இருந்து நான் மாறுபடுகிறேன். தமிழ் மொழி முழுக்க மதநீக்கம் பெற்ற மொழிதான். மொழி அதனளவில் ஒரு வர்க்கக் கருவியோ ஐ¡தியக் கருவியோ மதக்கருவியோ அல்ல. மொழியை எதற்கும் பயன்படுததிக் கொள்ளமுடியும தமிழ்ப்ப்ண்பாடு என்பது சமயப்பண்பாடு அல்ல. இன்னும் சமயப்பண்பாடு வெறும் திக்கபண்பாடு கிடையாது. ஜாதீயச் சிந்தனைகள் வைதீகக் கருத்துக்கள் இலக்கியங்கள் எந்த மொழியில் வந்ததோ அதே மொழியில்தான் சித்தர் பாடல்களும் வள்ளலார் பாடல்களும் வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள். திருக்குறள் போன்ற மதநீக்கம்பெற்ற இலக்கியம் ஐ¡திய எதிர்ப்பு பார்ப்பனீய எதிர்ப்பு சமத்துவக்கருத்துக்கள் நிறைந்த இலக்கியமென்று வேறொன்று இல்லை. குறளியம் ஸ் எ ஸிஸ்டம். நமது தமிழ் சமுதாயத்தில் நடந்திருக்கக்கூடிய சமூக நீதிக்கான சமத்துவத்துக்கான போராட்ட்த்துக்காள மிகப்பெரிய வரலாற்றுப் பாதிவு திருக்குறள்தான். தமிழில் திருக்குறளுக்குப் பிற்பாடுதான் பிற இலக்கியங்களைச் சொல்லாம். மலையாளம் கன்னடம் போன்ற பிறமொழிகளோடு ஒபபிட்டுப் பார்ப்போமானால் தமிழ் அதிக அளவில் மதநீக்கம்கொண்டது அதிக அளவில் முற்போக் கு சக்திகளின் பக்கம் நிற்பதாகும். என்னளவில் தமிழ் அனைத்து மக்களுக்குமான மொழிதான்.
விசு : நாம் வரையறுத்திருக்கிற பொதுவான தமிழ் தேசியத்திற்கு மொழி கலாச்சாரம் குறிப்பிட்ட எல்லை இம்மாதிரியான ஒரு வரையறைக்குள் தமிழ் கலாச்சாரம் எனப்து ஒரு பொதுவான கலாச்சாரமாக இருக்கிறதா? தமிழ்ப்பண்பாடு என்பதுவும் தமிழ் வாழ்முறை என்பதையும் நீங்கள் எப்படி வரையறுக்கிறிர்கள்?
தியாகு : வர்க்க சமுதாயத்தில் பண்பாடு என்பது இரண்டு முனைகளின் போராட்டமாகத்தான் இருக்கும். சமூக நீதிக்கான சக்திகளும் அதற்கு எதிரான சக்திகளும் காலங்காலமாகப் போராடிவருகிற ஒரு சமூகத்தில் தமிழப் பண்பாடு என்பதும் போராடுகிற இரண்டு முனைகளைக்கொண்ட ஒரு பணபாடுதான். இந்தத் தமிழ் பண்பாட்டில் ஐ¡தியத்திற்கு இடம்¢ல்லை. இந்தத் தமிழ்ப்பண்பாட்டில் பார்ப்பணியதிற்கு இடமில்லை.இத் தமிழ்ப்பண்பாட்டில் மானுட சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைக்கு இம் கிடையாது.நாத்திகம் ஒரு கூறாக இந்தால் நாத்திகம் ஒரு கூறாயிருரக்கும். இதைத்தான் நாம் தமிழ் தேசத்தின் பண்பாடு என வரையறுக்கிறோம்.
விசு : பல்கலாச்சாரம் பன்முகவரலாறு என்கிறரீதியில் இங்கு பலவி‘யங்கள் முன்வந்திருக்கின்றன. உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பிற்பாடாக தலித் மக்கள போன்றவர்களின் பண்பாடு என்பது தமிழ்ப்பண்பாட்டுக்குள் வருகிறதா?
தியாகு : அமெரிக்க தேசிய வளர்ச்சியிலும் அமெரிக்க கலாச்சார வளர்ச்சியலும் கறுப்பர்களுக்கு ஒரு பங்கு உண்டு.அமெரிக்க தேசிய வரலாறு என்பது வெள்ளையர்கள் சென்று செவ்விந்தியர்களை அழித்தது மட்டுமல்லவே. அவ்வகையில் தமிழ்ப்பண்பாடடிலும் நீங்கள் குறிப்பிடுகிற அனைவரும் உள்ளடங்குவர். ஆப்ராஹாம் லிங்கனுடைய போராட்டத்துக்கும் கறுப்பினமக்களின் போராட்டத்துக்கும் எவ்வாறாக அமெரிக்க வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் இடமிருக்கிறதோ அவ்வாறே தமிழ்க்கலாச்சாரத்திலும் தலித் மக்களுக்கு பங்கிருக்க்¢றது. கலாச்சாரம் என்பதை ஒரு இறுகிய நிலையாகப் பார்க்கமுடியாது. அதை இயங்கியல் முரண்களுக்கிடையிலான போராட்டமாக- டைனமிக்காகப்¥ பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்த அளவில் எதுவெல்லாம் சமூக மாற்றத்துக்குத் துணை நிற்கக் கூடியதோ எது நேஷனல் எக்ஸ்க்ளுஸிவ்நஸ் மற்றும் ஜாதிய எக்ஸக்ளுசிவ்ஸ்சுககு எதிரானதோ அதுவெல்லாம் தமிழ் தேசியக் கலாச்சாரத்தககுள் இயங்கும். இதைத்தான் தமிழ் வரலாறாக நாம் பாரக்கிறோம்.
விசு: இவ்வாறாகப் பொதுமைப்படுத்தம் போது தலித்துகளினுடைய வரலாற்றில் எந்நதவிதமான கூறுகளை நாம் எடுத்தக் கொள்கிறோம்- எதனை வில்க்குகிறோம்?
தியாகு : திருக்குறள் என்பது தலித் இல்க்கியம். யார் கடைக்கோடியில் அடிமைப்பட்டிருக்கிறார்கனோ அவனது விடுதலைக்கான இலக்கியம்தாள் தலித் இலக்கியம். எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது தலித்தியம். சித்தர்களிடம் இந்த வேசத்தைப்பார்க்கலாம். பாரதியின் ஜாதிய எதிர்ப்பில் அதைப்பாரக்கலாம். இந்திய தேசியப் பண்பாட்டில் எஞ்சி நிற்பது திக்க்ப்ண்பாடு மட்டும்தான். முருகன் குறத்த¨¢ய மணந்து கொள்கிற தமிழ்க்கடவுளாகத்தான் இருக்கிறான். தேவயானியைக் கொண்டு வந்த அவனோடு இணைக்கும் போதுதான் நமக்குப் பிரச்சினை வருகிறது. இவ்வகையில் தமிழ்த் தேசியப்பண்பாடு என்பது அனைத்துவகையான திக்கப் பண்பாடுகளுக்கும் எதிரானதாகிறது3
யமுனா : பொதுவாக மார்க்சியததின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை விமர்சிக்கும் போது மார்க்சியம் இரண்டு விசயங்கள் சம்பந்தமாக வரலாற்று ரீதியிலான- அடம்பிடித்தபடியிலான தவறைச் செய்திருக்¢றது என ரொனால்ட் மங்க் தனது நு¡லில் குறிப்பிடுகிறார் பெண்கள் தொடர்பான பிரச்சினையையும் தேசியம் சம்பந்தமான பிரச்சினையையும் தேசியம் அணுகியவிதம் அதனது புர்ட்சிகரத்தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டதென அவர் அவதானிக்கிறார். இன்னும் தேசியம் பெண்களின் உயிர் மறுஉற்பத்தி சார்ந்த வி‘யங்களைக் கட்டுப்படுத்தம் பிற்போக்கான கருத்தியலாகவும் வளர்ந்திருக்க்¢றது எனும் விமர்சனமும் அதன் மீது உணடு. இவ்வகையில் தமிழ்த் தேசியத்தில் ஒரு சடூக சக்தியாகப் பெண்கள் பற்றிக குறிபிபடவேயில்லை- அவர்கள் தொடர்பான உங்கள் நிலைபாடு என்ன?
தியாகு: சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு கூறாக ஆணாதிக்கத்திற்கெதிரான பெண்களின் போராட்டத்தை நான் வரவிருக்கும் தலித்தியமும் தேசியமும் நு¡லில் விரிவாக் குறிப்பிடுகிறேன். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் எல்லாவிதமான ஆதிக்கங்களையும் ஜாதிய ஆதிக்கத்தோடு தொடர்பு படுத்தமுடியும் என நான் அதில் விவாதிக்கிறேன். ஆணாதிக்கத்தைக்கூட ஜாதிய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கருவியாக விளக்கி அம்பேத்காரை மேற்கோள் காட்டுகிறேன். எவ்வாறாக ராஐபுத்திரர்களின் உடன்கட்டை ஏறும் பழக்கம் கூட அகமணமுறையைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டது என அம்பேத்கர் சொல்கிறார்.பாரதிராஐ¡வினுடைய கருத்தம்மா திரைப்பட விமர்சனக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன். கருத்தம்மா படத்தில் ஏன் இந்த பெண்சிசுக் கொலைப்பழககம் வந்தது என்பதை பாரதிராஜாவினால் சரியாகச் சுட்டிககாட்டமுடியவில்லை என்று நான் கூறினேன். வரதட்சனைக் கொடுமையால் இச்சிசுக்கொலை நடப்பதாக அந்தப்படத்தில் அவர் சொல்கிறார். வரதட்சனைக் கொடுமையால் பெண்சிசுக் கொலை நடைபெற வேண்டுமானால் எந்தச் சாதியில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக இருக்கிறதோ அந்தச் ஜாதியில்தான் அந்தச் சிசுக்கொலை நடந்திருக்கவேண்டும். வுரதட்சணைக் கொடுமை என்பது பார்ப்பனர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் எந்தப் பார்ப்பணக் குடும்பத்திலும் நாட்டுக் கோட்டைச் செடடியார் குடும்பங்களிலும் பெண்சிசுக் கொலை நடக்கவில்லை. மாறாக முக்குலத்தோரில் தேவர் குடும்பஙகளில் நடக்கிறது- வரதட்சனை என்பதை ஒப்புககொள்ளாத ஐ¡தியில் பெண்சிசுக்கொலை இருக்கிறது. வரதட்சனைக் கொடுமை என்பது அவரகளிடம் இல்லை. தற்போது தலித்துகளுக்கிடையில் கூட வரதட்சனைப்பழக்கம் வந்திருக்கிறது. காரணம் பார்ப்பனமயமாதலின் தாக்கமாகத்தான் அது மற்றவர்களிடம் பரவியிருக்க்¢றது. தாங்களும் அவர்களைப் போல் நடந்து கொள்ளவும் இருக்கவும் மற்ற ஜாதிகள் முயற்சி பண்ணுவதின் விளைவுதான் வரதட்சனைக் கொடுமை இவர்களிட்ம் வந்திருக்கிறது. நான் அந்தப் பட்த்தின் உள்ளிருந்தே ஒரு உதாரணம் கொடுத்தென். கருததம்மாவை ஒருவன் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்யப்போவான். போகும் போது இதோ இந்தச் சீதனத்தை வைத்துக் கொள் என்று கொடுப்பன். மாப்பிள்ளை பெண்ணுக்குச் சீதனம் கொடுத்து கல்யாணம் பண்ண்¢க் கொள்கிற பழக்கம் தான் தேவர் ஐ¡தியில் உண்டே தவிர பெண்வீட்டார் அவனுக்கு வரதட்சனை கொடுத்ததுக் கல்யாணம் பண்ணுகிற பழக்கம் கிடையாது. எனில் தேவர் குடும்பத்தில் எப்படி பெண்சிசுக்கொலை நடக்கும்? இது வரதட்சனைக் கொடுமையோடு தொடர்படையதல்ல.அந்தச் சாதியின் படைத் தொழிலோடு சம்பந்தமுள்ளது. அது மார்ஷல் காஸ்ட்.அவர்கள் போர்களுக்குச் செல்கிறபோது இயல்பாகவே ஆண்பெண் விகிதம் மாறிப்போய்விடுகிறது. ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுகிறது. பெண்களின் தொகை அதிகரிக்கிறபோது திருமணம் செயவதற்குஅவர்கள்ஐ¡தியை மீறி வெளியல் போகவேண்டிய கட்டாயம் வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமெனில- ஐ¡தியைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஆண்களின் எண்ணிக்கைக்குத்த் தக்கவாறு பெண்களின் எணணிக்கையைக் குறைத்துக் கொண்டே இருக்கவேண்டும. ராஐபுத்தரர்களின் மத்தியில் இது உடன்கட்டை ஏறும் பழக்கமாக இருந்தது தமிழ் நாட்டு மக்கள்மத்தியில தேவர்கள்¢ன் மத்தியில் இது பெண்சிசுக் கொலையாக ஆகியது என்று சொன்னேன்.
யமுனா: தமிழ் தேசியததின் புரட்சிகரத்தன்மை அதனது சமூக வர்க்க சக்திகள் பற்றி இதுவரை பார்த்துக் கொணடு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியத்தின் எதிரிகளென எவரை வரையறுக்கிறீர்கள்?
தியாகு : தமிழ் தேசிய வளர்ச்சிக்கு எது தடை- தேசிய வளரச்ச்¢யென்பதை சமூகத்தின் ஐனநாயக வளர்ச்சியாக- மனிதத் தன்மை கொண்ட மனிதநேயம்கொண்ட ஒரு கட்டமைப்பை நோக்கிய சமூகத்திற்கான தடையாக- சோசலிசம் கம்யூனிஸமெல்லாம் நீண்ட கால நோக்கம்-அதற்குள் எல்லாம் நாங்கள் இப்போது போகவில்லை- ஒரு ஐனநாயக சமூகத்தை- மனித சமததுவம் நிலவும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலையைக் கொண்டுவந்தால் போதும் இப்போது- அந்தவொரு சமூகத்திற்கு எது தடையாக இருக்கிறதுஎன நாம் பார்க்கிறோம். இரண்டு தடைகள் இருக்கிறது.. ஒன்று தில்லி ஏகாதிபத்தியம் மற்றையது ஐ¡தியம். தில்லிஏகாதிபத்தியம் என்கிறபோது இந்திய அரசைக் குறிப்பிடுகிறேன். இதனது சமூக சக்திகளை மூன்று விதமாக வரையறுக்கிறோம். ஜரோப்பா மாதிர் இந்திய சமூகத்தை வர்க்கப்பகுப்பாய்வுக்குள் வரக்க்க் குறுக்கல் வாதத்துக்குள் கொண்டுவர முடியாது.அந்தக் கட்டததை நாம் தாண்டிப் போ¡ய்விட்டோம். ஆனால் வர்க்கம் இல்லையென்றோ வர்க்க நிராகரணம் என்றோ நாம் சொல்லவில்லை.
1.அன்னிய நிதி மூலதனத்தோடு இணைந்து செயல்படுகிற சார்ந்திருக்கிற - உலகமயமாதல் மற்றும் ஏகாதிபத்தியப் போக்குகளின் கருவியாகச் செயல்படுகிற - இந்தியப் பெருமுதலாளிவர்க்கம். இவர்களை நாம் பன்னாட்டு மூலதனத்தினர் என்று வரையறுக்கிறோம். இந்தியா ஒரு தேசம்அல்ல என்று நாங்கள்சொல்கிறபோது இவர்கள் பன்னாட்டு மூலதனத்தினர்தான். வர்க்கெமன்று பார்க்கும் போது இவர்கள்தான் முதல் எதிரிகள்.
2.சமூக சக்திகள் என்று பார்க்கிறபோது உத்தியோகத்துறை மற்றும் பொருளுற்பத்தியில் இருக்க்ககூடிய மூலதனம் போன்றவற்றில் திக்கம் செலுத்தக் கூடிய பார்ப்பண பனியா வர்க்கம். இது ஐ¡திய அடிப்படை கொண்டது.
3.இந்து தேசியம் என்கிற இந்திய தேசியம்.: இஒந்தி மொழி ஆதிக்க சக்திகள்
இவர்களைப் பிரதிநிதித்தவப்படுத்துவதைத்தான் இந்திய அரசு அதிகாரம் என்று நாம் வரையறை செய்கிறோம் இவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் எமது நோக்கம். இதற்கான புரட்சிகர சக்திகள் யார்? இயல்பாக தமிழ்த் தேசியம் என்பது எந்தெந்த சக்திகளின் வளர்ச்சிக்குத் துணை செய்யுமோ அந்த சக்திகள்.- அப்படிப்பார்க்கிறபோது பாட்டாளி வர்க்கம்-பாட்டாளிவர்க்கம் இன்னும் முழ வளர்ச்சி பெறாத போதும்- வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளிவர்க்கம் என்று கொள்ளலாம்.-அதே போல ஐ¡தி அடிப்படையில் தாழ்த்தப் பட்ட மக்கள்- இவர்கள் தான் பிரதான சக்திகள். இதைப் போலவே பிற்படுத்தப்பட்ட ஐ¡தியினர்- இவர்களைப் பொறுத்து இரண்டு விதமான போக்குகளை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது-அவர்கள் திக்கம் செலுத்துவதற்கு எதிராகப் போராடவேண்டும். அவர்களே அடிமைகள் எனும் அளவில் அவர்களுக்கு மேலிறுக்கிற திக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேணடும்.போராட்ட போக்கில்தான் இந்தச் சக்திகளை நாம் ஒன்றுபடுத்தமுடியும்.அடுத்தாக சமுதாயத்தில் இருக்கும் ஐனநாயக சக்திகள். இதில் எந்த வரக்கமும் உள்ளடங்கும். எந்த ஐ¡தியும் இதற்குள் வரலாம் இதற்குப் பிற்பாடு தலைமை சம்பந்தமான கேள்வி வருகிறது. சோசலிசப்புரட்சிக்கு பாடடாளிவர்க்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். னால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகர ஐனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொது புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணைககப்படுத்துவதற்கு புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்தவதற்கு- பொது எதிரிக் கெதிராக இந்த அணிவகுப்பை வளர்ததுச் செல்வதற்கும் பொறுத்தமான ஒரு பொதுத் தலைமை. அது காலப் போக்கில் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில்தான்உருவாக முடியும். அது ஒரே ஒரு சமூக சக்தியின் பிரதிநிதியாக இருக்காது. ஒரே ஒரு சமூக சக்தி மட்டும் தலைமை தாங்க முடியாது. அது தமிழ் தேசிய சமூக நீதிப் புரட்சிகரத்தலைமை. நமது தந்திரோபாயம் என்ன? நாம் நீண்ட நாட்களாக அரசு அதிகாரம் அது ஒடுக்குமுறைத் தன்மை கொண்டது அதற்கெதிராக நாம் படை கட்டவேண்டும எனப் பார்த்துவந்திருக்கிறோம்.- அரசு அதிகாரம் பற்றி பார்வையை இன்னும் கொஞ்சம் ழமாக நாம் பார்க்க வேண்டும்- ஒரு சமூகப் பிரக்ஞையை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு அரசு அதிகாரம் இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது. லெனின் புரட்சிக்கான நிலைமையயைப்பற்றிக் குறிப்பிடுகிறபோது : ஆளுகிற வர்க்கங்கள் பழைய முறையில் தொடர்ந்து ஆளமுடியாது என்ற நிலைக்கு வருமபோது ஆளப்படும்சக்திகள் பழைய முறையில் தொடர்ந்து வாழு முடியாது என்ற நிலைக்கு வரும்போது இந்நிலை உருவாகிறது. இது மட்டும் நடந்தால் போதாது என அவர் குறிப்பிடுகிறார். ஆளும் வர்கக்ங்களின் சமூகப் பிரக்ஞையின் அதே அளவான பிரக்ஞை பொதுமக்களிடமும் இருக்கும்போதுதான் அவர்களை ஆள முடிகிறது. பொதுமக்களிடமுள்ள இந்தப் பிரக்ஞையை மாற்றுவதுதான் புரட்சிகரசக்திகளின் கடமையாகிறது. இது மாறும் போதுதான் பழையமுறையில் ஆளமுடியாத ஒர் நிலைவரும் .இது புரட்சிக்கான புறநிலைத் தேவையை வளர்ப்பதற்கான ஒரு போராட்டம். இதை எவ்வாறு செய்யப் போகிறோம்? வெகுமக்களின் உடனடிக் கோரிக்கைகளின் மீதான வெகுமக்கள் போராட்டங்களின் வாயிலாகத்தான் அரசியல் இலக்கை நோக்கிய அணிவகுப்பை உருவாக்கமுடியும். இவ்வகையில் இக்கட்டத்தில் பழைய சமூகப்பிரக்ஞைக்கெதிரான புதிய சமூகப் பிரக்ஞையை உருவாக்குவதற்கான தனித்தனியான உடனிக்கோரிக்கையடிப்படையிலான போராட்டங்களும் ஒருபொது அரசியல் இலக்கை நோக்கிய கருத்தியலையும் உருவாக்குவதுதான்முக்கியமானது. அதற்கு என்ன தேவை? லெனின் சொன்னத போல அமைப்பு ஒன்றதான் நமது கையில் இருக்கிற ஒரே ஒரு கருவி. அந்த அமைப்பைக் கட்டுவதுதான் நமது இன்றைய தந்திரோபாயம்.
யமுனா : இந்த அரசு அமைப்பைத் தாங்கி நிற்கிறவையாக கருத்தியல் அமைப்பும் கலாச்சாரக் கட்டமைப்பும் இருக்கிறது என்பதால்- இந்த அரசமைப்பை மாற்றவதற்று கருத்தியல் கலாச்சார அமைப்பு தளத்திலான பேராட்டங்களை மேறகொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்கள். எனில் இந்தக் கலாச்சார கருத்தியல் செல்பாடுகளின் சமூகச் செயல்பாட்டு அங்கமாக இருக்கிற நடவடிக்கைகளில்தான் மாற்றுக்கலாச்சார மாற்றுக் கருத்தியல் உருவாக்கம் நோக்கித்தான் நீங்கள் இடையீடு செய்ய வெண்டும்--
தியாகு : நாம் இந்த அமைப்பின் எல்லைகளை நடைமுறையில் வெகுஐனங்களுயக்குப் புரியச் செய்ய வேண்டும். பொது ஐனங்கள் இந்த அமைப்பில் இதுதான் முடியும் என நினைக்கிறார்கள். தமது நலன்களுக்காக அமைப்பை மாற்றுவது மாற்று அமைப்பை உருவாக்குவது சம்பந்தமான பிரக்ஞையைநிலவும் அமைப்பின் எல்லையைச் சட்டிக் காட்டவதன் மூலம்தான் உருவாக்கமுடியும் இவர்கள் இந்திய அரசமைப்புக்குள்தான் இயங்க முடியும் என நினைக்கிறார்கள். இவர்கள் வாகபாயைவிட்டால் ஸோனியா என நினைக்கிறார்கள். கருணாநிதியைவிட்டால் ஜெயலலிதா என நினைக்கிறார்கள். வேலைநிறுத்தம் செய்தால் இதுவரைதான் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இப்போது இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பு இருந்தால்தான் தமது சிக்கல்கள் தீரும் என்று மக்கள் வந்துசேர்கிற பிரக்ஞையை நாம் உருவாக்க வேண்டும். இதிலிருந்து அவர்கள் இன்றிருக்கிற அரசியல் அ¢காரம்மாற்று அரசியல் அதிகாரம் பற்றிய பிரக்ஞையைப் பெறமுடியும். இந்தப் போராட்டங்கள் பொருளாதாரத்துறையில் இருக்கிறது கலாச்சாரத்துறையில் இருக்கிறது மொழித்துறையில் இருக்கிறது. இவ்வாறான மாற்றுப் பிரக்ஞையை பல்வேறு போராட்டங்களின் மூலமாகத்தான் ஏற்படுத்தமுடியும். அவ்வாறு போராடும் போதே ஒரு நீண்ட கால அரசியல் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்துகிறீர்கள். அந்த இயக்கம் இந்த எல்லாப் போராட்டச் சிற்றோடைகளையும் ஒரு பொதுப் போராட்ட நோக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
யமுனா : இந்தி மொழி திக்கம் என்கிற போது இந்திய மொழி பேசுகிற வடநாட்டவர்களைச் சொல்கிறீர்களா அல்லது இந்தி மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்கச் சக்திகளைச் சொல்கிறீர்களா?
தியாகு : நாம் தெளிவாக இருக்க வேண்டும். நான் இந்தி மொழி ஆதிககச் சக்திகளென்கிறேன். இது இந்தி மொழி பேசும் மககள் என்பதைக் குறிக்காது. அவர்கள் நம் மீது இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிற சக்திகள் கிடையாது. அவர்களுக்குள் இருக்கிற ஒரு பகுதிதான் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதியாக இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகள் என்கிறபோது பெரும்பால மார்வாரிகள் சேட்டுகள் தான். மற்ற தேசிய இனத்தவர்களில் முதலாளிகள் மிகக் குறைவு. இந்தியப் பெருமதலாளிகளின் வரிசையில் இருக்கிறவர்களில் தொண்ணூறு சதவீதமானவர்கள் அவர்கள்தான். குஐராத்தி சேட்டுக்கு குஐராத்திதான் தாய்மொழி ஆனால் இந்திதான அவனது ஆதிக்கக் கருவி. அனைத்திந்திய சந்தையைப் பாதகாப்பதற்கு இந்தியா என்கிற கட்டமைப்பபைவைத்துக் கொள்வதற்கு இந்திய தேசத்தைக் கட்டுவதற்கெல்லாம் இந்தி தேவைப்படுகிறது. இதை ஒரு மொழி பேசும் மக்களென்றோ ஒரு சமூக சக்தியொன்றோ ஒரு தேசிய இனத்தவரென்றொ பிரிக்க முடியாது. எல்லாமே கலந்ததாகததான் இந்தி ஆதிக்க சக்தி இருக்கிறது.
யமுனா : தமிழ்த் தேசிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? உதாரணமாக ஈழத்தை எடுததுக் கொண்டால் சிங்கள பெருந்தேசியத்தினுடைய ஒடுக்குமுறை வடிவங்கள் மிகத் ஸ்து¡லமாக இருக்கிறது. தரப்படுத்துதல் கோயில்கள் இடிப்பு பாலியல் பலாத்காரம் சிவில் நிறுவனங்களில் புறக்கணிப்பு யாப்புரீதியல் சிங்களமயமாக்கப்டடிருப்பது தமிழர்கள் மீதான வெளிப்படையான ராணுவ வன்முறை என நிறைய வரையறுத்தச் சொல்லமுடியும். அவ்வகையில் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் மீதான ஒடுக்குமுறைகளை நீஙகள் எப்படி வரையறுப்பீர்கள்?
தியாகு : முதலாவதாக அடையாள மறுப்பு. தமிழ் தேசிய மொழியாக இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ்த் தேசிய இனம் என்பதற்கான அங்கீகாரம் இல்லை. இதனுடைய விரிவாக்கமாகத்தான் மற்ற எல்லாவற்றையம் நாங்கள் பார்க்கிறோம். மைய அரசுப் பணிகளில் இந்தி அல்லது ஆங்கிலம் என்ற நிலைதான் இருக்கிறது.தமிழை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவன் மைய அரசுப் பணிக்குப் போகமுடியாது.இந்தி மொழித்திணிப்பு என்பது தொடர்கிறது.தமிழ் வழிக் கல்வி மறுக்கப்படுகிறது. அரசு உரிமை என்பது கிடையாது. தில்லியிலிருந்து மாநில அரசுகளைக் கலைக்கமுடியும். ஆனால் எல்லா மாநில் அரசுகளும் சேர்ந்தால் கூட தில்லிஅரசைக் கலைக்கமுடியாது. தமிழ்நாட்டின் ட்சிப்பரப்புக்கான உரிமை நமக்குக் கிடையாது. கட்சத் தீவை தமிழக அரசிடம் கேட்டுக் கெள்ளாமலேயே கொடுத்துவிட்டார்கள்.தமிழ்நாட்டு எல்லைகளை மாற்றுகிற உரிமை தில்லியிடம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களின் மீது தமிழ்தேசியத்திற்கு இறையாண்மை கிடையாது. நமது இயற்கைச் செல்வங்களைப்பயன்படுத்தி நமக்குத் தொழில் தொடங்க உரிமை கிடையாது.நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிற உரிமை நமக்குக் கிடையாது. ஜாதி அடிப்படையிலான குலத்தொழல்முறையை உடைத்து யாரும் எந்த வேலையும் பார்க்கலாம் எனபதறகுப் பொறுத்தமான வேலைவாய்ப்புக் கொள்கை இல்லை. நமக்குப் பொறுததுமான சட்டமியற்றும் உரிமை இல்லை.
யமுனா : தமிழ்தேசிய இன போராட்டத்தினு¡டே தென்ன்ந்திய தேசிய இனங்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்?
தியாகு : தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கிறது. கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளி தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய எதிர்ப்புத் தன்மையயைவிட அதிகமாகத் தமிழ் எதிர்ப்புத் தன்மையயைக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான்கன்னடத்திலும். அவர்களுக்குத் தமிழ் எதிர்ப்புதான் இந்திய தேசிய எதிர்ப்பைவிடவும் பிரதானமாக இருக்கிறது.இது தற்காலிமான ஒரு போக்குதான். இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனுபவம் அவர்களுக்கு உணர்த்தும்.
யமுனா : தேசிய இனப்பிரச்சினையில் உலகமயமான சில கூறுகள் இருக்கிறது. யுகோஸ்லாவியாவில் ஸெர்பியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்குமான பிர்சினையாக இருந்த பிரச்சினை கொசவா பொஸ்னியா போன்ற நாடுகளின் பிரிவினைக்குப்பிறகு - விடுதலையடைந்த பிறகான கொசவா பொஸ்னியாவில் உள் இருக்கும் சிறுபானமையினர்த்வர்க்கும் தற்போது ஒப்பீட்டளவில் பேரினமாகிவிட்டவர்களுக்குமான ஆயுத மோதல்களாக வெடித்திருக்கிறது. இவைகள்தேசிய இனத்துக்குள் இருக்கிற சிறு சிறு இனக்குழக்களின் உரிமைகளுக்கான பிரச்சினைகளாக ஆகியிருக்கிறது. கேரளாவில் கர்நாடகாவில் தமிழர் எதிர்ப்புணர்வு இருக்கிறதுபோலவே தமிழகத்திலும்மலையாளி எதிர்ப்புணர்விற்கான தெலுங்கர் எதிர்ப்புணர்வுக்கான சான்றுகள் இருக்கிறது. ஆகவே பரஸ்பரம் துவேஷத்தின் பொருட்டு இந்தத் தேசிய இனப்பிரதேசங்களில் நடக்கிற கலவரங்கள் அல்லது பிரச்சினைகள் பரஸ்பரம் தேசிய இனங்களின் அரசியலின் மீது தாக்கம் தொடுக்கும். ஆகவே நீங்கள் இலட்சிய்பபடுத்திக் கொள்கிறமாதிரி இந்தப் போராட்டங்கள் கலவரம் தவிர்ந்ததாகவோ இனத்துவேஷம் தவிர்ந்ததாகவோ இருக்கமுடியாது.
தியாகு : பெரியார் அனைச்சிக்கலில் நாம் கேரள தேசியத்தை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே போல காவிரிச்சிக்கலில் நாம் கர்நாடகத்தோடுதான் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் ஐனநாயகபூர்வமான தேசிய இயக்கத்தை நடத்தக்கூடிய தலைமை அந்த மககளுக்கெதிரான விரோதவுணர்வு கொண்டதாக இப்போராட்டத்தைக் கொணடு போகக்கூடாது. கொண்டு போகவும் முடியாது.இந்திய தேசியத்தின் அடிமைகளாகத்தான் பரஸ்பரம்இருக்கிறோம் என்பதை இருவருமே உணர்வார்கள். இன்று கன்னட தேசியம் பேசுகிறவர்கள் பால்தாக்கரே பேசுகிற மராட்டிய தேசியம் போல இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாகத்தான் அதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
யமுனா : தென்னிந்திய தேசிய இனங்களுக்கிடையிலானஇந்த முரண்பாடுகள் ஒரு வன்முறையிலான முரண்பாடாக உருவாவதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கிறது. தேசியவாதத்தை ஐனநாயக நிலையாகவோ இலட்சியவாத நிலையாகவோ எல்லாத் தேசியஇனவாதிகளும் பார்க்க அவசியமில்லை. மற்ற மாநிலங்களில் தேசியத்தின் வளர்ச்சி நிலைமைகளைப் பொறுத்து குணா போன்றவர்கள் முன்வைக்கிற கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் கை ஓங்கலாம்- இவ்வாறான சூழலில் இனங்களுக்கிடையில் இரத்தககளறியான கலவரம் தோன்றுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இது இவவாறிருக்க நான் ஜரோப்பாவின் தேசிய யுத்தங்கள் சம்பந்தமான அனுபங்களுக்குப் போகிறேன். ஜரோப்பாவில் தேசியம் ஒரு ஐனநாயகத்துக்கான அவா எனும்அளவில் தேசியத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஜரோப்பாவில் சமீபத்தில் நிறைய தேசங்கள் தோன்றியிருக்க்¢றது. செக்கோஸ்லாவியாஇரண்டாக ஆகியிருக்கிறது. பொஸ்னியா கொசவா மெஸடோனியர் மோன்டிநிக்ரோ போன்றன பழைய யுகோஸ்லாவியாவில் இருந்து உருவாகியிருக்கிறது. சமவேளையில யூரோப்பியன் யூனியன் எனும் பெயரில் தேசிய இன அடிப்படைகளை நிராகரித்து பொருளியல் ஒருமைக்கான அரசியல் நிர்வாக ஒருமைக்கான கூட்டமைப்பு உருவாகிவருகிறது. இன்னும் பிரிந்த தேசங்கள் ஜரோப்பியன் யூனியன் உறுப்பினராவதற்கும் விண்ண்ப்பித்துவருகிறது. பொருளாதாரம் மட்டுமல்ல இவர்களை இணைக்கிற வி‘யங்களாக வெள்ளை நிறம் கலாசசாரம் போன்றவையும் இருக்கிறது. இவ்வாறான சூழலில் இந்திய நிலைமைகளை எடுத்துக் கொணடு பாரக்கிறபோது இந்தியாவில் தேசிய இனப்பிர்சினை தோன்றுவதற்கான காரணங்களாக என்னால் இரண்டு பிரதானப்பிரச்சினைகளைப்பார்க்கமுடிகிறது. ஓன்று பொருளியல்ரீதியலானது அடுத்தது கலாச்சார ரீதியலானது. பொருளியல்ரீதியலானது என்கிற போது இந்திய மாநிலங்களுககிடையில் நிறையப் பொருளாதார அசமத்துவம் நிலவுகிறது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலின் காரணங்களால் வடகிழக்கு மாநிலங்கள் அநியாயமான முறையில் பின் தங்கியிருக்கின்றன. கலாச்சார ரீதியிலான பிரச்சினை என்று வருகிறபோது இந்தி மொழி வளர்ச்சிக்காக அரசு திட்டமிட்டு நிதியை ஒதுக்குகிறது. இநதியாவின் பிற மொழிகளுக்கு இந்திக்கு அளிக்கும் முக்கியத்தவம் அளிக்கப்படுவதில்லை. புழக்கத்தலில்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சி பிராமணிய ஆதிக்கத்தோடு பிணைக்கப்பட்டு அரசின் நிதி அதனது வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தக்கலாச்சாரப் பொருளியல் அசத்தமத்துவத்திலிருந்ததான் இந்திய தேசிய இனச் சிக்கல் என்பதும் தேசியப் பிரக்ஞை என்பதுவும் உருவாவதாகக் கருத முடிகிறது. தமிழர்கள் இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிவாழ்கிறார்கள். நாகாலாந்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள். தில்லியிலும் இருக்கிறார்கள் கல்கத்தாவிலும் இருக்கிறார்கள். திருவனந்தபுரத்திலும் இருக்கிறார்கள். இவ்வாறாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை எடுத்துக் கொண்டு தேசியத்தை வரையறுப்பதில் நிறையப் பாரது¡ரமான எதிர்மறையான போக்குகளுக்கு வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது. இவ்வகையில் நிலவிவரும் ஜரொப்பிய யூனியன் அனுபவங்களை எடுத்துக் கொண்டு ஐனநாயகத்துக்கான கலாச்சாரத்துக்கான தேசியப் போராட்டத்தையும் நட்த்திக் கொண்டு ஏன் ஒரு இந்திய பெடரல் பொலிடிகல் சிஸ்டத்திற்கான முயற்சியையும் மேற்கொள்க்கூடாது? ஏனெனில் இந்தியாவில் நம்மைப் பிரிக்கிற அம்சங்கள் இருக்கிறது போலவே இணைக்கிற அம்சங்களும் நிறைய இருக்கின்றன. தென்னிந்திய தேசிய இனங்களுக்கிடையில் கலாச்சாரரீதியில் நிற அடிப்படையில் உணவு உடை உறையுள் போன்ற பழக்கங்களில் பெரிய வித்யாசங்கள் இல்லை. ஞானி போன்றவர்கள் திராவிடப் பண்பாட்டுடக் கூறுகள் என்பது இந்தியாவெங்கிலும் பரந்து கிடக்கிறது என்கிறார்கள். எனில் ஏன் இரத்தக்களறியை இனத் துவேசத்தைத் தவிர்க்கிற மாதிரியான அரசியலை முன்னெடுக்க்ககூடாது? இன்னும் தலித் பிரச்சின என்பது ஒரு இந்திய தேசம் தழுவிய பிரச்சினையே ஒழிய தமிழ்த் தேசியம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல என்பதையும் நினைவில் கொண்டு ஏன் அவ்வாறான ஒரு அரசியலை மாற்றரசியலாகத் தேர்ந்து கொள்ளமுடியாமலிருக்கிறது?
தியாகு : ஜரொப்பாவில் ஏற்கனவே தேசிய அரசுகள் உருவாகிவிட்டன். ஐனநாயக அரசியல் என்பது தேசங்களுக்கிடையில் உருவாகிவிட்டது. அந்தத் தேசிய அரசுகள் நெருங்கி வருகிறது. அவைகளுக்கிடையில் ஒற்றுமையைப் பேசுகிறது. தேசிய அரசுகள் உருவாகி வளர்ந்த பிறகுதான் பொதுவான சந்தையை உருவாக்குவது நிர்வாக அலகுககளை உருவாக்கவது போன்ற வளர்ச்சிகள் வந்திருக்கிறது. அயர்லாந்து பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிறபோது முதலில் அயர்லாந்து பிரிட்டனிடம் இ9ருந்து விடுதலை பெற வேண்டும் பிற்பாடு அவர்கள் ஒரு பெடரேஷனாகக் கூட இணையலாம் என்கிறார். பெடரேஷன்ஸ் என்று சொல்கிறபோது சுதந்திரமாக இருக்கிற தேசிய அரசுகள் தம விருப்பில் இணைகிற ஒரு முறை அது. பெடரேஷனுக்கான முன்நிபந்தனையே தேசியசுதந்திரம்தான். தேசிய ஒடுக்குமுறை என்று ஒன்று இருந்தால் அந்த ஒடுக்குமறைக்கெதிரான தீர்வு என்பது தேசிய விடுதலைதான். விடுதலை பெறற பின்னால் ஒரு கூட்டமைபபுக்குள் வருவதில் பிரச்சினையில்லை.நான் ஆந்திரா போகும் போது அடிக்கடி யோசிப்பதுண்டு. வாயைத் திறந்து பேசினால் மட்டும்தான் நமக்கிடையில் வித்தியாசம் உண்டு. மற்றபடி வீடு உணவு உடை- இன்னும் சினிமா கவர்ச்சி கூட ஆந்திராவைச் சேர்ந்தவனுக்கும் தமிழகத்தைச் சேர்நதவனுக்கும் வித்தியாசமில்லை. தமிழகத்துக்கு எம்.ஜி.ஆர். ஆந்திராவுக்கு என்.டி.ஆர். மொழி தவிர ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் நிபந்தனை யாதெனில் விடுதலை பெறுவோம் பிற்பாடு கூட்டரசுபற்றி பரிசீலனை செய்யலாம்.
தென்னிந்திய மாநிலங்கிடையில் இருக்கிற குறிப்பான சில பிரச்சினைகளால் இனச்சுததிகரிப்பு போன்றவை நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. எம்ஜிஆர். எதிர்ப்புக்காகவே கருணாநிதி தமிழர் படை என்று ஒன்றை உருவாக்கி மலையாளி எதிர்ப்பை வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரை ஒரு போதும் அன்னியனாகவோ மலையாளியாகவோ பார்க்கவில்லை. இன்னும் மலையாளியாக இருந்தது அவருக்கு பாஸிடிவ்வாக இருந்தது. காரணம் இந்தத் தமிழ் நாட்டிலிருந்த எந்தச் ஐ¡தியாகவும் அவர் பார்க்கப்படவில்லை. இது அவருக்கு ரொம்பவும் சாதகமான அம்சமாக இருந்தது. எம.ஜிஆர்க்குக் கிடைத்த புகழுக்கு முக்கியமான காரணங்களிலொன்று. அவர் எந்தச் ஜாதிக்காரரும் கிடையாது- எல்லோருக்கும் பொதுவான மனிதர் அவர் என்று இந்த மக்கள் அவரைப்பார்த்துவிட்டார்கள். ரிசர்வேசனுக்கு பொருளாதார அடிப்படையை வைத்தபோதும் பிற்பாடு இட ஒதுக்கீட்டை ஜம்பது சதவீதமாக உயர்த்தியபேர்தும் அவருக்கு ஐ¡திய உள்நோக்கம் கற்பிக்க முடியவில்லை. தமிழகத்தில் இவ்வாறான வன்முறைகள் எதுவும் பிற இனத்தவர் மீது நடைபெறவில்லை. அபபடித. து¡ண்டியவர்களும் மக்களிடம் இருந்து அன்னியமாகிப் போனார்கள். காவிரிப்பிரச்சினயில் கூட் தமிழர்கள் கன்னடர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடவில்லை.தமிழக மக்கள் அந்த மரபில் தான் வந்திருக்கிறார்கள். கேரள மக்கள் பற்றியும் நான் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறேன்.
மூலம்: பதிவுகள் மே 2003; இதழ் 41.